தொலைக்காட்சி மீடியா திரையுலகம் என்று அனைத்தையும் ஒரு சேர கலக்கிக்கொண்டு இருப்பது சன் தொலைகாட்சி தான் என்பது. Image Credit
அரசியல் பலமும் திறமையும் ஒரே சேர இருந்தால் எப்படி அனைத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர்களே சிறந்த உதாரணம்.
சன் தொலைக்காட்சி
தூர்தர்சனை மட்டுமே வறட்சியாகப் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் வண்ணமயமாகச் சன் தொலைக்காட்சியைத் தொடங்கிய போது சந்தோசப்படாதவர்களே இல்லை எனலாம்.
வாரம் ஒரு முறை ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், சித்ரகார், ஞாயிற்றுக் கிழமை ஒரு ஆதி காலத்துப் படம், மனைமாட்சி, ஞாயிறு மாலை ஸ்பைடர் மேன், எதிரொலி, சித்ரமாலா, ரங்கோலி என்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்குச் சாதா சாப்பாடே எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு அதுவும் விதவிதமாகக் கொடுத்தால் எப்படி இருக்குமோ அந்த நிலை சன் தொலைக்காட்சி வந்த போது ஏற்பட்டது.
சன் தொலைக்காட்சி ஆரம்பமே அதகளமாக இருந்தது மக்களைக் கவர திரைப்படம் தான் முக்கியக் காரணி என்பதைச் சரியாக உணர்ந்து அது சம்பந்தமாக அதிக நிகழ்ச்சிகளை வைத்தார்கள்.
முதலில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பு துவங்கும், அப்போது கூறியது தான் சன் தொலைக்காட்சியின் தமிழ்மாலை (மீதி நேரங்களில் திரை பாடல்கள் ஒலிபரப்பாகும்) மக்களின் தாறுமாறான வரவேற்பால் விரைவிலேயே 24 மணி நேரமாக்கினார்கள்.
கலாநிதி மாறன்
கலாநிதி மாறன் மிகச்சிறந்த மார்கெட்டிங் நபர், மக்கள் எப்படிக் கூறினால் எதைக் கூறினால் ரசிப்பார்கள் என்பதை விரல் நுனியில் வைத்து இருப்பவர்.
இதனால் அடுத்தடுத்து பல புதிய வித்யாசமான நிகழ்ச்சிகளைக் கொடுத்தார்கள்.
இதில் அப்போது ஜோடி பொருத்தம், பெப்சி உங்கள் சாய்ஸ் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
தூர்தர்சனின் வறட்சியான செய்திகளையே பார்த்து இருந்தவர்களுக்குச் சன் தொலைக்காட்சி யின் செய்திகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதற்கு இன்னொமொரு முக்கியக் காரணம் அவர்களுக்குக் கிடைத்த தொகுப்பாளர்கள் MJ ரெகோ, பெப்சி உமா உட்படப் பலர்.
இவ்வாறு தொகுப்பாளர்கள் தேர்விலும் அவர்களைத் தங்கள் வளர்ச்சிக்குத் தகுந்த மாதிரி அவர்களின் முழுத் திறமையையும் பயன்படுத்திக்கொண்டார்கள். இது குறிப்பிடத் தக்க ஒன்று.
சிறந்த நடிகராக இருந்தாலும் இயக்குனர் சரி இல்லை என்றால் அவரது திறமைகள் முழுவதும் வீணடிக்கப்பட்டு விடும் என்பது போல இவர்களிடம் இருந்து மற்ற இடத்திற்குச் சென்ற போது அவர்களால் அந்த அளவு ஜொலிக்க முடியவில்லை என்பதும் உண்மை.
“சன்” என்ற ஆக்டோபஸ்
ஒருவரிடம் உள்ள திறமையை முழுவதும் பயன்படுத்துவதில் கலாநிதி மாறன் ஒரு சிறந்த நிர்வாகி.
கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் பொதுமக்களை அதிகளவில் ஈர்த்தது, பெரும்பாலான வீடுகளில் சன் தொலைக்காட்சி முதல் சேனலாகத் தான் இருக்கும், கவனித்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.
தங்கள் தொழிலைச் சன் தொலைக்காட்சியுடன் நிறுத்திக்கொள்ளாமல் பல சேனல்களைத் துவங்கினார்கள், இதில் அடுத்த மாநில சேனல்களும் அடங்கும்.
கலைஞர் ஆட்சியில் இருந்த போது அதிகார பலமும் உடன் இருந்ததால், அவர்களால் இன்னும் பல விஷயங்கள் எளிதாகச் சாதித்துக்கொள்ள முடிந்தது.
மற்ற தொலைக்காட்சிகளுக்கு நெருக்கடி தரப்பட்டன. சிறப்பாகச் செயல்பட்ட விஜய் தொலைக்காட்சி செய்திகள் இதனால் நிறுத்தப்பட்டது.
விஜய் தொலைக்காட்சி செய்தி
அந்தச் சமயத்தில் பலரால் விரும்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி செய்தி.
அரசியல் பலம் மட்டுமே ஒருத்தரை உயர்த்தி விட்டு விடாது என்பதற்கும் இவர்களே எடுத்துக்காட்டு.
காரணம் ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு என்ன முயற்சித்தும் சன் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை.
நெருக்கடி கொடுத்தாலும் அவர்கள் அதை வேறு மாதிரி சமாளித்துத் தடையைத் தாண்டிக் கொண்டே இருந்தார்கள்.
பலம் இருந்தும் ஜெயா தொலைக்காட்சியால் சன் தொலைக்காட்சியை மிஞ்ச முடியவில்லை.
சீரியல்
திரைப்படங்கள் மட்டும் பத்தாது பெண்களைக் கவர சீரியல் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார்கள், அது பெரிய வெற்றிப் பெற்றது.
பெண்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு கொடுத்தனர்.
முன்பு இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சீரியல் வரும் பின் அது அதிகமாகி காலை மாலை என்று பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமித்து விட்டது.
வெறும் சீரியல் மட்டுமே இருந்தால் மற்ற பார்வையாளர்களை இழந்து விடுவோம் என்று அவர்கள் துவங்கியது தான் சன் மூவீஸ், சன் மியூசிக்.
இதில் சுமங்கலி கேபிள் விஷனும் அடங்கும்.
கடந்த முறை தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகப் பதவி ஏற்ற போது அவர்கள் ஆதிக்கம் ரொம்ப அதிகரித்தது.
தாங்கள் வளர்ச்சி பெற அரசியல் பலத்தை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
விஜய் தொலைக்காட்சி நமக்கு எதுக்கு வம்பு என்று முற்றிலும் ஒதுங்கி விட்டார்கள். ராஜ் தொலைக்காட்சி மண்டை காய்ந்து விட்டது.
குற்றச்சாட்டு
தொழில் துறையில் பல சாதனைகளைப் புரிந்த டாட்டா அவர்களையே மிரட்டியதாகவும் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு உண்டு.
தயாநிதி மாறனும் அண்ணனுக்குச் சற்றும் குறைந்தவர் அல்ல.
தொழில் நுட்ப துறை மட்டுமல்ல எந்தத் துறை கொடுத்தாலும் அதில் தனித்துத் தெரிவார் என்பதற்குத் தற்போது ஜவுளி துறையையே எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இப்படியொரு துறை இருப்பதையே பலர் தற்போது தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.
இவர்கள், பலரை தங்கள் அதிகாரத்தால் அடக்கியது பலருக்குத் தெரியும், மார்க்கெட்டிங்கில் இவர்களை யாரும் மிஞ்ச முடியவில்லை.
எடுத்துக்காட்டாக 1996 சட்டசபை தேர்தலில் கலைஞர் அரசு பெரும் வெற்றி பெற இவர்கள் சன் தொலைக்காட்சி ஒரு காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை.
சன் தொலைக்காட்சி பிரச்சாரம் மக்களை எளிதாகக் கவர்ந்தது, ஜெயா தொலைக்காட்சிக்கு அந்தளவு மக்களைக் கவரும் படி செய்தியைச் சொல்லத் தெரியவில்லை.
தினகரன் கருத்துக்கணிப்பு
இந்நிலையில் தினகரன் கருத்துக்கணிப்பு!!! ஒன்று நடத்தி அழகிரியை கடுப்படிக்கத் தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டது.
இது இரு குடும்பத்திற்கும் பெரிய சண்டையை ஏற்படுத்தி விட்டது.
இதனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தோசப்பட்டார்கள், நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடு நிலையான சன் செய்தியைப் பார்த்தார்கள்.
ஜெ வைகோ விஜயகாந்த் செய்திகளும் அடிக்கடி காட்டப்பட்டன.
இடைப்பட்ட காலத்தில் கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது, சன் தொலைக்காட்சி அலுவலகம் அறிவாலயத்திலிருந்து மாற்றப்பட்டது.
சன் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு இழுக்கப்பட்டார்கள்.
சன் தொலைக்காட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. சன் தொலைக்காட்சி தான் அனைத்துப் புதுப் படங்களையும் வாங்கிக் கொண்டு இருந்தது.
தற்போது கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதால் அனைத்து பட உரிமையும் கலைஞர் தொலைக்காட்சிக்குப் போனது.
குசேலன் தசாவதாரம் மற்றும் பல படங்களைக் கலைஞர் தொலைக்காட்சி வாங்கியது.
இந்தக் கடுப்பில் குசேலனை சன் தொலைக்காட்சி ஒரு வழி ஆக்கியது தனிக்கதை.
காதலில் விழுந்தேன்
சன் தொலைக்காட்சிக்குப் படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மேலும் கடுப்பானது.
இவர்களின் முக்கியப் பலமே படங்கள் என்பதால் அடி மடியிலே கை வைத்ததால் இதைத் தாண்ட அவர்கள் எடுத்த அடுத்த முயற்சி தான் படங்களை வாங்குவது.
இதைக் கலைஞர் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவர்கள் முதன் முதலில் வாங்கி வெளியிட்ட “காதலில் விழுந்தேன்” படம் இவர்கள் செய்த விளம்பரத்தால் வெற்றி பெற விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதன் பின்னர் இவர்கள் வாங்கும் படத்தின் அளவு அதிகரித்தது, தயாரிப்பாளர்களும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வரை சரி என்று விற்று விட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் எல்லாம் இப்போது இவர்கள் செய்யும் பட விளம்பரத்தால் நொந்து நூடுல்ஸ் ஆவதற்கு முக்கியக் காரணம் கலைஞர் தொலைக்காட்சி தான் 🙂 .
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல இவர்கள் ராஜ் தொலைக்காட்சிக்குச் செய்த பிரச்சனை எப்படியோ அது போலச் சன் தொலைக்காட்சி தெரியாமல் இருக்கச் செய்யப்பட்டது.
இது செய்திகளில் முக்கிய விவாதமாக வந்தது.
சன் DTH
இவர்களுடைய சுமங்கலி கேபிள் விஷனுக்கு நெருக்கடி கொடுக்க அரசுக் கேபிள் கொண்டு வரப்பட்டது.
இதைச் சமாளிக்க இவர்கள் கொண்டு வந்தது தான் சன் DTH அதுவும் இவர்கள் மார்க்கெட்டிங் தந்திரத்தால் வெற்றிப் பெற்றது.
நான் இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன்.
எனக்குச் சன் தொலைக்காட்சி மீது வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.
அதே போல இவர்கள் செய்யும் அதிகார துஸ்பிரயோகம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆனால், இவர்கள் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
தங்களுக்கு வந்த ஒவ்வொரு தடைக்கல்லையும் சோர்ந்து போகாமல் படிக்கல்லாக மாற்றிக்காட்டியது எனக்கு ஒரு முன்மாதிரி மற்றும் மிக வியப்பு.
இதயம் இனித்தது கண்கள் பனித்தது
பிறகு சன் தொலைக்காட்சி தன் முழுப் பலத்தை உபயோகித்துக் கலைஞர் அரசுச் செய்திகளை எந்த ஒளிவு மறைவு இல்லாமல் காண்பித்தது.
இவை எல்லாவற்றையும் விட ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது.
தேர்தல் வேறு வந்ததால் வேறு வழி இல்லாமல் மேலும் பிரச்சனை வளர்க்க விரும்பாமல் கலைஞர் இதயம் இனித்தது கண்கள் பனித்தது என்று கூறி இரு குடும்பத்தையும் சேர்த்து வைத்தார்.
தற்போது தங்களை நிலை நிறுத்த மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் விளம்பரத்தில் நடுநிலையான விமர்சனம் என்று கூறுகிறார்கள்.
இவர்கள் படமே எப்போதும் முதல் இரண்டாம் இடங்களைப் பிடிக்கிறது அது மொக்கையாக இருந்தாலும்.
ஊடகம் கைக்குள்
செய்திகளில் கூடத் தங்கள் பட விளம்பரத்தை முக்கியச் செய்தியாகக் கூறுவது, மீடியா முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பது செய்திகளில் (தினகரன் குங்குமம் தமிழ் முரசு வானொலி) இவர்களே வியாபித்து இருக்கிறார்கள்.
இதனால் மக்கள் இவர்கள் சொல்வதே செய்திகள் என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். இது தவறான போக்கு.
ஒருவர் கையிலே அதி முக்கியமான மீடியா இருப்பது எவருக்கும் நல்லதல்ல.
சன் குழுமம் தற்போது தாங்கள் தான் எல்லாமும் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை அவர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி,
அடுத்து சகோதரர்கள் திரை உலகையும் சன்பிக்சர்ஸ் என்ற பெயரில் ஆக்கிரமித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களை மாறன் சகோதர்களிடமிருந்து ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது ஏனெனில் எந்திரனும் சன் படம் தான்
🙂
என்ன சொல்றது? ஒண்ணுமில்லாத படங்களைக்கூட தன் தயாரிப்பில் உருவானதால் அல்லது விநியோக உரிமை தனக்கு இருப்பதால் அதை ஆஹா ஓஹோனு தூக்கிவிடுவது சுத்தமான சில்லறைத்தனம்!
இவ்வளவு பெரிய ஒரு நெட்வொர்க், இப்படி கேவலமாக நடந்துகொள்வது (lack of professionalism) மன்னிக்கவே முடியாத குற்றம்!
change is the only constant thing. world has seen so many such people and this too will change.As for as the media consolidation, in US, it is not possible for someone to own TV as well as Print media. Absolute power corrupts absolutely and that is what we are seeing.
அவிங்க விமரிசனம் எப்படியோ. உங்க விமரிசனம் நடு நிலைமை. பாராட்டுகள் கிரி.
ஜெயா ஆட்சியில் இருந்தாலும் அப்போதும் இவர்கள் தான் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள்! இவர்கள் சீரியல் என்ற பெயரில் சீரழிவிற்கு தான் வழி காண்பிக்கிறார்கள்!
//செய்திகளில் கூட தங்கள் பட விளம்பரத்தை முக்கிய செய்தியாக கூறுவது//ithrrkku piraku sun news parpathai kuraiththuvittean
giri your opinion fully wrong because sun group only growth their own risk. kalainar tv only handled the new movie purchse by using polititcal power. sun bagged the film rights not only use power the spend lot of money and face risk. my suggesstion kindly know the truth and write the article .
//கோவி.கண்ணன் said…
கிரி,
அடுத்து சகோதரர்கள் திரை உலகையும் சன்பிக்சர்ஸ் என்ற பெயரில் ஆக்கிரமித்து வருகிறார்கள்//
இவங்க படம் வாங்குவதை குறிப்பிட்டேன், இதை குறிப்பிட மறந்து விட்டேன்..
//தமிழ்நாட்டு மக்களை மாறன் சகோதர்களிடமிருந்து ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது ஏனெனில் எந்திரனும் சன் படம் தான்//
இந்த ரணகளத்திலையும் ரஜினி நக்கல் செய்யும் கிளுகிளுப்பா 😉
=====================================================
// வருண் said…
இவ்வளவு பெரிய ஒரு நெட்வொர்க், இப்படி கேவலமாக நடந்துகொள்வது (lack of professionalism) மன்னிக்கவே முடியாத குற்றம்!//
இவ்வளோ பெரிய நெட்வொர்க் என்பதால் தான் இதை செய்கிறார்களோ! 🙂
=====================================================
//Ravi said…
change is the only constant thing. world has seen so many such people and this too will change.//
மறுக்கமுடியாத உண்மை இதையே என் பதிவிலும் கூறி இருக்கிறேன்
======================================================
// வானம்பாடிகள் said…
அவிங்க விமரிசனம் எப்படியோ. உங்க விமரிசனம் நடு நிலைமை. பாராட்டுகள் கிரி.//
நன்றி பாலா சார்..என்னுடைய கட்டுரைகள் அனைத்திலும் உங்கள் கருத்து என்னை மேலும் சரியாக எழுத முயற்சி செய்ய தூண்டுகிறது
====================================================
// கிறுக்கல் கிறுக்கன் said…
பூனைக்கு மணி கட்ட போறது யரோ?!//
காலம் (கோவி கண்ணனை கூறவில்லை) தான் 🙂
====================================================
// snkm said…
இவர்கள் சீரியல் என்ற பெயரில் சீரழிவிற்கு தான் வழி காண்பிக்கிறார்கள்!//
இது தவிர்க்க முடியாத ஒன்று என்று நினைக்கிறேன்
=====================================================
// STAR said…
ithrrkku piraku sun news parpathai kuraiththuvittean//
நிறுத்தி விட்டேன் என்று உங்களை சொல்லாமல் வைத்து இருப்பதே அவர்கள் வெற்றி தானே! 🙂
======================================================
// ஈ ரா said…
முதலில் மாலை மட்டும் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள் பின்னர் மதியம் தொடங்கியது.. அப்புறம்தான் முழு நேர சேவை //
சரி தான் ஈ ரா ஒவ்வொன்றாக சொல்லாமல் இப்படி கூறினேன்
//டி ஆர் பாலு வுக்கு இம்முறை கிடைக்காததால் ஒரு ரெக்கார்ட் ஜஸ்டு மிஸ்ஸு.//
😉
//ஆமாம் இது என்ன ஆச்சு?//
போயே போச்சு! 😉
//பொதுவாகவே, வீட்டில் கேபிள் டிவி இருக்கா என்று கேட்பதற்கு பதில் "சண் டிவி" இருக்கா என்று கேட்கும் அளவிற்கு பிராண்ட் பில்ட் செய்யப்பட்டு விட்டது… (நகலுக்கு xerox என்பது போல்)//
சரியா சொன்னீங்க! 🙂 இது எல்லாம் நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும்..
================================================
// bala said…
giri your opinion fully wrong//
வாங்க பாலா..நான் கூறியது தான் சரி என்று எங்கும் கூறவில்லை..என் மனதில் பட்டதை கூறி இருக்கிறேன்
//because sun group only growth their own risk//
அரசியல் பலம் எதுவுமில்லாமல் என்று சொல்கிறீர்களா! அப்படி என்றால் மட்டுமே நீங்கள் கூறுவது சரி. இதை உங்கள் மனசாட்சி படி கூறுங்கள்..இவர்கள் அரசியல் பலத்தை உபயோகிக்காமல் தான் இவ்வளவு தூரம் வளர்ந்தார்களா! கலைஞரின் வெற்றியில் இவர்கள் பங்கும் எப்படி உள்ளதோ! அது போல கலைஞர் அவர்கள் ஆதரவு இல்லாமல் இவர்களின் அசுர வளர்ச்சி இல்லை
அரசியல் பலம் இல்லாமல் இருந்தாலும் வெற்றி பெற்று இருப்பார்கள் அதில் சந்தேகமே இல்லை, இவர்கள் திறமையை பற்றி நான் என் பதிவிலேயே விரிவாக கூறி இருக்கிறேன். திறமை மற்றும் அரசியல் பலம் இரண்டும் சேர்ந்து தான் இந்த உயரத்தை எட்டி இருக்கிறார்கள்.
//kalainar tv only handled the new movie purchse by using polititcal power. sun bagged the film rights not only use power the spend lot of money and face risk.//
வழிமொழிகிறேன் பாலா. இதை நான் என் பதிவிலேயே கூறி இருக்கிறேனே! இவர்கள் எப்படி தடையை தாண்டி வந்து இருக்கிறார்கள் என்று.
//my suggesstion kindly know the truth and write the article .//
இருக்கலாம், ஆனால் நான் எழுதும் போது கூடுமானவரை சரியான தகவல்களையே கூறுகிறேன், எனக்கு உறுதியாக தெரியாதவற்றை எழுதுவதில்லை. சில சமயங்களில் தவறுகள் நேரலாம் ..நானும் மனிதன் தானே! தவறு என்று அறிந்தால் திருத்தி கொள்கிறேன் அடம் பிடிப்பதில்லை.
கிரி!நலமா!
இனி இடுகைக்கு.
Aarasiyal balathai thandi thadai karkalai padi karkalaga maatri kaatiyadhu kurithu aacharyame..
apparam,
95 la election nu solli irukeengha..adhu 96 nu ninaikuremm.Appo JJ TV dhan irundhadu…
//ராஜ நடராஜன் said…
கிரி!நலமா!
இனி இடுகைக்கு//
வாங்க நடராஜன் ரொம்ப நாளா உங்களை ஆளை காணோம்..இடுகையும் காணோம் 🙂
================================================
// கிருஷ்குமார் said…
Aarasiyal balathai thandi thadai karkalai padi karkalaga maatri kaatiyadhu kurithu aacharyame..//
🙂
//95 la election nu solli irukeengha..adhu 96 nu ninaikuremm.Appo JJ TV dhan irundhadu..//
நீங்க கூறியது சரிதான் கிருஷ்குமார், சுட்டியமைக்கு நன்றி திருத்தி விடுகிறேன்.
நான் சன் தொலைக்காட்சி பார்க்கிறதில்லையே!(காசு வேணுமாம்).
சினிமா விமர்சனங்கள்தான் படித்திருக்கிறேன்.தொல்லைக்காட்சி விமர்சனம் நடுநிலையா நல்லாவேயிருக்கு.கொஞ்சம் அக்கம் பக்கம் ஜெயா,விஜய்,ராஜ்,மக்கள்,வின் இன்னும் பலர் நடித்த என்று ஒரு வலம் வர்றது:)
ப்ளஸ்களை சிலாகித்து, மைனஸ்களை இடித்து, முத்தாய்ப்பாய் எப்போதும் நான் சிலாகிக்கும் உங்கள் கடைசிப் பத்தியில் வைத்தும் இருக்கிறீர்கள் எச்சரிக்கைக் குண்டு:)!
பூனைக்கு மணி கட்ட போறது யரோ?!
பூனைக்கு மணி கட்ட போறது யரோ?!Very soon SunTV will get மணி from us in London. They are doing the same sort of things in London. They recently moved to MPEG4 and changed the satellite direction to let the people to watch only Sun TV (Here we also get Kalaignar via Iyangaran), That is ok as long as it's their business tactic but the thing is they are trying to get money from subscribers everytime they change the technology. That is very bad, So here some people are planning to file a case against Sun TV. So wait and see that these Cats will have bell vey soon here in London.
கிரி நல்ல பதிவுபாத்து கிரி சிங்கைக்கு ஆட்டோ அனுப்ப போரங்க.:-))
நடுநிலையான விமர்சனம் கிரி. இவர்கள் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் போல் நடந்துகொள்வதுதான் ஜீரணிக்கமுடியவில்லை. கண்கள் பனிக்க இதயம் இனிக்க இணைந்துகொண்டாலும் இன்னும் கலைஞருக்கும் சன்னுக்கும் பனிப்போர் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. கலைஞர் தொலைகாட்சியின் 2வது ஆண்டு கொண்டாட்டங்களுக்காக கடந்த 15ந்திகதி 7.30 மணிக்கு கலைஞரில் திரைப்படம் ஒளிபரப்பாக கேடிவியும் உடனே 7.30மணிக்கு தாங்கள் வழமையாக 8.00 மணிக்கு ஒளிபரப்பும் திரைப்படத்தை ஒளிபரப்பியது. அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் இருவரும் 7.30 மணிக்கு திரைப்படம் ஒளிபரப்புகின்றார்கள். சன் மியூசிக்கும் இசையருவியும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லையென்பதுபோல் ஒருவர் விஜய் பாடல் ஒளிபரப்பினால் மற்றவரும் விஜய் பாடல் தான் ஒளிபரப்புவார்கள். இவர்கள் ஓவர் விளம்பரம் உடம்புக்கு ஆகது என்பதை விரைவில் உணர்வார்கள்.
சன்னில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள், பாட்டுக்கு பாட்டு போன்ற நிகழ்ச்சிகள், அருமையான தொகுப்பாளர்கள் (அப்துல் ஹமிட், ரமணன்)போன்றவை இப்போது இல்லை. மக்களை தொடர்ந்து தக்கவைக்க (அராஜகமாக இருந்தாலும்) சன் செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கின்றன. அவுஸ்திரேலியரான ரொபர்ட் முர்டோச்சின் tines corp ன் அராஜகமும் இதே போல தான் 🙂
முதலில் மாலை மட்டும் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள் பின்னர் மதியம் தொடங்கியது.. அப்புறம்தான் முழு நேர சேவை (???)
//அரசியல் பலம் மட்டுமே ஒருத்தரை உயர்த்தி விட்டு விடாது என்பதற்கும் இவர்களே உதாரணம், காரணம் ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு என்ன முயற்சித்தும் சன் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை, நெருக்கடி கொடுத்தாலும் அவர்கள் அதை வேறு மாதிரி சமாளித்து தடையை தாண்டி கொண்டே இருந்தார்கள். பலம் இருந்தும் ஜெயா தொலைக்காட்சியால் சன் தொலைக்காட்சியை மிஞ்ச முடியவில்லை.//
கடந்த பதினான்கு வருடங்களாக (வாஜ்பாயின் அதிமுக கூட்டணி ஆட்சி நடந்த சிறு காலகட்டம் தவிர) மத்தியில் அங்கம் வகித்தது திமுக.. எனவே யாராலும் எதுவும் செய்திருக்க முடியாது…ராஜிவுக்கு பிந்திய காங்கிரஸ் மற்றும் பாஜக கூட தொடர்ந்து செய்ய முடியாத சாதனை இது. ( டி ஆர் பாலு வுக்கு இம்முறை கிடைக்காததால் ஒரு ரெக்கார்ட் ஜஸ்டு மிஸ்ஸு..
//தொழில் துறையில் பல சாதனைகளை புரிந்த டாட்டா அவர்களையே மிரட்டியதாகவும் தயாநிதி மாறன் மீது குற்ற சாட்டு உண்டு.//
ஆமாம் இது என்ன ஆச்சு?
பொதுவாகவே, வீட்டில் கேபிள் டிவி இருக்கா என்று கேட்பதற்கு பதில் "சண் டிவி" இருக்கா என்று கேட்கும் அளவிற்கு பிராண்ட் பில்ட் செய்யப்பட்டு விட்டது… (நகலுக்கு xerox என்பது போல்)
தூர்தர்ஷன் மட்டும் தமிழ் நாடு முழுக்க எடுக்கிறமாதிரி தரை வழி ஒலிபரப்பைக் கொடுக்கட்டும். அப்புறம் பாருங்க சன்னாவது , ஸ்டாராவது எல்லாமே காலி.சன்னைச் சொல்லிக்குத்தமில்ல. நம்ம மத்திய ஆட்சியாளர்ங்க என்ன பண்றாங்க.கொடைக்கானல்,ஏற்காடிலிருந்து பலமாவட்டங்களுக்கு ஒலி,ஒளிபரப்பான தூர்தர்ஷன் டவர்ல இன்னொரு சேனலான டிடி மெட்ரோனு சொல்லி 7 வருஷம் முன்னாடி ஓப்பன் பண்ணினாங்க. கூடவே டிடி நியூஸ் வேற , அதுவும் முழுக்க முழுக்க இந்தி மட்டுமே.அப்புறம் ஈரோட்டில பத்து வருஷம் முன்னாடி டிடி பொதிகை அப்படின்னு சொல்லி 24 மணீ நேரமும் தமிழ்னு சொல்லி ஓப்பன் பண்ணினாங்க.இது எவ்வளவு தூரம் எடுத்தது. சும்மா சொல்லக்கூடாது ஈரோட்டுக்குள்ளேயே சரியா எடுக்கல. ஈரோட்டு மக்களுக்கே இப்படி ஒரு தொலைக்காட்சி நம்ம ஊரில் இருக்கிறது தெரியாது. இதே நெலமைதான் உடுமலை, கோவை, திருச்சி மக்களுக்கு.நல்ல வேளை எப்படியோ கோடைப்பண்பலை 100.5 தமிழ் ஒலிபரப்பா ஆரம்பிச்சாங்க. ஆனா என்ன புண்ணியம் அதே நம்பர்ல மைசூரில ஒரு பவர்புல் ஸ்டேஷன் ,அதனால கர்னாடகத்திலும் கவர் ஆக வேண்டிய ஒலிபரப்புசத்தியமங்கலம் தாண்டவே யோசிக்குது.கோவை ரெயின்போ பண்பலை ரேடியோ 103.0 இது அப்படித்தான் கொஞ்ச நேரம் தமிழ் , மீதி எல்லா நேரமும் இந்தி அப்படினு ஆரம்பிச்சாங்க. நல்ல வேளை சூரியன் எப். எம் ஆரம்பிச்சாங்க , அதுனால இந்தி இப்போ ஒருமணீ நேரம் மட்டுமே வருது. இல்லைனா திருச்சி மாவட்ட மக்கள் மாதிரி (எத்தன வருசமுன்னு தெரியல) விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு அப்படிங்கறத மட்டும் தமிழ்ல கேட்டுட்டு இருக்கோனும்.
// ராஜ நடராஜன் said…
கொஞ்சம் அக்கம் பக்கம் ஜெயா,விஜய்,ராஜ்,மக்கள்,வின் இன்னும் பலர் நடித்த என்று ஒரு வலம் வர்றது:)//
வந்துடுவோம் 🙂
========================================================
// ராமலக்ஷ்மி said…
ப்ளஸ்களை சிலாகித்து, மைனஸ்களை இடித்து, முத்தாய்ப்பாய் எப்போதும் நான் சிலாகிக்கும் உங்கள் கடைசிப் பத்தியில் வைத்தும் இருக்கிறீர்கள் எச்சரிக்கைக் குண்டு:)!//
நன்றி ராமலக்ஷ்மி 🙂
=========================================================
// Kathir said…
பூனைக்கு மணி கட்ட போறது யரோ?!
Very soon SunTV will get மணி from us in London. They are doing the same sort of things in London. //
லண்டன் ல இப்படி ஒண்ணு போயிட்டு இருக்கா!
// Kathir said…
Guys some serious thing is going on in UK, have a look.
Confused about Sun Network in Europe//
கதிர் நான் கூட பயந்துட்டேன் ..என்னடா நாம போட்ட இடுகை லண்டன் அளவுல பிரச்சனை ஆகிடுச்சா என்று! 😉 (jus kidding :D)
=======================================================
// ♠புதுவை சிவா♠ said…
பாத்து கிரி சிங்கைக்கு ஆட்டோ அனுப்ப போரங்க.//
நீங்க வேற பீதிய கிளப்பாதீங்க 🙂
========================================================
// வந்தியத்தேவன் said…
இவர்கள் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் போல் நடந்துகொள்வதுதான் ஜீரணிக்கமுடியவில்லை. //
கசப்பான உண்மை தான்
//இன்னும் கலைஞருக்கும் சன்னுக்கும் பனிப்போர் நடந்துகொண்டுதான் இருக்கின்றது//
உண்மை தான்
//இவர்கள் ஓவர் விளம்பரம் உடம்புக்கு ஆகது என்பதை விரைவில் உணர்வார்கள்.//
நானும் அப்படி தான் நினைக்கிறேன்.. ஆனால் அந்த சமயத்தில் வேறு டெக்னிக்கை பயன்படுத்தி எஸ்கேப் ஆகி விடுவார்கள் 🙂
======================================================
// ’டொன்’ லீ said…
சன்னில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள், பாட்டுக்கு பாட்டு போன்ற நிகழ்ச்சிகள், அருமையான தொகுப்பாளர்கள் (அப்துல் ஹமிட், ரமணன்)போன்றவை இப்போது இல்லை//
மிகச்சரி..இதை எல்லாம் குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன்
//அவுஸ்திரேலியரான ரொபர்ட் முர்டோச்சின் tines corp ன் அராஜகமும் இதே போல தான் :-)//
அப்படியா! எனக்கு இது ஒன்றும் தெரியாது 🙂
======================================================
// வாய்ப்பாடி குமார் said…
தூர்தர்ஷன் மட்டும் தமிழ் நாடு முழுக்க எடுக்கிறமாதிரி தரை வழி ஒலிபரப்பைக் கொடுக்கட்டும். அப்புறம் பாருங்க சன்னாவது , ஸ்டாராவது எல்லாமே காலி//
இன்னுமா நம்புறீங்க! எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை..இவர்கள் இந்தளவாவது உயர்வதற்கு காரணமே சன் தான்.. போட்டி வந்ததால் தான் கொஞ்சமாவது முன்னேற முயற்சி செய்தார்கள்.
//சும்மா சொல்லக்கூடாது ஈரோட்டுக்குள்ளேயே சரியா எடுக்கல. //
:-))))
//என்ன புண்ணியம் அதே நம்பர்ல மைசூரில ஒரு பவர்புல் ஸ்டேஷன் ,அதனால கர்னாடகத்திலும் கவர் ஆக வேண்டிய ஒலிபரப்பு
சத்தியமங்கலம் தாண்டவே யோசிக்குது.//
:-))))
//இல்லைனா திருச்சி மாவட்ட மக்கள் மாதிரி (எத்தன வருசமுன்னு தெரியல) விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு அப்படிங்கறத மட்டும் தமிழ்ல கேட்டுட்டு இருக்கோனும்//
அரசு துறை என்பதால் இதில் உள்ள அதிகாரிகளுக்கு தங்கள் சம்பந்தப்பட்ட துறையை உயர்த்த வேண்டும் என்ற எந்த நெருக்கடியும் இல்லை..வந்தமா வேலை பார்த்தமா என்று இருக்கிறார்கள். முன்னுக்கு கொண்டு வரணும் புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணம் ரொம்ப குறைவு.
தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களை கவரும்படி நிகழ்ச்சிகளை செய்ய தவறினால் இப்படி அனைவரும் கிண்டலடிக்கும் நிலை தான் தொடரும். இவர்களிடம் குறிப்பிடத்தக்க நல்ல விஷயம் சில பயனுள்ள நிகழ்ச்சிகளையும் தருகிறார்கள் என்பதே தனியார் டிவியை ஒப்பிடும் போது. தனியார் டிவி யில் பெரும்பாலும் திரை செய்திகளே ஆக்கிரமித்து உள்ளன.
உடன்பிறப்பு said…தோழர் எந்திரன் ரிலீஸ் ஆகும் வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமேசன் டிவி இப்படியே போனால் " எந்திரன் வரும் அனால் வராது ….. " மாதிரி தான் போகும்.
கிரி அண்ணே!மிகவும் தெளிவான மற்றும் அருமையான கட்டுரை. எழுத்து வடிவமும் மற்றும் அதற்கேற்ற பட விளக்கமும் மிக அருமை……!மனமார்ந்த பாராட்டுகள்……..!
இப்ப எல்லோரும் விஜய் தொலைகாட்சிக்கு மாறிட்டாங்க. நிகழ்ச்சிகள் மறு ஓளிபரப்பு செய்தலும் பாக்க நல்லாதான் இருக்கு.
மிகச்சரி
தயாநிதி மாறனும் அண்ணனுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல, தொழில் நுட்ப துறை மட்டுமல்ல எந்த துறை கொடுத்தாலும் அதில் தனித்து தெரிவார் என்பதற்கு தற்போது ஜவுளி துறையையே எடுத்துக்காட்டாக கூறலாம். இப்படி ஒரு துறை இருப்பதையே பலர் தற்போது தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.???? ??????????? ?????? ???????? ??இந்த கருத்துக்கு உங்கள் விளக்கம் தேவை. எந்த வகையில் இந்த துறைக்கு அவர் உதவிக்கொண்டு இருக்கிறார் என்று. காரணம் சமீப ஐரோப்பிய யூனியன் வௌியிட்டுள்ள அர்த்தம் இல்லாத ஒரு அறிக்கை அல்லது உத்தரவு அல்லது இந்திய ஜவுளித்துறை அழிவுத்துறைக்கான அச்சாரம். உங்கள் பங்களிப்பு பார்த்து மின் அஞ்சலில் பதிந்துள்ளேன். காத்து இருக்கிறேன்.
அடேயப்பா
அலசி, துவைச்சு, காயப்போட்டுடிங்களே!
தோழர் எந்திரன் ரிலீஸ் ஆகும் வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே
ஆக்டோபஸ் - மிகச் சரியான தலைப்பு.மிக ஆபத்தானவர்கள்.ஆனால் தயாநிதிமாறன் ஜவுளித்துறையில் இதுவரை செய்தவற்றை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
//உடன்பிறப்பு said…
தோழர் எந்திரன் ரிலீஸ் ஆகும் வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே//
வாங்க உடன்பிறப்பு…. நான் என்னங்க இதே வேலையாகவே இருக்க போறேன்..எழுதுற டாப்பிக்ல இது ஒண்ணு அவ்வளோ தான் 🙂
==============================================
//mix said…
விவாதத்திற்கிடையே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்//
🙂
உங்க தளம் வேகம் குறைவாக உள்ளது.
=================================================
//Kathir said…
சன் டிவி இப்படியே போனால் " எந்திரன் வரும் அனால் வராது ….. " மாதிரி தான் போகும்.//
கதிர் சன் டிவி மேல கொலை வெறில இருக்கீங்க போல 😉 அமைதி அமைதி
==================================================
பிரவின் உங்க பாராட்டிற்கு நன்றி
==================================================
//Thirumathi Jaya Seelan said…
இப்ப எல்லோரும் விஜய் தொலைகாட்சிக்கு மாறிட்டாங்க. நிகழ்ச்சிகள் மறு ஓளிபரப்பு செய்தலும் பாக்க நல்லாதான் இருக்கு.//
பல நேரங்களில் ஒரே நிகழ்ச்சியை அடிக்கடி பார்ப்பதை போன்ற உணர்வு வருவதையும் தவிர்க்க முடியவில்லை..விஜய் டிவி க்கு மாறி விட்டதாக கூறினாலும் சதவீதம் மிக குறைவு தான் சன்னை ஒப்பிடும் போது
=====================================================
குழலி கருத்திற்கு நன்றி
=====================================================
//ஜோதிஜி. தேவியர் இல்லம். said…
இந்த கருத்துக்கு உங்கள் விளக்கம் தேவை. எந்த வகையில் இந்த துறைக்கு அவர் உதவிக்கொண்டு இருக்கிறார் என்று.//
முதலில் நான் சன் டிவி க்கோ கலைஞர் அரசிற்கோ எதிர்ப்பாளனும் இல்லை ஆதரவாளனும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர் தயாநிதி மாறனை MP ஆக்கிய போது எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது, காரணம் அவரை விட மூத்தவர்கள் இருக்கும் போது இவருக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தார் என்று (இதில் அவர் குடும்ப உறுப்பினர் அதனால் தான் என்ற சர்ச்சைக்கு வரவில்லை)
ஆனால் நான் மட்டுமல்லாமல் பலருக்கு அவர் தொலைதொடர்பில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்தார் எனபதில் மாற்று கருத்தில்லை, அதில் அவர் அதிகார துஸ்பிரயோகம் செய்தார் என்பது எல்லாம் அடுத்த பிரச்சனை.
ஆனால் தொலைபேசி இணையம் கம்ப்யூட்டர் என்று அனைத்திலும் பல புதிய திட்டங்களை கொண்டு வந்தார், புதிய தொழில்நுட்பங்கள் வர காரணமாக இருந்தார். இவ்வாறு தன்னை பைபாஸ் செய்து கொண்டு வந்தாலும் அதற்க்கு தகுதியானவர் என்பதை நிரூபித்தார்.
தற்போது அவருக்கு ஜவுளி துறை கொடுத்தவுடன் அவர் ஒன்றும் வீழ்ச்சி அடைந்த இந்த துறையை ஏற்றத்திற்கு கொண்டு வந்து விட்டார் என்று கூறவில்லை, இந்த துறை சம்பந்தமாக பலரை சந்தித்துள்ளார், மூடி உள்ள ஆலைகளை திறக்க முயற்சி எடுப்பதாக நேரடியாக சென்று பேசி உள்ளார், இந்த துறை சம்பந்தமாக இணையதளம் திறக்க போவதாக செய்திகளில் வந்தது.
அதாவது மற்றவர்களை போல இல்லாமல் ஏக்டிவாக உள்ளார் என்பது நான் கூற வந்தது. அவர் இந்த துறையில் பெரிய அளவில் சாதித்து விட்டதாக அல்ல. இதற்க்கு முன்பு இருந்தவர்களை விட இவர் தனித்து தெரிகிறார் என்பது என் கருத்து.
//சமீப ஐரோப்பிய யூனியன் வௌியிட்டுள்ள அர்த்தம் இல்லாத ஒரு அறிக்கை அல்லது உத்தரவு அல்லது இந்திய ஜவுளித்துறை அழிவுத்துறைக்கான அச்சாரம்//
இது பற்றி எனக்கு தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை.
நான் சொல்ல வந்தது என்ன என்பதை புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
//காத்து இருக்கிறேன்//
நேரமில்லாததால் உடனே பதிலளிக்க முடியவில்லை மன்னிக்கவும்
==================================================
அருண் உங்கள் பாராட்டிற்கு நன்றி
===================================================
ராஜா உங்கள் சந்தேகத்திற்கு பதில் ஜோதிஜி அவர்களுக்கு கூறியதே.
ம்ம்ம்.. நல்ல நடுநிலையான பகிர்வு…
நம்ம பக்கமும் வாங்க …..கதவுகள் பூட்டாமல் திறந்தே இருக்கிறது…!!!
உண்மையில் இது ஒரு நல்ல பதிவு கிரி.
இன்று தமிழக மக்கள் நிச்சியம் புரிந்து கொள்ள வேண்டிய விசையம். நீங்கள் மேலும் ஒரு விசையத்தை விட்டு விட்டீர்கள், அது ரியல் எஸ்டேட்.
வெறும் இடத்தை சதுரடி ஒரு ரூபாய்க்கு வங்கி விட்டு, அரசாங்க மேம்பாலம் அல்லது நன்கு வழி புரசாலை வரவைத்து சதுரடி ஆயிரம் ருபாய் வரை விலை ஏற்றுவது, மதுரை திருமங்கலம் ரோடு போல.
சூப்பர் கட்டுரை கிரி.. ஆனா புகறிங்களா திட்றிங்களான்னு தான் தெரியலை.. :))
அருமையான கட்டுரை கிரி அண்ணே.
பழைய ஞாபகங்களில் ஆரம்பித்து, வளர்ச்சியில் சென்று, தில்லாலங்கடி வேலைகள் வரை நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
—
சிங்கக்குட்டி சொன்னது புதுசா இருக்கே… இப்பத்தான் கேள்விப்படுகிறேன்.
//குறை ஒன்றும் இல்லை !!! said…
ம்ம்ம்.. நல்ல நடுநிலையான பகிர்வு.//
நன்றி ராஜ்
================================================
//பிரபா said…
நம்ம பக்கமும் வாங்க …..
கதவுகள் பூட்டாமல் திறந்தே இருக்கிறது…!!//
வருகைக்கு நன்றி பிரபா ..உங்கள் பதிவிற்கு வருகிறேன்
=================================================
// சிங்கக்குட்டி said…
வெறும் இடத்தை சதுரடி ஒரு ரூபாய்க்கு வங்கி விட்டு, அரசாங்க மேம்பாலம் அல்லது நன்கு வழி புரசாலை வரவைத்து சதுரடி ஆயிரம் ருபாய் வரை விலை ஏற்றுவது, மதுரை திருமங்கலம் ரோடு போல.//
அப்படியா! இது பற்றி எனக்கு தெரியவில்லை சிங்கக்குட்டி (உங்க பேர் என்னங்க)
இது பற்றி நான் எங்குமே படிக்கவில்லை…நீங்க கூறுவது உண்மை என்றால் ஏதாவது பத்திரிகையில் வந்ததா! எனென்றால் இதை போன்ற பதிவை பலர் படிக்கிறார்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புண்டு!
எனென்றால் புற வழி சாலை எல்லாம் நினைத்த இடத்தில் வரவைக்க முடியாது.
====================================================
//எவனோ ஒருவன் said…
சிங்கக்குட்டி சொன்னது புதுசா இருக்கே… இப்பத்தான் கேள்விப்படுகிறேன்//
வாங்க பெஸ்கி நானும் தான்
====================================================
// SanjaiGandhi said…
புகறிங்களா திட்றிங்களான்னு தான் தெரியலை.. :))//
:-))) தலைவர் சொல்ற மாதிரி உண்மைய சொன்னேன் 😉
சுற்றலா எல்லாம் சென்று நல்லா என்ஜாய் செய்து இருக்கீங்க..கலக்குங்க 🙂
|தற்போது ஜவுளி துறையையே எடுத்துக்காட்டாக கூறலாம். இப்படி ஒரு துறை இருப்பதையே பலர் தற்போது தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.|
அப்படி என்ன ஜவுளித்துறையில் அவர் சாதித்திருக்கிறார் என்று கூற முடியுமா?
ஒன்றும் இல்லை..
அவரைத் தொடர்பு கொள்ள ஒரு மின்மடல் முகவரி கூட அவரது அலுவல் தளத்தில் இல்லை.
சன் குழுமமும் மாறன் குடும்பமும் செய்வது அப்பட்டமான அரசியல் பின்புலத்துடன் கூடிய வியாபார ரௌடித்தனம்.
உண்மையில் திறமைசாலிகள் என்றால் விஜய் தொலைக்காட்சியினர் மட்டுமே..
இன்றைய பல சன் நிகழ்ச்சிகள் விஜயைப் பார்த்து காப்பி அடித்தவையே…
//வாசகன் on 1:44 PM, December 10, 2009 said… இன்றைய பல சன் நிகழ்ச்சிகள் விஜயைப் பார்த்து காப்பி அடித்தவையே…// சரியா சொன்னீங்க வாசகன். ஆனா அதுவும் ஒரு திறமைதானே? காப்பி அடிச்ச நிகழ்ச்சிகள் original-ஐ விட அதிகமா பிரபலமடைந்ததே!
சன் குழுமம் தற்போது தாங்கள் தான் எல்லாமும் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை அவர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
CORRECT….
R.V.SARAVANAN
romba kevalamaana pathivu….sorry.