கோச்சடையான் பாடல்கள்

12
கோச்சடையான் பாடல்கள்

கோச்சடையான் பாடல்கள் விமர்சனத்தோடு அப்படியே பாடல் பற்றிய சில கொசுறுத் தகவல்களையும் கொடுத்து இருக்கிறேன். Image Credit

பாடல்களை நுணுக்கமாக விமர்சிக்கும் அளவிற்கு இசையில் ஞானம் இல்லை ஆனால், பாடல்களை ரசிக்கப் பிடிக்கும்.

குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள்க 🙂 .

கோச்சடையான் பாடல்கள்

எங்கே போகுதோ வானம்

போர்க்களத்தில் பகை முடித்து வெற்றியோடு நாடு திரும்பும் படைத்தலைவர் ரஜினி, தன் வீரர்களுக்கு உற்சாகம் தரும் வெற்றிப் பாடலைப் பாடிக் கொண்டே குதிரையின் மீது பயணிக்கும் இடம்.

பாடல் ஏற்கனவே வெளியாகி இது பற்றி பலர் விமர்சித்து விட்டார்கள். இதைக் கூறாமல் இருக்க முடியலை, SPB யின் குரலுக்கு மட்டும் வயசே ஆகாது போல இருக்கு! SPB பாடல் சென்டிமென்ட்டாக ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும்.

SPB பாடாத (துவக்கப் பாடல்) பாபா / குசேலன் படம் தோல்வியுற்றதால் ஒரு சென்டிமெண்ட் எப்போதும் ரசிகர்களுக்கு உண்டு.

இதயம்

தளபதி ரஜினி சிறையில். காதலிக்கும் இளவரசி அந்தப்புரத்தில் சங்க இலக்கிய மொழியில் காதல் பிரிவைப் பாடும் பாடல்

தலைவரின் ரசிகை சின்மயி வழக்கம் போல இந்தப் படத்திலும் ஒரு பாட்டிற்கு பாடி இருக்கிறார்.

எப்படியாவது தலைவர் படத்தில் ஒரு பாடல் பாடி விட வேண்டும் என்று ரகுமானிடம் கோரிக்கை வைப்பாரோ! என்று சந்தேகமாக இருக்கிறது.

ஆனால், பாடினாலும் தன் குரலுக்கு நியாயம் கற்பிக்கிறார். மெதுவாக ஆரம்பித்து, “இதயம் நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து போகுதேதேதேதே” என்று வேகம் எடுக்கும் போது… அருமை அருமை!

அதோடு ஸ்ரீநிவாஸ் பாடும் பின்னணியில் “ஏன்” “ராணா ராணா” என்று சின்மயி உருகும் போது ஒரு பெண்ணின் மன ஏக்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஸ்ரீநிவாஸ் “நின்னை மறக்கிலேன் நின்னை மறக்கிலேன்” என்று கூறும் போது இருவருக்கும் செம குரல் பொருத்தம்.

இந்தப் பாடலில் ஏக்கத்துடன் சின்மயி குரல் அதற்கு பதில் கூறும் விதமாக ஸ்ரீநிவாஸ் குரல்.

இதில் சின்மயிக்கே அதிகம் ஸ்கோர் செய்ய வாய்ப்பு. ரொம்ப ரசித்துப் பாடி இருக்கிறார்.

இந்தப் பாடல் பற்றி ஸ்ரீநிவாஸ் கூறும் போது “மெதுவாகத்தான் பாடலுக்காக மும்பை வந்தேன்.

ஒலிப்பதிவுக் கூடத்தில் சின்மயி உத்தேசமாகப் பாடி இருந்த பாடலை வைத்து இரவு 10.30 க்கு ரகுமான் Program செய்து கொண்டு இருந்தார்.

நான் உள்ளே இருந்த படுக்கையறையில் தூங்கி விட்டேன்.

காலை 4.30 மணிக்கு என்னை ரகுமான் உதவியாளர் அழைத்தார். சென்று பார்த்த பொழுது “இதயம்” பாடல் வேறு ஒரு உயரத்தில் இருந்தது.

தூக்கத்தில் எழுந்து இதை நான் எப்படிப் பாடினேன் என்று தெரியவில்லை ஆனால், முடிவில் ரொம்ப நன்றாக வந்து இருந்தது.

இதற்கு முழுக் காரணமும் ரகுமான் தான்” என்று கூறி இருக்கிறார்.

ஒரு பாட்டை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

இதே பாடலை ஹிந்தியில் ஸ்ரேயா கோஷல் பாடி இருக்கிறார். சபாஷ் சரியான போட்டி 🙂 .

இருவருமே ஒரே மாதிரி செமையாகப் பாடி இருக்கிறார்கள் ஆனால், “ராணா ராணா” என்று ஏக்கமாக காதலாகக் கூறுவதில் சின்மயி ஸ்ரேயா கோஷலை ஓவர் டேக் செய்து விட்டார்.

மணப்பெண்ணின் சத்தியம்

திருமணத்தில்  மனைவி கணவனுக்குச் செய்து தரும் சத்தியங்கள்.

இந்தப் பாடல் தலைவர் மனைவி லதா பாடியது. வழக்கமான பின்னணிப் பாடகருக்கு இணையாக எந்த தடங்கலும் இல்லாமல் அருமையாகப் பாடி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி போன்ற படங்களிலும் பாடி இருக்கிறார்.

ஏன் ரஜினியின் சமீப படங்களில் பாடவில்லை என்று தெரியவில்லை.

இவர் லதா என்று கூறினால் மட்டுமே தெரியும்! இல்லை என்றால் இவரும் ஒரு வழக்கமான பாடகர் என்றே பலரும் நினைப்பார்கள்.

இந்தப் பாடலை மெலடி பாடல்கள் கேட்பவர்கள் மட்டும் ரசிப்பார்கள், மற்றவர்களை அந்த அளவிற்கு கவருமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் தற்போது அதிரடிப் பாடல்களுக்கு தான் வரவேற்பு அதிகம்.

“போங்க பாஸு ரொம்ப மெதுவா இருக்கு” என்று அசால்ட்டாக கடந்து விடுவார்கள். டமால் தடால் என்று கேட்டு காது வலித்தவர்களுக்கு இது மயிலிறகால் வருடும் பாடல்.

இதே போல ஹரிசரண் குரலில் இன்னொரு பாடல் மணமகனின் சத்தியம்.

எங்கள் கோச்சடையான்

சிவனை நோக்கி தவமிருந்த கோச்சடையான் ஆடும் ருத்ர தாண்டவப் பாடல்.

ரஜினி ருத்ரதாண்டவம் ஆடுவது போல இரண்டு நிமிடக் காணொளியை பாடல் வெளியீட்டில் ஒளிபரப்பினார்கள்.

அதை யாரோ எடுத்து YouTube ல் வெளியிட்டு இருந்தார்கள். நடனமும் இசையும் தாறுமாறாக இருக்கிறது.

குறிப்பாக இந்த இசையை பெரிய திரையரங்கில் தரமான ஒலி தரத்துடன் கேட்டால் பட்டாசாக இருக்கும்.

உண்மையைக் கூறினால் இந்தக் காணொளி பார்த்த பிறகு படத்தின் மீது நம்பிக்கை கூடியது.

நம்பிக்கைக்கு காரணம் அனிமேசன் அல்ல நடனமும், உடலை முறுக்கேற்றும் இசையும் தான்.

இது போல வெறும் பாடலாக இல்லாமல் நடனமும் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று வைரமுத்து கூறியதாகவும் அதன் பிறகே பாடலுடன் நடனத்தை வைத்ததாகவும் படித்தேன்.

பாடல் விழாவில் “கோச்சடையான்’ என்ற பெயருக்கு “சடையில் கொன்றைப் பூ சூடிய சிவபெருமான்” என்று பொருள் என்றும் அதை பாண்டிய மன்னர்களின் பரம்பரை பெயராகவும் குறிக்கலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தப் பாடலில் மாணிக்க வாசகரின் பாடல் வரிகளைப் பயன்படுத்தி இருப்பதாக பேட்டியில் வைரமுத்து குறிப்பிட்டு இருந்தார்.

மெதுவாகத்தான்

திரும்ப SPB குரலில் ஒரு பாடல், இணைந்து பாடியது சாதனா சர(ர்)க்கம். மெலடியான பாடல்.

இந்தப் பாடலுக்கு ஒரு பெருமை உள்ளது. மறைந்த கவிஞர் வாலி அவர்கள் ரஜினி படத்திற்காக எழுதிய கடைசிப் பாடல்.

வாலி அவர்கள் “தளபதி” படத்திற்காக எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதமானது.

எனக்கு வாலி என்றால் ரஜினி படங்களில் தளபதி பாடல்கள் தான் நினைவிற்கு வருகின்றன. “யமுனை ஆற்றிலே” பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.

கடைசியாக ஒரு பாடல் கோச்சடையான் படத்திலும் வருவது ரொம்ப சந்தோசமாக உள்ளது.

பாடலில் வரும் மிருதங்க இசையின் பின்னணியில் “அன்னம் மட வண்ணம்” என்று SPB பாட அதனோடு சாதனா சர்கம் “ராணா ராணா” தொடர்வது அழகு.

சமீபத்திய படங்களில் இந்தப் பாடலில் தான் மிருந்தங்கப் பின்னணி இசையுடன் முழுப் பாடலும் வருகிறது.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

பல போர்க்களங்களை வென்று வீரத்திலும் ஞானத்திலும் உயர்ந்து விளங்கும் கோச்சடையான், ஒரு ஞானகுரு என்றே நாட்டு மக்களால் கருதப்படுகிறார்.

வாழ்க்கை கற்றுக் கொடுத்த அனுபவ ஞானங்களை மக்களுக்கு வழங்குகிறார் கோச்சடையான்.

தலைவருக்கு என்ன வருமோ அதை செய்து இருக்காங்க!

மன்னன் படத்தில் தலைவர் “அடிக்குது குளிரு” என்று பாடியதும்!! அவனவன் திகில் ஆகி இருப்பான் 🙂 கோச்சடையானில் தலைவர் பாடப் போகிறார் என்றதுமே எனக்கு லைட்டா வயிற்றைக் கலக்கியது.

நல்ல வேளை, வசனமாகக் கொடுத்து விட்டார்கள்.

40 வருடங்களாக தமிழ்ப் படங்களில் நடித்தும் சரியாக தமிழ்ப் பேச வராத ரஜினி, தன் தமிழ் உச்சரிப்பிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்து இருப்பதே சாதனை தானே!

உடன் ஹரிசரண் பாடி இருக்கிறார். வசன நடையாகவே முழுப் பாடலும் இல்லாமல் இடையில் ஹரிசரணை பாட வைத்து இருப்பது நல்ல உத்தி.

இந்தப் பாடலை வைரமுத்து எழுதி இருந்தாலும் தலைவரும் வைரமுத்துவும் இணைந்து உருவாக்கியதாக வைரமுத்து கூறினார்.

இந்தப் பாடலில் தலைவரின் பங்கு உள்ளது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. பின்வருவது இதில் சிறு உதாரணம்.

கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான்

காவிரி பிரச்சனை

இந்த வரிக்கு உதாரணமாக ரஜினியைத் தவிர வேற யாரையும் என்னால் நினைக்க முடியவில்லை.

காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, நடிகர்கள் போராட்டம் நடந்தது. அதில் ரஜினியும் கலந்து கொண்டார்.

“புரட்சித் தமிழன்” சத்யராஜ்க்கு என்ன காரணத்தினாலோ ரஜினியைப் பிடிக்காது.

அது அவருடைய தனிப்பட்ட விஷயம் அதில் கருத்துக் கூற எதுவுமில்லை ஆனால், தன் வெறுப்பைக் கொட்ட இந்த மேடையைப் பயன்படுத்தியது தான் மிகக் கேவலமாக இருந்தது.

மேடையில் ரஜினியை மறைமுகமாக எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்தார்.

இதைவிட ஒருவரை மேடையில் வைத்து அசிங்கப்படுத்த முடியாது என்கிற அளவிற்கு ஆபாச வார்த்தைகளையெல்லாம் கூறி மிக மோசமாக நடந்து கொண்டார்.

இதன் பின் ரஜினி பேச வந்து கோபத்தில் வார்த்தைகளை விட்டு, அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைவரும் அறிவர்.

கொஞ்சம் பொறுமையாக இருந்து இருந்தால் பெரிய இழப்பைத் தடுத்து இருக்கலாம்.

ஆனால், ஒருவர் அனைவர் முன்பும் மிகக் கேவலமாகப் பேசும் போது எவரும் உணர்ச்சிவசப்படுவது இயல்பு.

இந்த வரியில் கூறியது போல “கோபத்துடன் எழுந்து பெரும் நஷ்டத்துடன் அமர்ந்தார்”.

இதன் பிறகு ரஜினி, அதிகம் பேசுவதையே மேடைகளில் குறைத்துக் கொண்டார்.

உண்மை தான் “மாற்றம் ஒன்று தான் என்றும் மாறாதது”.

கர்ம வீரன்

போர்க்களத்தில் தான் பெற்ற வெற்றியைத் தாய் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் படைத்தலைவன் பாட்டு.

ரகுமான் குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் அதனால், இந்தப் பாடலுக்குப் பலரிடையே வரவேற்பு இருக்கிறது.

“சிவாஜி, எந்திரன்” போன்ற படங்களுக்கு சரி ஆனால், இது போன்ற சரித்திரப் படங்களுக்குப் பொருந்தாது.

ரகுமான் குரல் கூட ஓகே ஆனால், அவரது சகோதரி ரைஹனா குரல் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை.

ஸ்ருதி குரல் போல இவரது குரல் மாடர்னாக இருக்கிறது. எனக்கு இவர் குரல் சரித்திர காலப் பாடலுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இவருக்குப் பதில் சித்ரா பாடி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

“ஜோதா அக்பர்” படத்தில் வந்த “Azeem o shaan shahenshah” பாடல் போல ஒரு பாடல் இருந்து இருந்தால், நச்சுனு இருந்து இருக்கும்.

இவையல்லாமல் Rana’s Dream என்ற “லண்டன் ஆர்கெஸ்ட்ரா” இசையும் உள்ளது. இதில் நான் மிரட்டலான இசையை எதிர்பார்த்தேன் ஆனால், ஏமாற்றமாக இருந்தது.

இதில் வரும் பாடல்களின் மொத்த நேரம் 44 நிமிடங்கள். அத்தனைப் பாடல்களும் முழுமையாக வந்தால், படத்தில் பாதி பாடலாகவே இருக்கும் 🙂 .

இதில் பல “மாண்டேஜ்” பாடல்கள் என்று இயக்குனர் சவுந்தர்யா கூறினார்.

படம் ஓடுமா?

இணையம் முழுக்க கோச்சடையான் ஃப்ளாப் ஆகி விடும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

படம் ஃப்ளாப் ஆகும் என்று ஏழு காரணங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிட்டு இருக்கிறது 🙂

வலைத்தளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இடங்களிலும் கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பம் இந்தியாவிற்கே புதிது.

BC சென்டர்களில் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது. அதோடு அங்கே இருக்கும் பல திரையரங்கங்கள் சூர மொக்கையாக இருக்கிறது.

முன்பே கூறியபடி எனக்கு படத்தில் தலைவர் குரல், ரகுமான் இசை, ரவிக்குமார் திரைக்கதை இவற்றின் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது.

ட்ரைலரில் எனக்கு குறையாகத் தெரிவது வன்முறை.

இந்தப் படத்தைக் குழந்தைகள் நிச்சயம் அதிகம் பார்ப்பார்கள் அப்படி இருக்கும் போது எதற்கு இதில் இப்படி ரத்தம் தெறிக்கும் சண்டை!!

இது மட்டுமே எனக்கு உறுத்தலாக இருக்கிறது.

“அவதார்” “டின் டின்” உடன் ஒப்பிட்டு மொக்கை மொக்கை என்று கூறுகிறார்கள்.

கொஞ்சம் நடைமுறையில் யோசித்துப் பாருங்க.. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலம் / ஹிந்தி படம் போல பரந்து விரிந்த பார்வையாளர்கள் கிடையாது.

தமிழ் பேசுபவர்களை வைத்து மட்டும் எத்தனை கோடியை முதலீடு செய்து விட முடியும்! அதிகப் பணம் முதலீடு செய்தால் மட்டுமே “டின் டின்” தரத்தில் எடுக்க முடியும்.

அவ்வளவு பணம் முதலீடு செய்ய யார் இருக்கிறார்கள்?

இதை முதலீடு செய்யவே தமிழில் ரஜினியை விட்டால் யாரும் இல்லை. “டின் டின்” போல தரத்தில் தான் எடுக்கணும் என்றால் தமிழில் இது போல ஒரு படமே வராது!

ஏனென்றால், அந்தத் தரத்தில் எடுக்க நமக்கு பட்ஜெட் வரும் போது “டின் டின்” அடுத்த பாகம் தரத்தில் இன்னொரு உச்சத்தில் இருக்கும், இது மொக்கையாகி இருக்கும்.

YouTube ட்ரைலர் ல கமெண்ட்ஸ் சண்டை செமையா போயிட்டு இருக்கு 🙂 .

இப்ப கிண்டலடிக்கிறவங்க.. மற்றவங்க நல்லா இருக்குன்னு கூறுவதைக் கேட்டுப் பார்க்கத்தான் போறீங்க… அதுவும் உங்க வீட்டு குழந்தைகளோடு! I mean it 🙂 .

இயக்குனர் சவுந்தர்யா பாடல் வெளியீடு முடிந்த பிறகு கேள்வி பதில் நேரத்தில் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் பொறுமையாக கோபப்படாமல் சிரித்த முகத்துடன் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறினார்.

இதை எதிர்கொண்ட விதம் ரொம்ப ஆச்சர்யம் அளித்தது. நேரமிருக்கும் போது பின்வரும் காணொளியை முடிந்தால் பாருங்கள்.

கொசுறு 

கோச்சடையான் Android Game “Kingdom Run” வெளியிட்டு இருக்கிறார்கள்.

தொடர்புடைய கட்டுரை

கோச்சடையான்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

  1. கோச்சடையானில் ஒரு பாடல் தான் நன்றாக கேட்டிருக்கிறேன் “மாற்றம் ஒன்று தான் மாறாதது”.

    வரிகள் அருமையாக இருந்தது. ஆனால் பாடலின் இசை மரியான் படத்தின் “நெஞ்சே எழு” பாடலை நினைவு படுத்தியது. சமீப காலங்களில் ரஹ்மானின் இசை ஒரே மாதிரி இருப்பது போல இருக்கிறது.

  2. /YouTube ட்ரைலர் ல கமெண்ட்ஸ் சண்டை செமையா போயிட்டு இருக்கு/

    ரணகளத்திலேயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பா?? 🙂

  3. Kochadayan songs super and rahman songs keka keka than pidikum and vimarsanamum super. Kochadayan game is good 4.6 rating

  4. லதா டிக் டிக் டிக் படதில்லும் பாடி கலக் கி errupakka .

  5. கிரி,

    நல்ல பதிவு.

    எனக்கு என்னமோ, “இதயம்” பாடல் பிடிக்கவில்லை. செம போர். அழுகை. அந்த பாடல் வந்தால், டக் என்று அடுத்த பாடலுக்கு FF செய்து விடுவேன்.

    அதே போல கோச்சடையான் பாடலும். ஒன்று அதில் என்ன பாடுகிறார்கள் என்று தெளிவாக புரியவில்லை. அடுத்து அந்த டியூனும் சரிப்படவில்லை.

    ஆனால், முதலில் எனக்கு பிடிபடாமல் இருந்த, கர்மவீரன் பாடல், என் கார் ஆடியோவில் கேட்டபோதுதான் அப்பாடலின் மியூசிக் arrangement எப்பேற்பட்டதாக இருக்கிறது என்றே பிடிபட்டது! சூப்பர் பாட்டு. செம்ம பாடல் வரிகள். ரெஹ்மானும் பின்னி எடுத்திருக்கிறார். மெதுவாக ஆரம்பித்து ஹை பிச்சில் போய் டக் என்று மெதுவாக செல்லும் பாடல். SPB டூயெட் பாடலுக்கு அடுத்து நான் விரும்பி கேட்கும் பாடல் இது.

    எனக்கு சிவாஜியில் ரஹ்மான் தலைவருக்கு பின்னணி பாடியது இன்றுவரை செம்ம கடுப்பு. ஏனென்றால், அது “கிச், கிச்” என்று விக்ஸ் கம்பனிக்கு விளம்பரம் வருமே அதுபோல, சிங்கத்துக்கு சுண்டெலி பின்னணி குரல் கொடுத்தது போல இருக்கும். அதிரடிக்காரன் பாடல் மனோ அல்லது SPB பாடி இருக்கவேண்டிய பாடல். ARR பாடி கெடுத்து விட்டார் என்பது என்னுடைய அபிப்பிராயம். ஆனால், கோச்சடையன் ஒரு அனிமேஷன் படம் என்பதால், எனக்கு அத்தகைய பாதிப்பு தோன்றாது என்று நினைக்கிறேன்.

    கோச்சடையான் படத்தில் எனக்கு பாடல்கள் இவ்வரிசையில் பிடித்துள்ளன:

    1. மெதுவாகத்தான்
    2. கர்ம வீரன்
    3. எங்கே போகுதோ வானம்
    4. மாற்றம் ஒன்றுதான் மாறாதது
    5 & 6. மன மகனின்/பெண்ணின் சத்தியம்
    7. கோச்சடையான்
    8. இதயம்

    அருண்

  6. நிம்பள்கி கோச்சடையான் நம்பிக்கை கொஞ்சம் கூடியிருக்கு கிரி..

    இருந்தாலும் என்ன பண்றது தொழில்நுட்பம் பட்டிதொட்டி வரை பரவியிருக்கிரதனால டின்டின் அவதாரை கொட்டாம்பட்டியிலேயே HD தொழில் நுட்பத்தில் பார்த்துவிடலாம் (நம்மூரு 2ஜி மூலம் ஒரு படம் டோரன்ட் டவுன்லோட் அதிகபட்சம் ஒரு நாள் ??) மேலும் பிக்ஸ்சார் விளையாண்ட விளையாட்டுகளில் லயித்த குழந்தைங்களுக்கு கோச்சடையானின் ஆக்ஷன், செண்டிமெண்ட், பாட்டு, வன்முறை போன்றவை எப்படி பிடிக்குமென்று தெரியவில்லை… பாலபிஷேகம் செய்யும் ரசிகர்களை சேர்க்கவில்லை.

    படம் ரிலீஸ் பண்றத்துக்கு டைமிங்க்ன்னு ஒன்னு இருக்கு. அத எப்பவோ மிஸ் பண்ணிட்டாங்க (அவதார் டின் டின் வந்தப்பவே செஞ்சியிருக்கணும்). அப்புறம் இசை விமர்சனங்கள் அவ்வளவாக நன்றாக இல்லை (ரசிகர்கள் பிளாகை தவிர) ஏனெனில் வர வர ரஹ்மானின் இசை கோர்வைகள் வித்தியாசப்பட்டுகொண்டே இருக்கின்றன.. பல்லவி | சரணம் | பல்லவி | சரணம் | பல்லவி | என்ற சராசரி இந்திய நிலை மாறி பல்லவீவீவீவீவீவீவீ……… சரணம்ம்ம்மம்மம்ம்ம்ம் திடீர் பல்லவி என்றே மேற்கத்திய நிலை வந்துவிட்டது.

    உதா: காதல் அணுக்கள் எந்திரன் படப்பாடல் ராகங்களை இன்னும் என்னால் யோசிக்ககூட முடியவில்லை – எங்கெங்கோ செல்கிறது.. (ஒன் டூ – ஒன் டூ என்ற மியுசிக் அடியை தாண்டுவதால் இந்த பிரச்சினை) அது கொச்சடையானிலும் தொடர்கிறது.

    இரண்டாவது முறையாக வெளியிடப்பட்ட டிரைலர் பார்த்தபின்பு நான் பார்க்க நினைத்தவைகள்
    அசாசின்ஸ் க்ரீட் கேம்ஸ் – ட்ரைலர்..
    பி யுல்ப் – (படம் பார்த்தாயிற்று) ட்ரைலர்…. படம் கடைசியில் அலைத்துளிகளை கவனித்தாலே டெக்னாலஜியின் மகிமை தெரியும்.
    சும்மா கம்பேர் பண்ணி பார்த்தேன்.. இப்பவும் அவை பெட்டரா தோணுது..

    குறிப்பா டைமிங் மற்றும் லாஜிக்கள் (தொழில்நுட்பரீதியா பெயர் சொல்ல தெரியல) அசைவுகளை கோச்சடையாணுல நிறையவே மிஸ்பன்றாங்கன்னு தெரியுது.
    உதாரணத்துக்கு.. ற்றைலேரில் ரஜினி ஜெயிலில் ‘ஒரே ரத்தம் மாறாது’ அப்படி சொல்லும்போது எதோ ஒடிந்த கை அசைப்பது போல் இருக்கு. பல இடங்களில் உடம்புக்கு பொருந்தாத தலை, கலையாத மேக்கப், அசையாத உடம்பு என்று நிறைய்யவே இருக்கு… பார்ப்போம்.

    இந்தப்படத்தை டெக்னாலஜி தெரிந்த கேமரூனுக்கு காண்பிக்கபோகிரார்கள் என்று பில்டப் கூட்டும் அதே நேரத்தில் பலதரப்பட்ட ரசிக மக்களை எப்படி திருப்திப்படுத்தபோகிரார்கள் என்பதை சற்றே யோசிக்கவேண்டும் என்று நான் நினைப்பதை சிலர் தவறாக நினைத்தால் அவர்கள் உலகசினிமாவையும் தாண்டி ரஜனி ரசிகர்கள் என்ற ஒரு லயிப்பு இருப்பதால் மட்டுமே இந்தப்படம் முதல் ஒரு வாரத்திற்கு வெற்றியடைக்கூடும் என்பதே என் ஆணித்தரமான கருத்து என்று கூறிக்கொள்வதில் எந்தவித தவறுமில்லை என்று நினைக்கிறேன்.

    (ஹி ஹி ஹி – ச்சும்மா என் தலைவன் பாணியில் சொல்லிப்பார்த்தேன்)

  7. என்னுடைய. வரிசை

    1. மணப்பெண்ணின் சத்தியம்
    2. மெதுவாக. தான்
    3. மாற்றம்
    4. மணமகனின் சத்தியம்
    5. கோச்சடையான்
    6. ஆகாய. மேகங்கள்
    7. இதயம்
    8. எங்கோ போகதோ வானம்

    // இப்ப கிண்டலடிக்கிறவங்க எல்லோரும்.. மற்றவங்க நல்லா இருக்குன்னு கூறுவதைக் கேட்டுப் பார்க்கத்தான் போறீங்க… அதுவும் உங்க வீட்டு குழந்தைகளோடு! I mean it//
    நானும். இதற்கு. தான். ஆசைபடுகிறேன் .

    மெதுவாக. தான். பாட்டுக்கு. முடிஞ்சா. விளக்கம். எழுதுங்க . அதில். வர்ற. உவமை லா. புரியல . அப்படியே. சின்மயி. பாட்டுக்கும்

  8. எனக்கு. ட்ரைலர். பார்த்த பின்னர் நம்பிக்கை வந்து. இருக்கு . 3டில. நல்லா இருக்க.னுக்கு தோணுது .

  9. அண்ணா எனக்கு ரஜினி சார் பாடிய பாடல் மட்டுமே இந்த லிஸ்டில் மிகவும் பிடித்தமான ஒன்று . ஜிகர்தண்டா, வேலையில்ல பட்டதாரி, நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே போன்ற படங்களின் வெற்றி பாடல்களின் வரிசையில் ரஜினியின் குரலை முதல் பாடலாக வைத்து இருக்கிறேன் என்னுடைய பிளே லிஸ்டில்.. வித்தியாசமா இருக்கு . ஆனால் நான் கொஞ்சம் ஏமாந்து தான் போனேன். ரஜினி இதுவரை பாடி நான் கேட்டது இல்லை . அடிக்கிது குளிரு பாடலை துரதிர்ஷ்டவசமாக நான் இதுவரை பார்த்ததோ கேட்டதோ இல்லை . அதனால் இந்த பாடலை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன் . இருந்தாலும் இதுவும் நன்றாக தான் இருக்கிறது. இந்த பாடலை சமிபத்தில் என் அப்பா இருக்கும் போது ஊட விட்டேன் அமைதியாக நின்று கேட்டுவிட்டு போனார். “ரஜினியாடா இது எந்த படம்டா நு ” கேட்டார் .. அவர் பழைய பாடல்கள் மட்டும் தான் கேட்பார் என்பது குறிப்பிடத்தக்கது . எப்படியோ கோச்சடையனுக்கு முதல் காட்சி போக அப்பா எந்த தடையும் விதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி ரஜினி சார் அப்பாவை நிற்க வைத்ததற்கு

  10. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @அகிலா மரியான் இசை பற்றி இன்னொரு நண்பரும் கூறினார்.

    @அருண் இதயம் பாட்டுத் தான் என்னுடைய விருப்பப் பாட்டு 🙂 ஒருவேளை உங்களுக்கு தாமதமாகப் பிடிக்கலாம்.

    கர்மவீரன் பாடல் பிடித்தது ஆனால், குரல் பிடிக்கவில்லை. எந்திரனில் ரோபோக்கு குரல் கொடுத்து இருப்பார் அதனால் எனக்கு அது பொருத்தமாகத் தான் தோன்றியது ஆனால், சிவாஜி நீங்க சொல்வது சரி தான் 🙂

    என்னுடைய வரிசை

    1. இதயம்
    2. கோச்சடையான்
    3. எங்கே போகுதோ வானம்
    4. மெதுவாகத்தான்
    5. மாற்றம் ஒன்றுதான் மாறாதது
    6 & 7. மண மகனின்/பெண்ணின் சத்தியம்
    8. கர்ம வீரன்

    @சதீஸ் இன்று விமானம் மூழ்கி அனைவரும் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

    @ராஜ்குமார்

    ரஜினி படங்கள் ஒரு மேஜிக். எப்படி பிடிக்கும் என்றே தெரியாத அளவில் குழந்தைகளை கவர்ந்து விடும். பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களால் மட்டுமே படம் ஓடுவதில்லை.

    என்னது இசை விமர்சனங்கள் அவ்வளவாக நல்லா இல்லையா!! அவ்வ்வ்வ் ராஜ்குமார் அப்படியெல்லாம் இல்லை. பல்லவி சரணம்… ஹி ஹி எனக்கு நடிகை பல்லவி தான் தெரியும் 🙂

    அப்புறம் கோச்சடையானை எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.. படம் வந்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம்.

    இப்பவும் நான் சொல்வது எனக்கு அனிமேசனில் நம்பிக்கையில்லை. தலைவர் குரல், திரைக்கதை இசை இந்த மூன்றும் படத்தை வெற்றி பெற வைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.

    Rofl 😀 நமக்கு பிடித்தவர்களை கலாயிப்பதே ஒரு தனி சுகம் தான் 🙂

    @முத்துக்குமார் பண்டையத் தமிழுக்கு விளக்கம் கூறும் அளவிற்கு மூளை நகி 🙂

    3டி ல எப்படி இருக்கும் என்று பார்க்க எனக்கும் ஆர்வமாக இருக்கிறது. குறிப்பா ரஜினி நடனத்தின் போது விரல்களை கொண்டு வரும் போதும், நாசர் க்ளாசை தூக்கி எறியும் போதும்.

    @கார்த்தி

    அடிக்குது குளிரை கேட்காமல் இருப்பது உன் துர்ரதிர்ஷ்டம் அல்ல.. அதிர்ஷ்டம் 🙂 🙂

  11. //பலர் “அவதார்” “டின் டின்” உடன் ஒப்பிட்டு மொக்கை மொக்கை என்று கூறுகிறார்கள். கொஞ்சம் நடைமுறையில் யோசித்துப் பாருங்க.. //

    Sir, if they cant produce a quality film in this budget, they shouldn’t have attempted it. I dont like Rajni, but I accept that Endhiran was awesome. It was something we can show proudly to rest of the world. With the right budget they have prepared the right film. But here? How many films have this kid directed so far? At least a short film? I haven’t heard of any. The first film, without any experience, is the first motion capture film of India in such a small budget starring a (super) star. KIDDING???

    If they dont have money, they cud hv made something else, a good film with a good knot, in normal budget. If they make a motion capture film, everybody will compare it with Avatar. Even in avatar 40%, about half were not animated. Tintin was fully animated, but it is used as a technique there. Fans wouldn’t have accepted tintin if it was shot in live film. Now, who cried for a motion capture film in India? with such low budget? from such an inexperienced director?

    Also, the music. Usually, rahman’ music is special in Rajni films. Though some visuals are ruined by Rajni’s presence, I love the songs of Sivaji and others. But here’ I believe Rahman has decided this is all enough for this doordashan cartoon. For a film to be a suceess, it should be liked by non-fans too. We liked Sivaji, Endhiran… but this? BTW, I’m waiting…. Waiting to laugh….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here