கிராமத்துப் பயணம் நிழற்படங்களுடன்

53
கிராமத்துப் பயணம் நிழற்படங்களுடன்

ந்தியா சென்ற போது நிழற்பட கருவியையும் எடுத்துச் சென்று இருந்தேன். கிராமத்துப் பயணம் எப்படியுள்ளது என்று பார்ப்போம் வாங்க 🙂 .

கிராமத்துப் பயணம்

1926 ம் ஆண்டு கருங்கற்களால் கட்டப்பட்ட வீடு.

தெரியாம எங்காவது இடித்தால் மண்டை காலி. வீடு மிகப் பெரியதாக இருப்பதால் (அந்தக் காலத்தில் கட்டப்பட்ட வீடு) நடந்து நடந்து கால் வலி வந்து விட்டதாக என் அம்மாவின் புலம்பல்.

தோட்டத்தில் இருப்பதால் அப்பப்ப சில பல பாம்புகள் எட்டி பார்ப்பதுண்டு.

கதவைச் சாத்திவிட்டு நிழற்படம் எடுத்ததால், கதவின் மீது காலை வைத்து என்னடா இவன் பண்ணுறான்னு என்னோட செல்ல நாய் “ரோனி” பார்த்துட்டு இருக்கு.

அக்கா பையன், மாமா! நான் தான் ரோனியை புகைப்படம் எடுப்பேன் என்று அடம்பிடித்து எடுத்த படம்.

இன்னொரு நாயான மல்லியை அக்கா பையன் நிழற்படம் எடுக்கிறேன்னு, தூங்கிட்டு இருந்த மல்லியை எழுப்ப, அது அரை தூக்கத்தில் வெளியே வந்த போது எடுத்த நிழற்படம். டேய் ..உங்க இம்சை தாங்கலன்னு பார்க்குது 🙂 .

விருப்ப கடவுள் முருகன் கோவில் இது. எப்போது ஊருக்குச் சென்றாலும் இங்கே செல்லாமல் திரும்பமாட்டேன்.

எந்த ஒரு ஆடம்பரமும் போலித்தனமும் இல்லாத மிக எளிமையான அழகான கோவில்.

பல படங்களின் படபிடிப்புகள் இங்கே நடந்துள்ளன. முந்தய நாள் மழை பெய்து இருந்ததால் மேக மூட்டம் மற்றும் மரங்களின் நிழலோடு இருண்டு காணப்படுகிறது.


கோவிலின் முன்புற பகுதி, இங்கிலிஷ்காரன் படத்தில் சத்யராஜ் தேங்காய் உடைப்பாரே அதே இடம் தான். சின்னகோடம்பாக்கமான கோபி அருகே உள்ளே என் கிராமம்.


கோவிலில் உள்ள மயிலின் நெருக்கமான ஒரு படம். நான் மிக அருகில் அன்று தான் மயிலைப் பார்த்தேன், பட்டுப் போன்ற அதன் வண்ணமயமான தோகையும் உடலும் அழகுன்னா அழகு அப்படியொரு அழகு.


டேய்! நகரத்துல தான் உங்க தொல்லை தாங்க முடியல. இங்கே வந்து ஏன்டா இம்சை பண்ணுறேன்னு முறைக்குது. இன்னொரு முறை கிட்டே வந்தே மவனே! கண்ணைக் கொத்திடுவேன்னு முறைக்குது


வேண்டுதல் நிறைவேறியதுக்காகச் சேவலை கோவிலுக்குக் காணிக்கையாக்கி பறக்க விடும் பக்தர்


ஆகா! நம்மள பிரியாணி போட்டுடுவாங்கன்னு நினைத்து இருந்தேன் நல்லவேளை தப்பித்தோம்னு உற்சாகமாகச் சேவல் கூவுகிறது கிடைத்த சுதந்திரத்தை எண்ணி.


உழவுக்கு தயாராக உள்ள இடம், இன்னும் ஒரு மாதம் கழித்து பார்த்தால் கண்கொள்ளா கட்சியாக இருக்கும். கோவிலின் மேல் இருந்து எடுத்த படம்.


கோவிலின் கீழ் பகுதி மரங்கள் சூழ்ந்து ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது. இந்தக் கோவில் இருக்கும் இடம் பெயர் கருங்கரடு.

எத்தனையோ கோவில் சென்று இருந்தாலும் எப்போதும் என் மனதுக்கு பிடித்த ஒரே கோவில்.

பசுமை சூழ்ந்து இருப்பதும், கிரானைட் கற்கள் ஆடம்பர வசதிகள் இல்லாமல் மிக எளிமையான பழமை மாறாமல் இருப்பதும் ஒரு காரணம்.

கால் கழுவ கூடக் கிணற்றில் வாளியில் இருந்து தான் தண்ணீர் எடுக்க முடியும். தற்போது குழாய் அமைத்துள்ளார்கள்.

வயல் வெளி படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்.

தொடர்புடைய கட்டுரை

சின்னக் கோடம்பாக்கம் கோபி வயல்வெளி காட்சிகள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

53 COMMENTS

  1. அட்டகாசமா இருக்கு வீடும் மரங்களும் சுற்றுப்புறமும் கோயில்களும்.

    இப்படி எளிமையான கோவில்களில்தான் நிம்மதியா இருந்து சாமி கும்பிட முடியுது.

    ரோனியும் மல்லியும் செல்லங்கள்.

    எங்க நாய் ஒன்னு மல்லி மாதிரியேதான். அதுக்குப்பேர் வெள்ளச்சி. பூனாவில் இருந்தோம் அப்ப.

    இன்னும் படங்களைப் போடுங்க.

  2. கிரி,

    படங்கள் நல்லா இருக்கு…?

    எந்த ஊரு…..கோபியா ?

  3. துளசி கோபால் said…

    //இப்படி எளிமையான கோவில்களில்தான் நிம்மதியா இருந்து சாமி கும்பிட முடியுது.//

    சத்யமான உண்மைங்க. பழனியும் முருகன் தான் அங்கே போய் கும்பிட முடியுதா ? கொஞ்சம் பணம் கொடுத்தா சாமியையே வித்துடுவாங்க. உங்களால் முடிந்தால் இந்த கோவில் வந்து பாருங்க அப்புறம் சொல்லுவீங்க நான் சொல்வது எவ்வளவு உண்மைனு.

    //ரோனியும் மல்லியும் செல்லங்கள்//

    ஆமாங்க ரொம்ப செல்லம். அதிலையும் மல்லி யை காலையில் நான் ஒருவன் மட்டுமே கட்ட முடியும். அம்மா சொல்லுவாங்க நீ வந்தா மட்டும் தான் கம்முனு இருக்குன்னு, இல்லேன்னா இதை காலைல கட்டுறதுகுள்ள பெரும்பாடுன்னு.

    //எங்க நாய் ஒன்னு மல்லி மாதிரியேதான். அதுக்குப்பேர் வெள்ளச்சி. பூனாவில் இருந்தோம் அப்ப.

    இன்னும் படங்களைப் போடுங்க.//

    உங்களுக்கும் நாய் பிடிக்குமா! வயல் வெளி படங்களை போடுகிறேன், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

  4. கோவி.கண்ணன் said…
    //படங்கள் நல்லா இருக்கு…?

    எந்த ஊரு…..கோபியா ?//

    கோபியே தாங்க ..முழு அழகு அடுத்த பதிவில் வரும். எனக்கே ரொம்ப பெருமையா இருந்தது அந்த அழகை பார்த்து.

  5. ஜெகதீசன் said…

    // கிரி,
    படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.//

    நன்றிங்க ஜெகதீசன். நம்ம சிங்கப்பூர் க்கு போட்டியா வேறு அழகில் நம்ம ஊரிலும் அட்டகாச இடங்கள் உண்டு.

  6. //எம்.ரிஷான் ஷெரீப் said…

    சூப்பர் கிரி..

    உங்ககூடவே கிராமத்துக்கு வந்த மாதிரி அட்டகாசமான அனுபவம் :)//

    வாங்க ரிஷான். உண்மையான கிராமத்து அழகு வயல் வெளிகள் தான். அதை அடுத்த பதிவில் பாருங்க.

  7. //கிராமத்து டீக்கடை, கிராமத்து மாட்டு வண்டி, கிராமத்து பியூட்டி பார்லர் (சலூன்), கிராமத்து பெட்டிக்கடை, கிராமத்து கிணறு, கிராமத்து மாட்டுத்தொழுவம், கிராமத்து பாட்டி என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை உங்கள் கேமராவில் பதிவீட்டீர்களா?//

    வாங்க சினிமா நிருபர். எனக்கு பொதுவா எனக்கு வரும் பின்னூட்டங்கள் மிக குறைவு. அதனால் எனக்கு நீங்கள் சொல்வதை போல் எடுக்க ஆர்வம் இருந்தாலும், யாரும் எதுவும் சொல்வதில்லை என்பதால் (உங்களை போல் ஒரு சிலரை தவிர்த்து) அதிகமாக படங்களை எடுக்கவில்லை. இருந்தாலும் நீங்கள் ஏமாற்றம் அடையாத அளவுக்கு படங்கள் இருக்கும். அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக எடுத்து போடுகிறேன். நான் எல்லாம் பக்க கிராமத்துல இருந்து வந்தவங்க, இதை கூட பண்ணலைனா எப்படி.

  8. Siva said
    //என் அன்னையின் பாதம் சுவடுகள் பதிந்த ஒவ்வொறு இடமும்
    எனக்கு சொர்கம்.//

    சிவா மனசை தொட்டுட்டீங்க உங்க கவிதையால. பின்னி பெடலேடுக்கறீங்க போங்க.

    //கிரி காதுகுத்தலுக்கு கிடா வெட்டினீங்ளா ???//

    காது குத்தில்லீங்க சிவா. வெறும் மொட்டை தான்.

    சிவா உங்களுக்காக அடுத்த பதிவில் என்னுடைய கருங்கல் வீட்டை நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை போடுகிறேன் பாருங்க.

  9. // முரளிகண்ணன் said…
    அழகு அழகு மேலும் அழகு//

    வாங்க முரளிக்கண்ணன் ..”மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு” னு நம்ம கேப்டன் பாடும் இடத்தை அடுத்த பதிவில் போடுகிறேன், அதையும் பாருங்க.

  10. // வடுவூர் குமார் said…
    இந்த வீடு விற்பனைக்கா?
    சும்மா தாமாசுக்கு:-))//

    வாங்க வடுவூர் குமார். இந்த வீடு எங்க சுக துக்கம் அனைத்திலும் கலந்த எங்க குடும்ப உறுப்பினர். அதுவும் இல்லாம என் தாத்தா காங்கிரஸ் கமிட்டீ தலைவராக இருந்த போது, எங்க வீட்டுக்கு காமராஜர் எல்லாம் வந்து இருக்காரு அதனால ரொம்ப பழைமை வாய்ந்த மற்றும் எங்களுக்கு பெருமைக்குரிய வீடு. விடுமுறை நாட்களில் என் அக்கா குழந்தைகள் வரும் போது தான் அத்தனை பெரிய வீடே கட்டியதின் உண்மையான பயன் பெரும். சாதாரண நாட்களில் என் அம்மாவுக்கு பயமாக இருப்பதாக கூறுவார்கள்.

  11. //கோவில் மிகவும் அமைதியாக ரம்யமாக உள்ளது. இப்படி இருக்கும் கோவில்களில் விசேஷம் அதிகம், மேலும் நிம்மதியாக சாமி கும்மிட்டு கடவுளை நேரில் மிக நெருக்கத்தில் பார்த்த உணர்வோடு வரலாம்//

    ஆமாம் வித்யா. பொதுவாக முக்கியஸ்தர்கள் வருகிறார்கள் என்று சாமியை விட அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அர்ச்சனை என்கிற பெயரிலும் சிறப்பு தரிசனம் என்கிற பெயரிலும் மக்களிடம் கொள்ளை அடித்து கோவில் திருப்பணி என்கிற பெயரில் அழகாக இருக்கும் கடவுளை அலங்காரம் செய்கிறேன் என்று அசிங்கப்படுத்தி, எளிமை அழகை குறைத்து ..இத்தனை கொடுமைகளையும் பார்க்க சகிக்காமல் தான் இது போல கோவில்களுக்கு போக பிடிக்காமல் இப்படி பட்ட கோவில்களை விரும்புகிறேன். இதில் கிடைக்கும் நிம்மதி வேறு எங்கும் எனக்கு கிடைப்பதில்லை. கடவுளை தரிசித்த பிறகு எப்போதும் படத்தில் இருக்கும் வயல் வெளியை (தற்போது இன்னும் பயரிடவில்லை) பார்த்தவாறு படிக்கட்டில் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருப்பது எனக்கு பிடித்தமான ஒன்று,

  12. // பிரேம்ஜி said…
    கிரி! ரொம்ப ரொம்ப நன்றி. பழைய ஞாபகம் வரவெச்சிட்டீங்க.//

    பிரேம்ஜி எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கிறது. நான் இந்த படங்களை போடும் போது, சரி இதை எல்லாம் யாரு ரசிக்க போகிறார்கள், இப்போது எல்லாம் சிங்கப்பூர், அமெரிக்கா துபாய் படங்களை போட்டால் தான் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள் என்று நினைத்தேன். இதை என்னோட திருப்திக்காக என் ஊரையும் கிராமத்து வீட்டையும் போடுவோம் என்று போட்டேன். இத்தனை பேர் கிராமத்து விசிறிகளாக இருக்கிறார்கள் என்று தெரிந்து இருந்தால் நான் இன்னும் சினிமா நிருபர் கூறியது போல் கிராமத்து பாட்டி, சலூன் கடை, பெட்டி கடை, டீ கடை மற்றும் வெகுளியான கிராமத்து மக்கள்னு பலரை புகைப்படம் எடுத்து இருப்பேன். சரி விடுங்க நான் எடுத்த வயல்வெளி படங்களை பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. உங்க வருகைக்கு நன்றி பிரேம்ஜி.

  13. நண்பர் கிரி…

    உங்களது கிராமத்து பயண புகைப்படங்களை காட்டி என்னைப் போன்றவர்களையும் உங்கள் கிராமத்துக்கே அழைத்து சென்றுவீட்டீர்கள். கிராமத்து டீக்கடை, கிராமத்து மாட்டு வண்டி, கிராமத்து பியூட்டி பார்லர் (சலூன்), கிராமத்து பெட்டிக்கடை, கிராமத்து கிணறு, கிராமத்து மாட்டுத்தொழுவம், கிராமத்து பாட்டி என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை உங்கள் கேமராவில் பதிவீட்டீர்களா? பதிந்திருந்தால் அவ்வப்போது வெளியிட்டு, எனக்கும் உங்கள் கிராமத்தை சுற்றி காட்டுங்களேன். வயல்வெளியழகு கண்டிப்பாக கண்கொள்ளா காட்சிதான். நானும் ஒரு கிராமத்துக்காரன்தான் என்கிற ரீதியில் வயல்வெளியையும், வரப்பு நீரையும் எத்தனையோ முறை ரசித்திருக்கிறேன்..! உங்கள் கிராமத்து வயல்வெளிகளை காணவும் காத்திருக்கிறேன்! நன்றி!

  14. வணக்கம் கிரி

    இதை படிக்கும் போது மனதில் தோன்றிய கவிதை!

    இன்று என் இல்லத்தின் வயது 82 {2008-1926}

    அன்று கருங்கற்களால் கட்டிய பாசக்கூடு

    ராமர் பாதம் பூசை செய்வதனால் மோச்சம் உன்டாம்.

    மன்னியுங்கள் நண்பர்களே!

    என் அன்னையின் பாதம் சுவடுகள் பதிந்த ஒவ்வொறு இடமும்
    எனக்கு சொர்கம்.

    புதுவை சிவா

    கிரி காதுகுத்தலுக்கு கிடா வெட்டினீங்ளா ???

  15. கிரி முடியல கிரி முடியல… ரொம்ப அழகா இருக்கு உங்க வீடும் வீட்டை சுற்றி மரங்களும். கோவில் மிகவும் அமைதியாக ரம்யமாக உள்ளது. இப்படி இருக்கும் கோவில்களில் விசேஷம் அதிகம், மேலும் நிம்மதியாக சாமி கும்மிட்டு கடவுளை நேரில் மிக நெருக்கத்தில் பார்த்த உணர்வோடு வரலாம். அடுத்த படங்களுக்கு காத்திருக்கிறோம் சீக்கிரம் போடுங்கள்.

  16. கிரி! ரொம்ப ரொம்ப நன்றி. பழைய ஞாபகம் வரவெச்சிட்டீங்க. ரொம்ப அருமையா இருக்கு ஊரும் புகைப்படங்களும்.

  17. // ச்சின்னப் பையன் said…
    சூப்பரா இருக்கு வீடும், கோவிலும்… எல்லா படமும்… அருமை.. அருமை//

    வாங்க ச்சின்னப் பையன் ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு. சரி நீங்க வருங்கால சூப்பர் ஸ்டார் ரிதீஷ் படத்தை வேற போட்டு பயமுறுத்தறீங்க 😉 நான் சரியா தானே சொல்றேன் இல்ல வேற யாராவதா? நான் சொல்வது சரின்னா ரிதீஷை பற்றி நானும் துளசி மேடமும் ஒரு விவாதமே நடத்தி இருக்கோம் பாருங்க http://girirajnet.blogspot.com/2008/05/blog-post_25.html :-)))))

  18. // சயந்தன் said…
    என் யாழ்ப்பாணத்து கிராமத்து வீட்டை நினைவு படுத்தியது உங்கள் வீட்டின் படம்.
    எப்போது போவோம்… எப்போது காண்போம் … :(//

    கவலை படாதீங்க சயந்தன். மாற்றங்கள் வரும் கவலைகள் யாவும் தீரும். மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாமல் இருப்பது.

  19. என் யாழ்ப்பாணத்து கிராமத்து வீட்டை நினைவு படுத்தியது உங்கள் வீட்டின் படம்.

    எப்போது போவோம்… எப்போது காண்போம் … 🙁

  20. வாங்க சக்தி எப்படி இருக்கீங்க? நான் பதிவு தொடங்கிய போது எட்டி பார்த்தீங்க..அதற்கப்புறம் இப்ப தான் வந்து இருக்கீங்க போல 🙂

    நம்ம ஊர்ல இருக்கிற நிம்மதி சந்தோசம் நண்பர்கள் எங்க போனாலும் கிடைக்காதுங்க 🙁

    சரி நீங்க பதிவு தொடங்குவது என்ன ஆச்சு? எப்ப கோதாவுல இறங்க போறீங்க 🙂

  21. என் முதல் விமர்சனம் : சொர்கமே என்றாலும் அது நம்ப ஊரு போலாகுமா

  22. கிரி அவர்களே,
    சென்னைய விட்டு வேற எந்த ஊருக்கும் செல்லாத எனக்கு நல்லா கோபிய சுத்தி காமிச்சிங்க, அப்படிய எங்க அக்கா ஊருக்கு போன மாதிரி இருந்துது. ஒரு சின்ன குறை, இதனோட குஷ்பூ இருந்த ரூமய ஒரு போட்டோ புடிச்சு போட்டு இருக்கலாம்.
    மனசுக்கு ஒரு திருப்தியா இருந்திருக்கும். அடுத்தவாட்டி போன கண்டிப்பா, ஓகேவா ?

  23. //ஒரு சின்ன குறை, இதனோட குஷ்பூ இருந்த ரூமய ஒரு போட்டோ புடிச்சு போட்டு இருக்கலாம்//

    ஹா ஹா ஹா அடுத்த வாட்டி நமீதா வராங்களாம், அவங்க போன பின்பு கட்டில் உடையாம இருந்தா போட்டோ புடிச்சு போடுறேன் :-)))

    பின் குறிப்பு: உங்க பின்னூட்டம் என்னுடைய அடுத்த பதிவுக்குண்டானது, இருந்தாலும் பாதி சரி.

  24. உங்கள் கிராமத்துக்கே செண்று வந்த உணர்வைக் கொடுத்தன படங்களும், தங்கள் வர்ணனைகளும்!

  25. //உங்கள் கிராமத்துக்கே செண்று வந்த உணர்வைக் கொடுத்தன படங்களும்//

    ரொம்ப நன்றிங்க.

    //தங்கள் வர்ணனைகளும்!//

    நம்ப வர்ணனைய வேற நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களே ம்ஹீம். சரி பாப்போம் (வடிவேல் ஸ்டைல் ல படிக்கவும்) :-)))

  26. //goma said…
    கிராமத்தேயே ஒரு கலக்கு கலக்கீட்டீங்க.தெளிவான விளக்கங்களோடு அருமையான படங்கள் .பாராட்டுக்கள்//

    நன்றிங்க. தெளிவான விளக்கம்னு வேற கூறி, என்னை இன்ப அதிர்ச்சி !!! அடைய வைத்துவிட்டீர்கள்.

  27. கிராமத்தேயே ஒரு கலக்கு கலக்கீட்டீங்க.தெளிவான விளக்கங்களோடு அருமையான படங்கள் .பாராட்டுக்கள்

  28. First of all sorry for my post Post in English

    when it comes to blogging it was totally different from site design.

    blogging is more likely writing the diary of our own records.

    And your’s blog touches the real concept .

    The images and your comments are really nice and keep going.

    And we expect more post regarding this ,hope that it works.

    Living closer with the nature will solve the most of the problems.

    One Earth let us protect it.

    Long Live Holy Tamil

  29. //Exlpore Wisdom said…
    when it comes to blogging it was totally different from site design.
    blogging is more likely writing the diary of our own records.
    And your’s blog touches the real concept .//

    உங்கள் பாராட்டை கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

    //The images and your comments are really nice and keep going.
    And we expect more post regarding this ,hope that it works.
    Living closer with the nature will solve the most of the problems.//

    உங்களை போல் கூறுபவர்களின் வார்த்தைகளே என்ன மேலும் எழுத தூண்டுகிறது அல்லது உற்சாகப் படுத்துகிறது.

  30. //லேகா said…
    கிரி..
    புகைப்படங்கள் வழியாக ஓர் அழகிய கிராமத்திற்கு சென்று வந்த அனுபவத்தை குடுத்துள்ளீர்கள்//

    நன்றிங்க லேகா.

    //எனக்கு என் சொந்த கிராமத்தின் நினைவுகள் வந்துவிட்டது..//

    நீங்க எந்த ஊர்? உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க.

  31. கிரி..
    மலையும்,வெயிலும்,கடலும் போல கிராமங்களுக்கு என்று தனி அழகு உண்டு..புகைப்படங்கள் வழியாக ஓர் அழகிய கிராமத்திற்கு சென்று வந்த அனுபவத்தை குடுத்துள்ளீர்கள்..நன்றி..எனக்கு என் சொந்த கிராமத்தின் நினைவுகள் வந்துவிட்டது..

    அன்புடன்
    லேகா
    http://yalisai.blogspot.com/

  32. //தமிழன்… said…
    சூப்பர் படங்கள் கிரி அண்ணன்…//

    ரொம்ப நன்றிங்க தமிழன்

  33. //இவன் said…
    ஒருநாள் உங்க ஊருக்கு வரனும்ய்யா…. அவ்வளவு ஆசையா இருக்குது படங்களைப்பார்க்கும்போது//

    கோபி உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    //எனக்கு ஆஸ்திரேலியாவில இருந்து உங்க செலவில ஒரு return ticket போட்டிடுங்க//

    அதுக்கு முன்னாடி நீங்க டிக்கெட் பணத்தை அனுப்பிடுங்க என் கணக்கிற்கு 🙂

  34. ஒருநாள் உங்க ஊருக்கு வரனும்ய்யா…. அவ்வளவு ஆசையா இருக்குது படங்களைப்பார்க்கும்போது…எனக்கு ஆஸ்திரேலியாவில இருந்து உங்க செலவில ஒரு return ticket போட்டிடுங்க

  35. //உடன்பிறப்பு said…
    சுப்பர் டூப்பர்//

    நன்றி உடன்பிறப்பு

    ========================================================

    //கலையரசன் said…
    எத்தனை நாள் லீவில் போனீங்க பாஸ்? //

    கலையரசன் இது பழைய பதிவு..ஊருக்கு இன்னும் இரண்டு நாளில் செல்கிறேன்

    //என்ஜாய் பண்ணுங்க… புகைப்படங்கள் அருமை!! //

    நன்றி 🙂

  36. சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா !! உங்க கூட சேர்ந்து நானும் இந்த பாட்டு படுவேங்க அண்ணா.. என்கிட்டே இன்னும் அழகான போட்டோஸ் இருக்கு.. இப்போ எடுத்தது..கோபியில எங்கண்ணா வீடு?

  37. பிரதீபா கோபி பற்றிய படங்கள் இருந்தால் கண்டிப்பாக பதிவிடவும். அடுத்த மாதம் ஊருக்கு வருவேன் என்று நினைக்கிறேன்..ம்ம்ம் பார்ப்போம்.

    நீங்க படத்துல பார்க்கிறது என்னோட கிராமத்து வீடு..நாங்க கூகலூர் ல இருந்தோம். தற்போது கோபி (வீடு) கள்ளிப்பட்டி பிரிவு அருகே உள்ளது. அங்கேயும் நன்றாக உள்ளது. கோபி என்றாலே அது எப்போதும் அழகு தான் 🙂 என்ன இப்ப கூட்டம் அதிகம் ஆகி விட்டது.. அதனால் முன்பு இருந்த குளிர்ச்சி குறைந்து விட்டது. எல்லோரும் நம்ம ஊருக்கு வந்துட்டு போகாம இங்கேயே இருந்து கோபியை ஒரு வழி ஆக்கிட்டாங்க 🙁 நகரில் மரங்கள் கூட குறைந்து விட்டது. தற்போது தினமும் மழை தூறிக்கொண்டு இருக்கிறது என்று என் அம்மா கூறினார்கள்.

  38. கிராமத்து படங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது. நீகள் பசுமை விரும்பி என்றால் எனது வாழ்த்துக்கள் . நானும் பசுமை விரும்பிதான் . ஆனால் செடி, மரங்களை நட்டும் அவற்றை பாதுகாத்தும் வர எனக்கு சரியான இடம் அமையவில்லை…

  39. Giri,

    Very nice photos I don’t know how come I did not see them for so long. Indeed nature at its best those temples and your house with those trees around and the top view of the fields … yeah indeed makes me feel jealous and without any hesitations make me ask your address and let me know whether we can meet there… when both of us are in India.

    And your pets lovely… Ceasar came to my mind should buy some pedegree for chellaps today

    Kamesh

  40. நானும் உங்களைப்போல இயற்க்கை விரும்பி.
    திடீர் என்று என் கிராமத்து நியாபகம் வந்தது
    சாதரணமாக உங்கள் பக்கத்தை பார்த்தேன் .
    உங்கள் ஊரைப்பற்றி அழகாகவும் நகைச்சுவை கலந்து கூறியிருந்திகள். இ லைக் இட் ப்ரோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here