காதல் கண் கட்டுதே [2017] | A Simple Love Story

4
காதல் கண் கட்டுதே

காதல் படங்கள் இதுவரை பல படங்கள் பார்த்து இருக்கிறேன் ஆனால் காதல் தவிரப் படத்தில் ஒன்றுமே இல்லாமல் ரொம்ப எளிமையான படத்தைத் தற்போது தான் பார்க்கிறேன். காதல் கண் கட்டுதே இயல்பான காதல் படம்.

காதல் கண் கட்டுதே

ஒரு பையன் ஒரு பொண்ணு நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி வழக்கம் போலச் சண்டை போட்டு இறுதியில் என்ன ஆகிறார்கள் என்பது தான் கதை.

காதல் இருக்கே.. அது ரொம்ப ரொம்பச் சுவாரசியமான நிகழ்வு.

எனக்கு ஒரு தலை காதல் தான் என்றாலும் காதல் எப்படி இருக்கும் என்று அந்த உணர்வை அனுபவித்து இருக்கிறேன்.. செம்மையா இருக்கும் 🙂 .

காதல் இருக்கும் போது நாம் வேற ஒரு உலகத்துல இருப்போம்.. வேற எந்தப் பிரச்சனையும் நமக்குத் தெரியாது. ஒரு குறுந்தகவல், அழைப்பு நம்மை எங்கோ கொண்டு செல்லும்.

இப்படத்தில் நாயகனாக கே ஜி, நாயகியாக அதுல்யா.. அம்சமான ஜோடி. இருவரும் கிட்டத்தட்ட உண்மை காதலர்கள் போலவே இருக்கிறார்கள்.

நண்பர்களாக இருக்கும் போதும் பின் காதலர்களாகி சண்டை போடுவதும் என்று ரொம்ப இயல்பாகக் காட்சிகள் வந்துள்ளது.

கோயமுத்தூர் பொள்ளாச்சி

படம் கோயமுத்தூர் பொள்ளாச்சி பகுதிகளில் எடுக்கப்பட்டு உள்ளது. துவக்கத்தில் “அட! நம்ம ஊரு” என்ற ஆர்வத்தில் தான் பார்க்க ஆரம்பித்தேன் ஆனால், அப்படியே படமும் பிடித்து விட்டது.

படம் கோயமுத்தூர் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது ஆனால், ஒருவர் கூட கோயமுத்தூர் வழக்கு மொழியில் பேசவில்லை 🙁 .

படத்தில் ஒளிப்பதிவு செம செம. வண்ணமயமாக உள்ளது அதோட மேலே இருந்து (கழுகு பார்வை) பல காட்சிகள் எடுக்கப்பட்டு இருப்பது படத்துக்கு அழகை கொடுக்கிறது.

கே ஜி, அதுல்யா இருவருமே முதல் படம் என்று கூற முடியாத அளவுக்குச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

அதுல்யா வித்யாசமான கதாப்பாத்திரம், சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இவர் நிருபராகப் பணி புரிவார்.

கேஜி வழக்கமான நாயகர்களைப் போல வேலை வெட்டி இல்லாம தான் இருக்கிறார் ஆனால், அப்படியே அவரை வைத்து விடாமல் வேலைக்குப் போகும் படி மாற்றியது ஆறுதல்.

கேஜி அதுல்யாவிடம்.. “நான் தப்பு செய்யுறேன்னு திட்டுறே சரி.. நீ செய்யுற தப்புக்கெல்லாம் என்னை ஏன் திட்டுறே!?” என்று சொல்வது செம.

இரண்டு நாளைக்கு முன்னாடி தான் மனைவியிடம் இந்த வசனத்தைச் சொன்னேன் 😀 .

அதுல்யா “இனி நான் “பைக்” ஓட்டப்போகிறேன்” என்றதும், கேஜி “பொண்ணுக பைக் ஓட்டுனா ஒரு மாதிரி இருக்கும், எனக்குப் பிடிக்கலை” என்பார்.

அதுக்கு அதுல்யா “உனக்கு ஏன் பிடிக்கணும்?” என்பார்…  🙂 அதற்கு கேஜி முகபாவனைகள் ரொம்ப நன்றாக இருக்கும், இங்கே மட்டுமல்ல பல இடங்களில்.

வசனங்கள்

இதில் சில வசனங்கள் ரொம்ப ரசிக்கும்படி இருந்தது.

அதுல்யாவை அனிருத் என்பவரும் காதல் செய்வார் அவருக்கு இறுதியில் வழக்கமா பொண்ணுக கூறும் அதி பயங்கர ஆயுதத்தைப் பிரயோகிப்பார்.. செம்ம.

பெரிய பிரச்சனையை ஒரு வார்த்தையில் முடித்து விடுவார். அப்போது அனிருத் முகபாவனை… 😀  😀 .

படத்தில் அடிக்கடி பாடல்கள் வருவது தான் கொஞ்சம் கடுப்பா இருந்தது.. ஆனால், அதில் வரும் மான்டேஜ் காட்சிகள் ரொம்ப அழகாக ரசிக்கும்படி இருந்தது, அதனால்….

சத்தியமா படத்துல காதலைத் தவிர ஒன்றுமே இல்லை. சுத்தமான எந்தக் கலப்படமும் இல்லாத ஒரு காதல் படம் 🙂 .

பரபரப்பு படங்களையே பார்த்துச் சலித்துப் போய் இப்படம் இவைகளிலிருந்து ஆறுதலாக இருந்தது.

ரொம்பப் புத்திசாலித்தனமாக எல்லாம் யோசிக்காமல் ஒரு சாதாரணக் காதல் கதை என்ற அளவில் பார்த்தால் ரசிக்க முடியும். மற்றபடி ரொம்ப எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

காதலித்தவர்களும், காதலித்துட்டு இருப்பவர்களும் அவசியம் இப்படத்தைப் பாருங்கள்.. பல காட்சிகள் உங்கள் அனுபவங்களை நினைவுபடுத்தலாம் 🙂 .

இயக்குநர் ஷிவராஜ்

எளிமையான எந்தத் திரைப் பூச்சும் இல்லாமல் படத்தைக் கொடுத்த இயக்குநர் ஷிவராஜ் க்கு வாழ்த்துகள், இவருக்கு முதல் படம் இது.

இதுல அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால், நம்ம டி ராஜேந்தர்  மாதிரி சகல பிரிவிலும் கலக்கி இருக்குறாரு மனுசன்.

தயாரிப்பாளர், திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு (Editing) மற்றும் நடிகர் (நாயகன் நண்பனாக வருகிறார்). இதில் என்ன வியப்பு என்றால், அனைத்துமே சிறப்பு!

காதல் கண் கட்டுதே படத்தோட Tag line “a simple love story“. நண்பர்கள் கிட்ட கூறும் போது Simple love story என்று சொன்ன பிறகு தான் Tag Line கவனித்தேன்… அதே!

பாம்பு சட்டை

இதே மாதிரி சிறு வியப்பு இப்படமும். முதல் பாதியில் கதை ஒன்றுமில்லை ஆனால், இரண்டாம் பாதி வசனங்களும் காட்சிகளும் ரொம்ப நன்றாக இருந்தது.

பண நெருக்கடிக்காகத் தவறு செய்து பின் மனசாட்சி உறுத்தி திருந்தி, செய்த தவறால் பாதிக்கப்பட்டுப் பின் அதில் இருந்து பாபி சிம்ஹா வெளியா வந்தாரா இல்லையா என்பதே படம்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. அருமை..உங்கள் விமர்சனமும் எந்த அலட்டலும் இல்லாமல் இயற்கையாக இருந்தது.

  2. ட்ரைலர் லேயே ஒரு கதை சொன்னதை போல இருக்கு. சில படங்கள் பட்டியல் உங்களுக்காக. (காதல் படங்கள் இல்லை)

    Kshanam – 2016 Telugu-mystery thriller imdb 8.4
    Black Book – 2006 Dutch World War II thriller imdb 7.8
    Woman in Gold – 2015 British-American drama film imdb 7.3
    Tell No One – 2006 French thriller imdb 7.6
    Headhunters – 2011 Norwegian action thriller imdb 7.6
    Pan’sLabyrinth- 2006 Spanish-Mexican dark fantasy film imdb 8.2
    Who Am I – 2014 German techno-thriller film imdb 7.6
    The Absent One- 2014 Danish crime mystery film imdb 7.1
    The Best Exotic Marigold Hotel- 2011 British Indian comedy-drama film imdb 7.1
    Frequency-2000 American science fiction thriller drama film imdb 7.4
    (fmovies.se)
    Korean Dramas
    Healer
    Moon Lovers: Scarlet Heart Ryeo
    Moonlight Drawn by Clouds
    (drama4u.us)

  3. கிரி சார் இந்த அஸ்ஸாமீஸ் படத்தை பாருங்க ரொம்ப நல்லாருக்கும் , காமெடி சண்டை படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!