இங்க என்ன சொல்லுது :-)

39
இங்க என்ன சொல்லுது

ண்பர் ஸ்ரீநிவாசன் “பாலஹனுமன்” தளம் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம், நானும் என் தளத்தில் முன்பு கூறி இருக்கிறேன்.

புத்தங்கள் பற்றிய அறிமுகங்கள் இவரது தளத்தில் தெரிந்து கொண்டேன்.

நான் அவ்வளவாகப் புத்தகங்கள் படிப்பதில்லை என்றாலும், என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவேன்.

இது மட்டுமல்லாமல் பல தகவல்கள் இவரது தளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

இங்க என்ன சொல்லுது

இவரது ஒரு பதிவில் இவருடைய தளத்தைப் பற்றிப் படிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டு இருந்தார் அதாவது “பாலஹனுமன்” என்றால் என்ன நினைவிற்கு வருகிறது என்று.

எனக்கும் அது சுவாரசியமாக இருந்தது.

எனக்கு என்ன நினைவு வந்தது என்று கூறி இருந்தேன்.

இதே போல என் தளத்தையும் கேட்டால் என்ன? என்று தோன்றியது.

“giriblog என்றால் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது” என்று கூறினால் நான் எப்படி? என்ன எழுதுகிறேன்? என்று தெரிந்து கொள்ள உதவும்.

நீங்கள் கூறும் போது இத்தனை பாயிண்ட் கூற வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இரண்டாக இருந்தாலும் சரி பத்தாக இருந்தாலும் சரி.

1. பயணக்கட்டுரை

2. திரைப்படம்

3. நகைச்சுவை

இப்படி கூறினால் எனக்கும் ஒரு ஐடியா கிடைக்கும். உடன், நான் என்ன தான் எழுதுகிறேன் என்று புரிய ஒரு வாய்ப்பு, தவறு இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, இரண்டு நிமிடம் செலவழித்து கூறவும். ரீடரில் / மின்னஞ்சலில் இருப்பவர்கள் இப்பவும் அங்கேயே இருக்காமல் வந்து கூறவும்.

கிரி தான் சொல்லச் சொல்லிட்டாரே என்று “மருதமலை” படத்தில் வடிவேல் கேட்பாரே…

யோவ்! என்னப்பத்தி இந்தாள் கிட்ட எடுத்துச் சொல்லு

எ..எ…எ.. என்னத்த சொல்றது

எதையாச்சு சொல்ல்ல்லுயாயா

சார் ஒரு… அப்படின்னு கூறி மானத்தை வாங்கிடாதீங்க 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

39 COMMENTS

  1. உங்களுடைய பதிவு ரொம்பவே இயல்பா இருக்கு, உங்களை மாதிரியே 🙂 உங்களுடைய அனுபவம் எனக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

  2. 1. தொழில்நுட்பம்
    2. நகைச்சுவை
    3. உங்கள் பயணம் பற்றிய தகவல்
    4. தகவல்கள்
    5. அரசியல் விமர்சனம்
    6. of course ரஜினி 🙂

  3. உங்க blogkku வரும்போதே நம்ம கில்லாடி புதுசா எதாவது ஒரு விஷயம் சொல்லிருப்பாரு அப்படிங்கிற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு.

    அப்புறம் தொழில்நுட்பம், நகைச்சுவை
    முக்கியமா கொசுறு.

    அம்புட்டுதேன் 🙂

  4. தொழில்நுட்பம்,சினிமா,எளிமையான எழுத்து

  5. “நல்ல தானே எழுதறாரு …..அப்புறம் ஏன் அடிக்கடி பதிவு போடா மாட்டேன்குறாரு”
    இது தான்யா ஞாபகத்துக்கு வருது…..

  6. * எனக்கு உங்க நகைச்சுவை உணர்வு ரொம்ப பிடிக்கும்..உங்க பதிவுல அங்கங்க அள்ளி தெளிச்சிருப்பீங்க…that thing i like most in your blog கிரி..:)
    * இது பிடிக்கும் இது பிடிக்காதுனு இல்ல..எல்லாமே பிடிக்கும் உங்க பதிவுல..
    * உங்க அனுபவங்கள சொல்ற விதம் நல்லா இருக்கு..
    * நீங்க சொல்ற நிறைய சமூக விஷயங்கள் என்னோட thoughts reflect பண்ற மாதிரி இருக்கும்..அதனாலேயே விரும்பி படிப்பேன்…
    * சினிமா விமர்சனம் – உங்கள நம்பி நிச்சயமா படம் பாக்க போலாம்..:)
    * ஒவ்வொரு கமெண்ட்ஸ்க்கும் தனி தனியா reply பண்றதுன்னு நிறைய சொல்லிட்டே போலாம்…
    * நெகடிவா சொல்றதுக்கு எதுவும் இல்ல..இன்னும் நிறைய எழுதணும் நீங்க..
    books படிக்கிறது உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும்..நிறைய நல்ல புக்ஸ் இருக்கு கிரி..selectiva படிச்சு அதோட கருத்துகளும் நீங்க எழுதணும்..:)

  7. * எனக்கு உங்க நகைச்சுவை உணர்வு ரொம்ப பிடிக்கும்..உங்க பதிவுல அங்கங்க அள்ளி தெளிச்சிருப்பீங்க…that thing i like most in your blog கிரி..:)
    * இது பிடிக்கும் இது பிடிக்காதுனு இல்ல..எல்லாமே பிடிக்கும் உங்க பதிவுல..
    * உங்க அனுபவங்கள சொல்ற விதம் நல்லா இருக்கு..
    * நீங்க சொல்ற நிறைய சமூக விஷயங்கள் என்னோட thoughts reflect பண்ற மாதிரி இருக்கும்..அதனாலேயே விரும்பி படிப்பேன்…
    * சினிமா விமர்சனம் – உங்கள நம்பி நிச்சயமா படம் பாக்க போலாம்..:)
    * ஒவ்வொரு கமெண்ட்ஸ்க்கும் தனி தனியா reply பண்றதுன்னு நிறைய சொல்லிட்டே போலாம்…
    * நெகடிவா சொல்றதுக்கு எதுவும் இல்ல..இன்னும் நிறைய எழுதணும் நீங்க..

  8. கிரி ப்ளாக் என்றவுடன் நினைவுக்கு வருவது கிரி தான்

    ஹா ஹா

    சினிமா விமர்சனம் உங்களின் பல விமர்சனங்கள் படித்து தான் சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்கேன்

    மேலும் உங்க எழுத்தில் இயல்பாக வரும் நகைச்சுவை மற்றும் நேரில் பேசுவது போன்ற எழுத்து நடை ( எனக்கு இது வராது)

    எதுவா இருந்தாலும் ஓபன் ஆக பேசுவது (எழுதுவது)

    மற்றும் இணைய தகவல்கள்

  9. 1. திரைப்படம்
    2. பயணக்கட்டுரை
    3. தகவல் தொழில்நுட்ப செய்திகள்

  10. 1st தொழில்நுட்ப செய்திகள்
    2nd சினிமா விமர்சனம் – உங்கள நம்பி நிச்சயமா படம் பாக்க போலாம்
    உங்கள் பயணம் பற்றிய தகவல்
    கொசுறு

  11. கிரி அண்ணா ஒரு குழந்தைக்கு தாய் எப்படியோ அப்படிதான் என்னை போன்ற பிளாக் படிப்பவர்களுக்கு நீங்கள் .. சகலத்தையும் கொடுப்பவர் நீங்கள்

    மேல சொன்ன அனைத்து கருத்துகளும் தான் என் எண்ணம் … நான் இப்போது தவறாமல் உங்கள் பதிவுகளை படிக்கிறேன் இதுதான் உங்கள் தளத்தின் உண்மை நிலை

  12. 1. Recent updates in Computer industries (Ex: Google products, security updates)
    2. Your personal experience with “human touch” (Ex: Kids, friends)
    3. Experience in Singapore (Ex: food, people, culture)
    4. Movie review

  13. அன்புள்ள கிரி,

    பாலஹனுமான் பற்றி அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உங்களது இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    கிரி Blog என்றதும் உடனே என் நினைவுக்கு வருபவை:

    1. உங்கள் யதார்த்தமான, மனத்தைக் கொள்ளை கொள்ளும் நடை
    2. திரைப்படங்கள் மேல் உங்களுக்கு இருக்கும் Passion
    3. Latest Technology – யை எளிய முறையில் அறிமுகப்படுத்தும் உங்கள் பணி.
    4. உங்கள் நகைச்சுவை உணர்வு.
    5. Google மேல் உங்களுக்கிருக்கும் காதல் 🙂
    6. உங்கள் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தின் மேல் உங்களுக்கிருக்கும் பாசம்.
    7.உங்கள் பதிவுகளை விடாமல் தொடர்பவர்கள் மேல் நீங்கள் காட்டும் மரியாதை.
    8. உங்கள் எளிமை
    9. அடிக்கடி நீங்கள் எங்களுடன் பகிரும் உங்கள் வீட்டு சிங்கக் குட்டிகளின் (வினய் மற்றும் யுவன்) சுட்டித்தனங்கள்.
    10. Facebook மற்றும் Blog இவைகளுக்கு அடிமையாகாமல் அவற்றைப் பயன்படுத்தும் உங்கள் திறன்.

    இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.. இப்பவே கண்ணைக் கட்டுதே…. 🙂

  14. கிரி ப்ளாக் பத்தி சொல்றதுக்கு முன்னாடி நான் ஏன் மத்த blogs-எ continus-அ படிக்கறது இல்லன்னு சொல்லணும்.
    1. blog எழுதறவங்க என்னமோ, அவங்க பெரிய மேதாவி மாதிரியும், படிபவர்களுக்கு அத பத்தி ஒன்னும் தெரியதுனும், நினச்சுக்கறாங்க அல்லது அந்த மாதிரி நினைக்க வெக்கறாங்க.

    2. readers-கும், writers-கும் ஒரு relationship இல்ல. அவங்க எப்படி readers கிட்ட இருந்து comments எதிர் பாக்கறாங்களோ அதேமாதிரி readers-சும் அவங்க கம்மேன்ட்சுக்கு writers கிட்ட இருந்து reaction எதிர் பாப்பாங்க/ எதிர் பாக்கறேன்.

    மேற்கூறிய இந்த பிரச்னை உங்க blog-ல இல்ல. இந்த 2 reason-ல கிரி 100% score பண்ணீறீங்க. உங்க blog-அ படிக்கும்போது ஒரு நண்பனோட letter படிக்கற மாதிரி இருக்கு. அது மட்டுமல்லில்லாம உங்க எழுத்து நடை, எழுத்து பிழை இல்லாம, ரொம்ப நீட். easy-அ படிக்க முடியுது.

    ஒரு எழுத்தாளர் போல இல்லாம ஒரு friend-u போல எழுதறீங்க. அதுதான் உங்க ஹிட். keep it up.

  15. நான் பர்ஸ்ட்லேர்ந்தே ஆரம்பிக்கிறேன்…… நான் 2008-09 காலகட்டத்துல விண்டோஸ் 7 பத்தி கூகிள் ல சர்ச் குடுத்தப்போ உங்களோட விண்டோஸ்7 அறிமுகம் பத்தின பதிவோட லிங்க் காட்டுச்சு…

    அப்போ நான் செஞ்ச ஒரு க்ளிக் தான் எனக்கு இப்டி ஒரு உலகம் இருக்குறதையே அறிமுகம் பண்ணுச்சு… அந்த பதிவ படிச்சுட்டு அப்டியே உங்க பதிவு எல்லாத்தையும் மேய்ஞ்சுட்டு , ஓஹோ நெட்ல இப்பிடிலாம் வேற இருக்கா? நாம தான் நெட்-ட ‘அது’க்கு மட்டுமே யூஸ் பண்ணிக்கிட்ருக்கோமானு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்… 🙂

    அப்புறம் ஒவ்வொரு ப்ளாக் ஆ தேடி தேடி , சுமார் ஒரு வருசத்துக்கு புல்டைம் ஜாப் ஆ பதிவுகளையே படிச்சுக்கிட்ருந்தேன்…(வேற வேலையும் ஒன்னும் இல்ல)…

    வாசிக்கிறது புடிக்கும்கறதால நான் பாட்டுக்கு சினிமா அரசியல் காமெடி தொழில்நுட்பம் னு எல்லா எரியாவுலயும் சுத்திக்கிட்ருப்பேன்…ஆனா யாருக்கும் கமென்ட் மட்டும் பண்ண மாட்டேன்… 😛

    சரி நாமளும் எழுதலாம்னு ரெண்டு , மூணு வாட்டி பிளாக் ஓபன் பண்ணி எல்லாம் மூடியாச்சு… வராத எழுத்த வா வான்னா?????

    ஆக,
    1.எனக்கு அறிமுகமான முதல் ப்ளாக் அப்டிங்கற வகையிலும்
    2.அன்னிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதி வருவதிலும்
    3.எளிமையான எழுத்து நடையிலும்
    4.தன்னை ஒரு பெரிய அப்பாட்டக்கர் என்று தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளாத வகையிலும்
    5.சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் போது காமன் மேன்களின் கோபத்தை நியாயமான முறையில் பதிவு செய்த வகையிலும்
    6.குடும்பம்,உறவுகள் சொந்த ஊர் மேலான பாசத்தை வெளிப்படுத்தி எழுதும் போது நமக்கும் ஊர்ப்பாசமும், உறவுகள் மீதான அன்பும் பெருகச் செய்த வகையிலும்
    …………………………………. நெறைய இருக்கு , ஆனா இதுக்கே நாப்பது நிமிஷம் ஆயிருச்சு .எல்லாம் சொன்ன கோழி கூவிரும்…

    எல்லா வகையிலும் கிரி ROCKS ………………………

    இப்போலாம் பிளாக்ஸ் படிக்க நேரம் இல்லாட்டியும் பேஸ்புக்ல உங்க பதிவோட லிங்க் வந்துருச்சுனா உடனே படிச்சுட்டு தான் அடுத்த வேலை… சில நேரம் ரொம்ப நாளா எதுவும் வரலன்னா நாம தான் மிஸ் பண்ணிட்டோமோன்னு இங்க வந்து ஒரு நோட்டம் விட்டுட்டு போவேன் 🙂

    யாரவது நீங்க எழுதுறத பத்தி கேட்டா காலர தூக்கி விட்டு சொல்லுங்க சார், என் எழுத்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்காங்கன்னு… அதுல நான் முதல் ஆள்…

  16. எனக்கு உங்க நகைச்சுவை உணர்வு ரொம்ப பிடிக்கும்..உங்க பதிவுல அங்கங்க அள்ளி தெளிச்சிருப்பீங்க…
    * இது பிடிக்கும் இது பிடிக்காதுனு இல்ல..எல்லாமே பிடிக்கும் உங்க பதிவுல..
    * உங்க அனுபவங்கள சொல்ற விதம் நல்லா இருக்கு..
    *ஒரு நல்லா பீலிங் வரும் …..
    *உங்க blog-அ படிக்கும்போது ஒரு நண்பனோட letter படிக்கற மாதிரி இருக்கு.
    * நானும் கம்ப்யூட்டர் ரிப்பேர் , பீட் வொர்க் கும் பண்ணி இருக்கிறேன் ஸ்ரீ லங்கா வில் , உங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது கடந்த கலங்களை நினைவு படுத்தும் . இப்பொழுது நான் கனடாவில் வாசிக்கின்றேன் ..

  17. தமிழ் நாடு மற்றும் உலக அரசியல்
    தமிழ் மற்றும் உலக சினிமா
    கருத்து கந்தசாமி கட்டுரைகள்
    நகைச்சுவை

    தொடர்ந்து எழுதவும்

  18. 1.நான் படித்த வரையில் பயணக்கட்டுரைகள் மிகவும் சுவராஸ்யமாக படிப்பவர்களுக்கு உடனே அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தருவீர்கள்.குறிப்பாக ஆழப்புழை கட்டுரை.மற்றபடி அம்மா செண்டி மென்ட்(ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தது),வினயின் குறும்புகள்,,கோபிசெட்டிபாளயத்தின் அழகு,மரம் வளர்ப்பு ஆகியவை பற்றி அதிகமாக எழுதுவீர்கள். ரசிக்கும்படி இருக்கும்…குறிப்பாக எனக்கு ‘நண்பர்களுக்கு”என்ற கட்டுரை மிகவும் காயப்படுத்திய ஒன்று..’இதுவும் கடந்து போகும்’ என்ற கட்டுரையும் எனக்குப் பிடித்த ஒன்று..

    2.விமர்சனக் கட்டுரைகள் என்னைப் பொறுத்தவரை நடுநிலையாக எழுதுகிறீர்கள் என்பதை விட சராசரி பாமர ரசிகன் திரைப்படத்தில் என்ன எதிர்பார்ப்பானோ அந்த அம்சம் படத்தில் உண்டா இல்லையா என்பதை உங்கள் விமர்சனத்தில் அறிந்து கொள்ளளாம்..அதாவது படத்திற்கு போலாமா வேண்டாமா என்பதை..மற்றபடி தைரியமாக எழுதுவது குறிப்பாக விஸ்வரூபம் புரியவில்லை என்றது..பாலாவை அதிகமாக நேசித்தாலும் சரியில்லை என்றால் சுட்டுவது(அவன் இவன் விமர்சனம்)..ராஜேஷ்குமார் நாவலை எடுத்தால் படித்து முடிக்காமல் யாரும் வைக்க மாட்டார்கள் அது போல தான் உங்கள் விமர்சனமும்..

    3.நகைச்சுவை இருந்தாலும் பெரிய அளவில் ஒன்றும் தெரியவில்லை எனக்கு..எழுதும்போது நான் சொல்லக்கூடாது அப்ப சொல்லாதீங்கன்னு சொல்லிடாதீங்க என்ற வகை காமெடிகள் பிடிக்கவில்லை கிரி..

    4.தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகள் அதிகம் படிப்பதில்லை.படித்தாலும் நம் அறிவுக்கு எட்டுவதில்லை.. கிரி நீங்கள் அந்த மாதிரியான பதிவுகள் எழுதுவதற்காகவே தனி blog ஒன்று ஆரம்பித்தீர்கள் அது என்ன ஆனது கிரி..?

    5.அரசியல் பற்றிய பதிவுகள் உங்கள் ஆதங்கத்தை கொட்டுகிறீர்கள் அது என்னுடைய ஆதங்கம் எல்லோருடைய ஆதங்கம் உங்கள் எழுத்தில் பார்க்கிறோம்..

    6.சிங்கப்பூர் பற்றிய பதிவுகள் எனக்கு பிடிக்கும் கிரி..சிங்கப்பூரில் எனக்கு ஒரு நண்பர் உள்ளார் என்று நண்பர்களிடம் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வேன் கிரி..

    7.தலைவர் பற்றி தேடிக் கொண்டு இருக்கும்போது தான் உங்கள் தளத்திற்கு முதன் முறையாக வந்தேன் கிரி..’ரஜினிக்கு ரசிகனாக இருப்பதில் என்ன தவறு’ தான் கிரி.. நான் படித்த முதல் பதிவு.மற்றபடி இதிலிருந்து நாங்கள் உங்களுக்கு வழங்கும் பட்டம் ‘திரையுலகின் சூப்பர்ஸ்டார் தலைவர்.வலையுலகின் சூப்பர்ஸ்டார் எங்கள் கிரி…’
    தொடரட்டும் உங்கள் வெற்றிகரமான எழுத்துப்பயணம்..நன்றி கிரி…

  19. என்ன தல எங்க side திருப்பி விட்டீங்க
    நெறைய இருக்கு சொல்ல

    1. என்ன மாதிரி கமெண்ட் போட விரும்பாத மக்களை போட வைக்குறது

    2. மனசுக்கு ரொம்ப இதமா இருக்கும் தல உங்க எழுத்துக்கள் ஏதோ நம்ம சொந்தக்காரன் கிட்ட பேசுற மாதிரி இருக்கும்

    3. உங்க கோபம், ஆதங்கம், சந்தோசம், வருத்தம், ஜொள்ளு, பாசம், உணர்வு இப்படி எல்லாமே நீங்க என்ன feel பண்றீங்க அப்படின்னு நல்லாவே உங்க எழுத்துல புரியும் இது சாதரண விஷயம் இல்லை தல

    4. நவரச நாயகன் தான் நீங்க – உங்க பதிவு ல அரசியல் தொடங்கி சினிமா வரை எல்லா விஷயமும் பேசுவீங்க

    5. எம் மக்கள் அப்படின்னு கர்வமா இருக்கும் உங்களோட பல எண்ணங்கள் படிக்கும் போது

    6. நல்ல மகன், தந்தை, கணவன், நண்பன், தமிழன், இந்தியன், ரசிகன், சகோதரன் – இப்படி உங்க எல்லா பரிமாணமும் நான் ரசிகுறேன்

    7. நான் ஒரே பையன் எங்க வீட்டுக்கு அதனால நண்பர்கள் மேல உள்ள ஆசை அதிகம் எங்க இருந்தாலும் இந்த அழகான மனசு உள்ள கிரி யோட நட்பை நான் இழக்க விரும்பவே மாட்டேன்

    8. ரொம்ப பெருமையா இங்க சொல்லி இருக்கேன், சொல்லுவேன் – சிங்கப்பூர் கிரி என்னோட நெருங்கிய நல்ல நண்பர்.
    ரொம்ப emotional ல போகுது தல

    சிம்பிள் லா உங்க ரசிகனா சொல்லணும்னா – நீங்க 90 வயசுலயும் ப்ளாக் எழுதணும் அதை நான் ரசிக்கணும், type பண்ண கஷ்டமா இருந்தா mp3 ல ரெகார்ட் பண்ணியாவது நீங்க தொடரனும் 90 வயசுலயும்

    நீ எல்லாம் நல்லா வருவடா நல்லா வருவ 🙂

    – அருண்

  20. என்ன அண்ணா ,நேக்கா எங்க பக்கம் திருப்பிவிட்டிங்க ஹா ஹா

    நான் முதன்முதலில் படித்த ப்ளாக்கே கிரி ப்ளாக் தான் அண்ணா

    கிரின்னா எனக்கு பர்ஸ்ட் நியாபகம் வர்றது , உங்களோட எளிய தமிழில் தொழில்நுட்ப செய்திகள் தான் அண்ணா

    நானும் கூகுள் ரசிகனா மாற நீங்கதான் கரணம்

    அப்பறம் ‘கொசுறு ‘ ரொம்ப சுவாரசியமா இருக்கும்

    முன்னலாம் உங்க எழுத்து நடைய பார்த்து ரொம்ப வயசானவர் நு நெனச்சிட்டேன் ஹீ ஹீ

    அப்பறம் திரை விமர்சம் நீங்க ஓகே சொன்னா நான் கண்டிப்பா பாத்துடுவேன்

    உண்மைலே ஒரு பிரெண்டோட லெட்டெர் ர படிக்கிற பீலிங் இருக்கும்

    அப்பறம் ரஜினிய பத்தி ஆகா ஓஹோ நு பேசுறது எனக்கு கொஞ்சம் சலிப்பா இருக்கும்(ஐம் சாரி)

    அண்ணா எனக்கு கோர்வையா பேச வராது முடிவா , ஐ லவ் கிரி ப்ளாக்

    • Anand

      உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு……………. I

    • “நான் முதன்முதலில் படித்த ப்ளாக்கே கிரி ப்ளாக் தான் அண்ணா”

      :))

  21. *உங்ககிட்ட புடிச்ச விசயம்,உங்க ரைட்டப் ஸ்டைல்..ஏதோ ப்ரெண்டுக்கிட்ட பக்கத்துல உக்காந்து ஜாலியா கதை பேசுறது மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.அந்த ஃபீல் தான் ரொம்ப முக்கியம்:)கீப் இட்&வாழ்த்துகள்

    * இணையத்தை பத்தின தகவல்கள் ஈஸியா புரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு.எனக்குதான் எல்லாம் தெரியும்னு அலட்டிக்காத உங்க தன்னடக்கம் ரெம்ப்பப பிடிக்கும்:)
    *அப்புறம், ‘இங்க என்ன சொல்லுது?!’
    ‘கிரி,கிரி’ன்னு சொல்லுது:)
    கொசுறு :உங்க பிளாக்குல நான் போடுற பர்ஸ்ட் கமெண்ட் இதுதான்!! 🙂

  22. வணக்கம் கிரி அவர்களே

    நான் முதன் முதல் படித்த பிளாக் உங்களுடையது.கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கிரிபிளாக்கின் வாசகனாக இருக்கிறேன்.அதிக முறை வர முடியாவிட்டாலும்.மாதத்திற்கு ஓரிரு முறை வந்து விடுகிறேன்.அதற்கு காரணமாக நான் முன் வைப்பது,
    1.எழிமையான எழுத்து நடை,
    2.ஏராளமான பொதுத்தகவல்கள் குறிப்பாக இணைய தகவல்கள்,
    3.திரைப்பட விமர்சனங்கள்,அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் கிடைக்கும்,

    4.இறுதியாக தலைவரின் ரசிகர்களாக இருப்பதும் ஒரு காரணம்.
    மொத்தத்தில் கிரி பிளாக் ஒரு பல்சுவைப் பக்கம்.

    நன்றி.
    கொசுறு…..

    நண்பர் அருண் அவர்களின் கருத்தை அப்படியே வழிமொழிந்துருக்கலாமோ..நல்லா சொல்லியிருக்கிறார்.அவருக்கும் நன்றி.

  23. ஒரு சிம்பிளான ஆளோட சிம்பிளான எழுத்து. படிக்க ரொம்ப தோழமையுடன் இருக்கும். என்னோட பேவரைட் ப்ளாக்ஸ்ல முக்கியமான ஒண்ணு!!! 🙂

  24. கிரி.. தங்களின் எழுத்துகளை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வருகிறேன். எனக்கு குறிப்பாக அதில் பிடித்தது….

    1. கிரி என்ற உடனே என் நினைவிற்கு வருவது (கோபியோட மண்வாசனை).
    2. பிழையில்லாத தமிழ் எழுத்துகளில் கட்டுரை…
    3. சுதந்திரமான எழுத்துகள், யாருடைய குறுக்கீடும் இல்லாமல்…
    4. அனைத்து விமர்சனங்களுக்கு பின்னூட்டம் அளிப்பது (ஓடி ஒளியாமல்).
    5. தொழில்நுட்ப இணைய செய்திகளை தமிழில் தருவது.
    6. சில படங்களை உங்கள் விமர்சனம் தான் என்னை பார்க்க தூண்டியது.
    7. வாசகர்களின் புது அறிமுகங்கள் தொடர்வது உங்கள் எழுத்துகளுக்கான வெற்றி..
    8. கடைசியா ஒரு செயலை தொடர்ந்து செய்வது…
    ==============================================
    கிரி… நான் ரொம்ப நாளைக்கு முன்பே யோசித்த ஒரு விஷியம்.. ஆனால் இது சாத்தியமா இல்லையா என்று தெரியவில்லை… சமுதாயத்தில் வறுமை, ஏழ்மை இது கண்டிப்பா ஒழியவேண்டும். எல்லோருக்கும் கல்வி கண்டிப்பா கிடைக்கணும். நம்மை சுற்றி நடக்க கூடிய நிகழ்வுகளை கண்டும் காணாமலும் செல்வது நமது வாடிக்கை ஆகி போச்சு… இன்னைக்கு தங்கள் தளத்தை பார்கின்ற நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் நிச்சயம் பெருகும்.. நாம எல்லா நண்பர்களும் (விருப்பம்) உள்ளவர்கள் சேர்ந்து நம் சமுதாயத்திற்கு நன்மை தரகூடிய செயல்களில் நமது பங்களிப்பை அளிக்கலாமே??? இது என்னோட கருத்து தான். கிரி நீங்க இதை பத்தி எப்பொழுதவது யோசித்தது உண்டா??? தல தப்பா நினைகாதிங்க உங்கள அரசியல்க்கு கூப்பிடல…..
    ==================================================

  25. 1. நல்ல தமிழ்
    2. சுவாரஸ்யமான நடை
    3. திரைப்படம் முதல் தொழில் நுட்பம் வரை உடனுக்குடனான அப்டேட்ஸ்

    ரீடரிலிருந்து மேலுள்ள கமெண்ட்ஸ் எதையும் வாசிக்காமல் தரும் கருத்து:)! இட்ட பிறகு மற்றதைப் பார்க்கிறேன்.

  26. 1.எதார்த்தம்
    2. தெளிவு
    3. ஊர் பாசம்
    4. உண்மை
    5. வெகுஜன நடை

  27. உங்களது தொழில்நுட்ப பதிவுகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு அதில் மிக பெரிய அளவில் ஆர்வம் இல்லை என்ற போதிலும் கூகுளை பற்றிய செய்திகள் எனக்கு மகிழ்ச்சியை தரும். உங்களை போல நானும் ஒரு கூகுள் ரசிகன்.

    மற்ற பதிவுகள் என பார்த்தால், உங்களது பயண கட்டுரை, உங்கள் அம்மா, அப்பா பற்றிய பதிவு, நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்த பிரச்சனைகள் போன்ற பதிவுகளால் பல விஷயங்களை கற்றிருக்கிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.. உங்களது எழுத்து நடை மிகவும் சுவாரஸ்யம் 🙂

  28. யாசின் சொல்ற ஐடியா நல்லா இருக்கு..இது எனக்கும் இருந்த, இருக்கிற எண்ணம் தான்..சமூகத்த கொஞ்சமாச்சும் நம்மால முன்னேற்ற முடியுமான்னு..
    உங்க கருத்து எதிர் பார்க்கிறோம் கிரி..

  29. தகவல் தொழில்நுட்பம் பற்றி சமீபத்திய செய்திகள்
    எளிமையான நடை

  30. உங்களுடைய பதிகள் அனைத்தும் அருமை .
    மிகவும் எளிய நடை .பயணக்கட்டுரைகள் , நானும் பயணித்தது போன்ற உணர்வை தருகிறது.
    வாழ்த்துக்கள் . எனக்கு இதை போன்று வேறு சில ப்லாக்குகளின் லிங்க் வேண்டுமே ?

  31. கிரி.. தங்களின் எழுத்துகளை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வருகிறேன். வேலை பளுவால் அடிக்கடி வருவதில்லை / கமெண்ட் இடுவதில்லை. இருப்பினும் இணையத்தில் நுழைத்தால் ஒரு எட்டு வந்துவிட்டு செல்வேன். கடந்த சீன புதுவருடத்தின் போது சிங்கை வந்தேன். அப்போது எனது நண்பர்களிடம் உங்களை தெரியுமா? என கேட்டேன். ஒருவன் மட்டும் படித்து இருக்கிறேன் ஆனால் பழக்கம் இல்லை என கூறினான். தெரிந்து இருப்பின் கண்டிப்பாக உங்களை சந்தித்து இருந்திருப்பேன். அந்த அளவுக்கு உங்களை பிடிக்கும் கிரி, உங்கள் எழுத்தின் ஊடாகத்தான் இது சாத்தியம் ஆயிற்று ஆகவே அதை பிடிக்காமலா இருக்கும். ஒரு நெருக்கமான நண்பராய் உணர வைக்கிறீர்கள் கிரி. தங்கள் தளம் குறித்து எனது பார்வைகள் இதோ..

    1. சுய தம்பட்டம் அறவே இருக்காது. மனதில் பட்டதை வெளிபடையாக கூறுவது.
    வெகு ஜன மனதில் உள்ள சமுகக்கோவம் ஆங்காங்கு எழுத்தில் தெறிக்கும்.
    2. நான் அநுபவம் / பயணம் சார்ந்த பதிவுகள் தான் விரும்பி படிப்பேன்.
    கொசுறு செய்திகள் நன்றாக இருக்கும்.
    3. சினிமா விமர்சனம் நேர்மையா எழுதுவீர்கள்.
    4. பிழையில்லாத தமிழ் எழுத்துக்கள் மற்றும் எந்த குழுவிலும் இல்லாது தனித்து
    நிற்பது மிகவும் பிடிக்கும்.
    5. ஒவ்வொரு கமெண்ட்ஸ்க்கும் பதிலளித்து வாசிப்பவரை மதிக்கும் தன்மை.
    6. தொழிற்நுட்பம் சார்ந்த செய்திகள் தான் எழுதுகின்றீர்கள். தொழிற்நுட்பம் பற்றி
    அல்ல.
    7. எழுத்தின் ஊடாக வரும் நகைசுவை பெரும்பாலும் சினிமா நகைசுவைகள் தான்.
    இதை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் நல்லா இருக்கும்.

    இறுதியாக… எளிமை + உண்மை = கிரி.

  32. கிரி பிளாக்-ன்னா, சிம்பிள் சிம்பிள் சிம்பிள். ரெண்டு பேரு உக்காந்து பேசினா எப்பிடிப் பேசுவாங்களோ அப்பிடிதான் உங்க பதுவு இருக்கும். அதாவது நண்பன் கூட சேந்து அரட்டை அடிக்கிறா மாதிரி – விஷயமே இல்லைன்னாலும் அது ஜாலிதான். 🙂

    ஒரு பதிவ படிக்க போறதுக்கு முன்னாடி, எவனையோ இன்னைக்கு காலாய்க்க போறீங்கன்னு ஜாலியா இருக்கும்.

    பதிவ படிச்சு முடிச்சா, நக்கல் & கொசுறு இது ரெண்டும் சேந்து ரஜினி நடிச்சு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்துல ஒரு படம் பார்த்த effect குடுக்கும். 🙂

  33. உங்கள் மனதில் தோன்றியதை, நீங்கள் விரும்பியதை, சாதாரண மனிதனனின் சமூக கோபங்களை, இயலாமைகளை, வாழ்வியல் சுவாரசியங்களை, ரசனைகளை, சமூக அங்கங்களை, பயணங்களை, பொழுது போக்கு நிகழ்வுகளை, தொழில்நுட்பங்களை இயல்பாக மிகைபடுத்தாமல் எழுதுகிறீர்கள்…சுருக்கமாக சொன்னால் Full Meals மாதிரி விதவிதமாக, திருப்தியாக, கெடுதல் இல்லாமல்

  34. மண் வாசனை
    தொழில் நுட்ப செய்திகள்
    இதர..
    எல்லாத்துக்கும் மேல நீங்க நம்ம ஆளு என்ற நினைப்பு உங்க ப்ளாக் வந்தாலே வந்துடுது..

  35. தலைவா…!! வணக்கம்… நலமாக இருப்பீங்கன்னு நம்புறேன். நானும் ரொம்ப நாளா பிலாக்ல வந்து கமெண்ட் போடனும்னு நினைப்பேன். ஆனால் இமெயில் படிச்சுட்டு அப்புறம் போடலாம்னு அப்படியே மறந்துடுவேன். அதுக்குள்ள அடுத்த பதிவு எனக்கு இமெயில் கிடைச்சுடும்…. அதுவும் அப்படியே..!!! இது இப்படியே தொடர்கதையாகி போச்சு..!! சரி விஷயத்துக்கு வருவோம்..!!! தங்கள் வலைப்பக்கம் குறித்து என் கருத்துகளை பதிவு செய்வதற்குள் நிறைய நண்பர்கள் நான் சொல்ல விரும்பிய விஷயங்களை சொல்லியிருக்காங்கன்னு ஒரு சில கமெண்ட் படிச்சதும் புரிஞ்சுகிட்டேன். இருந்தாலும் என் பங்குக்கு கூறுகிறேன்.

    கிரி Blog என்றதும் உடனே என் நினைவுக்கு வருபவை:

    1. மாளவிகா (புரொபைல் லோகோ)
    2. ரஜினி ரசிகர் (ம) கவுண்டமணி (நக்கல், லொள்ளு… ஹி.. ஹி… ஹி…)
    3. எளிமையான இயல்பான நகைச்சுவை கலந்த எழுத்துநடை
    4. தமிழ் ஆர்வத்துடன் பிழையின்றி எழுதுதல்
    5. திரை விமர்சனம்
    6. அனுபவப் பகிர்வுகள்
    7. இணைய செய்திகள், கொசுறு
    8. நாட்டு நடப்புகள்
    9. கோபி – மலேசியா – பேங்க்
    10. தன்னடக்கம் – கடின உழைப்பு – விடா முயற்சி.
    இப்படி ஏகப்பட்டது மைண்ட்ல ஓடுது தல… இப்போதைக்கு முடிச்சுக்கறென். மற்றொரு முறை நிறை குறைகள்னு பிரி்ச்சு சொல்றென் பாஸ்..!!
    தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணங்கள்..!!!
    நன்றி வணக்கம் தலைவா..!!

  36. 1. தெளிவான எழுத்து நடை
    2. ஆங்காங்கே சிறிது நகைச்சுவை தெளிப்பு
    3. தொழில் நுட்ப செய்திகள் (கூகிள் அம்பாசிடர் கிரி) 🙂
    4. சிங்கப்பூர் பற்றிய செய்திகள்
    5. விமர்சனங்கள்
    6. எல்லாத்துக்கும் மேலே ஒரு ரஜினி ரசிகனாய், எழுதுவது. நான் ரொம்ப பேர்கிட்ட ரஜினி பற்றி சொன்னது/சொல்ல நினைப்பது எல்லாம் அப்படியே மைண்ட் வாய்ஸ் மாறி எழுதுறது 🙂

    கலக்குங்க கிரி !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here