காசினோ ராயல் என்ற முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தொடர்ச்சியாகக் Quantum of Solace (குவாண்டம் ஆஃப் சோலஸ்) வெளியாகி உள்ளது. Image Credit
Quantum of Solace
காசினோ ராயல் அதற்கு முன்பு வரை வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களில் படங்களில் இருந்து வேறு பட்டது.
எப்படி என்றால், ஜேம்ஸ் பாண்ட் உருவாகிய தொடக்கக் காலத்திற்கு மறுபடியும் போய் விட்டார்கள்.
அதாவது முதன் முதலில் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரம் எப்படி உருவாகியது என்ற நிலைக்கு, இடையில் எதற்கு அவ்வாறு சென்றார்கள் என்று தெரியவில்லை.
காசினோ ராயலில் ஜேம்ஸ் பாண்ட் பணத்தையும் எடுத்துக் கொண்டு அவருடைய காதலியையும் கொன்று விடுவார்கள் அதற்கு இந்தப் பாகத்தில் எதிரிகளைப் பாண்ட் பழி வாங்குவதே கதை.
இவர்கள் பிடித்து வைத்து இருந்த வில்லனும் கொலை செய்யப்பட இதற்கும் மேல் ஒரு பெரிய ஆள் இருக்கிறார் என்று துப்பறிகிறார்.
அப்போது ஜேம்ஸ் பாண்டால் அமெரிக்க உளவாளி கொல்லப்பட அதனால் கோபம் அடைந்த மேலிடம் ஜேம்ஸ் பாண்டை அதில் இருந்து விலகக் கூறி அவர் சம்பந்தப்பட்ட விசயங்களைத் தடை செய்கிறார்கள் (கிரெடிட் கார்ட் உட்பட).
ஆனால், இவர் தொடர்ந்து தன்னை அது சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள அவர் மீதுள்ள நம்பிக்கையில் திரும்பவும் அனுமதிக்கிறார்கள்.
கிரீன் ப்ளேனட்
கிரீன் ப்ளேனட் என்ற அமைப்பில் உள்ள வில்லன், சைபீரியா அரசு அதிகாரியுடன் சேர்ந்து 60 சதவீத தண்ணீர் அளவை தன் அமைப்பு மூலமாகக் கொடுக்கக் குறுக்கு வழியில் முயல்கிறார்.
ஏனென்றால் அந்த இடம் மிகவும் வறட்சியான பகுதி,
எனவே தண்ணீர் மிகவும் செலவு அளிக்கும் ஒரு விஷயம். இதைச் சைபீரிய பெண் உளவாளியுடன் சேர்ந்து அத்திட்டத்தை முறியடிக்கிறார்.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் திடீரென்று வருவது போல உள்ளது, ஒரு பில்ட் அப் இல்லாமல்.
பாண்ட் மற்றும் சைபீரிய பெண் உளவாளி இருவரும் எளிதாக! உள்ளே சென்று விடுகிறார்கள் அதே போல விரைவாக அனைவரையும் அழித்து விடுவார்கள்.
அட்டகாச கார் சேசிங், காட்டுத்தனமான துரத்தல் என்று படம் அதிரடியாகப் போனாலும், குழப்பமாக உள்ளது, புரிவதற்கு சிரமமாகத் தான் இருந்தது.
ஜேம்ஸ் பாண்ட் படம் என்றாலே வித்யாசமான தொழில் நுட்பங்கள், பாண்ட் பிரபல இசை தான் நினைவிற்கு வரும், இதில் எதுவுமே கிடையாது.
பாண்ட் கதாபாத்திரம் தற்போது (காசினோ ராயலில் இருந்து) ஆரம்பிக்கப்பட்டது போலக் கொண்டு வருவதால் அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
படம் சாதாரணச் சண்டை படம் போல உள்ளது. எந்த ஒரு பாண்ட் ஸ்பெஷலும் இல்லாமல். வழக்கமான பாண்ட் படத்திற்கே உரிய கவர்ச்சி காட்சிகளும் குறைவு.
பாண்ட் படம் என்றால், பேனா மூலமாகச் சுடுவது, அதிவேக கார், லேசர் வாட்ச், காலணியில் பாம் போன்ற ஜிம்மிக் வேலைகள் தான் பிரசித்தம்.
பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் டேனியல் கிரெய்க் வாட்டசாட்டமா, சண்டையில் அடி பின்னிப் பெடலெடுக்கிறார்.
காசினோ ராயல் படத்தில் நடித்த போது பாண்ட் கதாபாத்திரத்திற்கு உண்டான லுக் இல்லை, பியர்ஸ் பிராஸ்னன் மாதிரி இல்லை என்று பலத்த குற்றசாட்டு வந்தது ஆனால், அதையும் மீறிக் காசினோ ராயல் வசூல் அள்ளியது
இந்தப் படம் 22 வது ஜேம்ஸ் பாண்ட் படம்.
ஒரு அதிரடியான சண்டை படம் என்று பார்த்தால் படம் ஓகே, பாண்ட் படமாக எதிர்பார்த்து பார்த்தால் Quantum of Solace ஏமாற்றம் தான்.
இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள்
டாக்டர் நோ (1962)
ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)
கோல்டுஃபிங்கர் (1964)
தண்டர்பால் (1965)
யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)
ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)
டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)
லைவ் அண்ட் லெட் டை (1973)
தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)
தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)
மூன்ரேக்கர் (1979)
ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)
ஆக்டோபுஸ்ஸி (1983)
எ வ்யூ டூ கில் (1985)
தி லிவிங் டேலைட்ஸ் (1987)
லைசென்ஸ் டூ கில் (1989)
கோல்டன் ஐ (1995)
டுமாரோ நெவர் டைஸ் (1997)
தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)
டை அனதர் டே (2002)
கேசினோ ராயல் (2006)
குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)
Read : Taken
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
உள்ளேன் ஐயா 🙂
விஜய் ஆனந்த் ஜெகதீசன் இடத்தை பிடித்து விட்டீர்களா 😉
முரளிகண்ணன் மற்றும் சக்தி வருகைக்கு நன்றி
===================================================================
//மோகன் said…
கிரி, சன் டிவி திரை விமரிசனத்தில் “Quantum of Solace” ஏமாற்றம் தருகிரதுனு சொல்லிடாங்க. நீங்களும் அதே தான் சொல்லுறீங்க :P//
:-)))) மோகன் என்னோட விமர்சனமும் தவறுன்னு சொல்றீங்களா! தமிழ் படத்துக்கு தான் மாற்றி கூறுவார்கள் என்று நினைக்கிறேன் ஹி ஹி ஹி ஒருவேளை இவங்க ஆங்கில படம் தயாரித்தால்!! படம் சூப்பர் ஹிட் னு சொல்வாங்க 🙂
//Bleachingpowder said…
என்ன தல கொழப்புறீங்க. வறட்சியான இடம் பொலிவியா.சைபீரீயாவில் எப்போழுதுமே பணி மலை பெய்து கொண்டே இருக்கும்னு கேள்வி பட்டிருக்கிறேன். என்ன நைட் ஷோவா :)))//
:-)))
அருண் அந்த படத்தில அப்படி தான் சொல்லுவாங்க மற்றபடி எனக்கு சைபீரியாவ பற்றி எதுவும் தெரியாது. ஒருவேளை அந்த நாட்டில் ஒரு பகுதி இப்படியோ என்னவோ..மேலே படத்துல பாருங்க.. ஆனா படத்தை புரிந்து கொள்வது ரொம்ப சிரமமாக தான் இருக்கு.
படம் என்ன மொக்கையா இருந்தாலும் தூங்க மாட்டேன்..அந்த அளவிற்கு நல்லவன் 🙂 போன பதிவிற்கு உங்களை காணோமே!!
Why “Never Say Never Again” is not in that list?Yet to see the film “Quantum…..”
//King… said…
இந்தப்படம் சம்பந்தமா இது மூன்றாவது பதிவு இருந்தாலும் நீங்ககள் சொல்லியிருப்பது வித்தியாசம்//
நன்றி கிங்
//ஜேம்ஸ்பொண்ட் ரசிகர் போல…//
அப்படி எல்லாம் எதுவுமில்லை ..பாண்ட் படம் பிடிக்கும். அவர்களோட ஜிம்மிக் வேலைகளுக்காக :))
//நான் ஜேம்ஸ் பொண்ட் ரசிகைகளின் (அழகிகளின்) ரசிகன்…;)//
ஹி ஹி நானும் தான்.
//எனக்கும் ஏதோ அவரைத்தான்(பியர்ஸ் பிராஸ்னன்) பிடித்திருந்தது…//
அனைவருக்கும் தான் என்று நினைக்கிறேன் ..ரொம்ப கூலா இருப்பாரு..டேனியல் ரொம்ப டென்ஷன் ஆகவே இருக்கிறாரு
//இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை//
ரொம்ப சூப்பர் எல்லாம் இல்லைங்க ..ஓகே
எப்படி இருக்கீங்க கிங்? பதிவையும் காணோம் ஆளையும் ரொம்ப நாளா காணோம்!
//Senthil Kumar said…
நானும் படம் பார்த்தேன், எனக்கும் ஏமாற்றம் தான். Casino Royal லும் சரிஇல்லை, இதுவும் சரி இல்லை..//
உண்மை தான்.. இதற்க்கு காரணம் வழக்கமான தொழிநுட்ப ஜிகினா வேலைகள் இல்லாதது தான் என்று நினைக்கிறேன்
//என்ன தான இருந்தாலும் Golden eye, Tomorrow never dies மாதிரி எல்லாம் இல்லை.. //
கோல்டன் ஐ செம படம்! நான் சத்யம் திரை அரங்கில் தொடர்ந்து ஒரு முறை பார்த்தேன். அதிலும் அந்த Tina Tunar பாட்டு பட்டய கிளப்பும்
//இத்தனைக்கும் நான் தமிழில் பார்த்தே எனக்கு அவ்வளவாக புரிய வில்லை. இன்னும் ஆங்கிலத்தில் பார்த்த பாமர மக்களுக்கு எப்படியோ…//
யோவ்! செந்தில் அது என்னைய ஆங்கிலத்தில் பார்த்த பாமர மக்கள் :-))))
ஆங்கிலம் நல்லா தெரிந்த மாதிரி போய் உட்காந்துட்டு இருப்பாங்களே அவர்களை சொல்றியா ஹி ஹி ஹி என்னை மாதிரி
===================================================================
//நையாண்டி நைனா said…
Why “Never Say Never Again” is not in that list?
Yet to see the film “Quantum…..”//
ஒரு தளத்தில் இருந்து இந்த படங்கள் வரிசையை எடுத்தேன்..அதில் விடுபட்டு இருக்கலாம். தகவலுக்கு நன்றி. படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க 😉
//SurveySan said…
எல்லாம் சரிதான். ஆனா, குவாண்டம் ஆஃப் சொலேஸ்னா என்னாங்க அர்த்தம்??//
இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணப்படாது :-)))
===================================================================
//Bleachingpowder said…
அதை ஏன் கேட்குறீங்க கிரி, எங்கே நம்மளை வேற பதிவிற்கு போக விடறாங்க. இந்த நாட்டை பிரிவினைவாதிகளிடம் இருந்து காப்பாத்தறதே என் வேலையா போச்சு :)))//
நோ கமெண்ட் :-)))))) ஐ அம் எஸ்கேப் ஹி ஹி ஹி
:-)))…
\\வழக்கமான பாண்ட் படத்திற்கே உரிய கவர்ச்சி காட்சிகளும் குறைவு\\
:-))))))))))))
கிரி, சன் டிவி திரை விமரிசனத்தில் “Quantum of Solace” ஏமாற்றம் தருகிரதுனு சொல்லிடாங்க. நீங்களும் அதே தான் சொல்லுறீங்க 😛
//சைபீரியா அரசு அதிகாரியுடன் சேர்ந்து 60 சதவீத தண்ணீர் அளவை தன் அமைப்பு மூலமாக கொடுக்க குறுக்கு வழியில் முயல்கிறார். எனென்றால் அந்த இடம் மிகவும் வறட்சியான பகுதி, எனவே தண்ணீர் மிகவும் செலவு அளிக்கும் ஒரு விஷயம்.//
என்ன தல கொழப்புறீங்க. வறட்சியான இடம் பொலிவியா.சைபீரீயாவில் எப்போழுதுமே பணி மலை பெய்து கொண்டே இருக்கும்னு கேள்வி பட்டிருக்கிறேன். என்ன நைட் ஷோவா :)))
இந்தப்படம் சம்பந்தமா இது மூன்றாவது பதிவு இருந்தாலும் நீங்ககள் சொல்லியிருப்பது வித்தியாசம் ஜேம்ஸ்பொண்ட் ரசிகர் போல…
நான் ஜேம்ஸ் பொண்ட் ரசிகைகளின் (அழகிகளின்) ரசிகன்…;)
எனக்கும் ஏதோ அவரைத்தான்(பியர்ஸ் பிராஸ்னன்) பிடித்திருந்தது…
ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு மாறும் பொழுது முதல் தடைவையிலேயே அவரை ஜேம்ஸபொண்ட் பாத்திரத்தோடு பொருத்துவது கஸ்டம் ஆனால் அது இரண்டாவது படத்தில் இது குறைந்து விட்டிருக்கலாம்…
இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை…
நானும் படம் பார்த்தேன், எனக்கும் ஏமாற்றம் தான். Casino Royal லும் சரிஇல்லை, இதுவும் சரி இல்லை..
என்ன தான இருந்தாலும் Golden eye, Tomorrow never dies மாதிரி எல்லாம் இல்லை.. இத்தனைக்கும் நான் தமிழில் பார்த்தே எனக்கு அவ்வளவாக புரிய வில்லை. இன்னும் ஆங்கிலத்தில் பார்த்த பாமர மக்களுக்கு எப்படியோ…
எல்லாம் சரிதான். ஆனா, குவாண்டம் ஆஃப் சொலேஸ்னா என்னாங்க அர்த்தம்??
சொலாஸ் = ஆசுவாசம்
குவாண்டம் = அளவு/நிறைய
அளவு ஆசுவாசம்?
நிறைய ஆசுவாசம்?
நீங்கள் எதிபார்ப்பதை போலவே நிறைய தொழில் நுட்பங்களை எதிர்பார்க்கிறேன்.
அது இல்லாமால் அது சாதாரண action படம் போல தான் இருக்கிறது.
ஜேம்ஸ்பாண்டின் தனித்துவம் இல்லை.
விமர்சனத்திற்க்கு நன்றி
//அந்த அளவிற்கு நல்லவன் 🙂 போன பதிவிற்கு உங்களை காணோமே!! //
அதை ஏன் கேட்குறீங்க கிரி, எங்கே நம்மளை வேற பதிவிற்கு போக விடறாங்க. இந்த நாட்டை பிரிவினைவாதிகளிடம் இருந்து காப்பாத்தறதே என் வேலையா போச்சு :)))
🙂 nice comments. Pardon me for posting in English, but has to practice well to type faster in Tamil :). Here, in QOS, the plot revolves around an estranged Bond, trying to avenge the gal whom he loved (Vesper Lynd from Casino Royale). He gets a series of leads, all of whom he kills later. Finally, after destroying the villain’s lair in the desert, Bond is left with 2 things to do.1. Mr. White (the person whom Bond captures in the last few seconds of Casino Royale and who escapes from M16’s premises in the early part of QOS) has to be captured again. In this blog, it’s mentioned that he gets killed by Bond, but he escapes. he has to be captured.2. Quantum, the secret organization still exists, and it has to be destroyed completely.So, Bond has these 2 missions and the next sequel will answer these questions. Being a serious Bond fan, was tempted to write this comment :). I too didn’t like the plot. It has lot of holes. The most boring of all Bond flicks according to me (previously Never say never again was the most dumbest).
//புதுவை சிவா 🙂 said…
HI Kiri
Yes yesterday I saw the film. they are not give importance story and tech..
now many new film they give many new tech and music well.//
வாங்க சிவா எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா பதிவுலகம் பக்கம் ஆளையே காணோம்!
நீங்கள் கூறியது போல தற்போதைய படங்கள் பல தொழில் நுட்பத்தில் கலக்கும் போது தொழில் நுட்பத்திற்கு பெயர் போன பாண்ட் படம் அவ்வாறு இல்லாமல் இருப்பது ஏமாற்றமே அளிக்கிறது.
//still I think it is 007? film.//
பாண்ட் படமென்று யாரும் சொல்லவில்லை என்றால் படம் பார்ப்பவர்கள் நீங்கள் கூறுவதை போலவே நினைப்பார்கள் 🙂
===================================================================
//வால்பையன் said…
அது சாதாரண action படம் போல தான் இருக்கிறது.ஜேம்ஸ்பாண்டின் தனித்துவம் இல்லை.//
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் எப்படியும் பாண்ட் படம் என்ற ஒரே காரணத்திற்காக படம் வசூல் அள்ளும் 🙂
//The S c o r p said…
🙂 nice comments. Pardon me for posting in English, but has to practice well to type faster in Tamil :). //
🙂 முடிந்த வரை முயற்சி செய்யுங்க..
//In this blog, it’s mentioned that he gets killed by Bond, but he escapes. he has to be captured.//
இல்லை S c o r p , நீங்கள் சொல்வது சரி நான் பாண்ட் கொலை செய்வதாக கூறுவது அந்த ஹோட்டல் அறையில் இருக்கும் உளவாளி (கழுத்தில் கூட அடிபட்டு இறந்து விடுவாரே..)
//Quantum, the secret organization still exists, and it has to be destroyed completely.//
இதே மண்டை குழம்புது மூன்றாவது பாகம் பார்த்தால் நாம் வில்லனாகி விடுவோம் :-))))
//Bond has these 2 missions and the next sequel will answer these questions. //
ஆமாம் அதே போல கடைசியில் அந்த அறையில் பாண்ட் என்ன பேசினார் என்றும் தெரியவில்லை. அடுத்த பாகத்தில் தான் தெரிய வரும்..
//I too didn’t like the plot. It has lot of holes. The most boring of all Bond flicks according to me //
படமும் பயங்கர குழப்பமாக உள்ளது, தெளிவாக இல்லை. இதோடு முடித்து விட்டு இருக்கலாம் அடுத்த பாகத்திலும் இதே தொடர்ந்தால் விளங்கிடும் 🙂
Giriyaarae…Please get Malavika's latest snaps from here
HI Kiri
Yes yesterday I saw the film. they are not give importance story and tech..
now many new film they give many new tech and music well.
still I think it is 007? film.
puduvai siva
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
காதலில் விழுந்தேன் அளவுக்கு தரமாய் இல்லையாமா ?//
ஹி ஹி ஹி அதெல்லாம் கண்டுக்கப்படாது
=========================================================================
//நெல்லை எக்ஸ்பிரஸ் said…
Giriyaarae…
Please get Malavika latest snaps from here
ஹா ஹா ஹா ஹா ஹா
ஏங்க! உங்களுக்கு ரொம்ப குசும்புங்க..எங்க தலைவிக்கு குழந்தை பிறந்துள்ளது அது தான் இந்த சைசுல இருக்காங்க ஹி ஹி ஹி இன்னும் 6 மாதம் கழித்து பாருங்க :-)))))
அடுத்த ரவுண்ட் (அவங்க உடம்பை சொல்லலை:D ) தயார் ஆகிட்டு இருக்காங்களாம் :-))
//Mahesh said…
சூப்பர் கிரி…. பாண்ட் படப் பாத்த மாதிரியே இல்ல… CIDசங்கர் மாதிரி இருக்கு !!!//
ஹா ஹா ஹா மகேஷ் கடைசில பாண்டை இப்படி CIDசங்கர் கூட ஒப்பிட்டு கேவலப்படுத்திட்டீங்களே :-))))))))))))))
===================================================================
//நசரேயன் said…
திருட்டு வி.சி.டி வரலீங்களா?//
:-)))) நசரேயன் ஒரு முடிவோட தான் எல்லோரும் இருக்கீங்க போல
//சன் டிவி திரை விமரிசனத்தில் “Quantum of Solace” ஏமாற்றம் தருகிரதுனு சொல்லிடாங்க//
காதலில் விழுந்தேன் அளவுக்கு தரமாய் இல்லையாமா ?
சூப்பர் கிரி…. பாண்ட் படப் பாத்த மாதிரியே இல்ல… CIDசங்கர் மாதிரி இருக்கு !!!
திருட்டு வி.சி.டி வரலீங்களா?
விமர்சனத்துக்கு நன்றி கிரி அண்ணே..
ஜேம்ஸ் பாண்ட் படத்தோட ஸ்பெஷலே டெக்னிக்தானே…
I like your review.. your narration style is so nice.
Thanks மனசாட்சி.
//தமிழன்…(கறுப்பி…) said…
விமர்சனத்துக்கு நன்றி கிரி அண்ணே..//
நன்றிக்கு நன்றி தமிழன் 🙂
===================================================================
//தமிழ்நெஞ்சம் said…
I like your review.. your narration style is so nice.//
நன்றி தமிழ் நெஞ்சம்
அது சைபீரியா அல்ல கிரி, பொலிவியா.. படத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள். லக்கிலுக் கூறியதைபோல படத்தில் அசாத்தியமான / மிக வேகமான திரைக்கதை மற்றும் எடிட்டிங் பயன்படுத்தப்பட்டிருப்பதால் காட்சிகளை புரிந்துகொள்ளமுடியாமலும், ரசிக்கமுடியாமலும் போய்விட்டது. எனக்கும் ஏமாற்றமே..தலைப்பை, எடுத்துக்கொண்ட தீவிரமான காரியத்தை முடித்ததால் ஏற்படும் ‘திருப்தி/அமைதியின் துளி’ என ஓரளவு அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். யாராவது இங்கிலீஷ் புலி அர்த்தம் சொன்னால் தேவலை. நானும் பாண்ட் குறித்த சில சுவாரசியத்தகவல்கள் குறித்து பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்கள் படவரிசை தந்து முந்திக்கொண்டீர்கள்.
//தாமிரா said…
அது சைபீரியா அல்ல கிரி, பொலிவியா.. படத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள்//
உண்மை தான் அவர்கள் பேசுவது சைபீரியா, பாதிக்கப்பட்ட இடமாக பொலிவியாவை தான் கூறுவார்கள். கொஞ்சம் (இல்லை நிறையவே:D) குழம்பியது உண்மை.
//யாராவது இங்கிலீஷ் புலி அர்த்தம் சொன்னால் தேவலை.//
🙂
//நானும் பாண்ட் குறித்த சில சுவாரசியத்தகவல்கள் குறித்து பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்கள் படவரிசை தந்து முந்திக்கொண்டீர்கள்//
தாமிரா பட வரிசை தானே தந்துள்ளேன், இவை இல்லாமல் பல சுவாராசிய தகவல்கள் பாண்டை பற்றி உள்ளன. கண்டிப்பாக நீங்கள் ஒரு பதிவு போட முடியும்.
ஒரு முக்கிய மான விஷயத்தை இங்கே அனைவரும் சொல்ல மறந்து விட்டீர்கள். சம்ஸ் பாண்டு படம்களில் கேமரா மிகவும் முக்கிய மான இடம் பிடிக்கும். இந்த படத்துலயும் கேமரா பிரமாதம். எங்க தான் புடிக்குரன்களோ சம்ஸ் பாண்டு figure கள எல்லாம், செம ஹாட் மச்சி
தினேஷ்
//thiag said…
சம்ஸ் பாண்டு படம்களில் கேமரா மிகவும் முக்கிய மான இடம் பிடிக்கும். இந்த படத்துலயும் கேமரா பிரமாதம். எங்க தான் புடிக்குரன்களோ சம்ஸ் பாண்டு figure கள எல்லாம், செம ஹாட் மச்சி //
வாய்யா நல்லவனே! நீ சொல்வதெல்லாம் சரி உனக்கு ஜேம்ஸ் பாண்ட் மேல என்ன கோபம் சம்ஸ் பாண்டு னு கூறி இப்படி கொலை பண்ணுறே ஹி ஹி ஹி. நீ ஜெனிவாவில பார்த்தத விடவா சூப்பர் 😉
Dear Giri,
The country is Bolivia and not Siberia
Balakumaran.