ரஜினிக்கு IFFI விருது வழங்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது.
தமிழ்த்திரையுலகம் பொறாமையுலகம்
ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்கள் பலருக்குத் தெரியாதது, விருது அறிவித்த பிறகு திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள், நடிகர்கள் யூனியன், கமல் மட்டுமே வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
விருது வழங்கிய நாளன்று கார்த்திக் சுப்பராஜ் ஒருவரைத் தவிரத் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட வாழ்த்தவில்லை.
யாராலும் இதை நம்ப முடியுமா?
ட்விட்டர்
ட்விட்டரில் இல்லாத பிரபலங்களே இல்லை. தினமும் எதையாவது பகிர்ந்து வருகிறார்கள், ரசிகர்களுக்குப் பதில் அளித்து வருகிறார்கள், வேறொருவர் கூறியதை மீண்டும் பகிர்கிறார்கள்.
24 மணி நேரமும் ட்விட்டரில் இருக்கும் திரை பிரபலங்களுக்கு ஒரு வாழ்த்து கூற மனதில்லை என்பது வியப்பளிக்கிறது. அட! குறைந்தபட்சம் Retweet கூடச் செய்ய மனமில்லை..!
குப்பை விஷயத்தை எல்லாம் பகிரும் ட்ராக்கர்கள் ஒருவர் கூட இது குறித்து எந்தச் செய்தியையும், வாழ்த்தையும் பகிரவில்லை.
ரஜினி ரசிகர்கள் மட்டுமே ட்விட்டரில் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் வாழ்த்துக் கூறாதது எனக்கு வருத்தமில்லை. ஏனென்றால், இவர்களைப் பற்றித் தெரிந்தது தான். ஓரிருவராது பாராட்டுவார்கள் என்று நினைத்தேன், அது மட்டுமே ஏமாற்றம்.
ஏற்கனவே, திரையரங்கு சென்று தமிழ்த்திரைப்படங்கள் பார்ப்பது குறைந்து விட்டது.
இதுவரை இணையத்தில் திருட்டுத்தனமாகப் படங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்தது இல்லை. பணம் கட்டி மட்டுமே இணையத்திலும் படம் பார்த்து வருகிறேன்.
இதனால், நண்பர்கள் கிண்டலடித்தாலும் அதுபற்றிக் கவலைப்படாது தொடர்ந்து வருகிறேன். இனியும் தொடர்வேன் ஆனால், திரையரங்கு சென்று பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.
வெகு சில படங்களே இனி திரையரங்கில் பார்ப்பேன்.
தமிழ்த்திரையுலகில் பல சாதனைகள் புரிந்த மூத்த நடிகருக்கு, எனக்குப் பிடித்த ரஜினிக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத தமிழ் திரையுலகுக்கு நான் மட்டும் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்?!
இன்னும் அதிகம் போனால் ‘தர்பார்’ தவிர்த்து ரஜினி இரு படங்கள் நடிப்பார். அதன் பிறகு நான் திரையரங்கு சென்று பார்த்தே ஆக வேண்டிய படங்கள் இல்லை.
அனைத்தையும் இணையத்திலேயே (பணம் கட்டித்தான்) பார்த்து விட முடியும்.
மற்ற மாநிலத் திரையுலகம்
இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் யாருக்கேனும் கொடுத்து இருந்தால், அத்திரையுலகில் அனைவரும் வாழ்த்து தெரிவித்து, கொண்டாடி இருப்பார்கள்.
இதுவே தமிழ் திரையுலகுக்கும் மற்ற திரையுலகுக்கும் உள்ள வித்யாசம்.
தமிழ்திரையுலகின் பெருமையான 2.0 படத்தையே பாராட்டாமல் புறக்கணித்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!
இதைக் கூற காரணமே, எங்களுக்கு இவர்களைப் பற்றித்தெரியும் ஆனால், ரசிகர்கள் அல்லாதவர்களும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும், எவ்வளவு மோசமாக உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
ரஜினி என்ற குதிரை எதைப்பற்றியும் கவலைப்படாமல், யாரையும் குறை கூறாமல் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.
எவரும் இக்குதிரையின் வெற்றியைத் தடுத்து விட முடியாது.
தொடர்புடைய கட்டுரை
தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
என்ன கொடுமை சார் இது. நம்ம மக்கள் மாற மாட்டாங்க 🙁 🙁
கிரி, ஒவ்வொரு துறையில் இருக்குற மாதிரி பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் சினிமா துறையிலும் இருக்கு.. இதை பல மேடை நிகழ்வுகளில் கவனித்து இருக்கலாம்.. தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு அப்துல் கலாம் ஐயாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை.. கலாம் ஐயாவின் தமிழ்மொழி காதல் உலகறிந்த ஒன்று!!! கலைஞர் தலைமையில் நடக்கும் ஒரு தமிழ் சார்ந்த நிகழ்வுக்கு அழைப்பு விடவில்லையெனில் எத்தனை அரசியல் இருக்கும் என்பதை உணரலாம்..
சமீபத்தில் கமலுக்கு நடந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகயேனை அழைக்கவில்லை.. (காரணம் கடந்த கால வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். நான் அதிகம் மதிக்கும் சினிமா கலைஞன் பாக்யராஜ் சார்.. பல பெயரே தெரியாத படங்களின் ஆடியோ வெளியீட்டில் இவரை பார்க்க முடியும்.. எல்லோரையும் பாராட்டும் குணம் உண்டு..
ரஜினி சாரின் உயரம் யாரும் எட்டாத உயரம்.. இனி எட்டமுடியதா உயரமாக கூட அமையலாம்.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.. இதை போல பல நிகழ்வுகளை ரஜினி சார் தன் வாழ்நாளில் சந்தித்து இருப்பார்.. அவர்க்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. அவரை குறித்த விமர்சனங்கள் அவர் உயரத்தை இன்னும் அதிகமாக்கி கொண்டே இருக்கிறது..
நல்ல கதறுங்க. ஹா…ஹா….ஹா….
உங்கள் உங்களையம் உங்கள் தலைவரையும் தவிர உலகத்தில் உள்ள வேற எல்லோரும் கெட்டவர்கள் தான். பேசுவது மட்டும் நேர்மறை என்று பேசுவது. ஆனால் எண்ணமெல்லாம் எதிர்மறை. அருமை.
@விஜய் அது அப்படித்தான்.
@யாசின் “விமர்சனங்கள் அவர் உயரத்தை இன்னும் அதிகமாக்கி கொண்டே இருக்கிறது..”
சரியா சொன்னீங்க 🙂 .
@கருணை “நல்ல கதறுங்க. ஹா…ஹா….ஹா….”
எது நாங்க கதறுகிறோமா… 🙂 இது என்னுடைய தளம் இங்கே என்னுடைய விமர்சனத்தை வைக்கிறேன். நீங்கள் வந்து பேசிட்டு என்னை கதறுகிறேன் ன்னு சொல்லிட்டு இருக்கீங்க.
நீங்க தான் ரஜினி பற்றிய என்னுடைய கட்டுரைகளிலும், ரஜினி பற்றி இல்லாத கட்டுரைகளிலும் ரஜினி பற்றி கதறிட்டு இருக்கீங்க.
அநேகமாக காதல் பட க்ளைமேக்ஸ் பரத் மாதிரி கொஞ்சம் வருடங்கள் போனா ஆகிடுவீங்க என்று நினைக்கிறேன் 😀 . ரஜினியை எங்களை விட உங்களைப்போன்றவர்கள் தான் 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்கெல்லாம் கடுப்பாகுவது மகிழ்ச்சி. உங்களை எல்லாம் இன்னும் ரஜினி கடுப்பாக்கணும் 🙂 .
“பேசுவது மட்டும் நேர்மறை என்று பேசுவது. ஆனால் எண்ணமெல்லாம் எதிர்மறை. ”
முதலில் நேர்மறை எண்ணங்கள் என்பதற்கு அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம்?!
//முதலில் நேர்மறை எண்ணங்கள் என்பதற்கு அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம்?!//
In this context,
தன் தலைவருக்கு விருது கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுவது நேர்மறை.
கொண்டாடுவதை விட்டு அவங்க புகழவில்லையே இவங்க பாராட்டவில்லையே என்று வெந்து புழுங்குவது அது எதிர்மறை.
//எது நாங்க கதறுகிறோமா… ? இது என்னுடைய தளம் இங்கே என்னுடைய விமர்சனத்தை வைக்கிறேன். நீங்கள் வந்து பேசிட்டு என்னை கதறுகிறேன் ன்னு சொல்லிட்டு இருக்கீங்க.//
ஆம் உங்களுடைய தளம்தான். இந்தப் பதிவை பார்த்துவிட்டு தான் கதறுரீங்க என்று தெரிந்து தான் சொல்லியிருக்கிறேன்.
//ரஜினியை எங்களை விட உங்களைப்போன்றவர்கள் தான் 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.//
24 மணி நேரம் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கவில்லை.
நீங்க எப்ப எல்லாம் பதிவு போறீங்களோ அப்ப மட்டும்தான்
//நீங்கெல்லாம் கடுப்பாகுவது மகிழ்ச்சி. உங்களை எல்லாம் இன்னும் ரஜினி கடுப்பாக்கணும் ? .//
உங்கள் மகிழ்ச்சி பெருக வாழ்த்துக்கள்.
//@யாசின் “விமர்சனங்கள் அவர் உயரத்தை இன்னும் அதிகமாக்கி கொண்டே இருக்கிறது..”//
அது என்ன உயரம் என்று கொஞ்சம் சொல்லமுடியுமா?
//தமிழ்திரையுலகின் பெருமையான 2.0 படத்தையே பாராட்டாமல் புறக்கணித்தவர்களிடம்//
ஏற்கனவே இருக்கிற சாதனையை முறியடித்தான் தான் பெருமை.
நீங்க பாகுபலி இன்னும் பாக்கவில்லை போலிருக்கிறது.
//இவர்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.//
ஒரு மோசமானவனுக்கு மட்டும் தான், ஒருவன் பாராட்டாததை எல்லாம் மோசமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை இருக்கும்.
//ரஜினிக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத தமிழ் திரையுலகுக்கு நான் மட்டும் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்?!//
ROFL ? ROFL ?ROFL ?ROFL ? I can’t control.
Thank you for the good entertaining article.
//24 மணி நேரமும் ட்விட்டரில் இருக்கும் திரை பிரபலங்களுக்கு//
ROFL ?
@கருணை
“தன் தலைவருக்கு விருது கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுவது நேர்மறை.”
அதன் பெயர் பாராட்டு & மகிழ்ச்சி தெரிவிப்பது. மகிழ்ச்சி வேறு நேர்மறை எண்ணங்கள் வேறு.
“கொண்டாடுவதை விட்டு அவங்க புகழவில்லையே இவங்க பாராட்டவில்லையே என்று வெந்து புழுங்குவது அது எதிர்மறை.”
அதன் பெயர் ஆதங்கம். ஆதங்கம் வேறு எதிர்மறை எண்ணங்கள் வேறு.
கருணை நீங்க ரஜினி சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இது தெரியாமலே பல கட்டுரைகளில் உங்களிடம் விவாதம் செய்து கொண்டு இருந்தேன்.
நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகி உங்கள் பிரச்சனை தீவிரமாகும் முன் சரி செய்து கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
//அதன் பெயர் ஆதங்கம். ஆதங்கம் வேறு எதிர்மறை எண்ணங்கள் வேறு.//
எதிர்மறை மனநிலையையே ஆதங்கம் என்று சொல்லுகிறீர்கள். அது உங்கள் விருப்பம். அது எதிர்மறை மனநிலை தான்.
//நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகி உங்கள் பிரச்சனை தீவிரமாகும் முன் சரி செய்து கொள்ளுங்கள்.//
ROFL ???
//பொறாமையின் மறு உருவம் தமிழ்த்திரையுலகம்//
ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்து ஒருவேளை தோற்றுவிட்டால், உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவு வருமே “முட்டாள்களின் மறு உருவம் தமிழ் மக்கள்” என்று நினைக்கும்போது தான்……..
@ கருணை
டுபாக்கூர் ஐ டி இருக்கா அப்போ நீ விஜய் ரசிக குஞ்சு என்று தெரிகிறது
உனக்கு பிடிக்கல என்றால் ஓடிடு
எதுக்கு இங்க வர்ற
கிரி விவாதம் பண்ணும் ஜென்மங்களிடம் பேசலாம். வீண் விதண்டாவாதம் பண்ணும் சப்பாணிகளுக்கு, பதில் சொல்லி நேரத்தை விரயம் பண்ணாதீர்கள்