வாரணம் ஆயிரம் (2008)

41
வாரணம் ஆயிரம் Vaaranam Aayiram movie poster

ந்தை மகனுக்குள்ளே இருக்கும் பாசத்தை வழிகாட்டுதலை ஒரு அன்பான குடும்பத்தின் நிலையை வாரணம் ஆயிரம் படத்தில் காட்டியுள்ளார் கவுதம் மேனன்.

தன் நடிப்பால் அதற்கு வலு சேர்த்தது சூர்யா என்றால் மிகையாகாது. Image Credit

வாரணம் ஆயிரம்

சூர்யா தந்தை மகன் இரு கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார், படம் தந்தை சூர்யாவில் ஆரம்பித்து மகன் சூர்யாவின் பிளாஷ் பேக்காக விரிவடைகிறது.

கவுதம் மேனின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற வேகமான திரைக்கதை படங்களைப் போல எதிர்பார்த்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றம் தான்.

சூர்யா சமீரா

காதாபாத்திரத்தின் வயதிற்கே உரிய உடலமைப்புடன் சூர்யா மிக மெனக்கெட்டு இருக்கிறார்.

குறிப்பாக, ஒரு காட்சியில் பள்ளி சீருடையுடன் தன் அப்பாவிடம் பேசும் போது ஒரு நிமிடம் ஏமாந்து விட்டேன், சின்னப் பையனைப் போலவே இருப்பார்.

சமீராவை ரயில் சந்திக்கும் போது சூர்யா செய்யும் ரொமான்டிக் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கும். சமீரா, பிரியங்கா சோப்ராவை நினைவு படுத்தும் முகம்.

சூர்யா அமெரிக்க சென்று சமீராவை சந்திக்கும் போது அவர் சூர்யாவின் வரவை எதிர்ப்பார்க்காமல் அதிர்ச்சியாகி பின் அவருடன் பழகுகிறார்.

சூர்யாவின் குறும்புத்தானமான செய்கைகள் நாகரிகமான நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்து விட அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இவர்கள் காதல் உண்மையில் மிக ரொமாண்ட்டிக்காக உள்ளது, நாகரிகமாகவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சமீரா அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக அழகாக நடித்துள்ளார்.

ரம்யா

ரம்யா, சமீரா அளவிற்கு மனதில் பதியவில்லை. சூர்யாவுடன் இருக்கும் காட்சிகளில் அவ்வளவாக நடிப்பை காட்டவில்லை, டப்பிங் குரலும் சரி இல்லை.

சூர்யாவை பார்க்கும் போது சுத்தமாகக் காதலே தெரியவில்லை. சமீரா ரம்யாவை ஓவர் டேக் செய்து விட்டார். சூர்யா மிலிட்டரி அதிகாரியாக இருப்பார்.

எனவே, எப்போதும் விறைப்பாகவே இருப்பார். அதுவும் ஒரு காரணமோ என்னவோ!

சிம்ரன்

தந்தை சூர்யாவுக்கு ஜோடி சிம்ரன், கல்லூரி காலத்தில் ரொமான்ஸ் செய்யும் போது சூர்யாவிற்கு அக்கா போல உள்ளார்.

அப்பாவாக நடித்து உள்ள சூர்யா நடிப்பில் அசத்துகிறார், மிகை நடிப்பு செய்யாமல் அக்கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சரியாகச் செய்துள்ளார்.

மகனுக்கு அறிவுரை கூறும் போதும் நண்பனாகப் பேசும் போதும் மகனின் தவறை உணர்ந்து அவரை திருத்தும் போது இப்படி பட்ட அப்பா நமக்கு வேண்டும் என்று பலரையும் எண்ண வைத்து விடுகிறார்.

சூர்யா காஷ்மீர் செல்லும் காட்சிகள் அவசியமே இல்லாதது, அதே போலத் தீவிரவாதிகளிடமிருந்து ஒருவரை காப்பாற்றுவது மற்றும் அஞ்சலை பாடல், தவமாய் தவமிருந்து படத்தை இப்படம் நினைவு படுத்துகிறது.

தந்தை மகனுக்கிடையே நடக்கும் சம்பவங்கள் மற்றும் கிளை சம்பவங்களைப் படமாகக் காட்டி உள்ளார்கள்.

சமீரா தன் காதலை சூர்யாவிடம் சொன்ன பிறகு சூர்யா நம்ப முடியாமல் கொஞ்ச தூரம் நடந்து சென்று அதை ரசித்து அடியே! கொல்லுதே பாடலுக்கு வரும் கிடார் இசையை வெறும் கையில் இமிடேட் செய்வது கலக்கலாக இருக்கும்.

சூர்யா நடனம் ஆடும் போது உடலை விறைப்பாக வைத்துக் கொள்ளாமல் ஆடினால் ரசிக்கும் படி இருக்கும்.

படத்திற்கு பலம் இசையும் ஒளிப்பதிவும், அசத்தலாக உள்ளது.

பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. சூர்யா கிடாரில் விருப்பமாக உள்ளவராக வருவதால் பெரும்பாலான பாடல்களில் கிடார் இசை வருகிறது,

மற்றபடி படம் பிடிக்கவில்லை என்று சிலர் கூறினால் என்ன சொல்வது? அனைவருக்கும் ஒரு படம் பிடிக்க வேண்டும் என்பதில்லையே.

பிடிக்காதவர்களுக்கு வா”ரணம்” ஆயிரம், பிடித்தவர்களுக்கு “வாரணம் ஆயிரம்”. எனக்குப் பிடித்தது.

Directed by Gautham Vasudev Menon
Produced by V. Ravichandran
Written by Gautham Vasudev Menon
Starring Suriya, Sameera Reddy, Divya Spandana, Simran
Narrated by Suriya
Music by Harris Jayaraj
Cinematography R. Rathnavelu
Edited by Anthony Gonsalvez
Release date 14 November 2008
Running time 169 minutes
Country India
Language Tamil

தொடர்புடைய விமர்சனங்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

நடுநிசி நாய்கள் (2011) | சைக்கோ த்ரில்லர்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

41 COMMENTS

 1. விமர்சனம் என்கிற பெயரில் படக் கதையை எழுதுறதுதான் விமர்சனமா ?

  கன்னபின்னாவென்று கண்டிக்கிறேன்.

 2. //கவுதம் மேனின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற வேகமான திரைக்கதை படங்களை போல//

  அப்போ ‘மின்னலே’ போல என்று கொள்ளலாமா?

  //பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது.//

  இந்த இயக்குநரும் இசையமைப்பாளரும் இணைந்த எல்லா படங்களின் பாடல்களும் வெற்றியடைந்தன. இந்தப் படத்துடன் இக்கூட்டணி பிரிந்து விட்டதாம்.

  ரொம்பக் கவனமாய் கடைசியில் டிஸ்கி கொடுத்து விட்டீர்கள்:)))!

 3. //விமர்சனம் என்கிற பெயரில் படக் கதையை எழுதுறதுதான் விமர்சனமா ?

  கன்னபின்னாவென்று கண்டிக்கிறேன்.

  //

  Me too thinking the same. Why to tell the full story?

 4. //satheeskannan said…

  But our online community has already done enough damage to the film. :(//

  வழக்கமா செய்வது தானே! 🙂

  முதல் வருகைக்கு நன்றி சதீஷ்கண்ணன்

  ===================================================================

  //SurveySan said…
  மோசமான படம் இல்லை என்பதுதான் அடியேன் கருத்தும்.//

  ஆனால் பலருக்கு பிடிக்கவில்லை 🙁

  ===================================================================

  //கோவி.கண்ணன் said…
  விமர்சனம் என்கிற பெயரில் படக் கதையை எழுதுறதுதான் விமர்சனமா ?//

  எல்லோரும் கதையே இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க 😉 நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க 🙂

  //கன்னபின்னாவென்று கண்டிக்கிறேன்//

  ஆமா! என்னை மட்டும் கண்டியுங்க…

  ===================================================================

  //Dharan said…
  Superb movie//

  எனக்கும் தான்

 5. //ராமலக்ஷ்மி said…
  அப்போ ‘மின்னலே’ போல என்று கொள்ளலாமா?//

  மின்னலே படம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

  //இந்தப் படத்துடன் இக்கூட்டணி பிரிந்து விட்டதாம்.//

  பிரபலங்கள் சேர்ந்தே இருப்பது சிரமமான ஒன்று தான்.

  //ரொம்பக் கவனமாய் கடைசியில் டிஸ்கி கொடுத்து விட்டீர்கள்:)))!//

  எல்லாம் ஒரு அனுபவம் தான் 🙂 இனி எழுதும் திரை விமர்சனங்களிலும் இதையே பின்பற்ற போகிறேன்.

  ===================================================================

  //வடிவேலன் .ஆர் said…
  தந்தை மகன் கதை நன்று//

  உண்மை தன் வடிவேலன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி

  ===================================================================

  //hema said…
  Me too thinking the same. Why to tell the full story?//

  எல்லோரும் படத்தை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டாங்க..சரி விளக்கமா எழுதுவோமேன்னு எழுதினேன், மற்றபடி வேற எந்த காரணமும் இல்லை. உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஹேமா.

 6. //முத்துலெட்சுமி-கயல்விழி said…
  ஓ நல்லவேளை நான் கதயெழுதல.. இப்படி கண்டிச்சிட்டாங்களே!..//

  எப்போதும் என்னை கண்டிக்க லைன் கட்டி நிப்பாங்க அதனால எனக்கு ஒன்னும் இது புதுசு இல்ல :-)))

  //பிரியங்கா சோப்ராவோட ஒற்றுமைப்படுத்தியதை மட்டும் கண்டிச்சிக்கிறேன் நான் :)//

  ஹா ஹா ஹா ஏங்க! நான் ஒற்றுமை படுத்தலை நினைவுபடுத்தறாங்கன்னு தான் சொன்னேன். ஆமா! கண்டிக்கிறது எதோ கடமை போல என்னை கண்டிக்கறீங்க :-)))

 7. கிரி,

  உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு விமர்சனம் எழுதியிருக்கீங்க ரொம்ப நீ……ளமா 🙂

 8. //வெயிலான் said…
  கிரி,
  உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு விமர்சனம் எழுதியிருக்கீங்க ரொம்ப நீ……ளமா :)//

  ஹா ஹா ஹா அவரை மிஞ்ச முடியுமா அவர் மலை என்றால் நான் மடு. எல்லோரும் போட்டு படத்தை கொத்தி குதறிட்டாங்க..ஹி ஹி ஹி அதனால் கொஞ்சம் அதிகமா விளக்கிட்டேன் போல

  ===================================================================

  //நான் ஆதவன் said…
  கிரியை கண்டித்ததை கண்டித்து கன்னபின்னாவென்று கண்டிக்கிறேன்//

  எனக்கும்! ஆதரவு கரம் நீட்டிய நான் ஆதவன் அவர்களுக்கு கன்னாபின்னாவென்று நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஹி ஹி

  ===================================================================

  //முரளிகண்ணன் said…
  கிரி, என்ன உண்மைத்தமிழன் பாணியை கைபிடிக்கிறீர்கள்?//

  வெயிலான் அவர்களுக்கு கூறியதே தான் உங்களுக்கும் 🙂 முரளிகண்ணன் படம் பார்த்து விட்டீர்களா?

 9. ஓ நல்லவேளை நான் கதயெழுதல.. இப்படி கண்டிச்சிட்டாங்களே!..நானும் பிடிச்சிருக்குன்னு ஒரு பதிவு போட்டேன்..
  பிரியங்கா சோப்ராவோட ஒற்றுமைப்படுத்தியதை மட்டும் கண்டிச்சிக்கிறேன் நான் 🙂

 10. //மோசமான படம் இல்லை என்பதுதான் அடியேன் கருத்தும்.

  :)//

  வழிபொழிகிறேன்..

  //விமர்சனம் என்கிற பெயரில் படக் கதையை எழுதுறதுதான் விமர்சனமா ?

  கன்னபின்னாவென்று கண்டிக்கிறேன்.//

  கிரியை கண்டித்ததை கண்டித்து கன்னபின்னாவென்று கண்டிக்கிறேன்

 11. ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது பெரிய டைரக்டராக மாறி விட்டால் கதாநாயகன் காதலியை பார்க்க அமேரிக்காவுக்கும் போக வைக்க முடியும். ஆஸ்த்ரேலியாவுக்கும் போக வைக்க முடியும்.

  மனது போர் அடித்தால் மனது சரியில்லை என்றால் காஷ்மீருக்கும் போக வைக்கமுடியும்.

 12. //jackiesekar said…
  ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது பெரிய டைரக்டராக மாறி விட்டால் கதாநாயகன் காதலியை பார்க்க அமேரிக்காவுக்கும் போக வைக்க முடியும். ஆஸ்த்ரேலியாவுக்கும் போக வைக்க முடியும்.//

  விண்வெளிக்கு அனுப்பாம இருந்தா சரி 🙂

  ===================================================================

  //வால்பையன் said…
  நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தல//

  அருண் என்னை கிண்டல் பண்ணுறீங்களா! :-))) எனக்கு படம் அந்த அளவு மோசமாக தெரியவில்லை. எத்தனையோ விளங்காத படங்களுக்கு மத்தியில் இந்த படம் விறுவிறுப்பாக இல்லை என்றாலும் நல்ல படமே. திரைக்கதையில் இன்னும் கவனம் எடுத்து இருக்கலாம்.

 13. //arun said…
  To me, this is an average movie. Second half screenplay is too slow.//

  படம் மெதுவாக போவது உண்மை தான். இரண்டாம் பாதியில் காஷ்மீர், கடைசி சண்டை போன்றவை நீக்கி இருந்தால் இந்த அளவு பாதிப்பு இருந்து இருக்காது என்றே நினைக்கிறேன்.

  அருண் நீங்கள் பதிவு ஏன் எழுதவில்லை என்று போன பதிவில் கேட்டு இருந்தீர்கள், வலைப்பதிவிற்கு அடிமையாகி விட கூடாது என்றே குறைத்து கொண்டேன். அதுவுமில்லாமல் வலையுலகில் உள்ள அரசியலும் ஆர்வத்தை குறைக்கிறது. பதிவு எப்போதும் போல எழுதுவேன், நிறுத்த மாட்டேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

  ===================================================================

  //நசரேயன் said…
  எல்லா விமர்சனத்தையும் படிச்சு ஒரே குழப்பமா இருக்கு//

  பொதுவாக வலையுலக விமர்சனங்கள் அனைத்து படங்களையும் குறை சொல்வதாகவே இருக்கிறது. எனக்கு தெரிந்து அனைவரும் நல்லா இருக்குன்னு சொன்ன படம் “சுப்ரமணியபுரம்” படம் மட்டுமே. அப்படி என்றால் மற்ற படங்கள் எதுவும் சரி இல்லையா? உங்கள் முடிவிற்கே விடுகிறேன்.

 14. //tamil cinema said…
  படம் சுமார் தான் என்றார்கள். உங்கள் பதிவை பார்த்ததும் படம் பார்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.//

  ஹா ஹா ஹா ஏங்க! தமிழ் சினிமா! பதிவை படித்து போறேன்னு சொல்லி இருந்தீங்கன்னா சந்தோசப்பட்டு இருப்பேன்..எண்ணத்தை கை விட்டுட்டேன்னு சொல்லிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 15. படம் சுமார் தான் என்றார்கள். உங்கள் பதிவை பார்த்ததும் படம் பார்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.

 16. //vasuhi said…
  negative ஆக விமர்சிப்பதில் என்ன மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தெரியவில்லை//

  படத்தின் நெகடிவ் பற்றி கூறுவதில் தவறில்லை ஆனால் படத்தையே நெகடிவ் ஆக கூறுவது தான் வருத்தமளிக்கிறது, இந்த படமில்லை எந்த படத்தையும். உண்மையில் இதற்க்கு நீண்ட விளக்கமளிக்க தான் நினைத்தேன், பலரின் மனதை காயப்படுத்தும் என்பதால் எதுவும் கூறாமல் விடுகிறேன்.

  //Thanks for your good திரை விமர்சனம்//

  நன்றி வாசுகி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

 17. வாரணம் ஆயிரம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
  எனக்கு தெரிந்த அளவில் படம் பார்த்த எல்லோரும் நன்றாக‌ இருந்த்ததாகத் தான் சொன்னார்கள்(in srilanka).சூர்யாவின் நடிப்பு super.
  பொதுவாக வலையுலக விமர்சனங்கள் அனைத்து படங்களையும் குறை சொல்வதாகவே இருக்கிறது.
  படத்திற்கு negative ஆக விமர்சிப்பதில் என்ன மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தெரியவில்லை.
  Thanks for your good திரை விமர்சனம்

 18. ////கன்னபின்னாவென்று கண்டிக்கிறேன்//

  ஆமா! என்னை மட்டும் கண்டியுங்க…//

  ஊருக்கு இளைச்சவர் பிள்ளையார் கோவில் ஆண்டினு தெரியாதா உங்களுக்கு 🙂

  நான் நம்ம மக்களோட விமர்சனம்(தங்களோடதும்) எதையுமே இன்னும் படிக்கல, படத்தை பார்த்துட்டுதான் படிக்கணும். சிவகாசிகளும் திருப்பாச்சிகளும் ஜொளிக்கற நம்மூர்ல சூர்யாவோட மெனக்கெடல் கவனிக்கபடாம போறது என்னங்க ஆச்சரியம்…

 19. மனதில் தோன்றியவைகளை அப்படியே பதிவிட்டீர்கள், குசேலன் மற்றும் ஏகன் ஒருமுறை பார்ப்பதற்கு ஏற்ற படங்களே. நிறைய எதிர்பார்ப்புடன் செல்பவர்களை என்ன சொல்வது…

 20. // மோகன் said…
  விட்டா, “End User License Agreement” sign பண்ண சொல்லுவீங்க போல இருக்கே? :)//

  ஹா ஹா ஹா எல்லாம் ஒரு பாதுகாப்பிற்கு தான். நாளைக்கு என்னை கை காட்ட கூடாதில்ல 😉

  //நான் இன்னும் படம் பாக்கலை, ஆனா அப்புறமா பார்ப்பேன்.//

  கண்டிப்பா பாருங்க எந்த எதிர்பார்ப்புமில்லாம.

  ===================================================================

  //பாசகி said…
  ஊருக்கு இளைச்சவர் பிள்ளையார் கோவில் ஆண்டினு தெரியாதா உங்களுக்கு :-)//

  சக்தி நான் உண்மையிலே இளைத்து தான் இருப்பேன், அதனால தான் கோவி கண்ணன் என்னை கூறி இருப்பாரு போல ஹா ஹா ஹா. இளைக்காதவங்களையும் 😉 கொஞ்சம் கண்டிச்சா நல்லா இருக்கும் :-))))

  //நான் நம்ம மக்களோட விமர்சனம்(தங்களோடதும்) எதையுமே இன்னும் படிக்கல, படத்தை பார்த்துட்டுதான் படிக்கணும்//

  ரொம்ப நல்லது சக்தி படம் பார்த்துட்டே பதிவை படிங்க குறைந்தது சூர்யா இவ்வளோ கஷ்டப்பட்டதிற்க்காவது

  ===================================================================

  //Logan said…
  மனதில் தோன்றியவைகளை அப்படியே பதிவிட்டீர்கள்//

  நன்றி லோகன்.

  //குசேலன் மற்றும் ஏகன் ஒருமுறை பார்ப்பதற்கு ஏற்ற படங்களே. நிறைய எதிர்பார்ப்புடன் செல்பவர்களை என்ன சொல்வது…//

  எதிர்பார்ப்புடன் சென்றால் பரவாயில்லை, குறை கூற வேண்டும் என்பதற்காகவே சென்று படம் பார்த்தால் என்ன சொல்வது? என்னமோ போங்க..:-(

 21. //டிஸ்கி: படம் பார்த்து என் மனதில் தோன்றியதை படத்தின் விமர்சனமாக எழுதி இருக்கிறேன். படம் பார்த்து உங்களுக்கு பிடித்தாலும்! பிடிக்கவில்லை!! என்றாலும் அதற்க்கு நான் பொறுப்பல்ல.//

  விட்டா, “End User License Agreement” sign பண்ண சொல்லுவீங்க போல இருக்கே? 🙂

  நான் இன்னும் படம் பாக்கலை, ஆனா அப்புறமா பார்ப்பேன்.

 22. //எதிர்பார்ப்புடன் சென்றால் பரவாயில்லை, குறை கூற வேண்டும் என்பதற்காகவே சென்று படம் பார்த்தால் என்ன சொல்வது? என்னமோ போங்க..:-(//

  100/100 உண்மை!

 23. //thirumuru said…
  superb movie.
  great to watch.
  i still dont know what others expect.//

  மற்றவர்கள் படம் சுவாராசியமாக இல்லை என்கிறார்கள்!

  //Surya is the next kamal//

  கண்டிப்பாக சிறப்பான நடிப்பு மற்றும் இன்னும் சாதிக்க வயது இருக்கிறது.

  ===================================================================

  //பாசகி said…
  //எதிர்பார்ப்புடன் சென்றால் பரவாயில்லை, குறை கூற வேண்டும் என்பதற்காகவே சென்று படம் பார்த்தால் என்ன சொல்வது? என்னமோ போங்க..:-(//

  100/100 உண்மை!//

  சக்தி நாம் தான் இப்படி சொல்லிட்டு இருக்கோம் :-)))

  ===================================================================

  சுட்டி அருண் உங்கள் தளத்திற்கு வாழ்த்துக்கள்.

 24. //சக்தி நாம் தான் இப்படி சொல்லிட்டு இருக்கோம் :-)))//

  போங்க கிரி இப்படி நீங்க அநியாயத்துக்கு உண்மை பேசினீங்கனா எப்படி? 🙂

 25. கிரி… இதுதான் நான் படத்தைப் பத்தி படிச்ச positive ஆன விமர்சனம்… நல்லா எழுதியிருக்கீங்க…

 26. //Mahesh said…
  கிரி… இதுதான் நான் படத்தைப் பத்தி படிச்ச positive ஆன விமர்சனம்… நல்லா எழுதியிருக்கீங்க…//

  நன்றி மகேஷ்

  ===================================================================

  // பாசகி said…
  போங்க கிரி இப்படி நீங்க அநியாயத்துக்கு உண்மை பேசினீங்கனா எப்படி? :-)//

  ஹி ஹி ஹி ஹி ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்…..

 27. //மங்களூர் சிவா said…
  நாங்களும் பார்த்தோம் நல்லாதான் இருந்தது.//

  நம்ம பதிவுலகத்தை நம்பி மட்டும் எந்த படமும் பார்க்காம இருக்க கூடாது 🙂 இந்த படம் வேகமா இல்லை வேகமா இல்லைன்னு சொல்றாங்க, இதென்ன பாட்சா கில்லி மாதிரியான கதையா! வேகமா போவதற்கு ..என்ன கொடுமை இது!

 28. படம் நன்றாகவே இருந்தது கிரி உங்கள் பதிவைப் போலவே 🙂
  சமீரா எனக்கு பூமிகாவை நினைவுபடுத்தினார். 🙂

  அப்புறம் ஒரு சில குறைகள்.

  * திவ்யா முதலில் 10 வருஷம் பிறகு 5 வருஷம் காத்திருந்து அதாவது தன்னோட 27 வயதில் சூர்யாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார். பிறகு அவர்கள் குழந்தைக்கும் 5 வயது ஆகிறது. இப்ப அவருக்கு வயது 32. சரி. சூர்யாவின் தங்கைக்கும் திவ்யாவிற்கும் ஒரே வயது தானே ? அவ்வளவு அன்பான குடும்பத்திலுள்ள அப்பா,அம்மா, அண்ணா இந்தப்பெண்ணுடைய மணவாழ்க்கை பற்றி எதுவுமே சிந்திக்க மாட்டார்களா? இந்த இடத்தில் யதார்த்தம் உதைப்பதாக தோணுகிறது.

  * அப்புறம் சில குத்துப்பாடல்கள், எதற்கென்றே தெரியாத காஷ்மீர் பயணம் அலுப்பூட்டுகிறது.

  * சூர்யா,சிம்ரன் நல்ல நடிப்பில் நல்லமார்க் வாங்குகிறார்கள். சூர்யாவுக்கு இது ஒரு நல்ல படம்.. தனது ஒவ்வொரு பருவத்தையும் திரும்பவும் வாழ்ந்துபார்த்திருக்கிறார்.

 29. //எம்.ரிஷான் ஷெரீப் said…
  படம் நன்றாகவே இருந்தது கிரி உங்கள் பதிவைப் போலவே :)//

  நன்றி ரிஷான்

  //இந்த இடத்தில் யதார்த்தம் உதைப்பதாக தோணுகிறது.//

  ரொம்ப யோசித்து இருக்கீங்க போல :-)) நீங்கள் கூறுவது சரி தான்

  //அப்புறம் சில குத்துப்பாடல்கள், எதற்கென்றே தெரியாத காஷ்மீர் பயணம் அலுப்பூட்டுகிறது.//

  ம்ம் நானும் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்

  //சூர்யா,சிம்ரன் நல்ல நடிப்பில் நல்லமார்க் வாங்குகிறார்கள். சூர்யாவுக்கு இது ஒரு நல்ல படம்.. தனது ஒவ்வொரு பருவத்தையும் திரும்பவும் வாழ்ந்துபார்த்திருக்கிறார்.//

  மிக சரி, வழிமொழிகிறேன்.

  உங்கள் வருகைக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here