லிடியன் நாதஸ்வரம் | கண்ணா! கலக்கிட்டடா!

4
லிடியன் நாதஸ்வரம்

ரு வாரத்துக்கு முன்பு செய்திகளில் அதிகம் வந்தது லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் தான்.

லிடியன் நாதஸ்வரம்

அமெரிக்காவின் The World’s Best ரியாலிட்டி ஷோவில் 1 மில்லியன் பரிசு (7 கோடி) பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறான். Image Credit

அமெரிக்க மாப்பிள்ளை, வில்லன் எல்லாம் இல்லை சார் நடித்தால் ஹீரோ தான்“னு சொல்ற மாதிரி, எங்கே இருந்து வந்தான்னே தெரியாம திடீர் என்று வந்து அனைவரையும் வியப்படைய வைத்து விட்டான்.

பல திறமைகள் வைத்துள்ளான்.. கிடார், ட்ரம்ஸ், பியானோ, மிருதங்கம், தபேலா ன்னு பட்டையைக் கிளப்புறான்.

வாசிக்கச் சிரமமான இசை நாதஸ்வரம் என்பதால், அவன் பெயரோடு நாதஸ்வரமும் இணைந்துள்ளதாக பெயர் விளக்கம் கொடுத்தான்.

நேர்முகம்

லிடியன் வெற்றி பற்றித் தமிழ் இந்து இணையத்தளத்தில் எழுதி, சென்னை பையன் என்று குறிப்பிட்டு இருந்ததால், இயல்பான ஆர்வத்துடன்..

யார்ரா இவன்.. இதுவரை நம்ம கண்ணுல படவே இல்லையே!“ன்னு பார்த்தேன்.

YouTube ல் ஒரு காணொளி பார்த்தேன், பார்த்தேன், பார்த்தேன்.. போயிட்டே இருக்கு.. அடேங்கப்பா! பின்னுறானேன்னு சில காணொளிகளை, நேர்முகப் பேட்டிகளைப் பார்த்தேன்.

பையன் பேட்டிகளைப் பார்த்தால், செமையா இருக்கு.

பார்த்த காணொளிகளில் எல்லாவற்றிலும் அவனோட அப்பாவையும், அக்கா அமிர்தவர்ஷினியையும் விட்டுக்கொடுக்காமல் குறிப்பிடுகிறான்.

அவனோட அக்காவை ஒரு படி மேலே தான் பேசுறான். “அக்கா! என்னை விட நல்லா வாசிப்பாங்க!” என்றான்.

பேட்டி எடுப்பவர்கள், “உனக்கு எப்படி இந்த ஆர்வம் வந்தது.. எப்படிக் கற்றுக்கொண்டாய்?” என்று வளைத்து வளைத்துக் கேட்டாலும், சுற்றி சுற்றி அவன் அப்பாவிடமே வந்து நிற்கிறான்.

டேய் கண்ணா! நீ நல்லா வருவடா.. இப்படியே இரு.

எப்பவும் உன்னோட வளர்ச்சிக்கு துணையாக இருந்த, இருக்கும், இருக்கப்போகும் அப்பா அக்காவை விட்டுக்கொடுக்காம பேசு.

பியானோ

ஒரு நாள் YouTube ல ஒருத்தர் பியானோ வாசிப்பதைப் பார்த்து ஆர்வமாகி, அவன் அப்பாவிடம் கற்றுக்கொண்டு இருக்கிறான். இப்ப என்னடான்னா! World’s Best Pianist ஆகி விட்டான்.

அடுத்தது பெரியவர்களுக்கான போட்டியிலும் இதே போலப் பரிசு பெற வேண்டுமாம்.

என்னடா தம்பி உன்னோட விருப்பம்?” என்றால், நிலவில் சென்று “Beethoven – Moonlight Sonata” வாசிக்க வேண்டுமாம்! செட்டு போட்ட நிலவு இல்லை.. நிஜமான நிலவுக்குச் சென்று!!

கலக்கறான்ல! 🙂 . கேள்வி கேட்பவரைக் கிறுகிறுக்க வைக்கணும்.

படத்துக்கு இசையமைப்பியா..” என்றால்.. “எனக்கு அதையும் தாண்டிப் போகவே விருப்பம்” ன்னு அசால்ட்டுப் பண்ணுறான். இவன் பேசுவதைக் கேட்டு வியப்பாகிட்டேன்.

சப்பையா நினைக்காம Think Big என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பேசுறான்.

விஜய் டிவி நாடகமில்லை

இவன் பரிசு பெற்ற போதும், அவனை மற்றவர்கள் மேடையில் பாராட்டும் போதும் வழக்கமா விஜய் டிவி ல போடுவாங்களே சகிக்க முடியாத அழுகாச்சி நாடகம் அது மாதிரி இல்லாமல், உண்மையாகவே லிடியன் அப்பாவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் முகத்தில் அப்படியொரு பெருமை, மகிழ்ச்சி, அடக்கம்! 🙂 .

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

லிடியனை அவனோட அப்பா வேற எங்கேயோ கொண்டு போய்ட்டாரு. உண்மையாகவே லிடியன் அவனோட அப்பாவுக்குக் கடமைப்பட்டுள்ளான்.

அவனுடைய விருப்பத்தைச் சரியான வழியில் கொண்டு சென்று அவனைப் பட்டை தீட்டி விட்டார்.

பிரபலம்

தமிழ்ப்படங்களில் சிலவற்றைத் தமிழ்நாட்டில் முதலில் திரையிடாமல் உலகப்பட விழாக்களில் வெளியிட்டு அப்புறம் இங்கே திரையிட்டு அதற்கு மதிப்பைக் கூட்டுவார்கள்.

அதுபோல லிடியன் அமெரிக்காவில் பிரபலமாகி அதன் பிறகே நமக்கு அறிமுகமாகியுள்ளான் 🙂 .

வாழ்த்துகள்டா கண்ணா! இன்னும் பல உயரங்களைத் தொடு! எப்பவும் உன் குடும்ப உறுப்பினர்களை இதே போல விட்டுக்கொடுக்காமல் பேசு.

நம்ம சென்னை தமிழ்நாட்டை இந்தியாவை இன்னும் பல உலக அரங்குகளுக்கு எடுத்துச் செல்! எங்களையும் பெருமைப்படுத்து! 🙂 .

கொசுறு

துவக்கத்தில் ரகுமான் இசைப் பள்ளியில் இசை பழகி இருக்கிறான். ரகுமானுக்கு நிச்சயம் பெருமையாக இருக்கும்.

4 COMMENTS

  1. உண்மையாகவே லிடியன் அப்பாவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
    நிஜமாலுமே அசத்திவிட்டார் .

  2. லிடியன் குறித்த எந்த செய்தியையும் இதுவரை படிக்கவில்லை.. ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது.. (வளரும் போதே வாசம் வீசுது!!!) லிடியன் மேலும் பல உயரங்கள் தொடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.. வாழ்த்துக்கள்..

    “படத்துக்கு இசையமைப்பியா..” என்றால்.. “எனக்கு அதையும் தாண்டி போகவே விருப்பம்” ன்னு அசால்ட்டுப் பண்ணுறான். கனவுகள் தான் வாழ்க்கையின் உச்சத்துக்கு நம்மை கொண்டு செல்கிறது என்பதற்கு லிடியனின் வரிகளே உதாரணம், வாழ்க்கையில் எப்படியாவது வென்று விடவேண்டும் என்று துடிப்பவர்களுக்குகான பதிலும் கூட!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. @லீலா @ஜோதிஜி ரைட்டு

    @யாசின் இவனைப் பற்றி இருவாரங்கள் முன்பு வரை எனக்கும் ஒன்றும் தெரியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here