அரசாங்கம் கேப்டனின் 150 படம் என்பதால் சென்றோம். ரஜினி, கமல், பிரபு, சரத் குமார் போன்ற பெரிய நடிகர்களின் 100 வது படம் தோல்வி அடைந்த நிலையில் அட்டகாச வெற்றியுடன் வெற்றி பெற்றவர் கேப்டன் பிரபாகரன்.
அவருடைய 150 வது படம் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்க வில்லை என்றாலும் தோல்வி இல்லை என்றே கூற வேண்டும். Image Credit
அரசாங்கம்
தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய புள்ளிகள் (அரசியல் சாராதவர்கள்) தொடர்ச்சியாகக் கொல்லப்படுகிறார்கள். இதைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார்கள்.
இந்தப் பணிக்காக இவர் சென்னை வரும் போது விமானத்தில் காணாமல் போய் விடுகிறார்.
அனைவருக்கும் குழப்பம் விமானம் ஏறி அதைத் தங்கையிடமும் கைத்தொலைபேசியில் கூறி விட்டு, வரவில்லை என்றவுடன் பலருக்கும் குழப்பம்.
விமானத்தில் வந்தவர் சென்னையில் இறங்கவில்லை என்றால்?… இதைக் கண்டுபிடிக்க வரும் “பெசல்” அதிகாரி தான் நம்ம கேப்டன்.
இவர் காணாமல் போனவரின் தங்கையைத் தான் திருமணம் செய்து இருப்பார்.
ரியாஸ்கான் உதவியுடன் கேப்டன் விசாரணையைத் துவங்குகிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.
பன்ச் வசனங்கள் இல்லை
கேப்டன் எந்தப் பஞ்ச் வசனங்களையும், தன் கதாபாத்திரம் மீறி எந்தச் செயலையும் செய்யாமல் இயல்பாக ஒரு படம் கொடுத்தற்காகப் பாராட்டலாம்.
வழக்கமான கேப்டன் படம் போல் இல்லாமல் வித்யாசமாக உள்ளது.
மிகவும் பொறுமையாக நடித்துள்ளார், சில சமயம் அவருடைய பழைய சுறுசுறுப்பைக் காண முடியவில்லை. வயதாகி விட்டது என்பதை நடை காட்டி கொடுக்கிறது.
அவசரமாக வருவதை அடக்கி வைத்து இருக்கும் ஒருவர் இருப்பது போல் மிகவும் அவஸ்தையாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளார், ஏன் என்று தெரியவில்லை.
டூயட் வேண்டாம் கேப்டன்
கேப்டனுக்கு ஒரு டூயட் பாடல் உண்டு, படத்திலேயே இது தான் மிகக் கொடுமை, கையில் ரிமோட் இல்லையே ஓட்டுவதற்கு என்று நமக்குத் தோன்றுகிறது.
கேப்டன் தயவு செய்து இனிமேல் டூயட் எல்லாம் வேண்டாம் ரமணா போன்ற கதைகளே உங்களுக்குப் பொருத்தம்.
மக்களும் இதை விரும்பவில்லை, குறைந்த பட்சம் உங்க தொப்பையையும் கழுத்தில் தொங்கும் சதையையும் குறைத்து கொண்டாவது டூயட் தொடருங்கள்.
கேப்டனுக்கு மஞ்சள் சிகப்பு வண்ண கோட் இல்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். அவருடைய விக் தான் கொடுமையாக உள்ளது.
உலகத் தீவிரவாதிகளிடம் இருந்து நம் நாட்டின் மானத்தைக் காப்பாற்றும் கேப்டன், கனடாவில் டூயட் பாடி நம்ம மானத்தை வாங்கி விடுவார் போல இருக்கேன்னு பயந்து இருந்த வேளையில் அப்படி எதுவும் செய்யாமல் நம் வயிற்றில் பாலை வார்த்தார்.
அவருக்குக் கனடாவில் உதவுவது ஒரு தமிழக!! கனடா பெண் காவலர். அதனால் தன் பங்குக்குக் கொஞ்சம் கவர்ச்சி காட்டி “டமிலை” கொலை செய்கிறார்.
இந்தப் படத்தில் கேப்டன் ஆங்கிலம்!! அதிகம் பேசி நம்மைக் கதி கலங்க வைக்கிறார். அவருடைய ஆங்கிலம் சரியான ஆங்கிலத்துடன் சில எடுத்துக்காட்டு.
கேப்டன் தான் ஆங்கிலத்தைக் கொலை செய்கிறார் என்றால் வில்லன் நடிகர் மலையாளி என்பதால் அவரும் ஆங்கிலம் & தமிழைப் படாது பாடு படுத்துகிறார்.
இவரை ஒரு பெரிய வில்லனாக அதுவும் முக்கியமாகக் கனடாவில் இருக்கும் வில்லனாக ஒப்புக்கொள்ள முடியவில்லை.
கேப்டன் மற்றவர்களிடம் பேசும் போதும் சரி நடந்து கொள்ளும் முறையும் சரி மிக அடக்கமாக நடித்துள்ளார்.
தேவையற்ற நடிப்பு என்று எதுவும் இல்லை அதுவும் குறிப்பாகக் கனடாவில். சண்டை காட்சியில் முன்பு இருந்த வேகம் இல்லை.
மொத்தத்தில் கேப்டன் படம் ஒருமுறை பார்க்கலாம்.
நாங்க ரொம்ப எதிர்பார்க்கலை என்பவர்கள் தாராளமாகச் செல்லலாம்.
குறைந்தபட்சம் இவர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பாக நடிக்க முயற்சித்ததைப் பாராட்டுவதற்காவது.
Directed by R. Madhesh
Produced by L. K. Sudhish
Written by R. Madhesh
Starring Vijayakanth, Navaneet Kaur, Sheryl Pinto, Rahul Dev, Biju Menon, Sriman, Riyaz Khan
Music by Srikanth Deva
Cinematography Venkatesh
Edited by Anthony
Release date 9 April 2008
Running time 156 minutes
Country India
Language Tamil
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
🙂
ஒரு முறை பார்க்கலாம் என்னத்தெ கெட்டுப்போச்சி….
பாருங்க! பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க
கிரி என் பார்வையுடன் மிகவும் ஒத்துப்போகிறது உங்கள் விமர்சனம்
RamannaNetru intha padam parthaen. Intha Blog il sonnar pol, captain padangalai vida migavum vidyasamai irunthathu.
நெருப்பு நரியில் எழுத்தெல்லாம் ஜிலேபி ஜிலேபியா தெரியுது.இருங்க நான் அதியனில் மாற்றி படித்துவிட்டு வருகிறேன்.இது ஒரு துண்டு பின்னோட்டம் (பேருந்தில் இடம் பிடிக்க போடுவது போல்)
அட அட அட படமே பார்த்த மாதிரி நல்ல பெசலா இருக்கு
// Ramanathan said…
Ramanna
Netru intha padam parthaen. Intha Blog il sonnar pol, captain padangalai vida migavum vidyasamai irunthathu.//
உங்கள் வருகைக்கு நன்றி ரமணா
//நெருப்பு நரியில் எழுத்தெல்லாம் ஜிலேபி ஜிலேபியா தெரியுது//
ஹா ஹா ஹா
// கிஷோர் said…
அட அட அட படமே பார்த்த மாதிரி நல்ல பெசலா இருக்கு//
:-))) நீங்க சொன்னத பார்த்து கேப்டன் sack (shock) ஆகி இருப்பாரு :-))))
//கடைகாரிடம் ரூ 5- பாக்கி இல்லை என எனக்கு அரசாங்ங்கத்தை ரூ 5- க்கு கொடுத்தார்//
ஹா ஹா ஹா சிவா என்ன ஆளையே காணோம். சரி படத்த பார்த்தீங்களா இல்லையா? அதை சொல்லுங்க.. உங்களோட கருத்து என்ன?
வாங்க சர்வேசன்.
நன்கு படித்தவங்களும் தவறாக பேசுகிறார்கள் என்பது உண்மை தான். அதற்காக கேப்டன் பேசுவது தவறு இல்லை என்று ஆகி விடுமா? ஒரு கட்சியின் தலைவராக வேறு இருக்கிறார்.
நமது தமிழகம் தான் இருப்பதிலேயே பரவாயில்லை!!!!!, மற்ற மாநிலத்தார் ஆங்கிலத்தை கொலை செய்து கொண்டு இருப்பது உண்மை தான்.
கேப்ட்டனோட சின்ன கௌண்டர்க்கு அப்புறம் தியேட்டர் போயி பார்க்கிற படமாச்சனு யோசிச்சு வந்தேன், ஆனா கேப்ட்டனோட இங்கிலிஸும், அவரோட என்ட்ரி சீனும் (செம காமெடி சீட்ல உட்கார முடியல), நல்லா கலரா ரெண்டு-மூணு வடஇந்தியா கதாநாயகிகள்னு மாதேஷ் படத்த ரொப்பிடாறு. ஆனா ஒரு சின்ன டவுட் “தமிழ் தமிழ்” மேடையில் பேசற கேப்டன் ஏன் ஒரு தமிழ் கதாநாயகிக்கு சான்ஸ் குடுக்கல???.
//கேப்ட்டனோட இங்கிலிஸும், அவரோட என்ட்ரி சீனும் (செம காமெடி சீட்ல உட்கார முடியல), //
அத தான் திரை அரங்கில் பார்த்தேனே :-))) பொது மக்களுக்கு!!! என் கூட வந்த நபர் இவர் தாங்க :-))) லோகன் நீங்க பண்ணுன கலாட்டாவுல கேப்டன் என்ட்ரி காட்சிய ஒழுங்கா பார்க்க முடியாம போச்சு 🙁
//ஒரு சின்ன டவுட் “தமிழ் தமிழ்” மேடையில் பேசற கேப்டன் ஏன் ஒரு தமிழ் கதாநாயகிக்கு சான்ஸ் குடுக்கல???//
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப காலமா இருக்கு. அதே கேப்டன் ஆங்கிலத்தை ஒரே அடியாக ஒதுக்கவில்லை. அதற்க்கு அவருடைய ஆதரவை கொடுத்துக்கொண்டு இருக்கிறார், மருத்துவர் அய்யா போல் இல்லாமல்.
அதனாலே கேப்டனை மன்னித்து விடுங்க :-)) ஹாலிவுட் நடிகையை !!! எடுக்காமல் நமது இந்திய நடிகையை எடுத்து தேசப்பற்றை காட்டியதற்காக அவருக்கு நன்றி கூறுவோம் :-)))))
தோழர் கிரி,
நேற்று அண்ணன் பையனுக்காக டேரா பூச் டி.வி.க்க்ஸ்
ரூ 25\- வாங்கினேன் ஆனா நான் ரூ 30\- கொடுத்தேன்
கடைகாரிடம் ரூ 5\- பாக்கி இல்லை என எனக்கு அரசாங்ங்கத்தை ரூ 5\- க்கு கொடுத்தார்.
விதி யார விட்டது ;-)))
புதுவை சிவா
//pesal : special
aappesar :officer
ipad : Ipod
sekkurity : security
acsan : action
pulu : blue
sal v meet : shall we meet
tekkunikkal : technical
///
captain ippadi solradhula thappe illa. nalla padichu pattam vanginavangale pala peru ippadi dhaan pesaraanga.
Hi Kiri
sorry still I dont see the film
but I read your that film preview
I think I am safely escape :))
ok I am present to come regular to
vist :)))
புதுவை சிவா
உங்க வருகைக்கு நன்றி சிவா.
நான் இந்த படத்தை பார்க்கவே முடியாது அப்படிங்கற அளவுக்கு மோசமான படமாக கருதவில்லை. நம்மில் ஒரு சிலர் கேப்டன் படம் என்றாலே படம் பார்க்கும் முன்பே சரி இருக்காது என்ற மன நிலையில் செல்வதால் நன்றாக இருந்தால் கூட அதை ஒப்பு கொள்ள அவர்கள் மனம் இசைவதில்லை.
சித்தப்பு இதுல சூழ்ச்சி ஒன்னும் இல்லையே!!!ஏன்னா வீரம்விளைஞ்சமண்ணு படத்துக்கு போய் பசங்க கிட்ட அடிவாங்கியது இன்னும் வலிக்குது.
//வீரம்விளைஞ்சமண்ணு படத்துக்கு போய் பசங்க கிட்ட அடிவாங்கியது இன்னும் வலிக்குது//
:-)))) அது வேறு இது வேறு 🙂
குசும்பண்ணா இதுக்கெல்லாம் அசரப்படாது. அடி வாங்குனது அந்த படம் இது இந்த படம்.