சர்வேசன் என்ற பெயரில் ஆறு வருடமாக எழுதி வரும் பதிவர் சுனில் ஜெயராம் தனது ஆசையின், ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக ஒரு குறும்படம் எடுத்துள்ளார்.
Mile Sur
அதுவும் 80 களில் தூர்ஷர்ஷனில் மிகப்பிரபலமான பாடலான Mile Sur பாடலை ரீமேக் செய்தள்ளார். அப்போது அனைவரையும் கவர்ந்த பாடல் இது.
இந்தப்படத்தை பற்றி விமர்சிக்கும் முன்னர் சுனில் ஜெயராம் இதை எப்படி எடுக்க முனைந்தார் என்று பார்ப்போம்.
இது குறும்படத்தைப் போலச் சுவாராசியமானது அதோடு நமக்கும் பயனுள்ளது.
Passion
நம்மில் பலருக்கும் ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதாவது வழக்கமான நமது பணியில் இருந்து.
ஒரு சிலர் பைலட் ஆக நினைத்து இருக்கலாம், சிலர் ஆசிரியர் ஆக நினைத்து இருக்கலாம் இன்னும் சிலர் கலெக்டர் ஆக விரும்பி இருக்கலாம் சிலர் ஒரு இசையமைப்பாளரோ அல்லது இயக்குனர் ஆக நினைத்து இருக்கலாம்.
ஆனால், குடும்ப சூழ்நிலை மற்றும் அப்போது கிடைத்த வாய்ப்பைப் பொறுத்து நாம் ஒரு பணியில் அமர்ந்து இருக்கலாம்.
இருப்பினும் நாம் ஏதாவது வித்யாசமாக செய்து அல்லது நமது மனதுக்கு பிடித்த மாதிரியுள்ள பணியைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
இது போல நிலையில் என்ன தான் நாம் நம் பணியில் சிறப்பாக இருந்தாலும் நம் மனதிற்கு முழு திருப்தி அளிக்கக்கூடிய பணியைச் செய்யவில்லையே என்ற ஒரு வருத்தம் அல்லது ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
வகுப்பு
இது போல ஒரு நிலையில் தான் சுனில் ஜெயராம் ஒரு வகுப்பில் இணைந்தார். இதில் நம் ஆர்வம் என்ன? என்ன செய்யலாம் என்பதற்கு ஆலோசனை கூறுவார்கள் அதன் படி நாம் முயற்சிக்கலாம்.
ஒரு வகுப்பில் இவரிடம் உள்ள புகைப்பட கலையில் உள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்ட அவர் நீங்கள் குறும்படம் எடுக்கலாம் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்.
இவருக்கு அப்போது முடியும் என்று தோன்றவில்லை என்றாலும் அது மனதிலிருந்து கொண்டே இருந்ததால் சரி முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று இந்தக் குறும்படத்தை எடுத்து இருக்கிறார்.
ஒரு சிலருக்கு என்ன தான் நல்ல சம்பளம் வசதி இருந்தாலும் ஏதாவது வித்யாசமாக செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் அந்தத் தேடலில் வந்தது தான் இந்தக் குறும்படம்.
இதை தன் அலுவலகத்தில் 3000 பேருள்ள இடத்தில் மின்னஞ்சல் அனுப்பி இதைப் போல செய்யப்போவதாக கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த பலரும் தாங்களும் இதில் பங்கு கொள்வதாகக் கூறி அதை சிறப்பாக செய்தும் இருக்கிறார்கள்.
இது நிச்சயம் ஒரு கூட்டு முயற்சி தான்.
ஒரு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் உள்ளவர்களை (வெள்ளையர்கள் சைனீஸ் உட்பட) ஒருங்கிணைத்துச் செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை என்பது உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.
குறும்பட விமர்சனம்
முன்னரே கூறியபடி 80 களில் வந்த தூர்தர்ஷன் பாடலைத் தற்போது அதை அப்படியே தற்கால சூழ்நிலைக்கேற்ப ரொம்ப மாற்றாமல் அப்படியே அழகாக கொடுத்து இருக்கிறார்கள்.
நிச்சயம் மிகச்சிறப்பான இயக்கம் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
Mile Sur பாடல் இந்திய ஒருமைப்பாட்டை அழகாக விளக்கிய குறும்படம்.
தேசிய ஒருமைப்பாடு
இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி நபர்களையும் ஒரே பாடலில் கொண்டு வந்து நமது கலாச்சாரத்தை அனைவருக்கும் உணர்த்தி இருப்பார்கள்.
இன்று வரை இதை அடித்துக்கொள்ள ஒரு தேசிய ஒருமைப்பாட்டு குறும்படம் வரவில்லை.
Mile Sur Mera Tumhara [இதன் பிறகு வரும் ஹிந்தி புரியவில்லை ஹமாரா தவிர :-)] என்பதன் அர்த்தம் நீயும் நானும் பாடும் பொழுது அந்தப்பாடல் நம் பாடலாகிறது.
சரிதானே! இது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்று தானே!
நாமும் வேறொரு நாட்டு நபரும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கினால் அது இதைத்தானே குறிக்கிறது.
இதை விடப் பொருத்தமான ஒரு பாடல் இவர்கள் நிறுவன ஊழியர்களை வைத்து இயக்கும் போது பொருத்தமாக கிடைக்குமா என்ன! அருமையான தேர்வு.
ஒருங்கிணைப்பு
எனக்குள்ள மிகப்பெரிய வியப்பு எப்படி இவ்வளவு பேரை ஒருங்கிணைத்துச் செய்தார்கள் என்பதே!
ஒரு பன்னாட்டு (MNC) நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு இதில் உள்ள சிரமம் நிச்சயம் புரியும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அதுவும் வெள்ளைக்காரர்கள் சீனர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு படம் எடுப்பது என்பது மிகச் சிரமமான ஒன்றே.
கதாப்பாத்திர தேர்வு
ஒவ்வொரு காட்சிக்கும் சரியான நபர்களைக் காட்சிப்படுத்தி இருப்பதே என்னைப் பெரிதும் கவர்ந்து இருந்தது.
ஒரு சில படங்களில் நீங்கள் கவனித்து இருக்கலாம் பாடல் நல்ல ஹைபிச்சில் இருக்கும் ஆனால், அதில் நடித்துள்ள கதாநாயகன் கதாநாயகி வாயசைப்பது அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.
மெலடி பாடலைப் பாடுவது போல ஒரு ஹைபிச் பாடலுக்கு முகத்தில் உணர்ச்சிக் காட்டுவார்.
இதில் என்னைக் கவர்ந்தவர் என்றால் அஜித். பாடலுக்குத் தகுந்த உணர்ச்சி அவரது முகத்தில் இருக்கும். எடுத்துக்காட்டு “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” படம் தீனா.
இதில் அந்தத் தவறு செய்யாமல் சரியான நபரைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.
மிகக் கனமான குரலாக இருக்கும் ஆனால் பாடுபவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பார் இதில் அது போல இல்லாமல் குரலுக்கு ஏற்ற நபராக இருக்கிறது.
இது எதேச்சையாக நடந்ததா இல்லை இதை எல்லாம் யோசித்து செய்தார்களா என்று தெரியவில்லை எப்படி இருப்பினும் நன்றே.
குறிப்பாக லதா மங்கேஷ்கர் குரலுக்கு 5.40 நிமிடத்தில் வருபவரும் (அட்டகாசம்), 3.20 நிமிடத்தில் வருபவரும், 4:51 நிமிடத்தில் வருபவரும் மிகச் சரியான தேர்வு.
அவர்களே பாடுவது போல உள்ளது. பாடியவர்கள் (வாயசைத்தவர்கள்) பெரும்பாலானோர் சிறப்பாக செய்து இருக்கிறார்கள் என்றாலும் இவர்கள் என்னை ரொம்பக் கவர்ந்தார்கள்.
தலைவர்
ஒரிஜினல் குறும்படம் வெளிவந்த போது தமிழ்நாட்டிலிருந்து கமல் பிரதாப் போத்தன் ரேவதி KR விஜயா பாலமுரளி கிருஷ்ணா என்று பலர் வருவார்கள்.
அடடா! இதில் நம்ம தலைவர் இல்லையே என்று நினைத்ததுண்டு. இதில் அந்தக்குறை நீக்கப்பட்டு இருக்கிறது 🙂 .
தமிழ்ப் பகுதி வரும் போது அதில் வருபவர் ரஜினி ஸ்டைலில் நடித்து இருக்கிறார்.
இந்தப்பகுதி மற்றும் 5:06 நிமிடத்தில் வரும் ஒளிப்பதிவு சரியாக வரவில்லை அனைத்து இடங்களிலும் ஒரு திரைப்படத்துக்கான தரத்தில் ஒளிப்பதிவு இருக்கும் போது இந்த இடங்களையும் கவனித்து சரியாக எடுத்து இருக்கலாம்.
பாடல் துவங்கும் போது (1.30 நிமிடத்தில்) கேமரா வளைந்து அறைக்குள் செல்லும் போதும் இசைக்கு ஏற்ப ஒரு இடத்தில் ஒரிஜினல் போல ரயிலைப் பயன்படுத்தி இருப்பதும் சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்.
பன்னாட்டு நிறுவனம்
பன்னாட்டு நிறுவனம் என்பதால் வெள்ளைக்காரர்களையும் சீனர்களையும் அவர்களது மொழியில், பாரம்பரிய உடையில் நடிக்க வைத்து இருப்பது நல்ல உத்தி.
அவர்களுக்கும் முழுக்க இந்தியப்படம் என்றில்லாமல் இது அனைத்து நாட்டு மக்களையும் உள்ளடக்கியப் படம் என்ற திருப்தி இருக்கும். இந்தப்பாடலும் அதையே வலியுறுத்துகிறது.
இந்தப்பாடலின் அர்த்தம் என்ன என்று தெரியாமலே (ஹிந்தி நகி மாலும்) பாடலை ரசித்து வந்தேன் இதில் முதலில் வந்த சப் டைட்டில் மூலமே இதன் அர்த்தம் புரிந்தது.
அதனால் என்ன! இசைக்கு மொழி உண்டா என்ன? இசையை ரசிக்க என்றும் எனக்கு மொழி அவசியமாக இருந்தது இல்லை இது அனைவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
இதில் நடித்துள்ளவர்கள் எந்த ஒரு வழக்கமான நடிகருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் நடித்து இருக்கிறார்கள்.
படம் எடுத்ததும் திரைப்படம் போல ட்ராலி எல்லாம் வைத்து (Camera–> Rolling –> Action) ஒரு ப்ரொஃபசனலாக எடுத்து இருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாரும் ஓவர் ஏக்டிங் செய்யாமல் குறும்படத்தைக் காப்பாற்றி இருப்பது 🙂 .
பொதுவாக மலையாளத்துக்காரர்கள் என்றாலே ஆண்கள் என்றால் அடர்த்தியான மீசையும் பெண்கள் என்றால் படர விட்ட ஈரக்கூந்தலும் தான் சிறப்பு.
கேரளப்பகுதியில் வருபவருக்கு மீசை இல்லை இதில் கொஞ்சம் கவனம் எடுத்து யோசித்து செய்து இருக்கலாம்.
எழுத்து
துவக்கத்தில் பெயர் போடும் போது இன்னும் கொஞ்சம் ப்ரொஃபசனலாக ஸ்டைலிஷாக போட்டு இருக்கலாம்.
இவர்கள் எடுத்த படத்திற்கும் துவக்கத்தில் வரும் எழுத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல இருக்கிறது அதாவது குறும்படம் டாப்பாக உள்ளது எழுத்து ரொம்ப சாதாரணமாக உள்ளது.
மணிரத்னம் போன்ற சில இயக்குனர்கள் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் எழுத்துப் போடும் போது கூட அதிலும் ஒரு அழகு இருக்கும்.
துவக்கத்தில் வரும் எழுத்தின் அழகில் கூட ஒரு இயக்குனரின் ரசனை அடங்கி இருக்கிறது என்பது என் கருத்து.
படம் ஆரம்பிக்கும் போதே பார்ப்பவர்களை அசரடிக்க வேண்டும்.
குறும்படம் முடியும் போது ஜாக்கி சான் படத்தில் வருவது போலக் காட்சிகளை எடுக்கும் போது நடந்த நிகழ்வுகளைச் சேர்த்து இருக்கிறார்கள்.
நன்றாக இருந்தது சரியான யோசனை கூட.
சர்வேசன் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “கலக்கிட்டீங்க” 🙂 மனமார்ந்த வாழ்த்துகள்.
Remake Mile Sur
Original Mile Sur
கிரி நாம் ஆசைப்பட்டது முடியாமல் போன நிலையில் வலைத்தளம் மூலம் அது நிறைவேறியதாய் தோன்றுகிறது
குறும்பட விமர்சனதிற்கு நன்றி பார்க்கிறேன்
நன்றி கிரி:)! தங்களின் இந்தப் பகிர்வு மீண்டும் ஒரு நல்ல குறும்படம் எடுக்கும் உத்வேகத்தை சர்வேசனுக்குக் கொடுக்கட்டுமாக!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பும் ரசிகர்களுக்காக ‘ரசிகன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் வாகனத்தை இயக்குகிறது விஜய் டிவி.
திங்கள்கிழமை காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து புறப்பட்ட இந்த வாகனம் தமிழகமெங்கும் ஒரு ரவுண்ட் அடித்து ரசிகர்களின் வாழ்த்துக்களைச் சுமந்துகொண்டு மீண்டும் வரும் டிசம்பர் 10-ம் தேதி சென்னை வந்து சேர்கிறது.
எதற்காக இந்த எக்ஸ்பிரஸ்?
“ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. நேரில் சொல்ல முடியாதவர்களின் வசதிக்காக இந்த வாகனம் அவர்கள் இருக்குமிடத்துக்கே சென்று ரஜினிக்கு ரசிகனின் வாழ்த்துக்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறது. அனைத்து ரசிகர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாழ்த்துக்கள் பின்னர் தலைவருக்கு சேர்க்கப்படும்,” என்றார் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் என் ராமதாஸ்.
இந்தப் பேருந்தை ஏவி எம் சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 62 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பேருந்தை வழியனுப்பி வைத்தனர் சென்னை மற்றும் சுற்றுப் புறங்களிலிருந்து வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள்.
சைதை பகுதி தலைமை மன்றத்திலிருந்து சைதை ரவி, ரசிகர்களுடன் வந்து பேனர் வைத்து கலக்கியிருந்தார். அவருடன் சைதை முருகன், தாம்பரம் கேசவன், தி நகர் பழனி, பிஆர்ஓ ரியாஸ் உள்பட பலரும் பங்கேற்றனர்.
இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், ஏற்கெனவே சேலம், நாமக்கல் மாவடங்களைக் கடந்து, நாளை ஈரோடு செல்கிறது. டிசம்பர் 2-ம் தேதி கோவை, டிசம்பர் 3-ல் திருப்பூர், கரூர், காங்கேயம், டிசம்பர் 4 -ம் தேதி மதுரை, டிசம்பர் 5-ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, டிசம்பர் 7-ம் தேதி கும்பகோணம், சிதம்பரம், டிசம்பர் 8-ம் தேதி கடலூர், பாண்டி, டிசம்பர் 9-ம் தேதி வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பயணிக்கிறது.
டிசம்பர் 10-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறது.
[ அனைத்து கருத்துக்களையும் படிக்
நன்றி 🙂
Mile Sur remake kalakkal. Pazhaiya ninaivukal. vayadhagi vittadhu ponga