பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

2
Green Chilli பச்சை மிளகாய் குழம்பு

 

ச்சை மிளகாய் குழம்பு என்றதும், இவ்வளோ காரமாக எப்படி சாப்பிட முடியும் என்று நினைக்க வேண்டாம், நீங்கள் நினைப்பது போல மிகக் காரமாக இருக்காது 🙂 .

பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் 100 கிராம்

புளி – எலுமிச்சை அளவு

கடுகு சிறிதளவு

மஞ்சள் தூள் சிறிதளவு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

நாட்டு (கருப்பு) சர்க்கரை 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் மிளகாயை சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

புளியை தண்ணீரில் (இரண்டு டம்ளர்) ஊற வைத்து நன்றாகக் கரைத்து வடிகட்ட வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு புளிக்கரைசலை சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க விட வேண்டும்.

நன்றாகக் கொதிக்கும் போது நாட்டு சர்க்கரை 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

புளி வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.

சுவையான பச்சை மிளகாய் குழம்பு தயார் 🙂 .

அம்மாவின் குறிப்புகள். Image Credit

எதற்கு நன்றாக இருக்கும்?

பருப்பு, தயிர் சாப்பாட்டுக்குத் தொட்டுச் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.

நான் எடுத்துக்காட்டுக்கு கூறினேன், மற்ற உணவு பொருட்களுக்கும் தொட்டுச் சாப்பிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலவை சுவை (Combination) பிடிக்கும்.

நான் சாம்பார்!, ரசம்!! என்று அனைத்துக்கும் பயன்படுத்திப் பார்த்தேன்.. செம்ம.

பல வருடங்களாகச் சாப்பிடுகிறேன் ஆனால், இதை எழுத அம்மாவிடம் கேட்கும் வரை, இதில் நாட்டு சர்க்கரை சேர்ப்பார்கள் என்பதே எனக்குத் தெரியாது 🙂 .

இதைக் குளிர்சாதனப் பெட்டியில் மூன்று நாட்கள் வரை வைத்துச் சாப்பிடலாம்.

தொடர்புடைய கட்டுரை

இலந்த வடை சாப்பிட்டு இருக்கீங்களா? 🙂

கொசுறு

சமையலைப் பொறுத்தவரை கை பக்குவம் என்றுள்ளது. என்ன தான் கூறியபடியே செய்தாலும், சிலருக்குத் தான் சரியாக அமையும்.

மிளகாய் குழம்பு சுவையாக வருவது உங்கள் கை பக்குவத்தில் உள்ளது. உங்களுக்கு சுவையாக வந்தால் தெரிவிக்கவும்.

ஒருவேளை சரியாக வரவில்லையென்றால், ஓரிரு முறை முயற்சித்துப்பாருங்கள், பிடிபட்டு விடும். உங்களுக்குத் தெரியாததா! 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. சமையல் : ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு, அதிக நெருக்கம் உண்டாக்கி விடக்கூடியது.. சமையல் செய்வதும், பிடித்த உணவை சாப்பிடுவதும் எனக்கு விருப்பமான ஒன்று!!! நான் பள்ளி/ கல்லூரி நாட்களில் கோபமான தருணங்களில் கூட நல்ல உணவகத்திற்கு சென்று, நன்றாக சாப்பிட்டு, நல்லா தூங்கி எழுந்திருக்கும் போது கோபம் காணாமல் போகிவிடும்.. தற்போதும் இந்த பழக்கம் எனக்கு உண்டு..

    புதிய உணவுகளை அவ்வளவு எளிதில் சாப்பிடமாட்டேன்.. சுவை நன்றாக இருந்தாலும் சரி!! எப்போதும் பழக்கபட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன்.. இந்த விஷியத்தில் மனைவிக்கும் / எனக்கும் மான்கராத்தே நடக்கும்.. நீங்கள் குறிப்பிட்ட பச்சை மிளகாய் குழம்பு செய்வது எளிதாக இருக்கிறது.. நான் இதுவரை இதை சாப்பிட்டதும் (கேள்விப்பட்டதும்) இல்லை.. நிச்சயம் செய்து பார்த்துவிட்டு என்னுடைய கருத்தை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.. இதுபோல பதிவுகளை எதிர்காலத்திலும் எதிர்பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. “பள்ளி/ கல்லூரி நாட்களில் கோபமான தருணங்களில் கூட நல்ல உணவகத்திற்கு சென்று, நன்றாக சாப்பிட்டு, நல்லா தூங்கி எழுந்திருக்கும் போது கோபம் காணாமல் போகிவிடும்”

    🙂 🙂 செம.. எல்லோரும் பாட்டு கேளுங்க.. தியானம் பண்ணுங்க, தண்ணீர் குடிங்க என்றால்.. யாசின் புல் கட்டு காட்டுங்க என்று கூறுகிறார். நான் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் 🙂 .

    முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here