வீட்டுச் செடிகள் நன்கு பூக்க காய்க்க வேண்டுமா?

6
Iyarkai uram வீட்டுச் செடிகள் நன்கு பூக்க காய்க்க வேண்டுமா

வீட்டில் சிறு தோட்டம் அமைத்துச் செடி வளர்ப்பவர்கள் குறிப்பிடத் தக்க அளவில் உள்ளனர் ஆனால், என்ன பராமரித்தாலும் எதிர்பார்க்கும் பூ, காய்களைப் பெற முடியாது.

வீட்டுச் செடிகள் நன்கு பூக்க காய்க்க வேண்டுமா? இப்பிரச்சனையைச் சரி செய்ய எளிமையான வழி உள்ளது. Image Credit

இயற்கை உரம்

செயற்கை உரம் அடித்தால் பூச்சி சாவதில்லை, அப்படியே செத்தாலும் காய்கறிகளைப் பாதிக்கிறது, உடலுக்கும் நல்லது இல்லை.

இயற்கை உரம் என்றால், இதற்காக நீங்கள் பணம் செலவழித்து வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே உரமுள்ளது.

இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, வெங்காயம், உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட் மற்றும் அனைத்துப் பயன்படுத்தப்பட்ட பழங்கள் காய்கறிகளின் தோல்களை வெயிலில் நன்கு காய வைத்து மிக்சியில் அடித்துப் பொடி செய்ய வேண்டும்.

பின்னர் புளித்த மோரில் இப்பொடியை கலந்து வேரில், செடியின் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்தால், செடி அதிகளவில் காய்கறி கொடுக்கும், பூக்கள் பூக்கும்.

இந்த வழியை என்னுடைய மூத்த அக்கா YouTube ல் பார்த்து என் அம்மாவிடம் கூற, அம்மா செயல்படுத்தி வெற்றிகரமான முடிவைப் பெற்று விட்டார்கள்.

தற்போது அதிகளவில் காய்கறியும், பூக்களும் கிடைப்பதால், உற்சாகமாகி இன்னும் செடி வளர்ப்பில் தீவிரமாகி இருக்கிறார்கள்.

சமையலுக்குத் தேவையான சில காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்னும் அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றுள்ளார்கள்.

தம்பி! நீ ஊருக்கு வரும் போது வீட்டில் சேகரமாகும் பழ, காய்கறி கழிவுகளைக் காய வைத்துப் பொடி செய்து ஊருக்குக் கொண்டு வா” என அம்மா கேட்டு உள்ளார்கள்.

குப்பையில் தூக்கி போடுவதில் இவ்வளவு விஷயமா!” என்று சரி என்று கூறி இருக்கிறேன்.

வீட்டுச் செடிகள் நன்கு பூக்க காய்க்க இவற்றை முயற்சித்துப்பாருங்கள். இலாபம் இல்லையென்றாலும், நட்டமில்லை.

கொசுறு

குருவிகளுக்கு அம்மா தற்போது தண்ணீர், சாப்பாடு வைத்து வருகிறார்கள். “குருவிகள் செடிகளில் உள்ள பூச்சிகளைச் சாப்பிட்டு விடுகிறது அதனால், செடிகள் பூச்சிகளால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது” என்றார்.

Read : மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

6 COMMENTS

  1. Technology செய்திகளோடு biology செய்திகளும் வருதே….அருமை.

  2. கிரி, இயற்கையின் மீது கொண்ட காதல் எனக்கு இன்னும் கூடி கொண்டே போகிறது.. இந்த காதல் பள்ளி பருவத்தில் தும்பை பூக்களில் செடிகளை சுற்றி வரும் தும்பிகளை பிடிக்கும் போது வந்த காதல்.. பின்பு தும்பி, பட்டாம் பூச்சி, புறாக்கள் என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.. கல்லுரி பருவத்தில் மங்கையின் மீது கொண்ட காதல் கூட சில நாட்களில் கசந்து போனது..

    ஆனால் இயற்கையின் மீது கொண்ட காதலுக்கு இறப்பே கிடையாது.. எதிர்கால திட்டமே ஒரு இயற்கை விவசாயி… அதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டே வருகிறேன்.. தகவல்களை திரட்டி கொண்டே வருகிறேன்.. விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நான், இடையில் தடம் மாறி பின்பு மீண்டும் விவசாயம் பக்கமே திரும்புகிறேன்..

    நான் இங்கு வசிக்கும் வீட்டை சுற்றி பல செடிகள் வைத்து இருக்கிறோம்.. ஆரம்பத்தில் மனைவிக்கு விருப்பம் இல்லை என்றாலும் தற்போது என்னை விட ஆர்வம் அதிகமாகி விட்டது.. நீங்கள் குறிப்பிட்ட தகவல் உண்மையில் பயனுள்ள தகவல்.. நான் இதே கழிவுகளை வேறு விதமாக பயன்படுத்தி வருகிறேன்.. நீங்கள் குறிப்பிட்டதை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. அனைவருக்கும் நன்றி

    @சோமேஸ்வரன் நான் தொழில்நுட்ப செய்திகள் மட்டுமே பகிர்வதில்லையே! அனைத்துமே கலந்து தான் இருக்கும்.

    @யாசின் வீட்டில் வளர்ப்பது நமக்கு மகிழ்ச்சையையும் மாற்றத்தையும் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here