இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்

2
Nalla Meengal Virkapadum இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்

ம்மைச் சுயபரிசோதனை செய்து கொள்வது எப்போதுமே நல்லது! எழுத்தில் காலத்துக்கேற்ப மாற்றம் வேண்டும் என்பது என் எண்ணம். Image Credit

அதில் கடைசியாகக் கட்டுரையின் அளவை குறைக்க வேண்டும் என்ற முடிவில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை உறுதியாக இருந்தேன்.

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்

முதல் ஒன்றிரண்டு கட்டுரைகள் சிரமமாக இருந்தது காரணம், பல வருடங்களாகப் பெரிய கட்டுரைகளாகவே எழுதிப் பழக்கப்பட்டதால், சிறிய கட்டுரையாக எழுதச் சிரமமாக இருந்தது ஆனால், விரைவிலேயே பழகி விட்டது.

தற்போது “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்” வடிவேல் மாதிரி ஆகி விட்டேன்.

என்னுடைய தளத்தைப் பல வருடங்களாகப் படிப்பவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ரொம்பப் பெரியதாக எழுதி உங்களைப் படுத்தி இருக்கிறேன்.

சிறிய கட்டுரைகளாக எழுதிப் பழகிய பிறகு என்னுடைய சில பழைய கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன், உண்மையாகவே சலிப்பாகி விட்டது 😀 .

படிப்பவர்களைக் கொடுமை செய்து இருக்கிறோமே! என்று எனக்கே ஓரு மாதிரி ஆகி விட்டது.

சில பெரிய கட்டுரைகள் சுவாரசியமாக இருந்தாலும், பல கட்டுரைகளில் தேவையற்ற பகுதிகள் ஏராளம் இருந்தன, திரும்ப எழுதினால் குறைந்த பட்சம் 20% – 30% குறைத்து விடுவேன்.

விமர்சனங்கள்

என் தளத்தைப் படிக்கும் கார்த்தி “அண்ணா! முதல் பாரா படிக்க ஆரம்பிச்சதும் போரடித்தது, பதிவைத் தொடர கடினமாக இருந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தான்.

விமர்சனங்களை எப்போதும் மறக்க மாட்டேன் 🙂 . நன்றி கார்த்தி.

அதே கட்டுரையில்..

இன்று எழுதிய இந்தக் கட்டுரையை, நான் இன்னும் ஆறு மாதம் / ஒரு வருடம் கழித்துப் படித்தால், எனக்கு இதில் நிறைய திருத்தங்கள் இருக்கும்.

இன்னும் சில முக்கியமானவற்றை கூறி இருக்கலாம், சிலவற்றை கூறாமல் இருந்து இருக்கலாம் என்று தோன்றும்.

இன்னும் கூறப்போனால் அடுத்த நாளே / வாரமே கூட இதில் திருத்தங்கள் தோன்றும். இந்த மாற்றங்களே இடைப்பட்ட காலங்களில் கிடைத்த அனுபவங்கள்

என்று குறிப்பிட்டு இருக்கிறேன் 🙂 .

இன்னொருத்தர் மாதவன் / ஹரி என்ற பெயரில் எழுதியவர். என்னுடைய கருத்துகளில் சில அவருக்கு உடன்பாடில்லை, அடிக்கடி கோபப்பட்டு விமர்சிப்பார்.

அதில் ஒன்று “நீங்கள் உங்களைப் பற்றி அதிகம் பேசுகிறீர்கள், உங்கள் அனுபவங்கள் என்று அதிகமாக அறிவுரை கூறுகிறீர்கள்” என்பது.

இது Blog, செய்தித் தளமல்ல, இங்கு என்னைப் பற்றி மட்டுமே கூற முடியும். இருப்பினும் நீங்கள் கூறியதை மனதில் நிறுத்திக்கொள்கிறேன்” என்று கூறி இருந்தேன்.

பின்னர் ஏதோ காரணத்தால் கோபித்துக்கொண்டு சென்று விட்டார். தற்போது என் தளத்தைப் படிப்பதில்லை என நினைக்கிறேன், பல மாதங்களாக ஆளைக் காணோம்.

தற்போது சிறிய கட்டுரையாக (2 மாதத்தில்) எழுத முயற்சிக்க ஆரம்பித்து, தேவையற்றதை தவிர்க்க ஆரம்பித்த பிறகு அவர் கூறியதில் உண்மையுள்ளது என்று உணர்கிறேன்.

சில தவறுகள் தாமதமாகத்தான் புரிகிறது, இதற்காக வருத்தப்படவில்லை. எல்லாமே அனுபவம் தானே! அனைத்துமே கற்றுக்கொண்டா வருகிறோம் 🙂 .

சவாலும் சுவாரசியமும்

இதற்கு மேலும் குறைக்கப்போவதில்லை, இனி குறைத்தால், அதற்குப் பேசாம ட்விட்டரிலேயே எழுதிட்டுப் போய்டலாம் 🙂 . கட்டுரைக்கு அவசியமற்ற விளக்கங்களைத் தவிர்க்கப்போகிறேன்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கூறியது போல, தேவையற்ற வார்த்தைகளை நீக்குவதன் மூலமே சரியான எழுத்தைக் கொண்டு வர முடியும்.

சில பெரிய கட்டுரைகளும் அவ்வப்போது வரும் ஆனால், சுருக்கமாக அனைத்தையும் உள்ளடக்கி எழுதுவது சுவாரசியமாகவும், சவாலாகவும் உள்ளது.

தொடர்பில் இருங்கள்

அன்புடன்
கிரி

தொடர்புடைய கட்டுரைகள்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!

ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!

எழுத்தாளர் “சுஜாதா” தரும் எழுத்து ஆலோசனைகள்

படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

Writer’s Block / கற்பனைத் திறன் / Passion

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. குறிப்பிட்ட சில வருடங்களாக உங்கள் தளத்தை வாசிப்பவன், இணையத்தில் நான் பின் தொடரும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே.. உங்களை பின்தொடர ஆரம்பித்த பின் 95 % பதிவுகளை வாசித்துள்ளேன்.. என அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதும் சலிப்பேற்பட்டதில்லை.. ஒரே ஒரு விஷியம் மட்டும் ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருக்கும்…

    உங்களை பின் தொடர ஆரம்பித்த பின் உங்களது பழைய பதிவுகளை படித்தேன்.. பல சச்சரவான பதிவுகளில், விவாதித்து இருப்பதை கண்டு, வடிவேல் ஸ்டைலில் “ஷாக்” ஆகி விட்டேன்.. பதிவை விட நீங்கள் ஓவ்வொருவருக்கும் தனி, தனியாக விளக்கம் கொடுத்து இருப்பது ஆச்சரியமாக இருந்தது… வருத்தமாகவும் இருந்தது..

    இதற்கென்று உங்கள் நேரத்தை செலவிட்டு இருப்பது… யோசிக்க முடியல!!! நாலு பேருக்கு பதில் சொன்னாலே, நமக்கு நாக்கு தள்ளும்.. 40 பேர ஒண்ணா பிரிச்சி மேஞ்சில இருக்கீங்க!!! தற்போது நீங்க அதை படிக்க நேரிட்டால்.. நீங்கள் கூட சிரிக்கலாம்.. உங்களுக்கு நானே கிரிக்கெட் உலக கோப்பையில் சவால் விட்டு இருக்கேன்… ஹி…ஹி…ஹி…ஹி.

    தற்போது பதிவோட சைஸ் குறைத்து விட்டிங்க… தகவல்களும் குறைந்து போச்சி, என்னை பொறுத்தவரை வருத்தமே!!! இருப்பினும் மாற்றத்தை ஏற்று கொள்ள தான் வேண்டும்… உங்கள் எழுத்துக்கள் வரும் வரை, உங்களை தொடர்வேன் என்ற நம்பிக்கை உண்டு… பணி மேலும் வாழ்த்துக்கள் கிரி..

  2. யாசின் அப்போதெல்லாம் நிறைய கருத்துரை இடுவார்கள்.. செம்மையாக இருக்கும். இப்ப எல்லோரும் சமூகத்தளங்களுக்கு சென்று விட்டார்கள். எனவே, ரொம்ப குறைந்து விட்டது. நீங்க மட்டும் தான் இருக்கீங்க 🙂 🙂

    நான் என்னுடைய மனசாட்சிக்கு சரி என்று படுவதை மட்டுமே எழுதுகிறேன். எனவே, என்ன கேட்டாலும் என்னால் பதில் கூற முடியும். எனவே, அப்போது அத்தனை பேரை எதிர்த்து கம்பு சுத்தினேன், சலிக்காமல் 🙂 . சுவாரசியமாகவும் இருந்தது.

    சொல்லவருவதை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here