மயக்கம் என்ன (2011)

10
மயக்கம் என்ன

செல்வா படம் என்றாலே ரொம்பப் பிடிக்கும் அதனால் மயக்கம் என்ன படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. Image Credit

என்னைப்பொறுத்தவரை என்னுடைய எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது மயக்கம் என்ன.

இந்தப்படத்திற்கு ஆதரவு என்று பார்த்தால் குறைவாகத்தான் இருக்கிறது. பலர் படம் மொக்கை, சைக்கோ, வக்கிரம், மெதுவாக செல்கிறது என்று பலவாறு எழுதி விட்டார்கள் 🙂 .

ஆனால், செல்வா ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான ரசிக்கும் படம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை.

மயக்கம் என்ன

புகைப்படக் கலைஞரான தனுஷ் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார் பெற்றோர் இல்லாததால் முழுவதும் நண்பர்களே இவருக்கு துணையாக இருக்கிறார்கள்.

தன்னுடைய நண்பனின் பெண் நண்பியை விலகியே சென்றாலும் காதலிக்க நேரும் நிலை. இந்த நிலையில் பிரபல புகைப்பட நிபுணரால் தனுஷ் ஏமாற்றப்படுகிறார்.

இந்நிலையில் திருமணம் ஆன பிறகு ஒரு விபத்தில் தனுஷுக்கு மன நிலை பாதிக்கப்படுகிறது.

இதன் பிறகு என்ன ஆகிறது என்பதே படம்.

நிழற்படக் கலைஞன்

அது எப்படித்தான் தனுஷுக்கு மட்டும் எந்தக் கதாபாத்திரம் என்றாலும் செட் ஆகுதோ! (சண்டைக்காட்சிகள் தவிர்த்து).

இதில் நிழற்படக்கலைஞராக அருமையாக பொருந்துகிறது.

பறவைகளைப் படம் எடுக்கச் சென்று அங்கு இயற்கையில் மயங்குவதாகட்டும், வாய்ப்புக் கேட்டுக் கெஞ்சுவதாகட்டும், வாய்ப்பு மறுக்கப்பட்டு அதை ரிச்சாவிடம் கூறி “தனக்கு இதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது” என்று அழுவதாகட்டும் மனுஷன் பின்னி இருக்கிறார்.

ரிச்சா

ரிச்சா செல்வாவின் இயக்கத்தில் அருமையாக நடித்து (நடிக்க வைக்கப்பட்டு) இருக்கிறார்.

வாயினுள் எதையோ அடக்கி வைத்தது போலவே இருக்கிறார் ஆனாலும் சூப்பர் ஃபிகர் தான் அதில் எந்தச் சந்தேகமுமில்லை 🙂 .

தனுஷின் நண்பன் ரிச்சாவிடம் தவறாக நடந்து கொள்ள முயல அதற்கு ரிச்சாவின் பொறுமையான பதிலும் அதை அவர் எதிர்கொண்ட விதமும் அசத்தலாக இருந்தன.

அதிரடியாக நடந்து கொள்வதை விடச் சில நேரங்களில் இது போல நடப்பது பல பிரச்சனைகளை எளிதாக முடித்து விடுகிறது.

இது மட்டுமல்ல படம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நல்ல இயக்குனர் கிடைத்தால் எவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு ரிச்சாவே சிறு உதாரணம்.

நண்பர்கள் பகுதி வழக்கமான நண்பர்கள் பகுதி தான் குறிப்பிடும் படி எதுவுமில்லை.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் தனுஷ் நண்பனின் அப்பா, தனுஷ் மற்றும் அவருடைய நண்பன் சண்டை போடும் போது அதைச் சரி செய்ய அவர் செய்வது சூப்பர் 🙂 .

எதுவுமே பேசாமல் தனது வேலையை முடிப்பது ரசிக்கும்படி இருக்கும்.

ஒரு சில கலாச்சார பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் 🙂 தனுஷின் நண்பன் ரிச்சாவை தனுஷுடனே அதிகம் இருக்க வைப்பது கொஞ்சம் செயற்கையாக இருந்தது.

என்ன தான் நட்பு என்றாலும் அதிகப்படியாகவே தோன்றியது.

புரிந்து கொள்ளாத ரசிகர்கள்

தனுஷ் ரிச்சாவை எதிர்பாராமல் தள்ளிவிட அதனால் அடிபட்டு மருத்துவமனை சென்று திரும்பும் ரிச்சா தனுஷிடம் பேசாமல் பேசும் காட்சியில் சிறப்பாக நடித்து இருந்தாலும் ரொம்ப நேரம் இழுத்து இருக்க வேண்டாம்.

திரையரங்கில் இதற்கு பார்வையாளர்களிடமிருந்து அதிகளவில் கிண்டல் கமெண்ட்டுகள் வந்தன.

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அது போலத்தான் தனுஷ் கதாப்பாத்திரம் எடுக்கப்பட்டுள்ளது மிகைப்படுத்தி எதுவுமில்லை.

ரிச்சாவை நிர்வாணமாக எடுக்க முயல்வது மட்டுமே பொருந்தாத ஒன்றாகத் தோன்றியது.

இசை & ஒளிப்பதிவு

சூப்பர் ஹிட் பாடலான “காதல் என் காதல்” வந்த இடம் சரியில்லை.

நான் என்ன கற்பனை செய்து இருந்தேன் என்றால் ஆள் அரவமற்ற சாலையில் இரவில் தன் நண்பனோடு ஆடும் ஆட்டமாக வரும் என்று இருந்தேன் ஆனால் கொஞ்சம் கூடப் பொருந்தி வரவில்லை.

மற்றபடி மற்ற பாடல்கள் அனைத்தும் ஓகே “நான் சொன்னதும் மழை வந்துச்சா” பாடல் எடுத்த விதம் கலக்கலாக இருந்தது.

பின்னணி இசையில் G.V. பிரகாஷ் பின்னி இருக்கிறார் இதில் பெரும்பங்கு செல்வாவுடையதாக இருக்கும்.

ஒளிப்பதிவு ராம்ஜி தனக்கு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். கதாநாயகன் நிழற்படக் கலைஞர் வேறு! சொல்ல வேண்டுமா…!

காட்சிகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. சிறப்பான ஒளிப்பதிவு.

பல காட்சிகள் முன்பே ஊகிக்கக்கூடியவைகளாக இருந்தன இருப்பினும் அதைத் திரையில் பார்க்கும் போது சுவாரசியமாக இருந்தது.

இறுதிக்காட்சி

குறிப்பாக க்ளைமாக்ஸ் ரொம்பப் போட்டு இழுக்காமல் அழகாக முடித்துக் கண்கலங்கவும் வைத்து விட்டார். ரொம்ப ரசித்தேன்.

இதை விட எளிமையாக முடிக்க முடியாது என்று நினைக்கிறேன். பல காட்சிகளை நம் ஊகத்துக்கே விட்டு இருக்கிறார்.

தனுஷ் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கோபப்படும் போது படம் பார்க்கும் அனைவரையுமே மிரட்டி விடுகிறார். அடேங்கப்பா! என்ன ஒரு கோபம் முகத்தில்.

தனுஷ் மட்டும் இன்னும் கொஞ்சம் உடம்பு போட்டால் பட்டையக்கிளப்புவார் என்பது உறுதி சுள்ளான் போன்ற நம்மைச் சுளுக்கெடுக்கும் படங்களைத் தவிர்த்தால் 😉 .

கடைசியில் அவர் மனநிலை சரியாகி விட்டதா என்பது சரியாக விளக்கப்படவில்லை. சரி ஆகி இருந்தால் எப்படி சரியானது என்றும் தெரியவில்லை.  

கடைசியில் தனுஷுக்கு கொஞ்சம் காமெடியான கெட்டப்புகளை தவிர்த்து இருக்கலாம், அது பொருத்தமாக இல்லை.

இந்தப்படம் முழுக்க செல்வா ரசிகர்களுக்கானது மற்றும் மாற்றுப்படங்களை விரும்புவர்களுக்கானது.

எனவே, மசாலா வகைப்படங்கள், வழக்கமான சென்டிமென்ட், பன்ச் வசனங்கள், சந்தானம் டைப் காமெடி என்றெல்லாம் எதிர்பார்த்துச் சென்றால் உங்களுக்கு 100 % ஏமாற்றமே கிடைக்கும் சந்தேகமே வேண்டாம்.

மற்றபடி எனக்குப் படம் ரொம்பப் பிடித்தது உங்களுக்கு பிடிக்குமா என்பது உங்களின் ரசனையைப் பொறுத்து.

ரசனைகள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் 🙂

Directed by Selvaraghavan
Story by Selvaraghavan
Starring Dhanush, Richa Gangopadhyay
Music by G. V. Prakash Kumar
Cinematography Ramji
Editing by Kola Bhaskar
Studio Aum Productions
Distributed by Gemini Film Circuit
Release date(s) 25 November 2011
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. ரசனைகள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் – மிக சரியான கருத்து..

  2. நீங்களே குறிப்பிட்ட குறைகளைத் தவிர எனக்கும் படம் பிடித்திருந்தது.

  3. வணக்கம் கிரி

    நலமா,
    மிகவும் தரமான விமர்சனம், படத்தில் சில குறைகள் இருந்தாலும் மனநிறைவை தரும் படம்
    யுவராஜ்
    பாண்டிசேரி

  4. படம் என்னால ரசிக்க முடிஞ்சுது தல .. உங்க review காக தான் waiting ?

    எதிர் பார்த்த மாதிரி உங்களுக்கும் படம் புடிச்சு இருக்கு…

    – அருண்

  5. mr. giri,

    yenakku padam suthama pidikala. Our tastes are same for the films like vanam, ko, adukalam, yengeyum yeppodhum, hostel, myna, ravanan etc etc.

    but, our taste differs with respect to three films. they are vikram, sex and zen and mayakkam yenna.
    romba kadupula irukiren. like ayirathil oruvan, this movie also irritated me.

    my view is Opinion differs and we should respect others opinion…. 🙂

    Rajesh .v

  6. @ராஜேஷ் 🙂 நான் மயக்கம் என்ன இரண்டு முறை பார்த்து விட்டேன்.

    நீங்க சொன்னது போல Opinion differs 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here