அலுவலகத்தில் எப்படி நடந்து கொண்டால் முன்னேறலாம்?

29
சம்பள உயர்வு

விளம்பரம் என்பது தொழில்களுக்கு மட்டுமல்ல ஒரு சாதாரண ஊழியருக்குக்கூட சம்பள உயர்வு உட்பட அவசியமான ஒன்றாகத் தற்போது விளங்குகிறது. Image Credit

நான் கூறப்போவது செய்யாத வேலைக்குத் தேடும் விளம்பரம் அல்ல, செய்த வேலைக்குக் கஷ்டப்பட்டு உழைத்த நம் உழைப்பிற்கு தேடும் விளம்பரம்.

ஒரு சிலர் கடுமையா வேலை செய்வாங்க, சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவாங்க, எந்த வேலை கொடுத்தாலும் பக்காவா முடிப்பாங்க.

ஆனால், அவர்களில் சிலருக்கு பதவி உயர்வு, பணி உயர்வு, சம்பள உயர்வு என்று எதுவுமே கிடைக்காது.

காலம் எல்லாம் இதையே புலம்பிட்டு இருப்பாங்க ஆனால் ஒன்றும் நடக்காது. இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இக்கட்டுரை.

மேல் அதிகாரி

மேல் அதிகாரி புத்திசாலியாக, நேர்மையாக இருந்தால் இந்தப் பிரச்னை கிடையாது ஆனால் பலர் அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறவங்களுக்குத்தான் தான் அதிக வாய்ப்பு வசதிகள் தருவாங்க.

அதோடு மாக்கான இருக்கிற மேல் அதிகாரி உங்களோட கடும் உழைப்பை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருப்பார்.

இதனால் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள் என்பதே அவர் கவனத்திற்குப் போகாது.

அதற்கு என்ன செய்வது?

நீங்க வேலை செய்வதை மேல் அதிகாரிக்கு அவ்வப்போது குறிப்பால் உணர்த்த வேண்டும்.

சிறப்பான பணி செய்து இருக்கிறீர்கள் என்றால், அது பற்றிய தகவலை மற்றவருக்குத் தெரியப்படுத்தும் போது மின்னஞ்சலில் CC கண்டிப்பாகப் போட வேண்டும்.

மேல் அதிகாரி கில்லியான நபராக இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. அவரே இதை எல்லாம் அறிந்து இருப்பார் ஆனாலும் இதைச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து இருக்கிறீர்கள் என்றால், அதை மேலதிகாரியிடம் “இந்த வேலையை இந்தக் காலக்கட்டத்திற்குள் சொன்ன படி முடித்து விட்டேன்” என்பதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

அட! இதெல்லாம் எதுக்குங்க நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன் அதைச் சொல்லி வேறக் காட்டணுமா‘ என்று பேசினால் இழப்பு உங்களுக்குத் தான்.

நீங்கள் செய்த வேலையை உங்கள் மேல் அதிகாரி அறிந்து கொள்வார் என்றாலும் அவரிடம் கூறினால் அது அவரது மனதில் ஆழமாகப் பதியும்.

இது சம்பள உயர்வு மற்றும் ஊக்கத்தொகை நேரங்களில் உங்களுக்கு உதவி புரியும் கூடுதல் கவனம் சேர்க்கும்.

எந்த நேரங்களில் இதைப்போல செய்யலாம்?

மேல் அதிகாரிக்கு இதைப்போலத் தெரியப்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே போலச் சொத்தை விசயங்களுக்கு எல்லாம் அவரிடம் கூறாமல் இருப்பது அதைவிட அவசியமாகும்.

காரணம், சும்மா சப்பை விசயத்துக்கெல்லாம் கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்களை டம்மி பீசாக்கி விடுவார்கள்.

உங்களுடைய சிறப்பான வேலை கூட அவர்கள் கவனிக்காமலே போய் விடக்கூடிய வாய்ப்புள்ளது.

அட! இவனா(ளா) வேற வேலையே கிடையாதுப்பா.. சும்மா ஒன்றுமில்லாத விசயத்துக்கெல்லாம் நமக்கு CC போட்டு மெயில் பாக்சை நிரப்பி இம்சை பண்ணிட்டு இருக்கான்(ள்)‘ என்று நினைத்து விடுவார்கள்.

நல்லவனாக இருக்கலாமா!

நல்லவனாக இருக்கலாம் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.

அட! எதுக்குங்க விளம்பரம் நான் என் வேலையைச் செய்கிறேன். கண்டு கொண்டால் என்ன கண்டு கொள்ளாவிட்டால் என்ன?!‘ என்று வசனம் பேசினால், கடைசியா சோப்பு டப்பா கூடக் கிடைக்காது.

வேலை செய்தால் மட்டும் போதாது செய்த வேலையை நன்றாக ப்ரொஜெக்ட் செய்யவும் தெரிய வேண்டும்.

அப்போது தான் இப்போட்டி மிகுந்த உலகத்தில் உழைப்பிற்கான முழுப் பயனைப் பெற முடியும்.

ஜால்ரா அடிக்காமல் எப்படி வேலை செய்வது?

ஐ டி துறை என்றில்லை எந்தத் துறையாக இருந்தாலும் தனது மேல் அதிகாரிக்கு ஜால்ரா அடிக்காமல் மேலே வர முடியாது ஆனால், அப்படி செய்யாமல் மேலே வந்தவர்கள் நிறைய உண்டு.

எப்படி இவர்கள் மேலே வந்தார்கள் ஜால்ரா அடிக்காமல்?! நல்ல கேள்வி!

காரணம் ரொம்ப எளிது. ஜால்ரா அடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை ஆனால், உங்கள் மேலதிகாரியை பகைத்துக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா!

அதாவது, உங்கள் வேலையைச் சரியா செய்யுங்கள்! உங்கள் பணியின் மீதும் யாரும் குறைகூறா வண்ணம் நடந்து கொள்ளுங்கள்.

ஜால்ரா அடிக்கவில்லை என்றாலும் அவருக்கு நீங்கள் குடைச்சல் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மீது கரிசனம் இல்லை என்றாலும் காண்டு இருக்காது.

எனவே, தேவை இல்லாமல் உங்களுக்குக் குடைச்சல் கொடுக்கமாட்டார்.

முறுக்கிக்கிட்டு இருந்தால் இழப்பு உங்களுக்குத்தான் காரணம், தற்போதைய கால கட்டங்கள் அதைப்போல உள்ளது.

எனவே, காலத்திற்கு தகுந்த மாதிரி மாறவில்லை என்றால் சிரமம் உங்களுக்குத்தான்.

அல்டிமேட் விஷயம்

இவை எல்லாம் ஒரு பகுதி தான். அல்டிமேட் விஷயம் என்னவென்றால் உங்களின் விலைமதிக்க முடியாத உழைப்பு, பொறுப்பு மற்றும் திறமை தான்.

இவை இருந்தால் போதும்! யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது!

ஆனால், ஒரே நிறுவனத்தில் நிலைத்து இருக்க முடியாது.

இவை எல்லாம் ஒரு கட்டம் வரை தான். நீங்களும் ஒரு மரியாதைக்குரிய பதவிக்கு வந்து விட்டீர்கள் என்றால் அதன் பிறகு இதைப்போலப் பிரச்சனைகள் வராது ஆனால், அலுவலக அரசியல் பிரச்சனையைச் சமாளிக்க வேண்டியது வரும்.

நாமளும் மேலதிகாரி ஆன பிறகு இதே மாதிரி நமக்குக் கீழே இருப்பவர்களை மிரட்டலாம் என்று முடிவு செய்து விடாதீர்கள் 🙂 .

ஜால்ரா அடித்துத்தான் முன்னுக்கு வர முடியும் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். திறமையும் சரியான வழிமுறைகளும் இருந்தால் எவராலும் முன்னுக்கு வர முடியும்.

அதில் நான் மேற்கூறிய விளம்பரமும் மற்றவர்களைக் கையாளத் தெரிந்து இருக்கும் திறமையும் முக்கியமான ஒன்றாகும்.

நம்முடைய நிலைக்கு நாமே காரணம் மற்றவர்கள் யாரும் அல்ல.

எனவே, மற்றவர்களைக் குறை கூறுவதை தவிர்த்து நாம் எப்படி நேர்மையான வழியில் முன்னேறுவது என்பதை சிந்தியுங்கள்.

காலத்திற்கு ஏற்றமாதிரி உங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.

நான் கூறுவது ஜால்ரா அடிக்காம தாங்க 🙂 .

உங்கள் பணியைக் காதலியுங்கள் உங்கள் நிறுவனத்தை அல்ல!

கொசுறு 1

உங்கள் பணியில் நீங்கள் கில்லியாக இருக்க வேண்டும். யாரும் உங்களைக் குறை கூற வைக்கும் அளவிற்கு நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளாதீர்கள்.

எத்தனை வேலை கொடுத்தாலும் உங்களை நம்பிக் கொடுக்கலாம் என்று மற்றவர்கள் நினைக்கும் படி உங்கள் வேலை சுத்தம் இருக்க வேண்டும்.

அவசியம் இல்லாமல் யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள், இல்லை என்றால் ஒரு சுமூகமான உறவு மற்றவர்களுடன் அமையாது.

இதனால் உங்கள் பணிகளைத் தொடர்வதில், முடிப்பதில் சிரமம் ஏற்படும்.

உங்களுக்கு ஒரு உதவி தேவையென்றால் மற்றவர்கள் உதவ வரமாட்டார்கள்.

அதே சமயம் உங்கள் திறமையை மற்றவர்களுக்கு சரியான முறையில் உணர்த்தி விடுங்கள். இப்படி இருந்தால் உங்கள் வளர்ச்சி சரவெடியாக இருக்கும்.

கொசுறு 2

நம் மேலாண்மையில் சிலர் மனவருத்தம் அடையும்படி நேரலாம் அதற்காக வருத்தப்படாதீர்கள். அனைவரையும் திருப்தி படுத்த முடியாது என்பதை உணருங்கள்.

உங்கள் பணியில் நேர்மையாக மனசாட்சிக்கு சரியாகச் செயல்படுகிறீர்களா என்பதே முக்கியம்.

எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு டீம் லீடர் என்றால் உங்கள் டீமில் திறமையானவருக்கே ஊதிய உயர்வுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

ஆனால், ஒருத்தருக்கு அதிகமாகக் கொடுத்தால் மற்றவர் தவறாக நினைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து இருவருக்கும் ஒரே மாதிரி உயர்வு கொடுத்தால் திறமையானவருக்கு என்ன மரியாதை?

எனவே, சில நேரங்களில் சரியான முடிவெடுக்கச் சென்டிமென்டுக்கு இடம் தராதீர்கள்.

இவை உங்களை முன்னேறத் தடுக்கும் மிகப்பெரிய காரணியாகும்.

இது தொடர்பாகக் கொஞ்ச நாள் முன்பு எழுதிய கட்டுரை “எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

29 COMMENTS

  1. எப்பா… சாமி.. முடியலை… என்னமா ஒரு பதிவு போட்டு இருக்கீங்க…

    எங்க அழுவலகத்திலையும் ஒருத்தன் இருக்குறான். நீங்க சொன்னதுக்கு எல்லாம் ஒரு படி மேல போயி, அடுத்தவன் செஞ்ச வேலையையும் தான் செஞ்சதா மேனேஜர் கிட்ட போயி சீன் போடுவான்.. அவனை எப்படி சமாளிக்கிறதுணு தெரியலை…

    உண்மையில விளம்பரம் ரொம்ப முக்கியம்… இல்லைன்னா பத்து பைசா கூட பேர மாட்டோம்…

  2. தெளிவான விளக்கங்களுடன் அருமையாக புரியும்படி பதிவு செய்துள்ளீர்கள் பிரமாதம்,
    உங்கள் எழுத்துநடை அற்புதம்….
    பாராட்ட வார்த்தைகள் இல்லை
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்
    நன்றி
    நட்புடன்
    மாணவன்

  3. //உங்கள் பணியை காதலியுங்கள் உங்கள் நிறுவனத்தை அல்ல!// மிக சரி…. பில் கேட்ஸ் சொன்னது தானே அண்ணே !!!!

      • நன்றி சிங்கக்குட் !!!! ஆனா இதே கருத்த நிறைய பேர் சொல்லி இருக்காங்க போல … பில் கேட்ஸ் கூட சொல்லி இருக்கார் !!!! கூகுளாண்டவர் கிட்டே கேட்டா சரியான விடை இல்லே 🙁 ஏன் வம்பு பேசாம நம்ம கிரியண்ணனே சொன்னதுன்னு விட்ரலாம் 🙂

  4. அட்டகாசமான பதிவு. படிக்கும்போது கண்டிப்பா ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க flashback (வேலை சம்பந்தமா) நினைவுக்கு வரும்.

  5. ரொம்ப நல்லா இருக்கு கிரி,.

    கடந்த ஜனவரி மாதம் முழுவதும், இது சம்மந்தமாகவே பல பதிவு எழுதி வந்தேன்,.

    ஏன் யாருமே இது பற்றி புதிதாக எதுவும் பகிரவில்லை என்று நினைத்து கொண்டு இருந்தபோது நீங்கள் ஒரு நல்ல பதிவை கொடுத்துவிட்டீர்கள்.

    நன்றி.

  6. மிகவும் அவசியமான , காலத்திற்கேற்ற செய்திகள். இவைகளை பகிர்ந்துகொள்ளவும் ஒரு பரந்த மனம் வேண்டும் அல்லவா?!
    தொடர்ந்து எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றி.

  7. //இப்படி இருந்தால் உங்கள் வளர்ச்சி சரவெடியாக இருக்கும்.//

    சரவெடியாய் உள்ளது இப்பதிவும்.

    கொசுறு:

    கொசுறு இரண்டும் அருமை:)!

  8. விளம்பரமும் முக்கியம், அது விளம்பரம் இல்லைன்னு நம்புற மாறி விளம்பரம் செய்றது ரொம்ப முக்கியம்

  9. விளம்பரமின்னா எது? சண் பிக்சர்ஸ் பண்ணிற மாதிரியா? இல்லை ஞானி/சாரு பண்ணிற மாதிரியா ? 🙂

  10. ஒரு சிலர் மிக கடினமான பணியை எளிதில் செய்துவிட்டு, சும்மா இருப்பார்கள். அவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

  11. நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் கிரி.

    கடந்த எல்லா பதிவுகளையும் படிச்சேன். கலக்கலா இருக்கு. பட்டையை கெளப்புங்க. 🙂

  12. ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க………
    //
    அட! இவனா(ளா) வேற வேலைய கிடையாதுப்பா சும்மா ஒன்றுமில்லாத விசயத்துக்கெல்லாம் நமக்கு ஸீஸீ போட்டு நம்ம மெயில் பாக்சை நிரப்பி இம்சை பண்ணிட்டு இருக்கான்(ள்) என்று நம்மை காமெடி பீஸ் ஆக்கி விடுவார்கள்.
    //
    மிகச்சரி………

  13. சித்ரா, தினேஷ், மாணவன், ராஜ் Mr. கிருஷ்ணன், லோகன், சிங்கக்குட்டி, மாணிக்கம், முத்துலட்சுமி, தாமஸ் ரூபன், ராமலக்ஷ்மி, அணிமா, சுனில், ஜனார்த், ஜீவதர்ஷன், சிவா, ரோஸ்விக், யோகேஷ் மற்றும் எஸ் கே வருகைக்கு நன்றி

    @சித்ரா நன்றி 🙂

    @தினேஷ் ஹா ஹா ஹா நிறைய பேர் இந்த மாதிரி இருக்காங்க 🙂

    @ராஜ் சிங்கக்குட்டி கூறியது சரி தான்.. அதுவுமில்லா யார் சொன்னா என்ன? விஷயம் நன்றாக இருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டியது தானே! 🙂

    @சிங்கக்குட்டி இந்த இடுகை எழுதிய போது உங்கள் இடுகை நினைவு வந்தது 🙂

    @ராமலக்ஷ்மி நன்றி 🙂 உங்களோட ஸ்மைலிக்கு இடம் விட்டு போடுங்கள் அப்போது தான் ஸ்மைலி சரியாகத்தெரியும். அருமை:) தவறு அருமை 🙂 இதுவே சரி (இடம் விட வேண்டும்)

    @ரோஸ்விக் நன்றி 🙂

  14. ஹாய் கிரி,

    மன்மோகன் சிங்க் பற்றி உங்களுக்கு மனதில் பட்டடை கருத்தாக தெரிவிக்கவும் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

    நன்றியுடன் வெங்கட்

  15. நல்லா அருமையா, அனுபவத்தை எழுதியிருகீங்க.. வெல்டன்

  16. மிக அருமையான பதிவு. உண்மைய சொன்னதற்கு தலை வணக்குகிறேன்…..

  17. கிரி,

    ஒரு சிறந்த பகிர்வுக்கு நன்றி.
    நீங்கள் கூறியுள்ள எங்கும் செல்லுபடி ஆகக்கூடிய அறிவுரைகளுடன் வெவ்வேறு துறைகளில் உள்ள நுணுக்கங்களும் அது தொடர்பான புரிதலும் முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here