உணர்ச்சிக் குவியலாக்கப்படும் NEET தேர்வு!

12
உணர்ச்சிக் குவியலாக்கப்படும் NEET

டகங்களும் அரசியல்வாதிகளும் பிரபலங்களும் NEET தேர்வை உணர்ச்சிக் குவியலாக்கி மாணவர்களையும், பெற்றோர்களையும் பதட்டத்துடனே வைத்துள்ளார்கள். Image Credit

இக்கட்டுரையை முன் முடிவுடன் படிக்காமல், நடைமுறை எதார்த்தத்துடன் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உணர்ச்சிக் குவியலாக்கப்படும் NEET தேர்வு!

NEET வேண்டுமா வேண்டாமா என்ற கட்டத்தைத் தமிழ்நாடு கடந்து விட்டது.

மற்ற மாநிலங்கள் எப்படியோ அதே போலத் தமிழ்நாடும் NEET தேர்வு எழுதியாக வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது.

எனவே, NEET தேர்வு தேவையா தேவையில்லையா என்பதைப் பற்றி இனி விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலொழிய இதில் மாற்றம் வர 100% வாய்ப்பில்லை. அப்படி நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.

தமிழக அரசு தனது பாடத்திட்டத்தை மாற்றியமைத்து CBSE பாடத்திட்டத்துக்கு இணையாகக் கொண்டு வருவது தான் ஒரே வழி.

எனவே, இது குறித்து விவாதிப்பதை தவிர்த்து மற்ற விஷயங்களுக்குள் செல்வோம்.

தேர்வு மைய குளறுபடிகள்

கடந்த வருட சர்ச்சைகளை மனதில் வைத்து எச்சரிக்கையாக இருந்து இருக்க வேண்டிய CBSE நிர்வாகம், திட்டமிடுதலில் சொதப்பி விட்டது.

வேறு வகையில் மாற்றி மாற்றிக் கூறி ஒப்பேற்ற முயன்றாலும் தவறு தான்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழகத்தில் தேர்வு மையத்தின் எண்ணிக்கையை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிப்பது தான். இது மட்டுமே பிரச்னையைத் தீர்க்க உதவும்.

CBSE Director “Sanyam Bharadwaj “தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தக் கட்டமைப்பு இல்லை” என்று கூறி இருக்கிறார்.

இது யாருடைய தவறு? மாணவர்களுடையதா?!

மாநில அரசும், CBSE நிர்வாகமும் பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து இருக்க வேண்டும். இவர்கள் செய்த சொதப்பலில் மாணவர்களைப் பலியாக்குவது தவறு.

வேறு மாநிலம் சென்றவர்கள் தோராயமாக, இரு நாட்களுக்கு விடுதி ₹ 4000, சாப்பாடு செலவு, போக்குவரத்துச் செலவு என்று குறைந்தது ₹ 7000 ஆகி இருக்கும்.

இதைக் கொடுப்பது அனைவராலும் சாத்தியமில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சிலருக்கு “Jus 7K” என்ற பணம் சிலருக்கு “₹ 7000”.

கேவலமான ஊடகங்களும் அரசியல்வாதிகளும்

தமிழகத்தில் எதற்கு என்றாலும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது சமீபமாக அதிகரித்து வருகிறது. ஊடகங்கள் தங்கள் TRP க்காக அதை மேலும் பெரிதாக்கி விடுகின்றன.

அரசியல்வாதிகளும் பிரபலங்களும் தங்களுக்கு அதிக அக்கறை இருப்பது போல ஆதரவாகப் பேசி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறார்கள். மாணவி அனிதா இறந்த போது நடந்த பரபரப்புகள் ஒரு மாதத்துக்குப் பிறகு என்ன ஆயின?!

தமிழக மாணவி உருவாக்கி விண்ணில் பறக்கப்போகும் சிறு வகை செயற்கைக்கோளின் பெயர் என்ன தெரியுமா? “அனிதா“.

இப்பெண்ணுக்கு இருக்கும் அனிதா நினைவு ஊடகங்களுக்கேன் இல்லை? ஏன் என்றால் தற்போது அனிதாவால் லாபம் இல்லை.

ஊடகங்களுக்குத் தேவை பரபரப்பு! மக்களுக்கு நல்லது கூற வேண்டும் என்பதல்ல.

இவர்கள் கிளப்பும் பரபரப்பைக் கண்டு சாதாரணமான மன நிலையில் உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் கூடப் பீதியடைந்து விடுகிறார்கள்.

இல்லாத ஒரு பதட்டத்தை ஊடகங்கள் இருப்பது போலத் தோற்றுவித்து விடுகின்றன.

இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சல் அடைகின்றனர்.

இருவர் மரணம்

இருவர் இறந்ததற்குக் காரணம் மாரடைப்பு. நிச்சயம் மன அழுத்தம், பதட்டம் காரணமாகவே இவர்கள் இருவரும் இறந்து இருப்பார்கள்.

இதற்கு  ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பும் மிக முக்கியக் காரணமாக இருக்கும்

தனது பையன் / பொண்ணு நல்லபடியாகத் தேர்வு எழுத வேண்டும் என்று எந்தப் பெற்றோருக்கும் பயம் கலந்த விருப்பம் இருக்கும்.

மருத்துவப் படிப்பை வாழ் நாள் லட்சியமாக மாணவரும் பெற்றோரும் வைத்து இருப்பார்கள். ஏதாவது தவறாக நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற மன அழுத்தம் தவிர்க்க முடியாதது.

எனவே, ஏற்கனவே இருக்கும் மன அழுத்தம், பதட்டம், நல்லபடியாகத் தேர்வு எழுத வேண்டும் என்று இன்னும் அதிகமாகி விடுகிறது, அதை ஊடகங்கள் ஊதி பெரிது படுத்தி விடுகின்றன.

பல வருட கனவு சிறு தவறால் குலைந்து விட்டால் என்ன ஆவது?! என்று நினைப்பது இயல்பு.

அனைத்து பெற்றோர்களும் அனைத்தையும் எளிதாக எடுத்துக்கொள்வார்கள், Cool ஆக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஊடகங்கள் பரபரப்பை / சர்ச்சையைக் கூட்டி பெற்றோர்கள் மாணவர்களின் நிம்மதியை குலைத்து விடுகிறார்கள். இது மிக மிக மோசமான செயல்.

உடைக் கட்டுப்பாடு

உடைக் கட்டுப்பாட்டில் CBSE செய்வது அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. கடந்த முறையே இது குறித்து எழுதி இருந்தேன். இருப்பினும் விதிமுறை என்றால் மதித்துத் தான் ஆக வேண்டும்.

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இனி இக்கட்டுப்பாடுகள் தான் நிதர்சனம் என்பது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் கடந்த வருட அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த முறை மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையாக இருந்து இருக்க வேண்டும்.

கடந்த வருடம் அளவுக்கு மோசமில்லை என்றாலும் இந்த முறையும் சில மாணவ, மாணவிகள் கொலுசு, தோடு, மூக்குத்தி, மோதிரம் போன்றவற்றை அணிந்து வந்து தேர்வு நேரத்தில் கழட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

CBSE குறுந்தகவல் (மூன்று முறை) அனுப்பி எச்சரிக்கை செய்தும், தேர்வு மையத்தில் வந்து புலம்புவது எந்த விதத்தில் நியாயம்?

அப்படியே இருந்தாலும் அரை நாள் இது போல ஒரு கட்டுப்பாடுடன் இருப்பதில் அப்படி என்ன குடிமுழுகி விடப்போகிறது?

அணிகலன்

அணிகலன்களை அணியக் கூடாது என்று கூற வேண்டிய  பெற்றோர்களே தேவையற்ற பதட்டத்தை மன அழுத்தத்தைத் தேர்வுக்கு முன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

பின் “இதையெல்லாம் கழட்ட சொல்கிறார்கள்” எனப் புகார் கூறுவது நியாமில்லாதது.

இவர்கள் கூறுவதை ஊடகங்களும் பெரிதாக்கி “காதுல கழுத்துல ஒண்ணுமில்லாம போக வைத்து இப்படிப் பண்ணிட்டாங்களே!” என்று ஒப்பாரி வைத்துப் பரபரப்பாக்குகிறார்கள்.

இதெல்லாம் தேவையற்ற சர்ச்சை. விதிமுறைகளில் தெளிவாகக் கூறி இருந்தும் இது போல வருவது நிச்சயம் தவறே! கடந்த முறை தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இது போன்ற கட்டுப்பாடுகள் சரியா தவறா என்று விவாதிக்கும் இடம் தேர்வு மையமல்ல.

தேர்வு மையம் உள்ளே பதட்டமின்றிச் சென்றால் தான் தெளிவான மன நிலையில், சரியாகத் தேர்வு எழுத முடியும். முடிந்தவரை நம் பக்கமுள்ள தவறுகளைச் சரி செய்ய முயல வேண்டும்.

விழிப்புணர்வு

நகர்ப்புற மாணவர்கள் பெற்றோர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஓரளவு இருக்கிறது ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு இல்லை.

எனவே, அவர்களைக் குறை கூற முடியாது.

இதற்கு மாநில அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். காரணம், 12 ம் வகுப்புத் தேர்வு எழுதி பள்ளியிலிருந்து வெளியே வந்த பிறகு பள்ளிக்கும் NEET தேர்வுக்கும் சம்பந்தமில்லை.

எனவே, பள்ளியிலும் இது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொடுக்க முடியாது.

பயிற்சி மையத்துக்குச் செல்ல முடிந்தவர்களுக்கு, இது குறித்து விரிவான விளக்கம் கொடுப்பார்கள்.

பயிற்சி மையம் செல்ல இயலாதவர்களுக்கு இது குறித்த முழுமையான புரிதல் இருக்க வாய்ப்பில்லை. இதற்கு ஒரே வழி மாநில அரசு இது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பெயருக்குப் பயிற்சி மையத்தை அரசு நடத்துகிறது என்று கணக்கு காட்ட மட்டும் கூறுவது நியாயமல்ல.

ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்ட செலவழிக்கும் நேரத்தை மாணவர்களுக்கு உடைக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை கொடுப்பதில் காட்டலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முடிவு, தேர்வுக்கு இரு நாட்களுக்கு முன்பு வந்தது. இது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றம் அறியாதா?

தீர்ப்பு எப்படியோ! வழக்கைக் குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு முன்னாடியேயாவது முடித்து இருக்க வேண்டும்.

இது குறைந்த பட்சம் கடைசி நேர பதட்டத்தை குழப்பத்தைத் தவிர்த்து இருக்கும். இவ்வளவு தாமதமாக வழக்கு வந்ததற்கு கண்டித்து இருக்க வேண்டமா?

கூடுதல் மையத்தை ஏற்படுத்த கால அவகாசமில்லை” என்று CBSE கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாணவர்கள் இரு நாட்களில் திட்டமிட்டு வேறு மாநிலத்துக்குச் செல்வதும் சிரமம் என்பதை உணரவில்லையா?! என்னமோ போங்க!

மன அழுத்தம்

ஒவ்வொரு மாணவருக்கும் மருத்துவப் படிப்பு என்பது எவ்வளவு பெரிய கனவு என்பதை எவரும் உணர முடியும்.

எனவே, நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றால், முதலில் பதட்டப்படுவதையும் மன அழுத்தம் கொள்வதையும் தவிர்க்கப் பழக வேண்டும்.

பெற்றோரும் பிள்ளைகள் மீது தங்கள் ஆசை கனவு என்று மேலும் மேலும் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களின் கனவு, பிள்ளையின் கனவு நிறைவேற வேண்டும் என்றால், அழுத்தமில்லாத கட்டுப்பாடு அவசியம்.

நீ மருத்துவர் ஆனால் தான் எங்களுக்கு வாழ்க்கை / பெருமை” என்பது போன்ற நெருக்கடிகள் பிள்ளைகளுக்குப் படிப்பின் மீது வெறுப்பைக் கொண்டு வரலாம்.

இதுவே சில மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

பெற்றோர் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா? என்ற மன அழுத்தம் படிக்கின்ற வயதில் மிகப்பெரிய சுமை.  

தங்கள் எதிர்பார்ப்பைப் பிள்ளைகளிடம் திணிக்கும் போது பிள்ளைகள் மன ரீதியாகக் களைப்படைந்து விடுகிறார்கள்.

மருத்துவர் ஆவது என்பது மிகப்பெரிய கனவு, எவரும் மறுக்க முடியாது ஆனால், அதை விட முக்கியம் பிள்ளை உயிரோடு இருக்க வேண்டும், பெற்றோர் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். இதன் பிறகு தான் மருத்துவம்.

நம்மையே இழந்து மருத்துவம் படித்து என்ன பயன்?!

கல்லூரி முதலாளிகள்

NEET தேர்வு முறையால் மருத்துவப் படிப்பை வைத்துக் கொள்ளை அடிப்பது முடியாது. யார் வேண்டும் என்றாலும், பணம் இருந்தால் சேர்ந்து விடலாம் என்ற நிலை இல்லை.

முன்பு தகுதி இல்லாதவர்களும் பணத்தைக் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட முடியும். தற்போது மதிப்பெண் இருந்தால் மட்டுமே முடியும்.

எனவே, கல்லூரி முதலாளிகள் தங்கள் வருமானம் பாதிக்கப்படுகிறதே என்று மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதில் பலன் பெற நினைக்கிறார்கள்.

தற்போது கூச்சலிடும் ஊடகங்கள், அரசியல்வாதிகள் ஒவ்வொருவர் பின்னும் மருத்துவ கல்லூரி நேரடியாகவோ, பினாமியாகவோ உள்ளது.

தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் ஒரு மாணவன் தூக்குப் போட்டு இறந்த போது கொந்தளிக்காத அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதற்குக் கொந்தளிக்கிறார்கள் என்றால், இதில் உள்ள அரசியல் என்ன? பொறுமையாக யோசித்துப்பாருங்கள்!

இவர்கள் கொள்ளை ஓரளவு தடுக்கப்பட்டது என்றால், பயிற்சி மையம் என்ற பெயரில் பலர் தற்போது கிளம்பியிருக்கிறார்கள்.

இனி பயிற்சி மையம் என்ற பெயரில் மிகப்பெரிய வியாபாரம் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, புதிதாகப் பல பயிற்சி மையங்கள் கவர்ச்சியான அறிவிப்புடன் லட்சக்கணக்கான ருபாய் கட்டணத்துடன் வலம் வருகிறது.

இதையெல்லாம் அரசு எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறது? இவை நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும்.

NEET

NEET பிடிக்கிறதோ இல்லையோ இனி இப்படித்தான் தேர்வு நடக்கும் என்பது உறுதியாகி விட்டது.

எனவே, திரும்ப இந்த அரசியல்வாதிகளை நம்பி மாணவர்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இவர்கள் நோக்கம் மாணவர்களுக்காக அக்கறை படுவதல்ல, இதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதே!

முன்னரே கூறியபடி ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய NEET தேர்வு நிறுத்தப்பட வாய்ப்பில்லை.

எனவே, அடுத்த வருடம் எழுதப்போகும் மாணவர்கள், நாம் எப்படித் தேர்வில் வெற்றி பெறுவது? அதற்கு நம்மை எப்படித் தயார் செய்வது? என்பது குறித்து மட்டுமே யோசியுங்கள்.

எதிர்பார்ப்பைக் குறைத்து, நடைமுறை எதார்த்தத்தை உணர்ந்து, உணர்ச்சி அரசியலைத் தவிர்த்துச் செயல்பட்டால், மன அழுத்தம், பதட்டம், குழப்பங்களிலிருந்து விடுபடலாம்.

இதுவே உங்களைச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற உதவும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. எதர்த்தமான பதிவு…!
  CBSE -கவனக்குறைவுகள் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
  1 ) தமிழகத்தின் தேர்வர்களுக்கு, மையம் அமைக்க போதுமான இடமில்லை என்பது.
  2

 2. 2 ) தமிழ் தேர்வர்களுக்கு , இந்தி- இங்கிலிசு
  கேள்வித்தாள் தரப்பட்டது, பிறகு மாற்றப்பட்டு தாமதமாக தேர்வு நடத்தப்பட்டது…ஆனால் வினாத்தாளை வாங்கிக்கொண்டது!
  3

 3. புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் தினமும் பாருங்கள். எப்படி ஒவ்வொரு விசயத்தையும் திசை மாற்றுகின்றார்கள் என்பது புரியும். பணம் தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. எல்லா இடங்களிலும்.

  இப்போது நடந்து கொண்டு இருக்கும் விசயங்களைப் பற்றி இப்படி படிப்படியாக ஒவ்வொரு நிலையையும் வைத்து புரிந்து கொள்ள முடியும்.

  ஒவ்வொரு நிலையில் உள்ள பாடங்களை அதன் அர்த்தங்களையும் முழுமையாக ஆண்டு முழுவதும் நடத்த மாட்டோம். எதையும் மாணவன் புரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்பதை உணர்த்த மாட்டோம். ஆனால் அவன் மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. அதற்கு இந்தக் கட்டணம். உன்னால் முடியுமா?

  நாங்கள் நீட் மட்டுமல்ல எதற்கும் பயிற்சி அளிக்க முடியும்? அதற்கு இந்த கட்டணம். உன்னால் முடியுமா?

  ஆமாம் ஒரு சீட்டுக்கு எழுபத்தி ஐந்து லட்சம் முதல் ஒரு கோடி வரைக்கும் தான் வாங்குவோம். உன் மதிப்பெண்கள் முக்கியமல்ல. உன்னிடம் உள்ள பணம் தான் முக்கியம். உன்னால் முடியுமா?

  சட்டம் கொண்டு வருவோம். ஆனால் ஜிப்மர், மருத்துவ உயர்கல்வி நிலையங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி நிலையங்களுக்கு விதிவிலக்கு உண்டு. உன்னால் எதையும் கேட்க முடியாது. கேட்க கூடாது, பணம் இருக்கா? உன்னால் முடியுமா?

  இடஒதுக்கீடு எங்களுக்கு பொருட்டல்ல? நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். நாங்கள் அளிக்கும் சட்டம் தான் இறுதி தீர்ப்பு? உன்னால் திறமையிருந்தால் வென்று வா? உன்னால் முடியுமா?

  எங்களால் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க முடியவில்லை. காரணம் எங்களுக்கு நேரம் இல்லை. அதிகமான மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியா ஒரே தேசம் தானே? உனக்கு திறமையிருந்தால் எங்கு வேண்டுமானாலும் போய் எழுதிக் கொள். நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். உன் சிரமங்களை நாங்கள் ஏன் கண்டு கொள்ள வேண்டும்? இதனையும் தாண்டி உன்னால் வென்று வர முடியுமா?

  பல்வேறு பாடத்திட்டங்கள், பல்வேறு மாணவர்களின் கல்விச்சூழல். எதையும் கருத்தில் கொள்ள மாட்டோம். இந்த வட்டத்திற்குள் தான் வந்து நிற்க வேண்டும். உன்னால் வென்று வர முடியுமா?

  மருத்துவம் என்பது சேவையல்ல. தண்ணீர் என்பது விற்பனைக்குரிய பண்டம். கல்வி என்பது வியாபாரம். மாறிய உலகில் மாற்றங்களை உன்னால் எதிர்கொண்டு வென்று வர முடியுமா?

  எங்கோ யாரோ உருவாக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகளும் இங்கே எதிரொலிக்கின்றது. பணம் பார்த்தவர்கள் இனி கிடைக்காதா என்று பதறுகின்றார்கள். பதட்டத்தை மக்களிடம் உருவாக்குகின்றார்கள்.

 4. “தோடு, மூக்குத்தி, மோதிரம்” அடங்கிய அணிகலன்கள் குறித்த விதிமுறைகள் (உண்மையாகவே விதிமுறைகள் அவ்வாறு கூறுவதாக இருப்பினும்…??) மறுபரிசீலனை செய்யப் பட வேண்டும்.

  மற்ற படி கட்டுரை ஏற்ப்புடையதே…

 5. கிரி, நீட் தேவையா அல்லது வேண்டாமா என்ற வாதத்தில் நுழைய விரும்பவில்லை.. கட்டாயம் ஆகி விட்ட பின் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நன்று.. நகர்புறத்தை பற்றி அதிக கவலையில்லை… அதிகளவிலான சிரமம் கிராமத்து மாணவர்களுக்குத்தான்.. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு… இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் இலவசமாக செய்ய வேண்டியது அவசியம்.. நிறைய பேசலாம்.. நெஞ்சம் கணக்கிறது…

 6. ஜோதிஜி சொன்னது உண்மை பத்திரிக்கைகள் மீடியாக்கள் எல்லாம் மெடிக்கல் காலேஜ் ஓனர்கள் கொடுக்கும்
  காசுக்கு எதுவேணுமாலும் அவர்களின்
  மீடியாக்களில் பேசுவார்கள். நான் தமிழக
  TV ஷோக்களை பார்ப்பதில்லை.மீடியாக்களை ஒதுக்கி
  வெய்துவிட்ட்டேன்.நீட் பற்றிய தகவல்
  அனைத்தும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இனி வரும்
  காலங்களில் நமது மாணவர்கள் அச்சம்
  இன்றி தேர்வை எதிர்கொள்வார்கள்.

 7. ஆகச்சிறந்த பதிவு !!!! மிகச்சிறந்த அலசல்…

 8. Hi Giri,
  Good article and agree with the notion of it except two points. And please don’t take it personnel and would be happy to hear your counter view with open mind to improve my understanding.

  Neet is reality today…100% agree on stop spreading rumours/confusion, fold in to reality, focus and follow the ground rule…100% what the students, parents, educators and media should do today.

  But…a big *BUT*…politicians & college oweners????

  1) As much as the neet is reality today, the injustice and discrepancies in neet is reality as well…someone or something have to fight against it. While all of us(parents, educators, students) fold-in
  and focus on exams, somebody have to continue the fight for us…wonder who do you think that would be. In our self governing democratic system, i guess it’s the job of politicians to do that fight.
  Let them and they should continue to fight against the injustice done in neet like they fought against hindi imposing in 1930’s and 60’s. If you think otherwise, please my ears are open, would be happy
  to hear yours.

  2)கல்லூரி முதலாளிகள்
  /*
  முன்பு தகுதி இல்லாதவர்களும் பணத்தைக் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட முடியும். தற்போது மதிப்பெண் இருந்தால் மட்டுமே முடியும்.
  எனவே, கல்லூரி முதலாளிகள் தங்கள் வருமானம் பாதிக்கப்படுகிறதே என்று மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதில் பலன் பெற நினைக்கிறார்கள்.
  */
  No Giri, with all due respect, i think you got it wrong. It’s nothing more than a *GOLDEN GOOSE* for owners. Now of all times, it’s been guaranteed to college owners they can *LEGALLY* qualify and admit
  low mark students via neet system. TOI had an article few weeks back, how the percentile neet system does it:
  https://timesofindia.indiatimes.com/india/for-an-mbbs-seat-you-need-just-5-in-physics-20-in-biology/articleshow/63766630.cms

  Bottom line:
  5% marks in physics, less than 10% in chemistry, and 20-odd per cent in the biology of neet exams(they are what 50th percentile in neet)
  Add another 60-80 lak, you can get MBBS *LEGALLY* anywhere in india(pvt colleges).

  It’s a dream system for college owners…nothing more than *GOLDEN GEESE*. Hope you can see it how it benefits owners.

  Understanding our enemy is important and understanding them *CLEARLY* is critical now more than ever given the diversion/noise of fb/twiter/youtube/whatsapp.

  Regards,
  Bala

 9. Hi Yasin,
  /*
  கட்டாயம் ஆகி விட்ட பின் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நன்று.. நகர்புறத்தை பற்றி அதிக கவலையில்லை… அதிகளவிலான சிரமம் கிராமத்து மாணவர்களுக்குத்தான்..
  */
  If you(student) are from village…you are fu**ed…it’s as simple as that. And is the REALITY. I see it is so with my own bare eyes and I own pvt school in village.
  My village is literally back to 1993 entrance era…before entrance, mark only system we used have 30+ students apply enthusiastically to medicine courses…and few get in too.
  Now, bring the entrance back…pooofff…this year just 3 odd students even write that entrance…in next 5 years we may have 1 student get in(it’s a big maybe).
  Bottom line….If you(student) are from village…you are fu**ed…and just move on. so sad the reality is.

  Regards.

 10. மிக சரியான கட்டுரை கிரி..

  இவன் இப்படித்தான் என்று ரூல்ஸ் போடுவான்னு தெரிஞ்சும் லேட்டா போறது, இன்ன பிற நகைகளை மாட்டிக்கொண்டு போவது அப்புறம் புலம்ப வேண்டியது.. இதெல்லாம் ஓகே ஆனா வாடா இந்தியாக்காரனில் பலபேர் காதில் ரிவிட் அடிச்ச கடுக்கன் – அப்புறம் பஞ்சாபி பசங்க கழற்ற முடியா ஒரு மெட்டல் வளையல் போடுறது ஜாஸ்தி – அங்க என்ன பண்றாங்கன்னு புரியல..

  பத்தாததுக்கு ஒரு ரூபாய்க்கு நடின்னா ஒரு கோடி ரூபாய்க்கு நடிக்கிறவங்க நம்ம தமிழ் நாட்டு (சென்ட்ரல் கவர்மெண்ட்) ஆசிரியர்கள். மூக்குக்குள்ள காதுக்குள்ள டார்ச் அடிச்சதெல்லாம் ரொம்ப ஓவர்.. (டெக்நாலஜி அந்த அளவுக்கு வளந்துடுச்சி)

  வசூல் ராஜா படம் வாரத்துக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே அந்த டெக்னீக் நான் வேலை செய்த கல்லூரியில் நடந்தது.

  ஒரு முறை விடையை தேர்வு செய்தால் – திரும்ப அதை திருத்த முடியாது (இதுவும் உறுத்தல்)

  CBSE – மேலையும் நிச்சயமா குறை இருக்கு..
  உதா: சவுதிக்கு இந்தியாவுக்கும் 2.30 மணிநேரம் வித்தியாசம் இருக்கு.. TET ஒன்னு எழுத போகும்போது சவூதி டைம் 9:00 ன்னு போட்டுஇருந்திச்சி.. இருந்தாலும் நான் யோசிச்சேன் இந்தியாவுல அப்போ 11.30 கோஸ்ட்டின் லீக் ஆகுற பிரச்சினை வரும்ன்னு மொதோ நாள் சென்டருக்கு அருகில் தங்கினேன்.. மறுநாள் காலை 6 மணிக்கு சும்மா போய் பார்த்துட்டு வருவோம்ன்னு மனசு சொல்லுச்சு.. போய் பாத்தா (நோட்டீஸ்ல 9 மணின்னு போட்டு) எக்ஸாம் 6 :30 க்கு ஆரம்பிக்குது.. உடனே ஹோட்டலுக்கு ஓடிப்போய் மனைவியை எழுப்பி 6:25 க்கு எஸ்ஸ்சாம் ஹாலுக்கு அனுப்பினேன்..
  டைம் டிபிரன்ஸ் கூட தெரியாதா இவனுங்களுக்கு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here