சங்கரன்கோவில் இடைத்தேர்தல்

8
சங்கரன்கோவில்

டைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சி தன் பலத்தைக் காட்ட மட்டுமே பயன்படுகிறது.

எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும் எடுபடுவதில்லை இதற்குக் காரணம் ஆளுங்கட்சி அதிகாரபலத்தில் இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடந்த திமுக ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தல் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களிலேயே ஆளுங்கட்சியால் “கவனிக்கப்பட்ட” தேர்தல் என்ற பெருமையைப் பெற்றது. Image Credit

கிட்டத்தட்ட இந்தத் தொகுதிக்கு 70 கோடிக்கும் மேல் பணம் ஆளுங்கட்சி திமுகவால் செலவிடப்பட்டது என்று அப்போது பத்திரிக்கைகளால் கூறப்பட்டது.

இதன் பிறகு எந்தத் தேர்தல் நடந்தாலும் “திருமங்கலம் ஃபார்முலா” என்று கூறும் அளவிற்கு அந்த ஊருக்கு அவப்பெயர் ஆகி விட்டது.

சங்கரன்கோவில்

தற்போது நடைபெறப்போகும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலும் தற்போது இதே நிலையில் காணப்படுகிறது.

ஆளுங்கட்சிக்கு எப்போதுமே இடைத்தேர்தல் என்பது தன்மானப் பிரச்சனை ஆனால் அது ஜெ விட்ட அறிக்கையால் அது மேலும் சூடாகி இருக்கிறது.

சட்டசபையில் ஜெ கேப்டன் சண்டை அனைவரும் அறிந்தது.

ஜெ எப்போதுமே பிடிவாதமாக இருப்பவர் தான் நினைத்ததை செய்ய வேண்டும் என்று விரும்புவர் யாருக்கும் அடங்காதவர்.

எவருடைய அறிவுரையையும் காதில் வாங்காதவர் என்ற “பெருமையைப்” பெற்றவர்.

இந்த நிலையில் அவர் கேப்டனைப் பார்த்துக் கூறிய பின்வரும் சவால் தான் பலரை கடுப்படித்து இருக்கிறது

பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்த்திய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம்.

உங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்.

நாங்கள் அடையப் போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் தடுக்க முடியுமா? என்பதை யோசித்துப் பேசுங்கள்

இவர் பேசியதில் தன்னம்பிக்கையை விட “நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள்” என்கிற மமதை மட்டுமே அதிகமாக தெரிகிறது.

ஜெ வெற்றி பெற்ற போது பலரும் ஜெ விடம் மாற்றம் உள்ளது முன்பு போல இல்லை என்று கூறினார்கள் ஆனால் “அப்படி எல்லாம் இல்லை அதற்குள் அனைவரும் தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்” என்று கூறாமல் அவ்வப்போது நிரூபித்து வருகிறார்.

இந்தச் சவாலில் அதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.

அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டோமோ என்று அடுத்த நாள் “வேறு வழி இல்லாததால் கட்டணங்களை உயர்த்த வேண்டியதாகி விட்டது” என்று கூறி இருந்தார்.

திட்டங்கள் அறிவிப்பு

ஜெ இதுவரை பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.

அடிக்கடி இத்தனை கோடியில் அதைச் செயல்படுத்தப்போகிறேன் இதைச் செயல்படுத்தப்போகிறேன் என்று ஆனால் இதுவரை எந்தத் திட்டமும் உருப்படியாக வந்தது போலத் தெரியவில்லை.

அந்த நேர பரபரப்பிற்கு மட்டுமே அது பயன்படுகிறது.

கலைஞர் அறிவித்த திட்டங்களை முடக்குவதில் இவர் காட்டும் ஆர்வத்தை இவர் தான் கூறிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டலாம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்று வரை மின்சாரப்பிரச்சனைக்கு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை நாளுக்கு நாள் பிரச்சனை அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறது.

சென்னை குப்பைப் பிரச்னைக்குத் தீர்வு இல்லை.

இந்த எட்டு மாதத்தில் குறிப்பிட்டு பாராட்டும்படியான எந்தச் செயலையும் கூற முடியவில்லை.

ஒரே ஆறுதல்

கலைஞர் அடிக்கடி திரையுலகினர் நடத்தும் பாராட்டு விழாக்களில் கலந்து வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தார் ஜெ அது போலச் செய்வதில்லை.

இது ஒன்று தான் பரவாயில்லை என்று கூறும்படி உள்ளது.

இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு விலையும் ஏற்றி இருக்கிறோம் என்று கூறி விட்டுத் தில்லு இருந்தா ஜெயித்துப் பாருங்க என்று கூறுவது எந்த விதத்தில் சரியானது என்று புரியவில்லை!

வெறும் சவால் விடுவதற்கும் இது போலக் கூறுவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் தற்போது இந்தத் தொகுதிக்கு 26 அமைச்சர்களை நியமித்து இலவசங்களை அள்ளிக்கொடுத்து இருக்கிறார்.

மாபெரும் வித்தியாசத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற பயம் வந்து விட்டது.

எங்கே வேறு மாதிரி ஆகி விட்டால் என்ன ஆவது என்கிற இயல்பான பயம் தான் இவ்வளவு சீக்கிரம் அனைத்தையும் செய்ய வைக்கிறது.

திமுக ஆதரவாளர்கள்

இவை ஒரு பக்கம் இருந்தாலும் திமுக ஆதரவாளர்கள் அதற்கு மேல் இருக்கிறார்கள். “ஓட்டுப் போட்டீங்கல்ல! அனுபவியுங்க!!” என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் என்னமோ காமராஜர் ஆட்சி புரிந்தது போலவும் மக்கள் இவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது போலவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் ஆட்சியில் செய்த ஊழல், குடும்ப ஆட்சி எல்லாம் தற்போது மறந்து விட்டார்கள் இவர்கள் என்னமோ உத்தமர் போலப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

திரும்பத் திமுக ஆட்சிக்கு வந்து இருந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன ஆகி இருக்கும் என்று தெரியாது?

தொடர்ந்து பத்து வருடம் டேமேஜ் செய்வதற்கும் கேப் விட்டு டேமேஜ் செய்வதற்கும் வித்யாசம் இருக்கிறது. எப்படியெல்லாம் யோசிக்க வைத்து விட்டார்கள்!!

எது எப்படியோ சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அதிமுக தோற்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

அப்போது தான் ஜெ வின் ஆணவத்திற்கு ஒரு கடிவாளம் போட்டது போல இருக்கும், இல்லை என்றால் கேட்கவே ஆள் இல்லை என்பது போல மேலும் மேலும் நடந்து கொண்டு இருப்பார்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்பது மிக அதிசயமான நிகழ்வே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. //திமுக ஆட்சிக்கு வந்து இருந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன ஆகி இருக்கும் என்று தெரியாது? தொடர்ந்து பத்து வருடம் டேமேஜ் செய்வதற்கும் கேப் விட்டு டேமேஜ் செய்வதற்கும் வித்யாசம் இருக்கிறது. எப்படியெல்லாம் யோசிக்க வைத்து விட்டார்கள்!!//

    🙂

  2. If only J announces one useful scheme and implements it……….

    If only J stops her self thambattam…….

    If only J respects people……..

    I am talking nonsense.

  3. எது எப்படியோ சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அதிமுக தோற்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்
    ——————————————————————————————-
    i voted for admk last election. now i want admk to loss this seat

  4. நானும் தோக்கனும் தான் ஆசை படுறேன் தல அப்ப தான் பயம் வரும்

    – அருண்

  5. ஆம் கிரி இத் தேர்தலில் தோல்வி தான் ஆணவத்திற்கு கிடைத்த பரிசாக இருக்க வேண்டும்

  6. நான் கட்சிக்கரனா இருந்தாலும் அதிமுக தோக்கனும்ன்னே விரும்பறேன் 🙂

    # கறை நல்லது !

  7. கிரி

    As you said ADMK has not done anything but DMK can never do anything (even though they have Central Ministers) they are keen to get Kani out of the Case and they have a fresh challenge… 122 licenses cancelled பணம் குடுத்தவன் எல்லாம் கொடையுவணுக, அப்புறம் நம்ம அழகிரி, ஸ்டாலின், பிரட்சனை, captain விஷகாந்த thinks he is acting in Cinema and the way he behaved in Assembly left a lot to rethink about him… இவ்வளவு என் இப்பகூட யாரையோ அடிச்சதா.. ஜு வி LA POTTUIRUKKANGA… ithellam pakkumbothu… ammave varattum…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here