சிறிய வயதில் இருந்தே பாடல்கள் என்றால் ரொம்ப விருப்பம், எந்த மொழியாக இருந்தாலும். இசைக்கு மொழியேது!
வீட்டில் இருந்தால், நிச்சயம் அங்கே பாடல் ஏதாவது பாடிக்கொண்டே இருக்கும், சில நேரங்களில் சத்தமாக. Image Credit
குறிப்பிட்ட எந்த ஒருவரின் இசையும் இல்லை, கேட்கப் பிடிக்கும் அனைத்து இசையும் ரொம்பப் பிடிக்கும்.
இசையமைப்பாளர்களில் MS விஸ்வநாதன், இளையராஜா, ரகுமான், ஹாரிஸ் போன்றவர்கள் இசை ரொம்பப் பிடிக்கும்.
Boney M
கொஞ்ச நாள் முன்பு எங்கள் (சிங்கப்பூர்) வீட்டு அருகே உள்ள கடையில் ஒரு பெரியவர் வார இறுதி நாளில், பழைய ஆங்கிலப் பாடல்களைச் சத்தமாக வைத்து என்ஜாய் செய்து கொண்டு இருந்தார்.
இந்தப்பாடல்கள் சிறு வயதில் கேட்டு இருக்கிறேன் ஆனால், பாடல் பற்றி விவரங்கள் எதுவும் தெரியாது.
பல ஆண்டுகள் முன்பு ரசித்தப் பாடல்களை இடையில் பல வருடங்கள் கேட்காமல் அல்லது கேட்க வாய்ப்பு இல்லாமல் திடீர் என்று கேட்க நேர்ந்தால் ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கும், அதுபோலவே இந்தப் பாடல்களைக் கேட்ட போது இருந்தது.
YouTube ல் இது பற்றிய விவரங்களைத் தேடிய போது, இந்தப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் Boney M குழு என்று அறிய முடிந்தது.
இந்தப் பாடல் பிரபலமாக இருந்த போது இணையம் எதுவும் கிடையாது, அப்போதே இந்தப் பாடல்கள் நம் ஊர் வரை பிரபலம்.
நானெல்லாம் கேட்டு இருக்கிறேன் என்றால், எப்படிப்பட்ட வெற்றியாக இந்தப் பாடல்கள் இருந்து இருக்க முடியும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மைக்கேல் ஜாக்சன் போல இவரும் மிகப் பிரபலமாக இருந்து இருக்கிறார்.
டிஸ்கோ
இவர் போன்றவர்களிடமிருந்து தான் அந்தக் காலக்கட்டங்களில் “டிஸ்கோ”என்ற நடனம் பிரபலம் ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
80 – 90 வருடங்களில் வந்த தமிழ்ப் படங்களில் “டிஸ்கோ” நடனம் ரொம்பப் பிரபலம். “நான் ஒரு டிஸ்கோ டேன்சர்” போன்ற பாடல்கள் வந்த சமயம்.
நான் ரொம்ப ரசித்த பழைய பாடல்களைத் தற்போது கேட்க முடிந்தது மிக மகிழ்ச்சி.
அப்போதே இந்த ஆங்கிலப் பாடல்கள் எங்கள் கிராமம் வரை வந்து இருக்கிறது என்றால், எந்த அளவிற்கு பிரபலமாக இருந்து இருக்க முடியும்.
ஆனால், இவர் மைக்கேல் ஜாக்சன் போல ஏன் அனைவருக்கும் தெரியவில்லை என்று புரியவில்லை.
விவரம் அறிந்தவர்கள் கூறலாம்.
இந்தப் பாடல்கள் 1976 ல் வெளியாகி இருந்தாலும், நம் ஊருக்கு இணையம் போன்ற வசதிகள் இல்லாததால் மெதுவாக 1978 – 1980 க்கு மேல் வந்து பிரபலம் ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
Wim Mertens
எழுத்தாளர் சாரு அவ்வப்போது நாம யாருமே கேள்வியே பட்டு இராத ஒருத்தர் பெயரைக் கூறி, இவர் பாட்டைக் கேளுங்க அற்புதம்! அது இது என்று பில்டப் கொடுப்பார்.
சரி! என்னவென்று போய்க் கேட்டால் சுமாராக இருக்கும்.
ஒருவேளை அவரின் ரசனை வேறாக இருக்கலாம் நான் தவறாக நினைக்கவில்லை ஆனால், பெரும்பாலும் அவர் அறிமுகப்படுத்திய இசை பிடித்ததே இல்லை.
Wim Mertens
ஆனால், சமீபத்தில் Wim Mertens என்ற இசையமைப்பாளரின் ஒரு பாடலை அறிமுகப்படுத்தினார்.
என்ன ஒரு அருமையான இசை! கேட்டு அவருக்கு ரசிகன் ஆகி விட்டேன்.
Wim Mertens இசை கான்செர்ட் பார்த்து எனக்கு இளையராஜா கான்செர்ட் “என்றென்றும் ராஜா” தான் நினைவிற்கு வந்தது. 1.40 மணி நேரமும் இசை மழையே நடத்தி இருக்கிறார்.
இதில் மிகப்பெரிய வியப்பு அங்கே பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகள் வயலின் மற்றும் பியானோ மட்டுமே! வயலின் போலவே இன்னொரு இசை சாதனம் இருந்தது.
இதை வைத்து இவ்வளவு அற்புதமான இசையைக் கொடுக்க முடியுமா! “முடியும்” என்று இதைப் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இசையமைத்தவர்கள் பாடியவர்கள் சிறு தவறு, பிசிறு கூட இல்லாமல் துவக்கத்திலிருந்து இறுதி வரை கலக்கி இருக்கிறார்கள்.
அப்படியொரு Perfection! இசைக்கு மொழியேது!
Wim Mertens பேசிய நேரம் என்றால் 1 நிமிடம் கூட இருக்காது என்று நினைக்கிறேன், அவர் பேசியதை எடிட் செய்தது போலத் தெரியவில்லை.
இவரைப் போல அதிகம் பேசாமல் செயலில் காட்டுபவர்களை ரொம்பப் பிடிக்கும்.
அரங்கில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கேட்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
இளையராஜா
நிகழ்ச்சியில் இடையூறு செய்யாமல் / கத்தாமல் அமைதியாக அனைவரும் ரசித்ததை பார்த்த போது, இளையராஜா தன் நிகழ்ச்சியில் அமைதியாக ரசிக்கும் படி ரசிகர்களிடம் கூறியது நினைவிற்கு வந்தது.
“என்றென்றும் ராஜா”வில் இளையராஜா ஒரு பாடலை முடிக்கும் முன்பே ரசிகர்கள் ஆர்ப்பரித்து முழுமை பெறாமல் செய்து விட்டார்கள்.
பின்னர் இளையராஜா அந்த விட்டுப் போன கொசுறு இசையையும் இசைக்க வைத்து Perfection என்பதற்கு உதாரணம் காட்டினார்.
அது போல, இதில் ஒவ்வொரு பாடலையும் முடிக்கும் போதும் Wim Mertens முகபாவனைகள், உடல் மொழிகள் கச்சிதமாக இருந்தது.
எப்படி இது போல அனைவரும் ஒரே நேரத்தில் பாடலை நிறைவு செய்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.
Clean finish என்று கூறுவார்களே அதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.
இதில் இவருடைய இந்தப் பாடல் (இசை) ரொம்பப் பிடித்தது.
அமைதியான சூழ்நிலையில் பாருங்கள், அற்புதமான அனுபவம் கிடைக்கும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
“நிச்சயம் கோவை மீண்டும் இழந்த பசுமையை பெறும் என்று நம்பலாம்.”
உங்க முகநூல் ஐடி என்ன?
பதிவுலகமே தருமபுரி இளவரசன் சாவுக்கு காவு கேட்டுக்கிட்டு எரிஞ்சிக்கிட்டு இருக்கும் போது உங்களுக்கு பாட்டா கேட்குது.
எதாவாது எழுதி பிரச்சனைய கிளப்புனா நல்லா இருக்கும் எங்களுக்கு பின்னுட்டம் போட 🙂 , வட போச்சி எங்களுக்கு 🙂
எந்த மொழியில் மிக சிறந்த பாடல்களை கேட்டாலும் தமிழ் பாடல்களை கேட்பதில் ஏற்படும் சுகம் போல் இல்லை… அதுவும் குறிப்பாக பழைய பாடல் கேட்பதில் சுகம் தனியே.. பகிர்வுக்கு நன்றி கிரி..
உங்களோட Facebook status பார்க்கும்போதே நெனச்சேன், கிரி ஒரு பதிவு போடப் போறார்ன்னு.
ரொம்ப பெரிய விடியோவா இருக்கு; வீக்கெண்ட் பார்த்துட்டா போச்சு.
அந்த பெரிய சைஸ் வயலின சொல்றீங்களா கிரி? அது பேரு செல்லோ (CELLO)
இதே மாறி “மாம்போ நம்பர் 5” (Mambo No 5) அப்படின்னு ஒரு பாட்டு நான் ஸ்கூல் படிக்கும் பொது கேட்டு இருக்கேன். அது 1949ல வந்த பாட்டாம். எனக்கு இப்போதான் ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி தெரியும். கேட்டு பாருங்க. செம்ம பீட் சாங்.
அந்த தமிழ் வார்த்தை விளையாட்டு அருமை.
சாரு – நோ கமெண்ட்ஸ்.
பதிவு நல்லா இருக்கு… லிங்க் எல்லாம் கேட்டு பாக்குறேன்
– அருண்
ஹாய் சார் நான் தொடர்ந்து யுவர் ப்லோகை படித்து வருகிறேன் நாட் குட் பட் நாட் பேட் தேங்க்ஸ்.
தோழர் கிரி அவர்களே,
போனி எம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.மைக்கல் ஜாக்சனுக்கு முன்பே தமிழ்நாட்டில் சக்கைபோடு போட்ட பாடல்கள் அவர்களுடையது. ஒரு திருத்தம். போனி எம் என்பது ஒரு ஆள் அல்ல.அது ஒரு ஜெர்மானிய இசைக்குழு. பாடகர்கள் நால்வரும் பிரிட்டிஷ் கருப்பினத்தை சேர்ந்தவர்கள். Frank Farian என்ற ஜெர்மானியரே போனி எம் மின் உயிர்நாடி.ஆனால் அவரை யாருக்கும் அவ்வளவாகாத் தெரியாது. போனி எம் பாடல்களை கேட்டால் என் பள்ளிநாட்கள் நினைவுக்கு வரும். (“நானெல்லாம் போனி எம் பாட்ட கேட்டே வளந்தவண்டா” என்று கூட சொல்லலாம்)
போனி எம் பாடல்களை கேட்டால் என் பள்ளிநாட்கள் நினைவுக்கு வரும். மீ டூ GIRI
இசைக்கு நடுவில் தமிழுக்கு தாலாட்டு.ஹாட்ஸ் ஆப் கிரி
அனைவரின் வருகைக்கும் நன்றி
@கமலக்கண்ணன் ஹா ஹா நான் தான் கொஞ்ச மாதம் முன்னாடி இனி எதற்கும் பொங்கப் போவதில்லை என்று கூறி இருந்தேனே! சும்மா சவுண்டு விட்டு மட்டும் என்ன ஆகப் போகுது.. பாருங்க! இரண்டு வாரம் இதே பேச்சா இருந்தது இப்ப சத்தமே காணோம்.
@விஜய் Cello நன்றி அதில் எழுத்து போடும் போது போட்டார்கள்.
மாம்போ நம்பர் 5 நான் கேட்டு இருக்கிறேன் ஆனால் அது பழைய பாடல் போல இல்லையே!
@அருண் நிஜமாகவே கேட்டு பார்த்தீங்களா! 😉
@சங்கர் ரைட்டு
@காரிகன் நீங்கள் கூறிய பிறகே கவனித்தேன். நான் தான் சரியா கவனிக்கல போல. நான் இவர் பெயர் தான் Boney M என்று நினைத்து இருந்தேன். நீங்கள் கூறியது போல அப்போது இந்தப்பாடல்கள் ரொம்ப பிரபலம்.
@ரவி 🙂
@காயத்ரி நாகா இசைக்கு நடுவே தமிழுக்கு தாலாட்டு…ம்ம் எப்படி எல்லாம் நீங்க யோசிக்கறீங்க.. இதுவும் நல்லாத் தான் இருக்கு 🙂
அருமையான.பதிவு..
எழுத்தாளர் சாரு பற்றி எழுதியுள்ளதை படித்தேன். நான் ஒரு எழுத்தாளருடைய BLOG தருகிறேன். நேரம் இருப்பின் படித்துபார்க்கவும். இவருடைய விழுப்புணர்வை உருவாக்கும் எழுத்துக்களின் ரசிகன் நான்.
http://enganeshan.blogspot.com
கிரி ரொம்ப சூப்பர்
https://www.youtube.com/watch?v=5pN8yc0IZCM (Wound to wound – Wim Mertens ) இத கேட்டு பாருங்க கிரி அருமையா இருக்கும்.