Trance (2020 மலையாளம்) சுவிசேஷ கூட்டங்கள்

5
Trance Movie

சிறு அளவில் Motivational Speaker பணியைச் செய்துகொண்டு இருக்கும் ஃபகத் பாசிலை சந்திக்கும் கெளதம் மேனன் மற்றும் ஒருவர் ஃபகத் பாசிலை கிறித்துவ மதக் கூட்டங்களில் பேசும் மதபோதகராக மாற வாய்ப்பைத் தருகின்றனர்.

மதபோதகரான ஃபகத் பாசில் இறுதியில் என்ன ஆனார் என்பதே Trance கதை.

சுவிசேஷ கூட்டங்கள்

இந்து மதத்தில் நடக்கும் திருட்டுத்தனம் மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்களில் காட்டப்பட்டு வந்தது.

முதல் முறையாக அதுவும் விரிவாகக் கிறித்துவ சுவிசேஷ கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டியுள்ளார்கள்.

சுவிசேஷ கூட்டங்கள், கர்த்தர் அழைக்கிறார்‘ என்று நகரம் முழுதும் சுவரொட்டி விளம்பரம் செய்து பெரியளவில், தனியாக நடத்தப்படும் கூட்டங்கள், அதில் நடக்கும் கோடிக்கணக்கான வியாபாரம் பற்றிய விமர்சனமே இப்படம்.

மேடையில் எப்படிப் பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், மக்களை எப்படி உணர்ச்சிப்பட வைக்க வேண்டும் என்று ஃபகத் பாசிலுக்கு ஆறு மாத காலத்துக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். Image Credit

சாதாரண Motivational Speaker ஆக இருக்கும் Viju Prasad என்ற ஃபகத் பாசில், ‘Pastor’ Joshua Carlton ஆக மாறி மிரட்டும் தருணம் ரணகளம். அந்தக்கதாப்பாத்திரமாகவே மாறியுள்ளார்.

ஏற்கனவே, Motivational Speaker ஆக இருந்ததால் (அதனால் தான் இப்பணிக்கு தேர்தெடுக்கப்படுவார்) இப்பணி எளிதாக இருக்கும்.

WhatsApp ல் நிறையக் காணொளிகள் பார்த்து இருப்பீர்கள், கிட்னி பிரச்சனை சரியாகி விட்டது, கண் பார்வை வந்து விட்டது, கேன்சர் கட்டி மறைந்து விட்டது, நடக்கவே முடியாமல் இருந்த கால் நடக்க முடிகிறது என்பார்கள்.

இவற்றையும், இதில் நடக்கும் மிகப்பெரிய வியாபாரம், விளையாடும் பணம் எல்லாவற்றையும் கிழித்துத் தொங்க விட்டுவிட்டார்கள்.

இவையனைத்தும் பொய் என்று தெரிந்தும் சென்று ஏமாறுகிறார்கள். எந்த மதமாக இருந்தாலும், ஏமாறுவதற்கு என்றே ஒரு பெருங்கூட்டம் இருப்பது கசப்பான உண்மை.

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

‘Pastor’ Joshua Carlton

சாதாரண மதபோதகராக வரும் ஃபகத் பாசில் வேறு லெவெலில் வளர்ந்து அவரை உருவாக்கிய கெளதம் மேனன் குழுவினருக்கே சிக்கலாகிறார். அவரை மாற்ற நஸ்ரியாவை பணிக்கு அமர்த்துகிறார்கள்.

என்ன உடை, ஒப்பனை செய்தாலும் நஸ்ரியாவின் குழந்தைத்தனமான முகம் கதாப்பாத்திரத்துக்குப் பொருந்தவில்லை.

முக்கால்வாசி வரை சரியாகச் செல்லும் படம், பின்னர் எப்படிப் போவது என்று தெரியாமல் தடுமாறுகிறது குறிப்பாக ஃபகத் பாசில் கதாப்பாத்திரம்.

இறுதியில் எப்படியோ முடித்து விட்டார்கள்.

துவக்கத்தில் கன்னியாகுமரி காட்டப்படுகிறது, மகிழ்ச்சி 🙂 . பல மலையாளப்படங்களில் தமிழ் பேசுபவர்கள் இயல்பாக வருகிறார்கள்.

மொழிமாற்றம் செய்வதில்லை, அனைவரும் தமிழ் புரிந்து கொள்கிறார்கள் போல.

இசை சரியாகக் கவனிக்கவில்லை, ஒளிப்பதிவு நன்றாக இருந்தது குறிப்பாக ஃபகத் பாசில் பேசும் காட்சிகளை உணர்ச்சிகரமாகக் காட்டியிருந்தார்கள்.

கன்னியாகுமரி, மும்பை பகுதிகளும் இயல்பாக இருந்தது.

எப்படி Trance படத்தைத் தைரியமாக எடுத்தார்கள்? யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? வழக்கு எதுவும் போடவில்லையா?!

சென்சாரில் பிரச்னையாகியுள்ளது, படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி விட்டதாம். அடப்பாவிகளா!

இது போல நடக்கும் சிறு கூட்டத்தின் காணொளி சமீபத்தில் WhatsApp ல் வந்தது, பார்த்ததும் Trance படம் தான் நினைவுக்கு வந்தது 🙂 .

இனி எப்போதும் இப்படம் நினைவுக்கு வரும், ஃபகத் பாசில் நினைவுக்கு வருவார்.

ஃபகத் பாசிலின் அட்டகாசமான நடிப்புக்காகவும், சுவிசேஷ கூட்டங்கள் எப்படி வியாபாரமாக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும் படத்தைப் பார்க்கலாம்

பரிந்துரைத்தது நண்பர் சூர்யா. Amazon Prime ல் உள்ளது.

Directed by Anwar Rasheed
Produced by Anwar Rasheed
Screenplay by Vincent Vadakkan
Starring Fahadh Faasil, Dileesh Pothan, Gautham Menon, Chemban Vinod Jose, Nazriya Nazim
Music by Songs: Jackson Vijayan
Score: Sushin Shyam, Jackson Vijayan
Cinematography Amal Neerad
Edited by Praveen Prabhakar
Production company Anwar Rasheed Entertainments
Release date 20 February 2020 (India)
Running time 170 minutes
Country India
Language Malayalam

Read : Take Off [மலையாளம் – 2017] “உலகப்படம்”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. கிரி, நான் ஆரம்பத்தில் பார்த்த மலையாள படங்களின் மோசமான அனுபவத்தின் காரணமாக கிட்டத்திட 8/9 ஆண்டுகள் எந்த மலையாள படத்தையும் பார்க்கவில்லை .. TAKEOFF படம் கொடுத்த ஒரு உற்சாகம் மலையாள படத்தின் மீது ஆர்வம் திரும்பியது .. கடந்த சில மாதங்களாக மலையாள படம் மட்டும் தான் பார்க்கிறேன் .. உண்மையில் பிரமிக்க வைக்கிறது ..

  TRANCE படம் முன்பு பார்த்தேன் .. எப்பா பாஹத் பாசில் நடிப்பு , தனி ரகம் !!! குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் , முன்பே கணிக்க முடிந்தாலும் அவரின் நடிப்பில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.. குறிப்பாக பத்திரிக்கை நபருக்கும் , பாசிலுக்குமான காட்சிகள் செமையாக இருக்கிறது.

  ஒரு பக்கம் மக்களின் அறியாமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்களது அறியாமையை வைத்து ஒரு கூட்டம் மிகப்பெரிய அளவில் மோசடி செய்து வருகின்றனர் வருத்தமான செய்தி !!! பாமர மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும் .. தாங்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றோம் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும் .. அப்போது தான் குறைந்த பட்சம் அவர்களது சந்ததிகளையாவது காப்பற்ற முடியும் ..

  படத்தை எப்படி வெளியிட்டார்கள் என்பது குறித்து எனக்கும் ஆச்சரியம் தான் !!! சில காட்சிகள் தூக்கப்பட்டு சென்சார் அனுமதி கிடைத்து இருக்கலாம் என நினைக்கிறேன்.. இசை நன்றாக தான் இருந்தது .. இப்படி பட்ட நடிகர் ஏன் சூப்பர் டிலேக்ஸ் படத்தில் நடித்தார் என்பது புரியவில்லை ..

  Kumbalangi Nights நேரம் இருப்பின் பார்க்கவும் .. பாஹத் பாசில் நண்பர்களுடன் சேர்ந்து சில தரமான படங்களையும் தயாரித்து வருகிறார் .. இந்த படமும் அவரது தயாரிப்பு தான் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..

 2. நல்லெதொரு பார்வை ஆனால் ஒலி அமைப்புப்பற்றி பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன் பாடத்தின் மிகப் பெரும் பலங்களில் அதுவும் ஒன்று
  நன்றியுடன்
  மதிசுதா

 3. @யாசின் ஆமாம் மிரட்டியிருக்கிறார் 🙂 உண்மையான அந்தக்கதாப்பாத்திரம் போலவே இருந்தார்.

  மக்களை ஏமாற்றுவது எளிது.. அதனால் தான் இவ்வளவு பேர் அனைத்து மதங்களிலும் இருந்தும் கிளம்புகிறார்கள். அவர்களோட நம்பிக்கை தான் இவங்க மூலதனம்.

  படம் பல பஞ்சாயத்துக்கு பிறகே வெளிவந்து இருக்க வேண்டும்.. படம் தந்த ஆர்வத்தில் இசையைக் கவனிக்கவில்லை. சூப்பர் டீலக்ஸ்.. நான் மறக்க நினைக்கும் படம். ப்பா சத்தியமா முடியலை.

  Kumbalangi Nights ஏற்கனவே நிறைய பேர் சொல்லிட்டாங்க.. பார்த்து விடுகிறேன் 🙂

  @மதிசுதா நீங்கள் இசையின் சிறப்பை விளக்கி இருந்தால் நானும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்து இருக்கும்.படத்தின் மீது இருந்த ஈர்ப்பில் இசையைக் கவனிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here