ரகுவரன் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது, அவருடைய அலட்டல் இல்லாத நடிப்பும், அவருடைய வித்யாசமான வசன உச்சரிப்பும் தான். Image Credit
இப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் குடி பழக்கத்தால் நம்மை விட்டுப் பிரிந்து தமிழ் திரை உலகிற்கு ஈடு கட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தி விட்டார்.
ரகுவரனை பிடிக்காதவர்கள் மிகக் குறைவே என்றே கருதுகிறேன், அவருடைய வித்யாசமான வில்லன் நடிப்பால் அனைவரையும் தன் வசம் ஈர்த்து இருந்தார்.
அவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் புரியாத புதிர், பாட்ஷா மற்றும் லவ் டுடே.
புரியாத புதிரில் ஐ நோ என்று சைக்கோ தனமாகப் பேசி அனைவரையும் டென்ஷன் செய்து இருப்பார்.
பாட்ஷாவில் மார்க் அந்தோனி வேடத்தில் பட்டய கிளப்பி இருப்பார். அதில் கூற ஏகப்பட்ட காட்சிகள் உள்ளது.
இந்தப் படத்தில் ரகுவரன் ரஜினியை மிரட்டும் அவர் செய்யும் அலட்டல் இல்லாத நடிப்பு எவராலும் செய்ய முடியாது.
லவ் டுடே ல் பாசம் மிகுந்த அப்பாவாக நண்பராகக் கலக்கி இருப்பார். ரஜினியின் வில்லன்களில் முக்கிய இடத்தைப் பிடித்தவர்.
அஞ்சலி, முகவரி, சிவப்பதிகாரம், சம்சாரம் அது மின்சாரம், ரன் போன்ற படங்கள் அவரது குணச்சித்திர நடிப்புக்கு சான்று.
வில்லன் என்றால் இரும்பை போல உடல்வாகும் முரட்டு தனமான பார்வையும் தான் என்பதை உடைத்தெரிந்தது இவர் மட்டுமே.
தனது மெல்லிய தேகத்தின் மூலமே அனைவரையும் மிரட்டி இருந்தார், இப்படிப் பட்ட நடிகர் நம்மைப் பிரிந்து விட்டார் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙁 .
சன் தொ.கா.வருவதற்கு முன்னால் டிடியில் ஒரு தொ.கா. தொடரில் குடிகாரனாக நடித்தார் இவர். சிவசங்கரியின் நாவல் அதை தொ.கா. தொடராக இயக்கி இருந்தனர். அந்த தொடரில் தத்ரூபமான குடிகாரனாக ரகு நடித்தார். ஆனால் அவர் கடைசிவரை அதை மறக்க முடியாமல், குடிகாரனாகவே போனது வருத்தமே.