இயற்கையும், இயற்கை சார்ந்த இடங்களில் படமாக்கப்பட்ட படமே Ela Veezha Poonchira. Image Credit
Ela Veezha Poonchira
Poonchira என்ற மலையில் அடிக்கடி மின்னல் தாக்குவதால், அங்குக் காவலர்கள் நியமிக்கப்பட்டுப் பொதுமக்கள் இப்பக்கம் வராதபடி பாதுகாக்கிறார்கள்.
இப்பகுதியைச் சுற்றி உள்ள இடத்தில் பெண்ணின் உடல் பல துண்டுகளாகக் கண்டெடுக்கப்படுகிறது. இதை யார் செய்தது என்று காவல்துறை விசாரிக்கிறது.
இறுதியில் கண்டுபிடித்தார்களா என்பதே Ela Veezha Poonchira.
படத்தில் ஒன்றுமே இல்லை
முக்கியக்கதாப்பாத்திரமானவரும் மலை உச்சியில் பணியில் இருப்பவருமான Soubin Shahir வீட்டிலிருந்து மலை உச்சிக்குப் பயணிக்கிறார்.
துவக்கத்தில் ஜீப், நடை என்று காட்டைக் கடந்து காவல்துறை இடத்தை அடைகிறார். இதையே 20 நிமிடங்கள் காட்டுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 🙂 .
மலையாளப்படம் என்றாலே இயற்கை தான், அதுவே கதையே மலை சார்ந்த இடம் என்றால் சொல்லவும் வேண்டுமா?!
மலையாளப்படம் பார்க்கும் போதெல்லாம், The God’s Own Country என்ற வசனம் தான் நினைவுக்கு வரும். எவ்வளவு அழகான இடங்கள்.
அதை விட முக்கியம், பெரும்பாலும் அந்த அழகை கெடுக்காமல் பாதுகாக்கிறார்கள்.
படம் முழுக்க இயற்கை தான். இவற்றோடு நாய், இரு நாய்குட்டிகளும் அங்கேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்துவது போல இயல்பாக வந்து போகின்றன.
YouTube Vlog க்காக இங்க வந்து அலப்பறையை கூட்டுபவர்களையும் போகிற போக்கில் தலையில் குட்டியிருக்கிறார்கள்.
Soubin Shahir
மலையாள நடிகர்களில் இயல்பான நடிகர்களில் ஒருவர் Soubin Shahir. அவரை அக்கதாப்பாத்திரமாகத்தான் காண முடியும், Soubin Shahir என்ற நபராகப் பார்க்க முடியாது, எத்தனை படங்களில் பார்த்து இருந்தாலும்.
இதிலும் அதே போலக் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
அதிகாரி இல்லையென்றால் காவலர்கள் கொஞ்சம் Relaxed ஆகத்தான் இருப்பார்கள். அதுவும் மலை உச்சியில், யாருமே வராத இடத்தில்..!
சரக்கு, மாமிசம் என்று அவரது சக ஊழியர்களுடன் ஜாலியாக இருக்கிறார்கள்.
ஆனால், உயிருக்கு ஆபத்தான இடமே! காரணம், மழை நேரத்தில் வெளியே சென்றால் மின்னல் தாக்கி இறந்து விடக்கூடிய வாய்ப்பு.
தெரியாமல் வரும் பொதுமக்களைக் காப்பாற்ற செல்லும் போது கூட மின்னல் தாக்கி இறந்து விடக்கூடிய வாய்ப்புள்ள இடம்.
விசாரணைக்குழு இங்கேயும் விசாரிக்கிறார்கள். இறுதியில் எதிர்பாராத சம்பவமும், ரணகள திருப்பமும் நடைபெறுகிறது. இதுவே மொத்தப்படத்தையும் தாங்குகிறது.
ஒளிப்பதிவு அட்டகாசம், துவக்க ட்ரோன் காட்சிகள் செம ஆனால், அதன் பிறகும் தொடர்ந்து இருக்கலாம். படம் முழுவதும் இயற்கையிலேயே பயணிக்கலாம்.
யார் பார்க்கலாம்?
த்ரில்லர் படமாக இருந்தாலும், இறுதிப்பகுதி மட்டுமே த்ரில்லரை நியாயப்படுத்துகிறது. மற்றவை முழுக்கச் சாதாரணச் சம்பவங்களே!
இயற்கையை, நாடகத்தன்மை இல்லாத இயல்பான தினசரி வாழ்க்கை சம்பவங்களையும் காட்சிகளாக ரசிக்கலாம் என்ற மனநிலை வேண்டும்.
த்ரில்லர் என்று எதிர்பார்த்து பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஆகையால், மேற்கூறியதில் உடன்பாடென்றால் பார்க்கலாம், இல்லையென்றால் தவிர்க்கலாம்.
எனக்குப்பிடித்தது என்று கூற முடியலை ஆனால், ஒரு மாற்றமாக இருந்தது.
இப்படத்தில் செலவே இல்லை. நடித்தவர்கள் ஊதியம் தான் படத்தின் பெரும்பகுதி செலவாக இருக்கும்னு நினைக்கிறன் 🙂 .
Ela Veezha Poonchira குறும்படத்துக்கான கதை ஆனால், படமாக எடுத்துள்ளார்கள்.
படத்தின் இயக்குநர் Shahi Kabir கதாசிரியராகப் பணியாற்றிய மற்ற படங்கள் Joseph & Nayattu. இவையும் த்ரில்லரே!
Amazon Prime ல் காணலாம்.
Directed by Shahi Kabir
Written by Nidhish G
Shaji Maarad
Produced by Vishnu Venu
Starring Soubin Shahir, Sudhi Koppa. Jude Anthany Joseph
Cinematography Manesh Madhavan
Edited by Kiran Das
Music by Anil Johnson
Release date 15 July 2022
Country India
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. உண்மையில் மலையாளத்தில் மிக சிறந்த யதார்த்தமான நடிகர்கள் இருப்பதாக உணர்கிறேன்.. காரணம் நிறைய புதிய புதிய கதைகள், அற்புதமான இடங்கள், நம் கண்கள் இருவரை காணாத இடங்களை காணும் போது..
படம் மொக்கையாக இருந்தாலும் அந்த உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.. தமிழில் மைனா படம் பார்த்த உணர்வு என்னை விட்டு வெகு நாட்களுக்கு நீங்கவில்லை.. தமிழில் வெகு சில படங்கள் மட்டுமே இது போல படங்கள் வருகிறது. முதன் முதலில் ஆட்டோகிராப் படத்தில் கேரளாவின் காட்சிகளை கண்ட மீட்சிலிருந்து இன்னும் மீளவில்லை.
சில நாட்களுக்கு முன்பு Kooman மலையாள படம் பார்த்தேன்.. படம் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இறுதியில் படத்தின் முடிவு மட்டும் வேறுமாதிரி செல்லும்.. மற்றபடி படத்தின் கதை கரு என்னை வியக்க வைத்தது. எப்படி யெல்லாம் கதையை யோசிக்கிறார்கள் என ஆச்சரியமா இருக்கு!!!
Jaya Jaya Jaya Jaya Hey படத்தில் Basil Joseph இன் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும்.. இந்த இரண்டு படங்களும் வாய்ப்பிருந்தால் பார்க்கவும்.. படம் நிச்சயம் உங்களை கவரும். பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின்
Kooman இன்னும் பார்க்கவில்லை ஆனால், Jaya Jaya Jaya Jaya Hey பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.
“இந்த இரண்டு படங்களும் வாய்ப்பிருந்தால் பார்க்கவும்.. படம் நிச்சயம் உங்களை கவரும்.”
நிச்சயம் பார்க்க முயல்கிறேன் 🙂 .