அனைத்து வகைத் திரைப்படங்களும் பிடிக்கும் என்றாலும், த்ரில்லர் / ஹாரர் வகைத் திரைப்படங்களின் ரசிகன். சமீபத்தில் பார்த்த இரு இந்தி த்ரில்லர் படங்களே இவை.
காதலிக்குத் திருமணம் முடிவானதால், இருவரும் தனியாகச் சென்று விடலாம் என்ற யோசனை ஏற்கப்பட்டு நாயகன் ₹ 15000 வீடு தேட எங்கும் கிடைக்காது.
ஒருவர் சட்ட சிக்கல்களால் இன்னும் திறக்காமல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு இருக்கு என்பார்.
30 வது மாடியில் வீடு இருக்கும், அதில் கதவு கொஞ்சம் திறக்க சிரமம் மற்றும் வேறு யாருமே அந்தக் குடியிருப்பில் இருக்க மாட்டார்கள்.
நண்பர்களிடமும் எங்கே செல்கிறேன் என்று கூறாமல் மாலையே இங்கே வந்து தூங்கி எழுந்து அடுத்த நாள் கிளம்பி வெளியே வந்த பிறகு மொபைலை எடுக்க உள்ளே வரும் போது கதவு சாத்திவிடும், சாவியும் வெளியே இருக்கும்.
கீழே உள்ளே குடியிருப்பு காவலருக்கு நாயகன் மேலே இருப்பது தெரியாது. மொபைலும் வேலை செய்யாமல் போக, யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. எப்படி இருக்கும்?!
இதன் பிறகு வரும் நாட்களை எப்படிச் சமாளிக்கிறார்? தப்பித்தாரா அல்லது அப்படியே உள்ளேயே மாட்டிக்கொண்டாரா? என்பது தான் படம்.
எப்படி தப்பிப்பது?
இது போல மாட்டிக்கொண்டால் ஒருவர் என்னென்ன முயற்சிகள் செய்வாரோ அனைத்தும் காட்டப்பட்டுள்ளது.
திரைப்படத்துக்குச் செலவு என்று பெரிதாக ஒன்றுமே இல்லை.
ஒரே அறையில் மொத்த படமும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நாயகனுக்கு இயல்பாகவே உள்ள பயத்தை இப்பிரச்னையோடு இணைத்து, கொண்டு செல்வது ரசிக்கும்படி இருந்தது.
இடையே ஒன்றும் நடக்காது என்று தெரியும் போது சலிப்பாகிறது, இறுதியில் பரபரப்பாகக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
எப்படி யாருமே இல்லாத குடியிருப்பில் மின்தூக்கி செயல்படுகிறது? உட்பட நிறையக் கேள்விகள் உள்ளது ஆனால், அவற்றைக் கூறினால் படம் பார்ப்பவர்களுக்குச் சுவாரசியமாக இருக்காது.
த்ரில்லர் பட ரசிகர்கள் பார்க்கலாம். Amazon Prime ல் உள்ளது.
MOM
ஸ்ரீதேவி இதில் இரண்டாம் தாரம். முதல் தாரத்தின் மகள் இவர் மீது வெறுப்பையே உமிழ்வார் ஆனால், ஸ்ரீதேவி மிகவும் அன்பாக நடந்துகொள்ளும் அம்மா / பள்ளி ஆசிரியை.
பள்ளியில் மகளுக்கு அதே வகுப்பை சார்ந்த மாணவன் ஆபாச காணொளி அனுப்ப, அதை ஆசிரியையாக ஸ்ரீதேவி கண்டிப்பார்.
பிறகு ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொள்ளத் தந்தையிடம் சண்டையிட பின் ஸ்ரீதேவி சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைப்பார்.
பார்ட்டியில் அதே மாணவன், தன் பெரிய நண்பர்களுடன் இணைந்து இப்பெண்ணைக் காரில் கடத்தி வன்புணர்வு செய்து தூக்கி வீசிவிடுவார்கள்.
வழக்கில் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலையாகிறார்கள். டெல்லியில் நடக்கும் சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைத்துள்ளார்கள்.
ஸ்ரீதேவி இதன் பிறகு இவர்கள் நால்வரையும் எப்படிப் பழிவாங்குகிறார் என்பது தான் கதை.
இயல்பான நடிப்பு என்றால் ஸ்ரீதேவி
ஜேம்ஸ் பாண்ட் போல ஸ்ரீதேவியின் சில செயல்கள் இருந்தாலும், அம்மாவாக அவரின் கோபம், தன் கண் முன்னே குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக இருக்கும் போது அவருக்கு ஏற்படும் வலி, ஏமாற்றம் என்று அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அற்புதமான நடிகை விரைவிலேயே நம்மை விட்டுச் சென்றது வருத்தம்.
கடவுள் அனைத்து நேரங்களிலும் வந்து உதவுவதில்லை என்று ஸ்ரீதேவி கூறும் போது அதற்கு இன்னொருவர் “அதற்குத்தான் அம்மாவை அனுப்பி இருக்காரே!” என்ற வசனம் அழகு 🙂 .
வன்புணர்வு செய்தவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாமல் வெளியே சுதந்திரமாக நம் முன்னே நடமாடும் போது வரும் கோபம் இருக்கே! அதையெல்லாம் அளவிடவே முடியாது.
இதை இரு வரிகளில் எழுதிவிட்டேன் ஆனால், ஓராயிரம் மனக்குமுறல்கள் உள்ளது. எனக்கு மட்டும் “சூப்பர் பவர்” இருந்தால், இவர்களையெல்லாம் ஒரு வழி ஆக்கிட்டுத்தான் மறுவேலை.
திரைப்படம் அசத்தல் என்று கூற முடியாது ஆனால், மோசமில்லை.
Zee5 ல் உள்ளது
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, திருமணத்திற்கு முன் அதிக அளவில் ஹிந்தி படங்கள் பார்த்தேன்.. அதன் பின் மனைவிக்கு ஹிந்தியின் மீது விருப்பம் இல்லாமல் போனதால் தற்போது ஹிந்தி படங்கள் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகி விட்டது.. (ஆமீர் கானின் படங்களை தவிர்த்து). சில ஹிந்தி பாடல்கள் எப்போதும் விரும்பி கேட்பேன்.. நேரம் இருக்கும் போது ஹிந்தி படங்களை பார்க்கவும்.. மசாலா கொஞ்சம் அதிகமாக இருக்கும்.. ஆனால் இசை / தொழில்நுட்பத்திற்காக சில படங்களை பார்க்கலாம்.. நீங்கள் குறிப்பிட்ட படங்களை பார்க்க வாய்ப்பு குறைவு.. முயற்சிக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி.
யாசின் நான் அனைத்துப் படங்களையும் பார்ப்பேன்.. மொழி எனக்கு தடையல்ல. தற்போது சரியான படங்களின் பரிந்துரை கிடைக்கவில்லை, பார்க்கணும்.
தற்போது ஹிந்தி படங்கள் ஏதும் பார்க்காததால், படங்களை பார்க்கும் போது பரிந்துரைக்கிறேன்… ஓய்வு இருக்கும் போது The Way Home (2002 film) இந்த கொரிய படத்தை பார்க்கவும்.. மீண்டும் படத்தை பார்த்தால் அழுதுவிடுவேன் என்பதால் படத்தை ஒரு முறை மட்டும் பார்த்தேன்..அதன் பின் பார்க்கவில்லை… முதன்முறை படத்தை பார்த்த பின் ஏற்பட்ட வலி இன்னும் நெஞ்சை கசக்கி பிழிகிறது.. உங்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்.. படம் 90 நிமிடம் மட்டுமே..