வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் சுயநலவாதியா!

23
வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் The common man

பொதுமக்கள் மீது வழக்கமாக வைக்கப்படும் குற்றசாட்டு.. வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் எந்த ஒரு உதவிக்கும் வர மாட்டார்கள்.

எவன் எக்கேடோ கெட்டுப் போனால் நமக்கென்ன என்று இருக்கும் சுயநலவாதிகள் என்று.

வேடிக்கை பார்க்கும் பொதுஜனம்

மற்ற நாட்டினருக்கு எப்படியோ நம் நாட்டிற்கு இந்த வசனம் பொருந்துமா!

பாதிக்கப் பட்ட ஒருவனுக்கு உதவி செய்யும் ஒருவனின் நிலை நம்ம ஊரில் என்ன கதி ஆகும் என்று யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. Image Credit

காவல் நிலையம், நீதிமன்றம், வழக்கு, கையெழுத்து, சாட்சி, மிரட்டல் என்று அலைகழித்து அவனை இனி உதவி செய்கிறீர்களா என்று யாராவது கேட்டால் அவன் தலை தெறிக்க ஓடுமளவுக்குச் செய்து விடுவார்கள்.

ஒரு நடுத்த வசதி உள்ள ஒருவனால் அவன் அன்றாடத் தேவைகளுக்காக அலைய முடியுமா இல்லை உதவி செய்ததற்காக இதைப் போலத் தினமும் அங்கே இங்கே அலைந்து கொண்டு இருக்க முடியுமா?

எடுத்துக்காட்டு

ஒருவனை யாரோ கத்தியால் குத்தி விட்டார்கள்.. சாகக் கிடக்கிறான், மனிதாபிமானமுள்ள யாரும் காப்பாற்ற தான் முயல்வார்கள்.

அவ்வாறு காப்பாற்ற எடுத்துச் செல்லும் வழியில் அவன் இறந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

காவல் துறை, கொண்டு வந்தவனைச் சார்! நீங்க இவரைக் கொண்டு வந்ததற்கு நன்றி நீங்க வீட்டிற்குப் போகலாம் என்று கூறி விட்டு விடுவார்களா?

இந்தக் கொலைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று மிரட்ட மாட்டார்களா?!

உன்னை யாருயா தூக்கிட்டு வர சொன்னது இதுக்கு நீ தான் சாட்சி! நாளைக்குக் காலையில நீதிமன்றம் வந்துடு னு ஒரு போடு போடுவாங்க.

அவனை அங்கே இங்கே அலைய விட்டு அவன் நொந்து நூடுல்ஸ் ஆகிற வரை சக்கையா பிழிந்து எடுத்து விடுவார்கள்.

இடையே கொலை செய்தவர்கள் பக்கம் இருந்து மிரட்டல்.

இதைப் பார்க்கும் மற்றவர்கள் மற்றும் உதவி செய்தவர் மறுபடியும் இதைப் போல ஏதாவது பிரச்சனை வந்தால் உதவி செய்வார் என்று நினைக்கிறீர்களா?

சட்ட கல்லூரி பிரச்சனை

சட்ட கல்லூரி பிரச்சனையையே எடுத்துக் கொள்ளுங்கள். யாராவது ஒருத்தர் துணிந்து காப்பாற்ற சென்று இருந்தால் அவரின் நிலைமை என்னவாகி இருக்கும்?

காவலர்கள் செல்லாமல் இருந்ததற்கு ஒரு காரணமாகக் கூறப்படுவது இதனால் பின் வரும் பிரச்சனைகள் (மாணவர்கள் வக்கீல்கள் போராட்டம்).

கையில் காவல் துறை என்ற அதிகாரம் இருந்தும் இது போலப் பிரச்சனைகளால் மற்றும் அரசியல் காரணங்களால் உள்ளே சென்று அவர்களை அடக்கக் காவல்துறையே யோசிக்கும் போது அல்லது பயப்படும் போது எந்த ஒரு பின்புலமும் அதிகாரமும் இல்லாத சாதாரணப் பொதுஜனம் என்ன செய்து விட முடியும்.

அப்படியே உதவி செய்தாலும் நாளைக்கு யார் பாதுகாப்பு?

மிரட்டல்

டேய்! எந்த ஏரியாடா நீ? அப்புறமா உன்னை வச்சுகிறேன்னு மிரட்டுவானுக. இவர்களுக்குப் பயந்து எத்தனை நாள் ஒருத்தன் இருக்க முடியும்?

இதில் அரசியல் சம்பந்தப்பட்டு இருந்தால் வேற வினையே வேண்டாம் அவன் கதி அதோ கதி தான்.

ஏதாவது அரசியல் பின்புலம், அதிகாரம், மக்கள் செல்வாக்கு, பணப் பலம், ஏதாவது அமைப்பில் உறுப்பினர் என்று ஏதாவது இருந்தால் மட்டுமே ஒரு பொது ஜனம் தவறை தட்டி கேட்க முடியும் அல்லது அதை எதிர்த்துப் போராட முடியும்.

இவ்வளோ பெரிய ஊரில் ஒரு ட்ராபிக் ராமசாமியை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறினால் போதுமா? அவரின் சிரமங்கள் எத்தனை பேர் அறிவர்

திரைப்படங்களில் வேண்டுமானால் வசனம் பேச முடியும், அனைவரையும் கேள்வி கேட்க முடியும் அதே நிஜவாழ்க்கையில் நடைமுறையில் சாத்தியம் மிகக் குறைவு

இது யாருடைய குற்றம்? வேடிக்கை பார்ப்பவன் குற்றமா?

இல்லை இப்படிக் கடுமையான அணுகுமுறை மற்றும் எளிமை இல்லாத வழிமுறைகள் வைத்து இருக்கும் சட்டத்தின் குற்றமா?

உண்மையான பாதுகாப்பு

உதவி செய்பவர்களுக்குச் சிரமம் இல்லாத நடவடிக்கை மேற்கொண்டால் மற்றும் உண்மையான பாதுகாப்புக் கொடுத்தால் மட்டுமே எந்த ஒரு நபரும் துணிந்து உதவி செய்ய வருவார்.

இவை நம் ஊரில் நடக்கச் சாத்தியமா!

அப்ப எந்த ஒரு தவறையும் தட்டி கேட்காமல் சுரணை இல்லாமல் இருப்பதா! என்றால் சாதாரணப் பொது ஜனத்தால் (குறிப்பாக நடுத்தர மக்கள்) தன் எல்லை எது வரை உள்ளதோ அல்லது அதனால் பெரிய பாதிப்பு இல்லை என்று உணர்ந்தால் மட்டுமே ஒருவர் உதவி செய்ய முன் வருவார்.

அதுவரை ஒரு சிலர் கூறுவது போலச் சுயநலவாதியாக மனதினுள் உதவ ஆசை இருந்தாலும் நடைமுறையில் இவ்வாறு தான் இருக்க முடியும் அல்லது நமது சட்டங்கள், சமூகம், அரசியல் அமைப்பு இருக்க வைக்கிறது.

இவைகளில் மாற்றம் வரும் போது மட்டுமே எந்த ஒரு சாதாரண மனிதனும் எங்கேயும் வேடிக்கை பார்க்காமல் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட முடியும்.

எளியோரை வலியோர் வருத்துவது இருக்கும் வரை இதைப் போலச் சுயநலமும் தவிர்க்க முடியாததே.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

23 COMMENTS

  1. இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு நம்மால் ஆணியே புடுங்க முடியாது..

  2. ஏதோ நாமே குற்றவாளி என்ற லெவலுக்கு நம்மை மிரட்டுவாங்க. இதெல்லாம் தேவையான்னுதான் யாருமே சாட்சிக்குன்னு போறதில்லை.

    நல்ல பதிவு கிரி.

  3. /////எடுத்துக்காட்டாக ஒருவனை யாரோ கத்தியால் குத்தி விட்டார்கள்.. சாக கிடக்கிறான், மனிதாபிமானமுள்ள யாரும் காப்பாற்ற தான் முயல்வார்கள் அவ்வாறு காப்பாற்ற எடுத்து செல்லும் வழியில் அவன் இறந்து விடுகிறான் என்று வைத்து கொள்வோம். காவல் துறை, கொண்டு வந்தவனை சார்! நீங்க இவரை கொண்டு வந்ததற்கு நன்றி நீங்க வீட்டிற்கு போகலாம் என்று கூறி விட்டு விடுவார்களா?/////விடுவாங்க. அதுக்கு ஏதோ புதுச் சட்டம் போட்டிருக்காங்க. அவசர எண் 108ன்னு ஒரு நெம்பரும் இருக்கு. நீங்க தூக்கிக்கிட்டெல்லாம் போகவேணாம், அட்லீஸ்ட், 108க்கு ஃபோன் போட்டு, ஆம்புலன்ஸ் வரவரைக்கும் வெயிட் பண்ணா போதும்.

  4. //Ŝ₤Ω..™ said…
    இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு நம்மால் ஆணியே புடுங்க முடியாது//

    காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்களில் மாற்றம் வர வேண்டும்.

    ===================================================================

    //துளசி கோபால் said…
    நல்ல பதிவு கிரி.//

    நன்றி மேடம்

    ===================================================================

    //ராமலக்ஷ்மி said…
    நிதர்சனமான உண்மைகள்.//

    நன்றி ராமலக்ஷ்மி

    ===================================================================

    //SurveySan said…
    விடுவாங்க. அதுக்கு ஏதோ புதுச் சட்டம் போட்டிருக்காங்க. அவசர எண் 108ன்னு ஒரு நெம்பரும் இருக்கு.
    நீங்க தூக்கிக்கிட்டெல்லாம் போகவேணாம், அட்லீஸ்ட், 108க்கு ஃபோன் போட்டு,//

    நல்ல விஷயம் தான்

    //ஆம்புலன்ஸ் வரவரைக்கும் வெயிட் பண்ணா போதும்.//

    பின்னாடியே வேற ஏதாவது வராம இருந்த சரி :-)))

  5. முதலில் வேடிக்கை பார்க்கும் காவலர்களும், அரசியவாதிகளும் திருந்தட்டும், பொது மக்கள் கலத்தில் இறங்குவார்கள்

  6. அப்துல்லா, நான் ஆதவன் வருகைக்கு நன்றி

    ===================================================================

    //வால்பையன் said…
    முதலில் வேடிக்கை பார்க்கும் காவலர்களும், அரசியவாதிகளும் திருந்தட்டும், பொது மக்கள் கலத்தில் இறங்குவார்கள்//

    சரியா சொன்னீங்க அருண். பொறுப்பில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் தான் அவர்கள் கீழே உள்ளவர்களும் சரியாக இருப்பார்கள்.

  7. All problems beginning from thinking of I and Me not we and us. We never thought our neighbour as our family, in city like madras, you can stay for 30 years nearby but you still don’t know about your neighbour.

    To this we should think to unite and work with others,may be there are 1 or 2 people to lead , since nobody is ready to follow them,they are also reluctant begin intiative.

  8. //நசரேயன் said…
    பதிவை வேடிக்கை பார்க்கிற நான் யாருன்னு தெரியலையே?//

    சுயநல பதிவர் ….அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்.. :-)))

    ===================================================================

    //nawab said…
    We never thought our neighbour as our family, in city like madras, you can stay for 30 years nearby but you still don’t know about your neighbour.//

    உண்மை தான் பேரு நகரங்களில் இவ்வாறு தான் நடக்கிறது.

    //To this we should think to unite and work with others,may be there are 1 or 2 people to lead ,//

    பிரச்சனையே இது தான் 🙂

  9. பதிவை வேடிக்கை பார்க்கிற நான் யாருன்னு தெரியலையே?

  10. 108க்கு போன் பண்ணா அம்ம்புலன்ஸ் வரும்…சரி.. பின்னால 108 ஆட்டோவும் வருமோ? அதுதானே இங்க பயம் !!

    ஆனா கிரி… நம்ம ஊர்ல போலீஸ் இப்பிடியெல்லாம் கேக்கறாங்கன்னா, ஒருத்தன் கொலை பண்ணீட்டு, “தெருவுல போம்போது பாத்தேன், அடிப்ட்டுக் கெடந்தான்”ன்னு சொல்லீட்டு போய்ட்டே இருக்கற வாய்ப்பும் இருக்கு. அவுங்கள் சொல்லியும் குத்தம் இல்ல. 25000:1 விகிதத்துல போலீஸ் இருக்கும்போது இப்பிடித்தான் இருக்கும்.

  11. //arun said…
    Giri,
    Ithuku yenna than mudivu. As a common person what I/We need to do to change this?//

    அரசாங்கம் சரியாக இருந்தால் மக்களும் தங்கள் கடமைகளை சரிவர செய்வார்கள். தனி ஒருவனாக யாரும் எதையும் மற்ற முடியாது, எதுவும் நம் naattai போல மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில்.

    ======================================================================

    //Mahesh said…
    108க்கு போன் பண்ணா அம்ம்புலன்ஸ் வரும்…சரி.. பின்னால 108 ஆட்டோவும் வருமோ? அதுதானே இங்க பயம் !!//

    ஹா ஹா ஹா ஹா அது தானே பிரச்சனை

    //நம்ம ஊர்ல போலீஸ் இப்பிடியெல்லாம் கேக்கறாங்கன்னா, ஒருத்தன் கொலை பண்ணீட்டு, “தெருவுல போம்போது பாத்தேன், அடிப்ட்டுக் கெடந்தான்”ன்னு சொல்லீட்டு போய்ட்டே இருக்கற வாய்ப்பும் இருக்கு//

    1000 குற்றவாளி தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது. நம்ம ஊர்ல பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் இல்லை அப்பாவிகள் மாட்டிகொள்கிறார்கள்.

  12. ”சுயநலத்தோடு ஒரு சிலர் அல்லது பலர் இருக்கிறார்கள் அவர்கள் எங்கும் இருப்பார்கள்”Hundred percent correct … No law can ever protect a common man if the aggressive party decides to eliminate common person’s aid.Common to every society.This is one of those traits that society has to learn to tolerate unless Laws are in place to curb the Mafia of usa and ”Thaathaa” of India; and in other nations by other names !

  13. குற்றம் செய்தவனுக்குக்கூட மனசாட்சி உறுத்தாதுங்க.. இந்த பாத்துட்டு உதவி செய்யமுடியாதவங்க சுயநலமா இருக்கறவங்களுக்கு ரொம்ப நாள் மனசாட்சி உறுத்திட்டிருக்கும்..

  14. //benzaloy said…
    ”சுயநலத்தோடு ஒரு சிலர் அல்லது பலர் இருக்கிறார்கள் அவர்கள் எங்கும் இருப்பார்கள்”
    Hundred percent correct … No law can ever protect a common man if the aggressive party decides to eliminate common person’s aid.//

    வழிமொழிகிறேன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ===================================================================

    //முத்துலெட்சுமி-கயல்விழி said…
    குற்றம் செய்தவனுக்குக்கூட மனசாட்சி உறுத்தாதுங்க.. இந்த பாத்துட்டு உதவி செய்யமுடியாதவங்க சுயநலமா இருக்கறவங்களுக்கு ரொம்ப நாள் மனசாட்சி உறுத்திட்டிருக்கும்//

    நீங்கள் கூறுவது சரி தான். மனசாட்சி உறுத்துவதை கூட தாங்கிக்கலாம், ஏதாவது சிக்கல்ல மாட்டிக்கிட்டு அதனால வரும் மனஉளைச்சல் அதை விட கொடுமையானது.

  15. நாம எல்லாம் தட்டி கேட்க ஆரம்பிச்சா அரசியல்வாதி பொழப்பு நடத்த முடியாது அவங்கள நம்பிஇருக்க தாதாக்கள் பொழப்பு நடத்த முடியாது .அதனால் நம்மை ஆளும் தலைகள் நம்மை அடிமையாகவே வைத்திருக்கவே முயலுவார்கள் எனவே சட்டம் வரும் என எதிர்பாக்க முடியாது

  16. //S.R.ராஜசேகரன் said…
    சட்டம் வரும் என எதிர்பாக்க முடியாது//

    சட்ட திருத்தம் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான். யாரும் இதை பற்றி கவலைபடுவதை போல தெரியவில்லை.

  17. //
    Ŝ₤Ω..™ said…

    இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு நம்மால் ஆணியே புடுங்க முடியாது..
    //

    மிகச்சரி.

    * * * *

    நல்ல பதிவு

  18. உதவி செய்வது மனிதத் தன்மை.தம்மை வருத்திச் செய்வது புண்ணியம்.ஓர் சதம் சேர்க்கத் தெரியாத உழூத்தலன் என்று மனைவியிடம் ஏச்சு வாங்கியவன் நான். Empty Pocket என பிள்ளைகளால் பெயர் வைக்கப் பட்டவன். இருந்தும் பிறருக்கு பல வகையில் உதவி செய்து இன்று ஓரு சதமும் இல்லாத போதும் Electric Shaver, Washing Machine, Computer போன்ற வசதிகளை அனுபவிக்க எனது முற்பகல் புண்ணியம் அருள் புரிகின்றதே.உடன் பலன் எதிர் பாராது உதவுங்கள், தவறாது பல மடங்கு பலன் கிட்டும்.நிற்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!