வேட்டைக்காரன் | வரான் பாரு வரான் பாரு

20
வேட்டைக்காரன் Vettaikaran movie Poster

விஜய் தனது கடந்த மூன்று படங்களும் சரியாகப் போகாத நிலையில் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வரப்போகிறது வேட்டைக்காரன்.

விஜய்க்கு படப்பாடல்கள் எப்படியும் ஹிட் ஆகி விடும், இளைஞர்களிடையே குழந்தைகளிடையே அவரது படப்பாடலுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

வேட்டைக்காரன் படத்திலும் பாடல்கள் நன்றாக உள்ளது, இசை விஜய் ஆண்ட்டனி. வழக்கமான குத்துப் பாடல்களே அதிகம் உள்ளன. தற்போது பலர் அவற்றை விமர்சித்தாலும் பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும்.

வேட்டைக்காரன் பாடல்கள்

நான் அடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்கமாட்ட
மோதிப் பாரு வீடு போயி சேரமாட்டே

அறிமுகப் பாடலாக இருக்கிறது, எனக்கு இந்தப் பாடலே ரொம்பப் பிடித்தது.

பாடலில் விஜய் மகனும் ஆடியுள்ளார். எனவே குழந்தைகள் மத்தியில் ஹாட் பாடலாகவும் மியூசிக் சேனல்களில் அதிகம் கேட்கப்படும் பாடலாகவும் இருக்கும்.

சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். பாடல் கபிலன்

என் உச்சிமண்டைல சுர்ருங்கிது…
உன்னை நான் பார்க்கைல கிர்ருங்கிது….

முதலில் பாடல் ஆரம்பிக்கும் போது மேற்கத்திய இசை போல இருந்து எதிர்பாராமல் குத்து பாடலாக மாறி விட்டது. பாடல் முழுவதும் டர்ர் புர்ர் கர்ர் கிர்ர் னு வருகிறது 🙂 .

இப்பாடலின் வேகமான இசைக்கு ஏற்ற உற்சாகமான குரல் ஆண் குரல் ஆனால், அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்காமல் பெண் குரல் உள்ளது.

கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர், சாருலதாமணி, ஷக்தி ஸ்ரீ பாடி இருக்கிறார்கள், பாடல் அண்ணாமலை.

ஒரு சின்னத்தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

படத்தில் உள்ள ஒரே மெலடி (மாதிரி) பாடல், விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களும் இதை ரசிப்பார்கள். கிருஷ், சுசித்ரா பாடலைப் பாடி இருக்கிறார்கள், பாடல் விவேகா.

கரிகாலன் காலப்போலக் கருத்திருக்குது குழலு
குழலில்லை குழலில்லை தாஜ்மகால் நிழலு

காதலன் ஒரு அர்த்தத்தில் கூற காதலி அது இல்ல இது வேற என்று கூறுவது போலப் பாடல் உள்ளது, சுவராசியமாக உள்ளது.

பாடலைப் பாடியவர்கள் சுர்சித், சங்கீதா ராஜேஷ்வரன், பாடல் கபிலன்.

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது – வேட்டைக்காரன் வரதப் பார்த்து
கொல நடுங்குது கொல நடுங்குது

துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரதப் பார்த்து

பட்டாகத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு …..வரான் பாரு வேட்டைக்காரன்.

சவால் பாடலாக விறுவிறுப்பாக உள்ளது, விஜய் ரசிகர்களைப் பெருமளவில் கவரும். ஆனந்து, மகேஷ் விநாயகம் பாடலைப் பாடியுள்ளார்கள், பாடல் கபிலன்.

இப்பாடலின் வரிகளை அதிகம் இங்கே போட்டதற்குக் காரணம் நாளை படம் வந்த பிறகு இதை வைத்துத் தான் கிண்டல் செய்வார்கள்.

படம் வந்த பிறகு நிக்காம ஓடு ஓடு ஓடு.. வரான் பாரு வேட்டைக்காரன் என்ற வரியை வைத்துப் பலர் கிண்டல் செய்வார்கள் என்பது உறுதி 🙂 .

விஜய் இதைப் போன்ற வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம், அவரே கிண்டல் செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்தது போல இருக்கு.

சும்மாவே கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டு பார்ப்பாங்க.

விஜயை பிடிக்காதவர்கள் வேண்டும் என்றால் பாடலைக் கிண்டல் செய்து கொண்டு இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

படம் ஹிட் ஆவது விஜய் நம்புற மாதிரி சன் பிக்சர்ஸ் கையில் தான் உள்ளது 🙂 .

விஜய் ஆண்ட்டனி

படத்தில் பாடல்கள் பல வேகமான பாடல்களாக இருந்தாலும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்ட்டனி முன்பு இசை அமைத்த நாக்கு முக்க, ஆத்திச்சூடி பாடலைப் போல அதிக வேக பாடலாக எதுவுமில்லை.

விஜய்க்குப் படத்தில் எதிரி யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கி விடுவார், அவரே பயந்து போய்க் கூட அவரோட அப்பாவும் சேர்ந்து பயந்து போய் இருப்பது வலைப்பதிவர்களைப் பார்த்துத் தான்.

சந்திரசேகர் வலைப்பதிவர்கள் தான் வில்லு படத்தை டோட்டல் டேமேஜ் செய்து விட்டதாக ஒரு பேட்டியில் புலம்பி இருந்தார்.

சரி அதை விடுங்க…. வேட்டைக்காரன் படம் எப்படியோ! பாடல் கண்டிப்பாக ஹிட் தான், அதில் எந்தச் சந்தேகமுமில்லை 🙂 .

Read : துப்பாக்கி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

20 COMMENTS

 1. பட விமர்சனம் பாடல் விமர்சனம் என கலக்குறீங்க கிரி:)!

  எனக்கு மெலடிதான் பிடிக்கும்.

 2. அப்போ எனக்கு பிடிக்காது…இதுவே ரொம்ப பிடிச்சிருக்கு :-))

 3. என் உச்சிமண்டைல சுர்ருங்கிது…
  உன்னை நான் பார்க்கைல கிர்ருங்கிது….
  – இதான் இப்போ கிரி-யோட தேசிய கீதம்… வேட்டைக்காரன் பாட்டை கேட்டதிலிருந்து இந்த புலி உருமிக்கிட்டு தான் இருக்குது.
  வழக்கம் போல விஜய்க்கான இளமை ததும்பும் பாடல்கள். வார்த்தைகள் தான் பேரரசு பெத்தது மாதிரியே இருக்குது….ம்ம்ம்

 4. ஷங்கர், பாலா, ராமலக்ஷ்மி, புனிதா,அருண், ஷண்முகப்ரியன், ராஜ், கலையரசன், விக்டர்,கிறுக்கல் கிறுக்கன், ராஜாராமன் வருகைக்கு நன்றி

 5. //கொடி பறக்குது கொடி பறக்குது – வேட்டைக்காரன் வரத பார்த்து
  கொல நடுங்குது கொல நடுங்குது\\

  படத்தோட ரிசல்ட் கொல நடுங்க வைக்காம இருந்தா சரி

 6. குருவியோட பாட்டு கொளுத்துங்கடா வேட்டு…
  என் வீட்டு செங்கல் நீ, என் சோற்றில் உப்பு கல் நீ….

  "வேட்டைகாரன்" பட பாடலில் இதை மிஞ்சிய வரிகள் உள்ளதா கிரி…

 7. //வார்த்தைகள் தான் பேரரசு பெத்தது மாதிரியே இருக்குது….ம்ம்ம்//

  ரோஸ்விக், சூப்ப்ப்பபரு!! :))))

 8. // மங்களூர் சிவா said…
  சன் பிக்சர்ஸா, தொலைஞ்சோம்
  :)))))))))))//

  🙂

  ======================================================

  // R.Gopi said…
  குருவியோட பாட்டு கொளுத்துங்கடா வேட்டு…
  என் வீட்டு செங்கல் நீ, என் சோற்றில் உப்பு கல் நீ….

  "வேட்டைகாரன்" பட பாடலில் இதை மிஞ்சிய வரிகள் உள்ளதா கிரி…//

  இருக்குதுன்னு நினைக்கிறேன்

  ======================================================

  விஜய் வருகைக்கு நன்றி 🙂

 9. ”ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே”

  அருமையான மெலோடி……

 10. //ந்திரசேகர் வலைப்பதிவர்கள் தான் வில்லு படத்தை டோட்டல் டேமேஜ் செய்து விட்டதாக ஒரு பேட்டியில் புலம்பி இருந்தார்.
  // அப்படிங்களா?!!!

 11. Vettaikaaran all songs is Superb and amazing songs…,,,,,, Eppavume Thalabathi Pattaya kelappuvaru ithu Pattasu Kelappuvarunu ethirparkirom

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here