NEET | நல்லதா போச்சு முழிச்சுக்கிட்டோம்!

7
NEET

NEET விலக்கு தமிழகத்துக்கு இனி கிடையாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது. Image Credit

தமிழக அரசே காரணம்

NEET ல் மாணவர்கள் பிரச்சனைகளைச் சந்தித்ததுக்குத் தமிழக அரசே காரணம்.

2016 ம் ஆண்டு “ஜெ” ஆட்சியில் இருந்த போதே NEET க்கு ஒரு ஆண்டு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு “ஜெ” அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டில் NEET தாக்கம் எப்படி இருந்தது என்று எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை, எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் NEET எழுதவில்லை, எனவே எனக்கும் இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லை.

சுருக்கமாக தற்போது எனக்கு NEET தெரியும் அளவுக்குக் கடந்த வருடம் விவரங்கள் தெரியாது.

ஆனால், இவை குறித்து அனைத்தும் அரசுக்கு தெரிந்து இருக்கும், இருக்க வேண்டும்.

மாணவர்களைத் தயார் படுத்தாத தமிழக அரசு

அப்படியென்றால், கடந்த வருடத்தில் இருந்தே மாணவர்களை இதற்காக மனதளவில் தயார் படுத்தி இருக்க வேண்டும் ஆனால், இது குறித்துக் கிஞ்சித்தும் பொறுப்பில் உள்ளவர்கள் எவரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

“ஜெ” மறைந்த பிறகு இன்று வரை ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே இவர்களுக்கு நேரமில்லையாததால் இவர்களும் NEET பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

NEET தேர்வு நெருங்கும் போது மனதளவிலும், பயிற்சியிலும் மாணவர்கள் தயாராகவில்லை என்பதால், NEET தேர்வு நடைபெற்ற போது அவர்கள் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது.

பல மாணவர்களின், பெற்றோர்களின் மருத்துவக் கனவை இந்த அரசியல் கோமாளிகள் தங்களின் பொறுப்பற்றதனத்தால், சிதைத்து விட்டார்கள்.

தமிழக அரசு கடைசிவரை விலக்கைப் பெற்றுத் தந்து விடும் என்ற நம்பிக்கை காட்டிக்கொண்டு இருந்ததால், பலரும் ஏமாந்து போனார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதி வரை ஆசை வார்த்தை கூறி மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றினார்.

பொறுப்பற்ற அரசுகள்

பொறுமையாக இருப்பவன் கூட இவர்கள் நடவடிக்கையைக் கண்டு வெறியாகி விடுவான்.

ஏனென்றால், மற்ற மாநிலங்களில் கல்லூரிகளுக்கே மாணவர்கள் சென்று விட இங்கே இன்னும் NEET விலக்கா? விலக்கு இல்லையா?! என்ற குழப்பத்தில் நாட்கள் வீணாகிக்கொண்டு இருந்தன.

ஒரு மாணவனின் நிலையில் இருந்து யோசித்துப்பாருங்கள்.

வகுப்புகள் துவங்கி இருக்க வேண்டிய நிலையில் நம் நிலையே என்னவென்று தெரியாமல் இருந்தால், எப்படிப்பட்ட மன உளைச்சல் இருக்கும்.

நம்ப வைத்துக் கழுத்தை அறுத்த மத்திய அரசு

பாஜக ராஜ்யசபா உறுப்பினர் “நிர்மலா சீதாராமன்” தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால், இந்த ஆண்டு மட்டும் விலக்கு வாங்கித் தருவதாக உறுதி கூறினார்.

தமிழக அரசும் அவசர சட்டம் இயற்றி அனுப்ப, உதவுவதாகக் கூறி சரியாக வாதத்தின் முக்கியமான நேரத்தின் போது “தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது!” என்று மத்திய அரசு கூறி கை விரித்து விட்டது.

இப்படி மாற்றிக்கூறுபவர்கள் NEET விலக்கு தருகிறேன் என்று ஏன் கூற வேண்டும்? எதற்கு அவசரச்சட்டம் இயற்றக் கூறனும்?

உச்சநீதிமன்றமும் மத்திய அரசின் எதிர்ப்பால் விலக்கு அளிக்க மறுத்து விட்டது.

பொன் ராதாகிருஷ்ணன்” NEET பிரச்சனை துவங்கியதில் இருந்து நீதிமன்ற தீர்ப்பு வரை, இப்பிரச்சனை குறித்து எத்தனை முறை மாற்றி மாற்றிப் பேசி இருக்கிறார் என்று கணக்கெடுத்தால், தலை சுற்றி விடும்.

இது போலத் தமிழக அரசும் மத்திய அரசும் அரசியல் செய்து மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடி விட்டன.

“ஒரே நாடு ஒரே தேர்வு” என்பதன் அர்த்தம் என்ன?

இது போதாது என்று NEET தேர்வில் ஒரே மாதிரியான தேர்வு என்று கூறி விட்டு, மாநிலத்துக்கு மாநிலம் கேள்வித்தாள்கள் வேறு மாதிரி இருந்தன.

இதனால் சில மாநில மாணவர்களுக்கு எளிமையாகவும் சில மாநில மாணவர்களுக்குக் கடினமாகவும் கேள்வித்தாள்கள் அமைந்து விட்டது.

நாடு முழுவதும் ஒரே தேர்வு என்றால், ஒரே கேள்விகள் இருப்பது தானே நியாயம்! இதன் பெயர் தான் “ஒரே நாடு ஒரே தேர்வு” என்பதன் அர்த்தம்.

இது குறித்துச் சர்ச்சைகள் எழுந்தவுடன் இனி 2018 முதல் ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் (மொழிகள் மட்டும் மாற்றி) இருக்கும் என்று மத்திய அமைச்சர் “Javadekar” அறிவித்துள்ளார்.

இதை ஏன் இதுவரை செய்யவில்லை? பாகுபாடு இருந்தால் அது எப்படி ஒரே தேர்வாகும்?!

எல்லாக் கோட்டையும் அழிங்கடா!

அனைத்தையும் விட கடுப்படித்த செய்தி என்னவென்றால், அமைச்சர் தம்பித்துரை, “அடுத்த வருடம் தமிழ்நாட்டுக்கு NEET விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இவர் கூறியதை கேட்டால், கோபம் வருமா வராதா? மூளை உள்ள எவரும் இப்படியொரு பொறுப்பற்ற பதிலைக் கூறுவார்களா?

உச்சநீதிமன்றமே NEET கட்டாயம் என்று அறிவித்து விட்டது.

போனது போகட்டும் இந்த வருட மாணவர்களையாவது சிறப்பாகத் தயார் செய்து NEET தேர்வுக்கு முறைப்படி ஆயுத்தம் செய்வோம் என்று எண்ணாமல், “எல்லாக் கோட்டையும் அழி! முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்“னு சொல்றாரே! இவரெல்லாம் ஒரு பொறுப்பான அமைச்சரா?!

அரசியல் செய்ய ஆயிரம் வழிகள் உள்ளது தயவு செய்து மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.

அடுத்த வருடம் NEET கண்டிப்பாக இருக்கும்

மாணவர்களே! இவர்கள் கூறுவதை நம்பிட்டு இருக்காதீங்க!

NEET சரியோ தவறோ அது அடுத்த பிரச்சனை! ஆனால், அடுத்த வருடம் NEET கண்டிப்பாக இருக்கும். எனவே, தற்போது இருந்தே தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த வருடம் தவறவிட்டவர்கள் பலரும் அடுத்த வருடமும் எழுதுவார்கள் எனவே, அடுத்த வருட மாணவர்களுக்குக் கடும் போட்டி இருக்கும்.

அதோடு ஏற்கனவே ஒரு முறை எழுதியதால், இந்த வருடம் எழுதிய மாணவர்களுக்குத் தேர்வு பற்றிய பயம் குறைந்து புரிதல் இருக்கும்.

எனவே, 2018 ல் முதல் முறையாக எழுதப்போகிறவர்களுக்குக் கடும் போட்டி இருக்கும். 2019, 2020 ல் மட்டுமே சீரான நிலைக்கு வரும். எனவே, கடுமையாக உழையுங்கள் வெற்றி நிச்சயம்.

பின்தங்கிப் போனதுக்குக் காரணம்…

2017 ல் மருத்துவத் தேர்வு எழுதிய மாணவர்கள் மிக மிகத் துர்அதிர்ஷ்டசாலிகள் 🙁 .

தெளிவான புரிதல் இல்லை, கல்வித்துறையின் வழிநடத்தல் இல்லை, சரியான முன்னேற்பாடு இல்லை, பயிற்சி இல்லை. இச்சூழ்நிலையில் பயத்திலே தேர்வு எழுத வேண்டிய நிலை.

இதுவே, தமிழகம் NEET மதிப்பெண்களில் பின்தங்கிப் போனதுக்குக் காரணம்.

பிரச்சனை பாடத்திட்டமே! மாணவர்கள் திறமையல்ல!

ஒருத்தர் கேட்கிறார் “1190 மதிப்பெண் எடுத்த மாணவர் எப்படி NEET தேர்வில் மதிப்பெண் குறைந்தார்?” என்று!

பலர் கூறுகிறார்கள் தமிழக அரசின் பாடத்திட்டம் சிறப்பாக இல்லையென்று! இது எப்படி உள்ளது தெரியுமா?!

IT துறையில் இருக்கிறார் என்ற காரணத்தால், Support ல் பணி புரிவரை பார்த்து Development பற்றி உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கூறுவதைப் போல முட்டாள்தனமாக உள்ளது.

தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், பிரச்சனை அது மட்டுமே இல்லை.

நம்முடைய கல்வித்திட்டம் வேறு, CBSE கல்வித்திட்டம் வேறு.

CBSE பாடத்திட்ட முறையில் தேர்வை வைத்து விட்டு மற்றவனுக்கு அறிவில்லை என்று கூறினால் பிரச்சனை யாரிடம்? அப்படித்தான் தங்களை புத்திசாலியாக நினைத்துக் கேட்கும் ஒவ்வொருவரின் கேள்வியும் உள்ளது.

CBSE பாடத்திட்டத்தில் கேள்விகள் இல்லாமல் வேறு பாடத்திட்டத்தில் கேள்விகள் இருந்தால், தற்போது எடுப்பது போல மதிப்பெண்கள் எடுத்து விடுவார்களா?!

ஏனென்றால் நாம் படித்த CBSE பாடத்திட்டம் வேறு, கேட்கப்படும் பாடத்திட்டம் வேறு.

இதன் காரணமாக மாணவர்கள் முட்டாள்கள், திறமையற்றவர்கள் என்ற அர்த்தம் கிடையாது. பாடத்திட்டம் வேறு அவ்வளவே!

தெறிக்கவிடப்போறாங்க பாருங்க

குறித்து வச்சுக்குங்க இன்னும் மூன்று வருடங்களில் தமிழக மாணவர்கள் NEET தேர்வை அடித்துத் துவம்சம் செய்கிறார்களா இல்லையா என்று! அப்பத் தெரியும்.. யார் திறமைசாலிகள்! என்று.

ஒருமுறை ஏமாந்துட்டோம்.. நல்லதா போச்சு முழிச்சுக்கிட்டோம்!

கொசுறு

தகுதி உள்ளவர்கள் தேர்வு பெறட்டும் என்று கூறுபவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.

பேசுகிறவர்கள் அனைவரும் NEET தேர்வுக்கென்று லட்சக்கணக்கில் செலவு செய்து மாணவர்களைப் படிக்க வைக்கப் பெற்றோர் தயாராக இருப்பார்கள்.

லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வசதி இல்லாதவர்களின் கனவுகள் பல கனவாகவே முடிந்து விடுகின்றன என்பதை, தனக்கு பாதிப்பு ஏற்படாத வரை பலரால் உணர முடியாது.

இதையெல்லாம் புரிந்து கொள்ள நீங்களும் ஒரு ஏழையாக இருந்து பார்த்தால் தான் அதன் வலிகள், ஏமாற்றங்கள் தெரியும். பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு யாரும் யாருக்கு வேண்டும் என்றாலும் எந்த ஆலோசனையும் கூறலாம்.

எப்போது அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கொடுக்கப்பட்டு, வசதிகள் செய்யப்பட்டு தேர்வு நடக்கிறதோ அது தான் உண்மையான போட்டி.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. இதையெல்லாம் புரிந்து கொள்ள நீங்களும் ஒரு ஏழையாக இருந்து பார்த்தால் தான் அதன் வலிகள், ஏமாற்றங்கள் தெரியும். பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு யாரும் யாருக்கு வேண்டும் என்றாலும் எந்த ஆலோசனையும் கூறலாம்.

    மிகவும் அருமை. பிள்ளைகளும், பெற்றோர்களும் படும்பாட்டை உணர்ந்தவர்களே அறிவார்கள்.

    • ஏழைகளின் வலியுணர்ந்த நீங்க யாருண்ணா… சோசியல் மீடியா ஏழையா?

  2. என்ன என்னவோ எழுத நினைக்கிறேன். கோபத்தில் வார்த்தைகள் கோர்வையா வரமாட்டேங்குது. கிரி.

    நாடு முழுவதும் ஒரே சிலபஸ் இல்லாமல் ஒரே மாதிரியான தேர்வு சரியா? இந்த ஒரே கேள்வியில் நீட் தேர்வுக்கான நியாயம் அடிபட்டுப் போவிடும். நீதிபதி என்பவனுக்கு மூளையிருந்தால் இந்த கேள்வியை கேட்டிருப்பான்.

    நமது மாநிலப் பாடத்திட்டம் சிறந்ததே, இது கேள்வி கேட்கும் முறையிலும், விடைத்தாள் திருத்துவதிலுமே சிபிஎஸ்சியில் இருந்து வேறுபடுகிறது. இதற்கும் காரணம் தனியார் பள்ளி கல்லூரி உரிமையாளர்கள் செய்யும் இன்ஃப்ளூயன்ஸ். அதிக
    அதிக மதிப்பெண்,100% தேர்ச்சி, அட்மிசன் ஆகியவை இதன் பின்னனியில் உள்ளது
    ***
    நேற்றுவரை இதே சிபிஎஸ்சி மாணவர்கள்; 10 வரை சிபிஎஸ்சியில் படித்துவிட்டு மதிப்பெண்ணுக்காக +2 மதிப்பெண்ணுக்காக ஸ்டேட் போர்டுக்கு மாறியவர்கள்தான். அவர்கள் எல்லாம் ஒழுங்காக மருத்துவம் படிக்கவில்லையா? வேலை செய்யவில்லையா?
    ***
    மருத்துவம் மட்டும் அல்ல பொறியியலுக்கும் நுழைவுத்தேர்வு அவசியம் என்பதே என் கருத்தாகும். ஆனால் யாரையும் பாதிக்காமல் அமல்ப்படுத்த வேண்டும்.

    நீட் தேர்வுக்கு 3 வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது மெகா தவறு.
    2015 இல் +2 தேர்வான ஒருவன் [சிபிஎஸ்சிதான்] 2 வருடம் பெங்களூரில் கோச்சிங் பெற்று இந்த வருடம் மாநில அளவில் 7 ஆம் இடம் பெற்றுள்ளார். இது எப்படி சமவாய்ப்பாகும்.

    +1 = 100
    +2 = 100
    நுழைவுத்தேர்வு = 100
    மொத்தம் = 300

    மாணவன் நுழைவுத்தேர்வை எழுதும் அதே வருடம் இயற்பியல், வேதியியல், கணிதம்/உயிரியல் ஐ எழுதியிருக்க வேண்டும். அல்லது நுழைவுத்தேர்வுக்கென தனியாக வாய்ப்பு வழங்கக்கூடாது. 10 ஆம் வகுப்பிற்கு பிறகு ஸ்டேட் போர்டுக்கு சிபிஎஸ்சி மாணவர்கள் மாறக்கூடாது [அறிவை வளக்கத்தான சிபிஎஸ்சியில் படிக்கிறானுக அங்கேயே நல்லா வளர்க்கட்டும்]

    இது போல செய்தால் யாருக்கும் பாதிப்பு வராது.

    ஆனா செய்ய மாட்டானுக; உருப்பட விட மாட்டானுக ஏற்கனவே +1 ஐ நடத்துவதில்லை இனி +2 வையும் நடத்த மாட்டானுக[ பாஸ் செய்தால் மட்டும் போதுமே] . ஒன்லி நீட் கோச்சிங். வெளங்கிடும் கல்வி.
    ***
    பான்பராக்கை மென்று கொண்டு வாயிலே வடை சுடும் வடா இந்தியனை, தமிழக கல்வியை தீர்மாணிக்கும் இடத்திற்கு விடுவது மிகவும் ஆபத்தானது.
    ***
    நீட் தேர்வின் அடிநாதத்தில் ஒளிந்திருப்பது ” இந்தி சமஸ்கிருத திணிப்பு & இடஒதுக்கீட்டு அழிப்பு” ஆகிய இந்துத்துவா கொள்கைகளே!

    நீட் தேர்வுக்காக மாணவர்கள் சிபிஎஸ்சி பள்ளியில் சேருவார்கள், சிபிஎஸ்சி பள்ளிகள் அதிக அளவில் திறக்கப்படும்.
    சிபிஎஸ்சியில் தமிழ் கட்டாயம் அல்ல; ஆனால் மும்மொழி கொள்கைகள் உண்டு.

    சிபிஎஸ்சியை தாராளமா கொண்டு வரட்டும், அது தமிழ் & ஆங்கில மீடியத்தில் இருக்க வேண்டும். மொழிப்பாடத்தில் தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் யார் இவர்களை எதிர்க்கப் போகிறார்கள்?

  3. கிரி, (இதையெல்லாம் புரிந்து கொள்ள நீங்களும் ஒரு ஏழையாக இருந்து பார்த்தால் தான் அதன் வலிகள், ஏமாற்றங்கள் தெரியும். பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு யாரும் யாருக்கு வேண்டும் என்றாலும் எந்த ஆலோசனையும் கூறலாம்.) இந்த மூணு வரியே போதும். வேறு ஒன்றும் கூற தேவையில்லை… பாதிக்கப்பட்டவனின் வலி அவனால் மற்றும் குடும்பத்தினரால் மட்டுமே உணர முடியும்…

  4. @சிவா சம்பத் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அதன் வலி உணர்வார்கள் என்று தான் கூறியுள்ளார். அவர் உணர்ந்தார் என்று கூறவில்லை.

    இது போன்ற விசயங்களை நம்மால் உணர முடியும் ஆனால், முழுமையான வலி சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.

    உங்களைக் கூறி தவறில்லை.. ஏனென்றால், உண்மையாக வருத்தப்பட்டால் கூட அது செயற்கையாக தோன்றும் படி சமூக வலைதளங்கள் செய்து விட்டன.

    போலி போராளிகளின் கோஷங்களால் உண்மையான வருத்தம் கூட கேலியாகி விடுகிறது.

    @காத்தவராயன் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத போது எந்த அடிப்படையில் ஒரே தேர்வு வைக்கிறார்கள். இதை எப்படி உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது?

    வடமாநிலங்களில் எப்படி படிக்கிறார்கள்? என்று கேட்கிறார்கள். அங்கே எவரும் போராட துணிவில்லாமல் படிப்பறிவில்லாமல் எல்லோரும் தென் மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு வருவது பார்த்தாலே தெரியும்.

    இங்கே போராடுகிறார்கள் அங்கே விதி என்று ஏற்றுக்கொண்டு மவுனமாகி விடுகிறார்கள் அவ்வளவே!

    இதில் அனைவரும் ஏற்றுக்கொண்டதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

  5. /* நீங்களும் ஒரு ஏழையாக இருந்து பார்த்தால் தான் அதன் வலிகள், ஏமாற்றங்கள் தெரியும்*/
    It’s not the correct aspect in my opinion. It’s rural vs town issue. It’s always the towns get better infrastructure, including good coaching centers. Even middle class with same money, those living in town will have good options. Same middle class with same money, living in rural will have no options(for coaching). Evidently, irrespective where they are, poor can’t afford neet coaching. We are back to 90’s, when a middle class from rural couldn’t get into engg college because of entrance exams. Neet will increase rural divide and move them backwards to 90’s. As usual, fcuk the rurals, who cares I guess, right?….so bad, have no words. I do support no entrance system, a level playing field for all(atleast in theory and little in reality).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here