சென்னை பரங்கிமலை இரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் இறக்க, விபத்து என்று முடிவு செய்கிறார்கள். CCTV யில் பார்த்த பிறகு, அது கொலையெனத் தெரிய வருகிறது.
இக்கொலை செய்தவரை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? என்பதே இக்கதை.
பரங்கிமலை இரயில் நிலையம்
முடிவில் / கொலை நடந்ததில் சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மிகச் சிறப்பான குறு நாவல்.
துவக்கத்தில் இருந்து இறுதி வரை சலிப்புத்தட்டாமல் போகிறது.
ஆசிரியர் இடதுசாரி சிந்தனை உள்ளவரோ என்னவோ GST, பணமதிப்பிழப்பையும், துவக்கத்தில் ஒரு பிராமணக் கதாப்பாத்திரத்தையும் இழுத்துள்ளார்.
கதையோடு இணைந்து கதாப்பாத்திரத்துக்கு நியாயம் கூறுவதால், திணித்ததாகத் தோன்றவில்லை ஆனால், துவக்க பிராமணக் கதாப்பாத்திரம் ஆசிரியரின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலிக்க (திணிக்க) செய்தது போலத்தான் இருந்தது.
இதுவே GST, பணமதிப்பிழப்பு காரணங்களையும் இது தான் காரணமோ என்று யோசிக்க வைத்தது.
சென்னை
கதை முழுக்கச் சென்னையில் நடப்பதாலும், இதில் வரும் இடங்கள் பழக்கமானதாக இருந்ததாலும், கதையின் மொழிநடை சிறப்பாக இருந்ததாலும் படிக்கச் சுவாரசியமாக இருந்தது.
காவல் அதிகாரி கார்த்திக் ஆல்டோ, சக அதிகாரிகளின் துணையுடன் விசாரணையை மேற்கொள்வது, திரைப்படத்தைக் காண்பது போன்ற ஒரு திரைக்கதையில் இருந்தது.
கதாப்பாத்திரங்கள் சாமானிய, நாம் தினமும் காணும் சராசரி கதாப்பாத்திரங்கள் என்பதால், நம்முடன் பொருத்திப் பார்க்க அல்லது பயணிக்கும் போது காணும் நிகழ்வாகத் தெரிகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் போதும், போதை மருந்து குறித்தும், உலகளவில், இந்தியளவில் போதை மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் சிறு குறிப்பு கொடுத்துள்ளது நன்றாக இருந்தது.
இருப்பினும் இதுவே கதை குறித்த ஊகத்தை நமக்குக் கொடுத்து விடுவது ஒரு குறை. சிறு குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், சுவாரசியமான நாவல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அமேசானில் வாங்க –> பரங்கிமலை இரயில் நிலையம் Link
Amazon Prime உறுப்பினர்கள் (Kindle ல்) படிக்க இலவசம்.
தொடர்புடையவை
குபேரசாமி | இந்திரா சவுந்தர்ராஜன்
ரத்தன் டாடா | அசரடிக்கும் மேலாண்மை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி , கல்லுரி பருவத்தில் இது போன்ற நாவல்களின் மீது அதீத ஆர்வம் இருந்தது . ஆனால் தற்போது என்னவோ என் விருப்பம் முற்றிலும் மாறி விட்டது .. பழைய கதைகளையும் , வரலாற்றையும் , அறிவியலையும் , விண்வெளியையும், விவசாயத்தையும் படிக்க மனம் நாடுகிறது . நேரம் கிடைக்கும் போது படிக்கவேண்டும் .. .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
யாசின் நீங்க Kindle வாங்கி இருக்கீங்கன்னு சொன்னீங்கள்ல.. Kindle ஏராளமான புத்தகங்கள் உள்ளன. தேர்வு செய்து படியுங்கள்.
மிகுந்த நன்றி