எங்கள் அலுவலகத்தில் கண் பரிசோதனை நடத்தினார்கள். ஊருக்குச் சென்றால், நானே அரவிந்த் கண் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும் என்று இருந்தேன்.
கண்கள் என்ற அதிசயம்
சோதனையில் கண்ணாடி அணிந்து கொண்டால் நல்லது என்று கூறி விட்டார்கள்.
40 யை நெருங்கினால் சொல்லி வைத்த மாதிரிக் கண் பிரச்சனை செய்கிறது.
ஒரு நாள் திடீர் என்று திறன்பேசியில் படிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. சரி எதோ தூசியா இருக்கும் என்று விட்டுட்டேன். Image Credit
பிறகும் அப்படியே தொடர்ந்ததால் (கொஞ்சம் தள்ளிப்பிடித்தால் சரியாக இருந்தது), “ஓ! கண் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது” என்று புரிந்தது 🙂 .
இதை எழுதக் காரணம் என்னவென்றால்..
எனக்கு இதுவரை பார்வையில் பிரச்சனையில்லை இருப்பினும் கணினி, திறன்பேசி அதிகம் பயன்படுத்துவதால் சோதித்துக்கொள்ளலாம் என்று தான் சென்றேன்.
இதுவரை கண் கண்ணாடி அணிந்த அனுபவம் இல்லையென்பதால், கண்ணாடி அணிந்தால் எப்படி வித்யாசம் இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
இந்த முறை சோதனைக்காக லென்ஸ் போட்டு ஒரு புத்தகத்தைப் படிக்கக் கூறிய போது செமையா பளிச்சுனு தெரியுது. பளிச் என்றால், அப்படியொரு பளிச் 🙂 .
தற்போது படிப்பது எனக்குச் சிரமம் இல்லையென்றாலும், இந்த லென்சில் பார்க்கும் போது இன்னும் கூடுதல் தெளிவாக இருந்தது.
அட! எப்படி எல்லாம் கண்டுபிடிக்கறாங்கையா! என்று வியப்பாக இருந்தது 🙂 . நம் கண் உள்ளே இருக்கும் தொழில்நுட்பம் குறித்து யோசித்தால், தலை சுற்றுகிறது.
கண்களுக்குள்ளே என்ன உள்ளது? எப்படி செயல்படுகிறது? பார்வைக்குறைபாட்டை எப்படி சரியாக்குகிறார்கள்? என்று யோசித்தால் வியப்பாக உள்ளது.
40 வயதை நெருங்கும் போது பெரும்பான்மையானோருக்கு இது போல நடக்கும் ஆனால், இரு வருடங்கள் சமாளித்தால் அதன் பிறகு பழையபடியே ஆகிடும் ஆனால், கண் கண்ணாடி அணிந்தால் அதுவே பழகிடும் என்று நண்பர்கள் கூறினார்கள்.
ஊருக்குச் செல்லும் போது மருத்துவரைக் கேட்டு உறுதி செய்யத் தீர்மானித்துள்ளேன்.
தற்போது கண்ணாடி அணியும் தேவையில்லை ஆனால், எதையும் உறுதி செய்து கொள்வது நல்லது. கண் விசயத்தில் அலட்சியமாக இருக்க விரும்பவில்லை.
கண்கள் என்ற அதிசயம் என்பது உண்மை தானே! 🙂
Read: செலவு வைக்கும் “பல்” பிரச்சனை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இரவில் பால் குடிக்க கூடாது என்று அந்த ஆராச்சி கட்டுரைகள் சொல்கின்றனவா ?
இரவில் சாக்கிளேட் தின்று விட்டு நன்கு பல் துலக்கினால் எந்த சிக்கலும் இல்லை
எதை எவ்வாறு எப்படி எந்த நேரத்தில் சாப்பிட வேண்டுமென சொல்லி இருக்கிறார்.
https://www.youtube.com/channel/UCcdSJnujGDC_YT1e89MHNlQ
சிங்கபூரில் வருடத்திற்கு இரு முறை மாணவர்களை சுற்றுலா கூட்டிச்செல்வதற்கு கண் பார்வையும் ஒரு காரணம். சிறுவர்கள் சிங்கபூரில் தொலை தூரம் பார்க்கதேவையில்லை என்பதால், அவர்களிற்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. நிறைய பள்ளி மாணவர்கள் சிறு வயதிலேயே கண்ணாடி அணிவதை நீங்கள் பார்த்திருப்பிர்கள்.
இரவில் பால் குடித்தால் பல் வலி வரும் என்பது புதிய தகவலாக உள்ளது. நான் பால் குடிப்பதில்லை. ஆனால் என் சிறு தம்பி தினமும் பால் குடிப்பான். வயது 12. ஆனால் பல் பிரச்சனையில்லை. பல் துலக்க்ம்போது எச்சிலை துப்பக்கூடாது என்பது எத்தனை பேரிற்கு தெரியும். அதனால் இரவில் பல் துலக்கிடிட்டு படுத்தால் காலையில் எழும்பி சாப்பிடபின்னர்தான் பல் துலக்குவேன். பேய் வாய் என்று சொல்லப்படாலும், எங்களது பல் மருத்த்வர் அதனைத்தான் முன்மொழிந்தார். உங்கள் நாட்டில் பல் துலக்கியபின்னர்தான் சாப்பிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
கிரி, 2015 மே மாதம், புது வீடு கட்டி முடித்து, குடிசென்ற தினம் இரவு படுத்து காலை எழுந்தவுடன் கண்ணை பார்த்தால் கண் வீங்கி இருந்தது.. வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கண் திஷ்டி என்றனர். நண்பனின் தந்தை கண்ணை உற்று பார்த்து விட்டு இது பூச்சியின் கடி. அவர் ஆலோசனைக்கு இணங்க மருத்துவரிடம் (33 வருடங்களில் முதல் முறை கண் மருத்துவரிடம்) சென்றேன். சோதனையில் கண்ணிற்கு கீழ் பூச்சி கடித்தது உறுதியானது. பின் கண் பரிசோதனை செய்தால் கண்ணாடி அணியவேண்டியது அவசியம் என்றார்.. இடி இறங்கியது மாதிரி இருந்தது..
(பாலிய வயதில் எங்கள் நண்பர்கள் குழுவில் வானத்தில் பல கிலோமீட்டர் தூரத்தில் பறக்கும் புறாவின் நிறத்தை சரியா கணிக்கும் ஒருவன் நானே…) ஒரு வாரம் கண்ணாடி அணிந்து பின்பு அணிவதில்லை.. எதிர்காலம் பிரச்சனை தெரிந்தும், மனைவி பலமுறை கூறியும் ஏனோ கண்ணாடி அணிய மனம் ஏற்கவில்லை.. பிரச்னையை இயற்கை மருத்துவத்தில் தீர்க்க நினைக்கிறன்.. ஆலோசனை இருந்தால் வழங்கவும்.. ஏதும் இல்லையெனில் கடைசி தீர்வு கண்ணாடி தான்…
பல் பிரச்னை : இதுவரை சொத்தை பல் பிரச்சனை இல்லை.. கொஞ்சம் கவனமாக இருப்பேன்.. இரவில் பால் குடிக்கும் பழக்கம் இல்லை.. பையன் விஷியத்திலும் கொஞ்சம் கவனமாக இருப்பேன்.. இருப்பினும் சில சமயம் இனிப்பு வகைகளை தவிர்க்க முடியவில்லை.. இன்னும் கொஞ்சம் கவனம் தேவை.
கடந்த பத்து வருடங்களில் உடல்நிலை தலைகீழாக இருக்கிறது.. 8 வருடம் தொடர்ந்து கிரிக்கெட், வார விடுமுறையில் விளையாடி வந்தாலும், கொஞ்சம் உடல் நிலையில் கவனம் கொண்டாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடிகிறது… தற்போது பேட்மிட்டன் வாரத்தில் இரண்டு நாட்கள் விளையாடி வருகிறேன்.. நண்பன் சக்திக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இல்லை.. விளையாட்டு இல்லாத வாழ்க்கையை என்னால் யோசிக்க கூட முடியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@Shabir Hussain ஆராய்ச்சி கட்டுரை பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லையே. எங்களுக்கு மருத்துவர் தான் கூறினார். இது குறித்து இணைக்கப்பட்ட சுட்டியில் கூறியுள்ளேன்.
சாக்லேட் பற்றி எனக்கு தெரியவில்லை. நான் கூறியது பாலுக்கு மட்டுமே!
@பிரியா சிங்கப்பூரில் நிறைய பசங்க கண் கண்ணாடி அணிந்து இருப்பது உண்மை தான். சுற்றுலா காரணம் எனக்கு புதிது.
இரவில் பால் குடித்தால் பல் வலியல்ல, பல் சொத்தை ஆகி விடும். பின்னர் அது வலியாகும் 🙂
ஆமாம், நாங்கள் காலையில் பல் துலக்கிய பிறகே காஃபி கூட அருந்துவோம். சிலர் Bed Coffee என்று குடிக்கிறார்கள்.
நான் வாய்ப்பே இல்லை.. பல் துலக்கிய பிறகே அனைத்தும்.
BTW நிறைய சிங்கப்பூர் செய்திகளை தெரிந்து வைத்துள்ளீர்கள் 🙂
@யாசின் கண்ணில் மட்டும் அலட்சியமாக அல்லது அதீத தைரியத்துடன் இருக்காதீர்கள். மருத்துவர் என்ன கூறுகிறாரோ அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
கண்ணில் நாம் அலட்சியம் காட்டக்கூடாது. பின் அது பெரிய பிரச்சனையாகி விட்டால், அதன் இழப்பு பெரியதாக இருக்கும்.
நம் தலைமுறை நபர்களுக்கு சொத்தைப் பல் பிரச்சனை மிகக்குறைவாக தான் இருக்கும். தற்போது தான் கணக்கற்ற இனிப்பு, பெற்றோர் செல்லம் காரணமாக சொத்தைப் பல் அதிகமாகி விட்டது.
யாசின் என்றால், புறாவும் , டெஸ்ட் கிரிக்கெட்டும் நினைவுக்கு வரும் 🙂