Bodyguard போலப் பிரிட்டிஷ் க்ரைம் சீரிஸ் The Stranger.
The Stranger
ஒருவரிடம் அறிமுகம் இல்லாத பெண் சென்று ‘உங்கள் மனைவி கர்ப்பம் போலி, உங்க பசங்க DNA சோதனை செய்து பாருங்க!‘ என்று கூறினால் எப்படி இருக்கும்?
ஒரு பெண்ணிடம் ‘உங்கள் மகளோட ஆபாச காணொளி என்னிடம் உள்ளது. 10000 பவுண்ட் கொடுத்தால் காணொளிகளை நீக்கி விடுகிறேன்‘ என்று மிரட்டுகிறார்.
இது போல நகரில் ஆங்காங்கே அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியத்தைத் தெரிந்து மிரட்டுகிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
துவக்கத்தில் இருந்து இறுதி வரை சுவாரசியம் குறையாமல் கொண்டு சென்றுள்ளார்கள். Image Credit
இங்கிலாந்து
இங்கிலாந்து என்றாலே பெரிய பெரிய கட்டிடம், பரபரப்பான மக்கள் என்றே திரைப்படங்களில் பார்த்தே பழக்கப்பட்டு இதில் வேறு மாதிரி உள்ளது.
புறநகர் பகுதிகளில் எடுத்துள்ளார்கள் போல. பசுமையாக, அட்டகாசமாக இடங்கள் உள்ளது, பார்க்கப் பொறாமையாகவும் இருந்தது 🙂 .
இன்னொரு பக்கம் ஒரு பள்ளி மாணவன் ஆடை இல்லாமல், ஏரி பக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறான். எதனால், இப்படி ஆனான்? என்ற விசாரணை துவங்குகிறது.
பள்ளிகளில் மாணவ மாணவிகளிடையே நடக்கும் பிரச்சனைகள், தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள் என்று இவர்களின் வாழ்க்கை ஒரு பக்கம்.
விசாரணை அதிகாரி
விசாரணை அதிகாரியாக வரும் பெண்ணின் நண்பியும் பாதிக்கப்பட்டதால், வழக்கைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு மிகத்தீவிரமாக விசாரிக்கிறார்.
இவர் குற்றவாளியைப் பிடிக்கும் போது தப்பித்து விட, உடன் பணிபுரிபவர்கள் இவர் உணர்ச்சிகரமாக, கோபமாக இருப்பதால், சரியான முறையில் பணி புரியவில்லை என்று சந்தேகிக்கிறார்கள்.
இரகசியங்கள் எப்படித் தெரிகிறது? யார் கடத்தி இருப்பார்கள்? பள்ளி சிறுவனுக்கு என்ன நடந்தது என்று பரபரப்பாகக் கொண்டு சென்றுள்ளார்கள். நாம் ஊகிப்பது எல்லாமே தவறாக உள்ளது. சில கேள்விகளுக்கான விடையில்லை.
ஒளிப்பதிவு இங்கிலாந்தின் பசுமையை, அழகை அசத்தலாகக் காட்டியுள்ளது. பின்னணி இசையும் த்ரில்லர் படத்துக்குண்டான அளவில் உள்ளது.
இந்த க்ரைம் சீரிஸ் ஒவ்வொரு காட்சியும் மிகப் பரபரப்பானது என்று கூற முடியாது ஆனால், எங்குமே சலிப்புத் தட்டாமல், நம்மைப் பார்க்க வைத்துள்ளார்கள்.
அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன், குறிப்பாக இங்கிலாந்தில் உள்ளவர்களை. NETFLIX ல் உள்ளது.
பரிந்துரைத்த நபர் பெயர் மறந்து விட்டது.
Read: Bodyguard | British TV Crime series | Season 1
Created by Harlan Coben
Based on The Stranger by Harlan Coben
Written by Danny Brocklehurst, Mick Ford, Karla Crome, Charlotte Coben
Directed by Daniel O’Hara, Hannah Quinn
Starring Richard Armitage, Siobhan Finneran, Jennifer Saunders
Composer(s) David Buckley
Country of origin United Kingdom
Original language(s) English
No. of episodes 8
Producer(s) Madonna Baptiste
Running time 42–51 minutes
Original network Netflix
Original release 30 January 2020
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Just finished watching all the 8 episodes in the last few days. Thanks for the recommendation Giri. Really enjoyed it.
கிரி, பதிவை படிக்கும் போதே விறுவிறுப்பாக இருக்கிறது .. படம் நிச்சயம் எனக்கு பிடிக்கும் நம்புகிறேன். பள்ளி பருவத்திலே ஜெர்மனி, ரஷ்யா வின் மீது ஒரு வித ஈர்ப்பு எப்போதும் இருக்கும் .. காரணம் சரியாக தெரியவில்லை .. ஆனால் இரண்டு நாடுகளும் ரொம்ப பிடிக்கும் .. வாழ்க்கையில் ஒரு முறையாவது லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியை காண வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம் .. இங்கிலாந்துக்கும் எனக்குமான தொடர்பு இந்த ஆசை மட்டும் தான் .. . படத்தை பார்த்து விட்டு என் கருத்தை கூறுகிறேன் ..
@ஸ்ரீனிவாசன் 🙂 இதை விட ரணகளமான ஒரு சீரிஸ் இந்த வாரம் எழுதறேன்.. அதை பாருங்க. செமையா இருக்கும்.
@யாசின் உங்களுடைய விருப்பத்தை என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் என்ன என்பதை அறிவேன் 🙂 .
உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
Kantippa parkuren Gilladee ?