ஜீவி [2019] மூளைக்காரன்

3
ஜீவி jiivi movie poster

ஜீவி சுவரொட்டியைப் பார்த்து, அதர்வா தான் தாடி வைத்து நடித்து இருக்கிறார் என்றே நினைத்து இருந்தேன்.

ஜீவி

கிராமத்தில் போக்கிரியாய்ச் சுற்றிக்கொண்டு இருக்கும் புத்திசாலி ஆனால் சோம்பேறியான சரவணன், தந்தையின் நெருக்கடியால் சென்னைக்கு வேலைக்கு வருகிறான்.

அங்கே பழக்கமாகும் நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து ஒரு நகைத்திருட்டை நடத்துகிறான். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தொடர் சங்கிலியாக இருக்கிறது.

இறுதியில் என்ன ஆனது? மாட்டினார்களா? தப்பித்தார்களா? என்பதே கதை.

கதை என்னவோ உங்களுக்குக் கேட்கச் சாதாரணமாகத் தோன்றலாம் ஆனால், எடுத்த விதம் மிகச் சிறப்பு.

சரவணன் எதிலுமே ஆர்வத்தைக் கொண்டவன். எல்லோரும் ஒரு மாதிரி சிந்தித்தால் இவன் வேற மாதிரி சிந்திப்பான். புத்தகம் படிப்பதில் மிக ஆர்வம் கொண்டவன்.

துவக்கத்தில் சில காட்சிகள் வரை அதர்வா என்றே நினைத்துப் பார்த்தேன்.

என்னடா! ஒரு சாயல்ல அதர்வா மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு என்று குழம்பி பின்னர் அதர்வா இல்லை என்ற முடிவுக்கு வந்தேன் 🙂 .

படத்தில் நாயகி இல்லை என்பதே உங்களுக்கு ஒரு வியப்பை கொடுக்கலாம்.

எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சுபாவமும், நடைமுறை எதார்த்தமாகவும், குழப்பம் இல்லாமல் இருப்பதாகவும் சரவணன் சுவாரசியமான கதாப்பாத்திரம்.

இவரது நண்பராக வரும் கருணாகரன் வழக்கம் போல ஒரு நண்பராக வந்தாலும், படத்தின் இறுதிவரை இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கர்மா எதிர்வினை

இப்படம் எனக்குப் பிடிக்க இன்னொரு முக்கியமான காரணம் கர்மா, தமிழில் இவ்வளவு விரிவாகக் கர்மா, எதிர்வினை பற்றிப் படம் வந்ததாக நினைவில்லை.

ஒவ்வொரு செயலுக்கும் தொடர்பு இருப்பதை இப்படம் விளக்குகிறது. அதைச் சரவணன் புரிந்து அதன் போக்கில் போவது சுவாரசியமாக உள்ளது.

ஜீவி அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம் ஆனால், சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமான காதல், பாடல்கள் இல்லாத படம்.

படத்தின் பெயர் ஜீவி என்பது அறிவுஜீவி என்பதைக் குறிக்கிறது அதாவது சரவணன் மூளைக்காரன் என்பதை.

Directed by V. J. Gopinath
Written by Babu Tamizh
Screenplay by Babu Tamizh, V. J. Gopinath
Story by Babu Tamizh
Starring Vetri, Monica Chinnakotla, Karunakaran, Rohini, Mime Gopi, Ashwini Chandrashekar
Music by K. S. Sundaramurthy
Cinematography Praveen Kumar
Edited by Praveen K. L.
Release date 28 June 2019
Country India
Language Tamil

தொடர்புடைய கட்டுரை

ராட்சசன் [2018] செம்ம த்ரில்லர்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. சில நாட்களுக்கு முன் நானும் பார்த்தேன் எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது.

    குடும்பத்துடன் பார்க்ககூடிய திரைப்படம்

  2. கிரி.. நேற்று இரவு இந்த படத்தை தற்செயலாக பார்த்தேன்.. இன்னைக்கு தளத்தில் உங்கள் விமர்சனம்.. நான் வெளியான போது எனக்கு தெரியவில்லை.. அலுவலக நண்பன் ஒருவனுக்கு நான் ரொம்ப நாள் முன்னாடி எட்டு தோட்டாக்கள் படத்தை பார்க்குமாறு நான் கூறினேன்.. அந்த தயாரிப்பு நிறுவனத்தோட படம் என்று நண்பன் கூறியதால் பார்த்தேன்..

    முதலில் எட்டு தோட்டாக்கள் படத்தை பற்றி பேசுவோம் .. படம் தாறுமாறு.. நேர்த்தியான திரைக்கதை.. MS பாஸ்கர், கோபி நடிப்பு , இன்னும் பல!!! சொல்ல வார்த்தைகள் இல்லை.. படத்தின் ஹீரோ, வெற்றியின் நடிப்பு என்னை பொறுத்தவரை சுமார்.. கதாபாத்திரத்தின் அளவுகோலும் வேறுவிதமாக இருப்பதால் அப்படி தோன்றுகிறதோ என்னவோ????

    ஆனால் ஜீவி படத்தில் வெற்றியின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.. நன்றாக நடித்து இருக்கிறார்.. படமும் எனக்கு பிடித்து இருந்தது.. ஒரு கட்டத்திற்கு மேல் படத்தில் சுவாரசியம் தாங்கமுடியவில்லை.. முடிவு வேறுவிதமாக இருக்கலாமா என்று கூட யோசித்தேன்.. இயக்குனர் படத்திற்காக நிறைய விஷியங்களை கற்றிருக்கிறார்..

    எட்டு தோட்டாக்கள் படம் பார்த்து இருப்பிங்க என்று நினைக்கிறன்.. பார்க்கவில்லை என்றால் படத்தை பார்க்கவும்.. படம் செம்ம படம்.. சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட செதுக்கி இருப்பார்கள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @பிரதீபன் 🙂

    @யாசின் எட்டுத் தோட்டாக்கள் படம் பார்த்து விட்டேன். திரைக்கதையை மேம்படுத்தியிருந்தால், மிகப்பெரிய வெற்றிப்படமாக வந்து இருக்கும்.

    ஜீவி சுவாரசியமான படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here