தவறுகளைச் சுட்டிக்காட்டும் பணியில் நியாயமாக நடந்து கொண்டு இருந்த ஊடகங்கள், கடந்த பல வருடங்களாக ஒருதலைப்பட்ச செய்திகளாலும், அரசியல் சார்ந்தும் செயல்பட்டதால் மதிப்பை இழந்து விட்டன.
ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சார்ந்தே தற்போது இயங்கி கொண்டுள்ளன. Image Credit
ஆன்லைன் செய்தித்தளங்கள்
ஆன்லைன் செய்தித்தளங்கள் வந்த பிறகு புற்றீசல் போல ஆளுக்கொரு தளங்களை உருவாக்கிச் செய்திகள் என்று கொடுத்து வருகின்றன.
இதில் 90% க்கும் மேல் Deskwork எனப்படும் மற்ற செய்திகளைப் பட்டி பார்த்துக் கொடுப்பதே.
ட்விட்டர் ஃபேஸ்புக் பயன்படுத்திய பிறகு தற்போது மக்கள் எதையும் சிரமம் இல்லாமல் உடனே படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதாவது சுட்டியை (Link) க்ளிக் செய்து படிக்கச் சோம்பேறித்தனம். இரு வரித் தலைப்பு மட்டும் போதும், உள்ளடக்கம் தேவையில்லை.
இதனால் ஊடகங்கள் மக்களை க்ளிக் செய்ய வைக்க எடுத்த ஆயுதம் தான் எதிர்மறை செய்திகள்.
நல்லதை கூறினால் காது கொடுத்துக் கேட்பவர்களை விட, கெட்டதைச் சொன்னால் அடித்துப் பிடித்துச் சென்று பார்ப்பவர்களே அதிகம்.
உலகம் மகிழ்ச்சியாக உள்ளது காரணம் என்ன? என்று தலைப்பு வைத்தால், யாரும் படிப்பதில்லை ஆனால், அதே உலகம் அழிய போகிறது, இனி என்ன நடக்கும்? என்று போட்டு இருந்தால், கும்பலாகக் குவிந்து விடுவார்கள்.
மனதை தூய்மையாக வைத்து இருப்பது எப்படி? என்றால் எவரும் கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால், பக்கத்துக்கு வீட்டில் எட்டி பார்த்த இளைஞருக்கு ஏற்பட்ட கதி! என்று தலைப்பு வைத்தால், மொத்த பேரும் க்ளிக் செய்வார்கள்.
நீங்க புறக்கணித்தால் அவர்கள் ஏன் கொடுக்கப்போகிறார்கள்?
தொலைக்காட்சி விவாதத்தில் ஐந்து பேர் அடித்துக்கொள்வார்கள் அதைச் சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
அடுத்தவன் விசயம், சண்டை, கிசுகிசு ன்னு எதிர்பார்த்து படித்தால் / பார்த்தால் இவை தான் தொடர்ந்து கிடைத்துக்கொண்டு இருக்கும்.
விவேக் நகைச்சுவையில் ‘காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்கா குரல் தான் வரும்.. உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?‘ ன்னு கேட்பது போலக் குப்பை மாதிரி எண்ணங்களை வைத்து இருந்தால், குப்பை செய்திகள் தான் கண்களில் படும்.
நல்லதை கூறினால், யாருமே கண்டுகொள்ளவில்லையென்றால் சம்பாதிக்க நினைக்கும் ஊடகம் ஏன் நல்லதை கூற வேண்டும்?! அதனாலே எதிர்மறை செய்திகளைக் கொடுக்கிறார்கள்.
யாருமே வரவில்லை என்றால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பது எப்படி? எனவே, மக்களே ஊடகங்களைத் தவறு செய்யத் தூண்டுகிறார்கள்.
ரம்யாகிருஷ்ணன் காரில் மதுபான பாட்டில்கள்
ரம்யாகிருஷ்ணன் காரில் மதுபான பாட்டில்கள் என்ற செய்தி தான் பரபரப்பாகப் போடப்படுகிறது என்றால், அந்தச் செய்தியை மக்கள் அதிகம் படிக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.
அவங்க எதைக் கொண்டு போனால், உங்களுக்கு என்ன? உங்க காரிலா கொண்டு சென்றார்கள்? பெண், நடிகை இது போதுமே! பரபரப்பு செய்தி.
எதற்கு வரவேற்பு உள்ளதோ அதைத்தான் ஊடகங்கள் கொடுப்பார்கள். போட்டி மிகுந்த உலகம் ஆகி விட்டது, அதிகக் கூட்டம் வர வைத்தால் தான் விளம்பரங்கள் மூலம் வருவாய் கிடைக்கும்.
நீங்கள் எதிர்மறை, பயனற்ற செய்திகளைப் புறக்கணித்தால், தானாக ஊடகங்களும் அது போலச் செய்திகளைத் தவிர்த்து விடுவார்கள்.
ஊடகங்கள் கொடுக்கும் நல்ல செய்திகளுக்கு வரவேற்பு கொடுத்தால், அது தொடர்பான செய்திகளை அதிகம் கொடுப்பார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை எதற்குக் கூட்டம் / TRP வருகிறதோ அந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எனவே, ஊடகங்கள் நல்ல செய்திகளை, நேர்மறை செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்று கருதினால் அதற்கான தீர்வு நம்மிடையே தான் உள்ளது.
மக்களும் மாறப்போவதில்லை ஊடகங்களும் மாறப்போவதில்லை என்பது கசப்பான உண்மை.
எண்ணம் போல வாழ்க்கை.
தொடர்புடைய கட்டுரைகள்
ஊடகத்துறை அசிங்கப்பட யார் காரணம்?
தமிழ் ஊடகங்களின் தமிழ் அழிப்பு
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
I think corona has come to change these people. Nature acts through corona use it as a weapon. All persons who are all against nature they will get rid off slowly from this earth through corona here after.
Good post, Anna. As they say, Change starts at individual level.
கல்லூரி பருவத்தில் வகுப்புக்கு சென்றதை விட நூலகத்திற்கு சென்றது தான் அதிகம் .. அந்த நேரங்களில் பல விதமாக தினசரி ,வார ,மாத இதழ்களை படிக்க முடியும் .. அவ்வளவு சுவரசியமாக இருக்கும் .. தற்போது இருப்பதுபோல வீணான செய்திகளை காண்பது மிக அரிது .. அப்படி செய்திகள் வருகின்ற போதும் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என கருதுகிறேன் ..
தற்போது செய்திகளை முற்றிலும் படிப்பதை நிறுத்தி விட்டேன் … (குறிப்பாக வாட்ஸப் மூலம் வரும் செய்திகள்) அதுவும் இதுபோல இக்கட்டான நேரங்களில் அதிகம் எதிர்மறை செய்திகள் தான் கண்ணில் படுகிறது .. ஊடகங்களின் தற்போதைய நிலையை கவண் படத்தில் கொஞ்சம் விளக்கமாக கூறி இருப்பார் இயக்குனர் கே .வி ஆனந்த் .. பகிர்வுக்கு நன்றி கிரி..
@Ananthan Whatever it is they won’t change. People have to ignore then only it will stop.
@Magesh Yes.
@யாசின் ஊடகங்கள் மீதான நம்பிக்கை போய் விட்டது. செய்திகளைக் கொடுப்பதற்கு பதிலாகத் திணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது தான் பிரச்சனை.
தற்போதைய செய்திகளைப் படித்துப் புறக்கணிக்கவே ஒரு மன திடம் வேண்டும்.