Thappad (2020 இந்தி) இதற்கெல்லாமா விவாகரத்து?!

8
Thappad

டாப்ஸி குடும்ப நிகழ்வில் கணவருக்கும் அலுவலக நண்பருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தடுக்கக் கணவரை விலக்க, கோபத்தில் அனைவர் முன்பும் டாப்ஸியை கணவர் அறைந்து (Thappad) விடுகிறார். Image Credit

இதன் காரணமாகவும் இந்நிகழ்வு தொடர்பான மற்ற பல்வேறு காரணங்களுக்காகவும் டாப்ஸி விவாகரத்து கேட்கிறார். இறுதியில் என்ன ஆனது? என்பதே கதை.

Thappad

என்னது.. ஒரு அறைக்கு விவாகரத்தா?‘ என்று நீங்கள் நினைத்தால், அது தான் இப்படம் சொல்ல வரும் கருத்து!

இப்படம் டாப்ஸி கதையை மட்டும் கூறவில்லை, இதே ரீதியிலான அவரது வீட்டு வேலைக்காரி, பக்கத்துக்கு வீட்டுப் பெண், பெண் வழக்கறிஞர் என்று பல்வேறு நபர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் கூறுகிறது.

டாப்ஸி விவாகரத்து முடிவை அவசரப்பட்டு எடுத்தது போலக் காட்டியிருந்தால், இப்படமே அர்த்தமற்றதாகி இருக்கும்.

ஆனால், கால அவகாசம் எடுத்து எதனால் இந்த முடிவுக்கு வந்தார் என்பதை அவரது பார்வையிலிருந்து விளக்கியிருக்கிறார்கள்.

இது போல படங்களில் குறையாகக் கருதுவது, கதையின் மையக்கருத்தையொட்டி அனைத்துக் கணவர்களையும் வில்லன்களாகவே காட்டுவது.

இதில் நல்லவராகக் காட்டப்படும் கணவராக வரும் ஒரே நபர் டாப்ஸி அப்பா மட்டுமே! அவரும் ஒரு தவறை உணர்வதாகக் காட்டப்படுகிறது.

ஒரே மாதிரி அனைவரையும் வில்லன்களாகக் காட்டாமல் நல்ல கணவர்களையும் காட்டியிருந்தால், இயல்பாக இருந்து இருக்கும்.

தற்காலத்தில் பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். பல குடும்பங்களில் தற்போது கணவர்கள் நிலை தான் பரிதாபமாக உள்ளது.

டாப்ஸி

அறை வாங்கிய சம்பவத்துக்குப் பிறகு டாப்ஸி உணர்வுகள், ஏமாற்றங்கள் மிகைப்படுத்தப்படாமல் மிக அழகாக, மென் சோகமாகக் காட்டப்பட்டுள்ளது.

இதுவே பலரை கவர்ந்து இருக்கக் காரணமாக இருந்து இருக்கலாம்.

டாப்ஸி கணவராக வருபவர் தன் பிரச்சனைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, நடந்த சம்பவத்தை எளிதாகக் கடந்து விடுவார்.

சுருக்கமாக டாப்ஸி மனநிலையில் இருந்து யோசிக்கவே மாட்டார்.

படம் சில காட்சிகளில் மெதுவாகச் செல்கிறது ஆனால், சலிப்பை தரவில்லை.

வேலைக்கார பெண்ணாக வருபவரின் நடிப்பு அபாரம். போகிற போக்கில் பலரின் நிலையைப் பளிச்சென்று பிரதிபலிக்கிறார்.

ரொம்ப எதார்த்தமாக இருந்தது இவரின் நடிப்பு. படத்தில் இவரின் நடிப்பே மிகக் கவர்ந்தது.

டாப்ஸி மாமியார் நல்லவர் என்றாலும், இறுதியில் டாப்ஸி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல், கண்ணீர் விடுவது அட்டகாசமான காட்சி.

எல்லோரும் டாப்ஸியிடம் கேட்பதே.. ‘ஒரு அறைக்கு.. விவாகரத்தா?!‘ என்பது தான். காரணம், ஆண்கள் குறித்த பழகிவிட்ட அனைவரின் எண்ணங்களே.

இதற்கு டாப்ஸி இறுதியில் விளக்கும் காரணங்கள் செம.

பெண்களே அனைத்தையும் அனுசரித்து, இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கடந்து செல்ல வேண்டுமா?! என்பதைத்தான் இப்படம் விவரிக்கிறது.

விவாகரத்து சரியா தவறா?

கணவரோ மனைவியோ அனைத்தையும் கலந்து பேசித் தவறுகளை மன்னித்து, தவறு செய்து இருந்தால் மன்னிப்புக்கேட்டு, ஈகோவை தவிர்த்து வாழ்க்கையைத் தொடர்வதே சரி.

விவாகரத்து அனைத்துக்கும் தீர்வாகாது.

தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் அல்லது வாழ்க்கைத்துணை மாறவே வாய்ப்பில்லை எனும் இறுதி சூழ்நிலையில் மட்டுமே விவாகரத்துக்கு முயற்சிக்க வேண்டும்.

இது என் தனிப்பட்ட கருத்து.

மனைவியை அடித்த கணவராக இருந்தால், மனைவியுடன் இப்படத்தைப் பார்த்து விடாதீர்கள். செருப்பால் அடித்தது போல இருக்கும்.

அனைவரையும் இப்படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாக அனைத்து ஆண்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Article 15 படத்தை இயக்கிய இயக்குநரின் படம் Thappad. Amazon Prime ல் உள்ளது.

Directed by Anubhav Sinha
Produced by Bhushan Kumar, Krishan Kumar, Anubhav Sinha
Written by Anubhav Sinha, Mrunmayee Lagoo
Starring Taapsee Pannu
Music by Songs: Anurag Saikia
Score: Mangesh Dhakde
Cinematography Soumik Mukherjee
Edited by Yasha Ramchandani
Release date 28 February 2020
Running time 142 minutes
Language Hindi

Read : Article 15

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. கிரி, இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்க்கலாம் என்றென்னி prime ல முயற்சி செய்தேன்.. எதிர்பார்க்காம வேற ஒரு வேலை வந்து விட்டதால் படத்தை இன்னும் பார்க்கவில்லை .. இந்த வாரம் படத்தை பார்க்க முயற்சிக்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி ..

  2. Giri, Please watch Section 375 (Akshaye Khanna), Good Newwz (Akshay Kumar), Dream Girl (Ayushman Khurana), Batla House & Romeo Akbar Walter (John Abraham), these are good movies.

  3. ரெண்டு நாட்களுக்கு முன்பு தான் படத்தை பார்த்தேன் .. மிக சிறந்த படம் .. கதைக்களம் வட இந்தியாவாக இருப்பதால், நமக்கு சில விஷியங்கள் புதுமையாக தோன்றலாம் .. நல்ல படம் .. எல்லா வீடுகளிலும் நடக்கின்ற விஷியங்கள் தான்.. என்ன ஒன்னு , நம்ம பக்கம் சண்டை வந்த கொஞ்சம் லோக்கலா இருக்கும் .. எனக்கு ஹீரோ வோட நடிப்பு பிடித்து இருந்தது .. மனைவியையும் , பசங்களையும் அடிக்க கூடாது என்பது என் பாலிசி .. காலம் பதில் சொல்ல வேண்டும்..

  4. அறை விட்டதனால், விவாகரத்து என்பது, அவ்வை சண்முகி படத்தில் 2 நிமிட காட்சி.
    விவாகரத்து வேண்டும் என்பதற்காக மீனா சொல்லும் எந்த காரணத்தையும் ஏற்காத நீதிபதி, அறைந்து விட்டார் என்பதை கேட்டவுடன் விவாகரத்து கொடுத்து விடுவார். 20 வருடத்துக்கு முன் வந்த படம் இது.
    வட நாட்டான் இன்னும் வளரனும்.
    நீங்கள் சொல்வது போல், விவாகரத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!