The Mother (2023) | அதிரடி அம்மா

3
The Mother

ம்மாவின் பாசத்தைக்கூறும் இன்னும் ஒரு படம் The Mother. Image Credit

The Mother

மகளின் பாதுகாப்புக்காகப் பிறந்தவுடனே மகளைப் பிரிகிறார் ஜெனிஃபர் லோபஸ் ஆனாலும், மகளை ஆபத்து துரத்த, எப்படி மகளை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுகிறார் என்பதே The Mother.

அதிரடி

இதுவொரு சண்டைப்படமாகும்.

இப்படம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியது இதுவொரு அமெரிக்கச் சண்டை படம். ஏங்க! இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு என்று கேட்டால், அப்புறம் அமெரிக்கச் சண்டை படம் எல்லாம் பார்க்க முடியாது 😀 .

நம்ப முடியவில்லையென்றாலும் பார்க்கச் சுவாரசியமாக இருக்கும் என்பதே இப்படங்களின் வெற்றி.

பிரபலமான பாப் பாடகி ஜெனிஃபர். ஏற்கனவே பல அதிரடி படங்களில் நடித்தவர். அனைவருக்கும் தெரிந்த படம் என்றால் அனகோண்டா (1997) கூறலாம்.

25 வருடங்களுக்கு முன் வந்த படத்தில் இருப்பது போலவே இருக்கிறார், எப்படித்தான் உடலைப் பராமரிக்கிறார்களோ!

சண்டைக்காட்சிகளில் அடி தூள் கிளப்புகிறார். இவரின் அடிதடி சண்டைக்காட்சிகள், வேகமான நடவடிக்கைகள் சுவாரசியமாக உள்ளது.

தன் மகளிடம் பேசும் போது சில இடங்களில் வசனங்கள் சிறப்பு, உளவியல் ரீதியாகக் குறிப்பிடும்படியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையின் ஏமாற்றத்தையும், அதே சமயம் எச்சரிக்கையையும் வெளிப்படுத்துவது இயல்பு.

ஜெனிஃபர் மகளாக வருபவர் துவக்கத்தில் ஜெனிஃபர் அடாவடியால் கடுப்பாகி வெறுப்பதும், பின் கல்லுக்குள் ஈரம் போல அவர் மனதை அறிவது நெகிழ்ச்சி.

மகளை மீட்க ஒரு கட்டிடத்தினுள் நுழைந்து அதகளம் செய்வது செம. குறிப்பாக இந்த நேரத்தில் Angel என்ற POP பாடல் வருகிறது. மாஸாக, இக்காட்சிக்கான பாடல் போலவே உள்ளது.

இணையத்தில் தேடி அதை என் விருப்பப்பாடல் பட்டியலில் சேர்த்து விட்டேன் 🙂 .

ஒளிப்பதிவு பனிப் பிரதேசத்தை ரம்மியமாகவும் அதே சமயம் திகிலாகவும் காட்டுகிறது.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம்.

குறிப்பாகச் சண்டைக்காட்சிகளை விரும்புபவர்கள் மற்றும் அமெரிக்கச் சண்டை படங்களில் லாஜிக் எல்லாம் தேட மாட்டேன் என்று கூறுபவர்கள் பார்க்கலாம் 🙂 .

ஆகச்சிறந்த படமல்ல ஆனால், துவக்கத்திலிருந்து இறுதி வரை சுவாரசியமான படம்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜெனிஃபர்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Niki Caro
Screenplay by Misha Green, Andrea Berloff, Peter Craig
Story by Misha Green
Produced by Jennifer Lopez, Elaine Goldsmith-Thomas, Benny Medina
Starring Jennifer Lopez, Joseph Fiennes, Lucy Paez
Cinematography Ben Seresin
Edited by David Coulson
Music by Germaine Franco
Distributed by Netflix
Release date May 12, 2023
Running time 118 minutes
Country United States
Language English

தொடர்புடைய விமர்சனம்

Battleship (2012) | இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. Hello, Giri watch The Pope’s Exorcist & Dungeons and Dragons’ honor among thieves Both movies are too good.

  2. சண்டை காட்சியமைப்புகள் கொண்ட படங்களின் மீதும் / கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் கொண்ட படங்களின் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் குறைவு.. படம் மெதுவாக சென்றாலும் எனக்கு ஓகே தான்.. ஆனால் சண்டைகள் அதிகம் தொடர்ச்சியாக வருவது கொஞ்சம் உறுத்தலாக இருக்கும்..

    இப்படம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியது இதுவொரு அமெரிக்கச் சண்டை படம். ஏங்க! இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு என்று கேட்டால் – லாஜிக் எல்லாம் பார்த்தால் எந்த படத்தையுமே எந்த மொழியிலும் பார்க்க முடியாது தானே கிரி..

    இந்த நேரத்தில் Angel என்ற POP பாடல் வருகிறது. மாஸாக, இக்காட்சிக்கான பாடல் போலவே உள்ளது – உங்களுக்கு ரசனை இருக்கிறது கிரி.. கல்லூரி பருவத்தில் நான் விரும்பி கேட்ட ஒரே ஆங்கில பாப் பாடல் ரிக்கி மார்டினோட Un, dos, tres.. என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாது.. பசங்க மத்தியில் கொஞ்சம் கெத்தா இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்ட பாடலிது..

  3. @மகேஷ்

    பார்க்க முயற்சிக்கிறேன் 🙂 . நன்றி

    @யாசின்

    “லாஜிக் எல்லாம் பார்த்தால் எந்த படத்தையுமே எந்த மொழியிலும் பார்க்க முடியாது தானே கிரி”

    அது சரி தான் யாசின்.

    மற்ற படங்கள் காதில் பூ வைப்பார்கள், இவர்கள் பூக்கூடையை வைப்பார்கள், அது தான் வித்யாசம் 🙂 .

    “கல்லூரி பருவத்தில் நான் விரும்பி கேட்ட ஒரே ஆங்கில பாப் பாடல் ரிக்கி மார்டினோட Un, dos, tres..”

    தற்போது என் Playlist ல் உள்ள பாடல். இந்த Playlist கேட்கும் போது இப்பாடலை கேட்பேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!