நான் சென்னையில் படித்து விட்டு வேலை தேடி கொண்டு இருந்த போது பல இடங்கள் சுற்றியும் பல நிறுவனங்கள் சென்றும் வேலை கிடைக்கவில்லை. Image Credit
அப்போது நான் தங்கி இருந்த அறையில் இருந்த என் சீனியர் நண்பர் தன் நண்பனிடம் கூறி வேலைக்கு ஏற்பாடு செய்தார்.
கிஷ்கிந்தா தீம் பார்க்
எங்கே வேலை என்றால் கிஷ்கிந்தா தீம் பார்க்.
அங்கே நமக்கென்ன வேலை இருக்கிறது என்று குழம்பிய போது தற்போது அங்கே கம்ப்யூட்டர் கேம்ஸ் டிவிசனுக்குக் கம்ப்யூட்டர் தந்து இருக்கிறோம்.
அங்கே வருகிறவர்களுக்குக் கம்ப்யூட்டர் கேம் சொல்லித் தரவேண்டும் என்றார்கள்.
இது என்னடா நமக்கு வந்த சோதனை, படிக்கும் போது தான் சாலிடேர் விளையாடிட்டு இருந்தோம்.
வேலைக்கு வந்தாலும் இதைப் போலவே வருதேன்னு நொந்து…சரி! எந்த வேலையும் கிடைக்கல இதையாவது பார்ப்போம் என்று சேர்ந்து கொண்டேன்.
ஏனென்றால் வேலை இல்லாமல் இருப்பதை விடக் கொடுமையான விஷயம் இல்லை.
பலநேரங்களில் பல மனிதர்கள்
பலவிதமான நபர்களும் வருவார்கள், கோபமானவர்கள், ஜாலியான ஆட்கள், அமைதியான ஆட்கள் என்று கலவையாக இருக்கும், இவர்கள் கூட நம்மை டென்ஷன் செய்யும் ஆட்களும் வருவதுண்டு.
ஒரு சிலர் நாம் என்ன கூறினாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள் இஷ்டத்துக்குக் கீ போர்டை போட்டுத் தட்டு தட்டுன்னு தட்டி அதில் உள்ள கீ எல்லாம் வெளியே தெறிச்சு விழற அளவிற்கு (சில சமயம் கீ உடைந்தே போய்டும்) போட்டு நொக்கி எடுப்பாங்க.
நாம் எப்படி விளையாடுவது என்று உதவி செய்ய வந்தாலும், சொல்வதைக் காதிலே வாங்கிக்கமாட்டார்கள்.
விளையாட்டே முடிந்து போய் இருக்கும்! அதைக் கூட உணராமல் சீரியஸ் ஆக விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.
சரி இவங்களுக்கு என்னத்தை விளங்க வைக்கிறதுன்னு நானும் எதுவும் சொல்ல மாட்டேன். ஒருத்தர் விளையாடுவார் பின்னாடி 10 பேர் நின்னுட்டு இருப்பாங்க..
பின்னாடி நின்னுட்டுச் சத்தம் போட்டு ஒரே ரணகளம் பண்ணிட்டு இருப்பாங்க.
டூ ஆர் டை
ஒருமுறை ஒருத்தர் நம்பக் கவுண்டமணி ஜென்டில்மேன் ல டூ ஆர் டை னு ஒரு மெஷினை போட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிட்டு இருப்பாரே, அது மாதிரி ஒருத்தர் கம்ப்யூட்டர் ஐ போட்டு உலுக்கு உலுக்கு னு உலுக்கிட்டு இருக்காரு.
நான் பீதி ஆகி (ஏதாச்சும் ஆனா யார் முதலாளிக்குப் பதில் கூறுவது) ஐயையோ! சார்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க!!!
எச்சுச்மி! டோக்கன் போட்டுட்டேன் கேம் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது…
நான் ஒரு ஆள் தான் அங்கே!
சார்! என்கிட்டே நீங்க டோக்கன் எதுவும் தரலையே!
நீ யாரு கிட்டயோ பேசிட்டு இருந்த அதுனால நானே டோக்கனை போட்டுட்டேன்
நான் குழம்பி விட்டேன்!!! ..எங்கே போட்டீங்க?.
எங்க போடுவாங்க! கம்ப்யூட்டர்ல தான்.
சார்! அங்கே எல்லாம் போடக் கூடாது… டோக்கன் (ரசீது போல இருக்கும்) என்கிட்டே தான் தரணும்
ஏன்யா! இம்சை பண்ணுறே (யாரு… நாங்க) சரி இந்தா! இதை வைத்துக்கோன்னு ஒரு ருபாய் சைஸ்ல வீடியோ கேம் விளையாடப் போடக் கொடுப்பாங்களே அதைக் கொடுத்தாரு.
ஐய்யயோ சார்! இது வீடியோ கேம்க்கு சார்! கம்ப்யூட்டர் கேம் க்கு ரசீது தான் ..சரி! அந்த டோக்கனை எங்கே போட்டீங்க!
இதோ! இங்க தான்… அதுக்குத் தானே இந்த ஓட்டைன்னு பிளாப்பி டிஸ்க் போடுற இடத்தைக் காட்டுனாரு.
அவருக்கு விளக்கி வேற டோக்கன் கொடுத்து விளையாடி!! அனுப்பி வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.
அப்புறமா சர்வீஸ் பண்ணுறவங்களைக் கூப்பிட்டு உள்ள சிக்கிட்டு இருந்த டோக்கனை வெளியே எடுத்தோம்.
இப்பவும் எங்காயாவது வீடியோ கேம்ஸ் விளையாடச் சென்றால் எனக்கு இந்தக் காய்ன் டோக்கனை பார்த்தால் இவர் நினைவு தான் வரும் 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அறியாமை கூட மகிழ்ச்சியான விஷயம் தான்
:))))))
// SUREஷ் said… அறியாமை கூட மகிழ்ச்சியான விஷயம் தான்//உண்மை தான் சுரேஷ், ஆனால் எனக்கு அன்னைக்கு சோகம் ஆகி விட்டது. என்னை திட்டு திட்டுனு திட்டிடாரு, காதுல ரத்தம் வராதது தான் பாக்கி, பொறுமையாக விளக்கியும் ஒத்துக்க மாட்டேனுட்டாரு :-((( =============================//தமிழ் பிரியன் said… :))))))//வருகைக்கு நன்றி தமிழ் பிரியன்.
எச்சுச்மி, கருத்து சொல்ல வரலாமா ராமலச்சுமி:)?
//இதோ! இங்க தான்… அதுக்கு தானே இந்த ஓட்டைன்னு பிளாப்பி டிஸ்க் போடுற இடத்தை காட்டுனாரு..அவ்வ்வ்வ்வ்வ்//
வாய் விட்டு சிரித்தேன்:))!
//கேமே முடிந்து போய் இருக்கும்! அதை கூட உணராமல் சீரியஸ் ஆக விளையாடி கொண்டு இருப்பார்கள்..//
:-))
நம்ம ஆளுங்க இருக்காங்களே!!! சொந்தமா முயற்சி பண்றோம்னு இப்படி ஏதாச்சும் செஞ்சிடுவாங்க…
:-)))…
// ராமலக்ஷ்மி said… எச்சுச்மி, கருத்து சொல்ல வரலாமா ராமலச்சுமி:)?//கம் இன் :-)//வாய் விட்டு சிரித்தேன்:))!//:-)))))=======================//நசரேயன் said… என்னை விட பெரிய கம்ப்யூட்டர் புலியாக இருந்திருப்பார்//ஹி ஹி ஹி நானும் பல சமயத்துல புலியா (என்ன புலினால்லாம் கேட்ககூடாது) இருந்து இருக்கேன்..அதெல்லாம் வெளிய சொல்லமுடியாது :-))===========================// சரவணகுமரன் said… நம்ம ஆளுங்க இருக்காங்களே!!! சொந்தமா முயற்சி பண்றோம்னு இப்படி ஏதாச்சும் செஞ்சிடுவாங்க//அதோட நம்மை தலைய பிச்சுக்க வைத்து விடுவாங்க :-)===========================//புதுகை.அப்துல்லா said… ஹா…ஹா…ஹா..உலகத்துலேயே நான் ஒருத்தன் தான் முட்டாள்னு நினைச்சேன். எனக்கு கம்பெனிக்கு ஓருத்தர் இருக்காரா?? :)//அப்துல்லா இதெல்லாம் ஜுஜுபி :-)))====================//முத்துலெட்சுமி-கயல்விழி said… பேனா ,சினுக்கூரின்னு எல்லாமா வச்சு கஷ்டப்பட்டு அதை எடுத்தேன்..//கேட்டா பல கதை வரும் போல இருக்கே ஹா ஹா ஹா ========================முரளிகண்ணன் விஜய் ஆனந்த் வருகைக்கு நன்றி
அவர் கொஞ்சம் பொறுமையான ஆளா இருப்பார் போலிருக்கு .நாங்க எல்லாம் உதவிக்கு எவரயுமே கூப்பிட மாட்டோம் .ஸ்டார்ட் ஆகலைன்னு தெரிஞ்சாலே சைலண்டா போட்டு தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்போம்
என்னை விட பெரிய கம்ப்யூட்டர் புலியாக இருந்திருப்பார்
ஏன்யா! இம்சை பண்ணுறே (யாரு… நாங்க) சரி இந்தா! இதை வைத்துக்கோன்னு ஒரு ருபாய் சைஸ் ல வீடியோ கேம் விளையாட போட கொடுப்பாங்களே அதை கொடுத்தாரு.
//
ஹா…ஹா…ஹா..
உலகத்துலேயே நான் ஒருத்தன் தான் முட்டாள்னு நினைச்சேன். எனக்கு கம்பெனிக்கு ஓருத்தர் இருக்காரா?? 🙂
🙂
ஒரு முறை அவசரத்தில ,சிடி செட்டா கிடைக்குமே அந்த டப்பாலேர்ந்து சிடிய கம்ப்யூட்டரில் போடும்போது உள்ள வச்சிருக்கற வெள்ளைக்கலர் வட்டமா தக்கை இருக்குமே அதுவும் சேர்ந்து உள்ள போயிடுச்சு.. பேனா ,சினுக்கூரின்னு எல்லாமா வச்சு கஷ்டப்பட்டு அதை எடுத்தேன்..
:-))))))))))))))
// S.R.ராஜசேகரன் said…
அவர் கொஞ்சம் பொறுமையான ஆளா இருப்பார் போலிருக்கு .நாங்க எல்லாம் உதவிக்கு எவரயுமே கூப்பிட மாட்டோம் .ஸ்டார்ட் ஆகலைன்னு தெரிஞ்சாலே சைலண்டா போட்டு தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்போம்//
என்னங்க ராஜசேகரன்! மும்பை ஓபராய் ஹோட்டல்ல தீவிரவாதி சொல்ற மாதிரி சொல்றீங்க :-))))))))
போட்டு தள்ளிடுவேன்னு சொன்னது கம்ப்யூட்டர் ஆக இருந்தால் என்னை போல உள்ளவர்கள் தப்பித்தார்கள் 😉
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
எச்சுமி! நான் இங்க பின்னூட்டம் போடலாமா?
நேர்ல பார்த்தா சாது மாதிரி இருக்கீங்க.இந்தமாதிரி நெறையா வெடி வச்சிருப்பீங்க போல.
நல்லவேளை உள்ளே குச்சிவிட்டு ஆட்டாம விட்டாரே,சந்தோசப் படுங்க
ஹா ஹா, நல்லாருந்துச்சு!!எனக்கும் இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு, டைப் பண்ணா ஒரு பக்கம் வந்துடும். அதனால இப்போ விடுறேன் ஜூட் 🙂
//வடகரை வேலன் said… எச்சுமி! நான் இங்க பின்னூட்டம் போடலாமா?//வேலனுக்கு இல்லாத உரிமையா!//நேர்ல பார்த்தா சாது மாதிரி இருக்கீங்க.இந்தமாதிரி நெறையா வெடி வச்சிருப்பீங்க போல.//புயலுக்கு பின் அமைதிங்க வேலன் 🙂 என்னோட விமான பயண அனுபவங்கள் படித்து பாருங்க..செம காமெடியா இருக்கும் :-)))) அப்பப்ப இந்த மாதிரி போட வேண்டியது தான் ஒரே மாதிரி இருந்தா போர் அடிக்குமே!========================//வால்பையன் said… நல்லவேளை உள்ளே குச்சிவிட்டு ஆட்டாம விட்டாரே,சந்தோசப் படுங்க//ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அருண் கலக்கல் கமெண்ட் ..உண்மையிலே அப்படி அவர் செய்து இருந்தா எப்படி இருக்கும்னு நினைத்து பார்த்தேன் ஹா ஹா ஹா =================//கபீஷ் said… ஹா ஹா, நல்லாருந்துச்சு!!//நன்றி கபீஷ் //எனக்கும் இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு, டைப் பண்ணா ஒரு பக்கம் வந்துடும்//பதிவா போட்டுடுங்க :-)))
:))))))))
:-))
வெயிலான், யோசிப்பவர் வருகைக்கு நன்றி
நல்ல வேளை , அவர் காயின் போட்டார்..!நல்ல அனுபவம்தான் கிரி சார்.
ஹா ஹா
சூப்பரா என்ஜாய் பண்ணீருக்கீங்க!!
:)))))))))))
//மங்களூர் சிவா said… ஹா ஹா சூப்பரா என்ஜாய் பண்ணீருக்கீங்க!!:)))))))))))//நன்றி சிவா. கூடவே அவர் கிட்ட செம திட்டும் வாங்கினேன்===============//மதிபாலா said… நல்ல வேளை , அவர் காயின் போட்டார்..!//ஹா ஹா ஹா ஹா //நல்ல அனுபவம்தான் கிரி//வருகைக்கு நன்றி மதிபாலா.