No Escape [2015] | திக் திக் நிமிடங்கள்

0
no escape 2015

ள்நாட்டு பிரச்னை சமயத்தில் மாட்டிக்கொண்ட குடும்பத்தினர் படமே No Escape.

No Escape

பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றில் (தாய்லாந்து காட்சிகளே வரும்) நாட்டின் பிரதமர் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனத்துடன் தண்ணீர் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதற்கு எதிர்ப்பு அதிகமாகி கலவரமாக வெடிக்கிறது.

இந்த நிலையில் இந்நிறுவன பணிக்காக அமெரிக்காவிலிருந்து Owen தன்னுடைய குடும்பத்துடன் (மனைவி இரு பெண் குழந்தைகள்) வருகிறார்.

இவர்களுடன் இந்நிறுவனம் சம்பந்தப்பட்ட ஜேம்ஸ் பாண்டாக நடித்த பியர்ஸ் பிராஸ்னனும் வருகிறார்.

குடும்பத்தினரை விடுதி அறையில் இருக்கக் கூறி விட்டு, செய்தித்தாள் வாங்கச் செல்லும் Owen (கலவரம் காரணமாக விடுதிக்குச் செய்தித்தாள் வராது) அங்கே கலவரக்காரர்கள், இராணுவம் இடையே நடைபெறும் கலவரத்தில் சிக்கிக் கொள்வார்.

இராணுவம் தனது கட்டுப்பாட்டை இழக்க, போராளிகள் கை ஓங்கி தாறுமாறான வன்முறையில் இறங்க ஆரம்பித்து விடுவார்கள்.

கண்ணில் படும் வெளிநாட்டினரை குறிப்பாக அமெரிக்கர்களைக் கொலை செய்து வருவார்கள்.

இவர்களிடம் இருந்து நால்வரும் தப்பித்தார்களா? பியர்ஸ் பிராஸ்னன் என்ன ஆனார்? என்பதே கதை.

எனக்குப் பெண்கள், கலவரம் என்றாலே பார்க்க யோசிப்பேன். அதில் குழந்தைகள் என்றால் பக்கமே போக மாட்டேன்.

ஏனென்றால், எப்பேர்ப்பட்ட ஹாரர் படத்தையும் அசால்ட்டாகப் பார்த்து விடுவேன், குழந்தைகள் சம்பந்தப்பட்டது என்றால், பீதியாகி விடுவேன்.

அதைப் பார்க்கும் அளவுக்கு மனதில் திடமில்லை.

இவ்வளவு பரபரப்பாகத் திகிலாகப் படத்தைப் பார்த்து வெகு நாளாகிறது.

கலவரம்

கலவரத்துக்குப் பல குழுக்கள் இருப்பார்கள்.

குழுக்களின் தலைவனாக இருப்பவன் தான் நீதிபதி, அவன் கூறுவதே தீர்ப்பு, அவன் என்ன சொன்னாலும் அப்படியே கேட்க வேண்டும், அவன் நினைத்ததைச் செய்வான், எவரும் கேள்வி கேட்க முடியாது.

கொலை, கொள்ளை, வன்புணர்வு என்று எதையுமே யாரும் கேட்க முடியாது, வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். உதவி செய்தால், அவர்களையும் கொன்று விடுவார்கள்.

அனைவரும் கொலை வெறியில் இருக்கும் போது இவர்கள் மாட்டினால்..! நினைத்துப் பாருங்கள்.

யம்மாடி.. ஒவ்வொரு நிமிடமும் பதட்டத்திலேயே இருக்கும். விடுதியின் ஒவ்வொரு அறைக் கதவாக உடைத்து உள்ளே இருப்பவர்களைக் கொன்று வரும் போது எப்படி இருக்கும்?!

கலவரமெல்லாம் உண்மையான காட்சியமைப்பு போலவே உள்ளது. எப்படி எடுத்தார்கள், எப்படி அனுமதி வாங்கினார்கள் என்று வியப்பாக இருந்தது.

பல இடங்களில் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.

படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி நிமிடம் வரை புரட்டி போட்டு விட்டார்கள். ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் பார்த்தால், அவ்வளவு தான் 🙂 .

இப்படிப் பயந்து படம் பார்த்து ரொம்ப நாட்களாகின்றன. எப்படா படம் முடியும்? என்றாகி விட்டது.

செம்ம த்ரில்லர் படம் No Escape. த்ரில்லர் படம் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தவறவிடக்கூடாத படம். 5 மில்லியனில் எடுக்கப்பட்டு 54 மில்லியனை வசூலித்த திரைப்படம்.

இப்படம் NETFLIX தளத்தில் உள்ளது.

Directed by John Erick Dowdle
Written by John Erick Dowdle , Drew Dowdle
Starring Owen Wilson , Lake Bell , Sterling Jerins ,Claire Geare , Pierce Brosnan
Music by Marco Beltrami , Buck Sanders
Cinematography Léo Hinstin
Edited by Elliot Greenberg
Production company Bold Films , Brothers Dowdle
Distributed by The Weinstein Company
Release date August 17, 2015 (Los Angeles premiere) August 26, 2015 (United States)
Running time 103 minutes
Country United States, Thailand
Language English, Thai

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here