Taken (2008) | தந்தையின் அதிரடி துரத்தல்

42
Taken

துரத்தல்னா துரத்தல் அப்படியொரு துரத்தல், Commando, Apocalypto போன்ற படங்களைப் போலக் காட்டுத்தனமான துரத்தல் Taken.

Taken

முன்னாள் CIA ஏஜன்ட் Liam Neeson. அவரின் மகள் தன் தோழியுடன் அமெரிக்காவிலிருந்து ஃபிரான்ஸ் சுற்றுலா செல்கிறார்.

அங்கே உள்ள மாஃபியா கும்பலால் பாலியல் தொழிலுக்குக் கடத்தப்படுகிறார்கள்.

Liam Neeson அங்கே சென்று எவ்வாறு தன் மகளை மீட்கிறார் என்பதைத் தாறுமாறான வேக திரைக்கதையில் கூறி உள்ளார்கள். இத்துரத்தல் 96 மணி நேரத்தில் நடந்து முடிவதாக எடுக்கப்பட்டுள்ளது

மசாலா படமாக எடுக்கப்பட்டு இருந்தாலும், எந்த வகையிலும் இயல்பை மீறாமல் அளந்து விடாமல் அருமையாக எடுத்து உள்ளார்கள்.

ஒரு சில காட்சிகள் அப்படி இருந்து இருக்கலாம் ஆனால், அதெல்லாம் அடிபட்டுப் போகிறது படத்தின் சுவாராசியத்தில்.

Liam Neeson

CIA ஏஜென்ட் என்பதாலோ என்னவோ பின்னிப் பெடலெடுக்கிறார், அநியாயத்திற்கு புத்திசாலி, வில்லன் கோடு போட்டால் இவர் ரோடே போட்டு விடுகிறார்.

அந்த அளவிற்கு ஒவ்வொன்றையும் லாஜிக்கா அவர் கண்டு பிடிக்கும் போது நாம் அவருக்கு ரசிகர் ஆகி விடுவோம் போல, அந்தளவிற்கு அசத்தி இருக்கிறார்.

மொத்த படத்தையும் தன் மீது சுமந்து உள்ளார். இவருக்கு 56 வயதாம், கண்ணைக் கட்டுகிறது.

என்னா ஓட்டம் ஓடுகிறார், யோசிப்பதில் என்னா சுறுசுறுப்பு, சண்டை காட்சிகளில் அடித்து நொறுக்கிறார்.

விமான நிலையத்திலிருந்து பெண்களை எப்படி கடத்துகிறார்கள், பாலியல் தொழிலுக்குப் புகுத்துவது, போதை ஊசி போட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது.

பெண்களை ஏலத்தில் ஹைடெக்காக விற்பது என்று மாஃபியா கும்பல் செய்யும் வேலைகளைப் பார்த்தால் வயிற்றைப் புரட்டுகிறது.

Niem Neeson பெண்ணின் நடிப்பும் நன்றாக இருந்தது.

இவை அனைத்துமே நிஜமாக நடக்க வாய்ப்பு இருப்பதாகவே காட்டப்பட்டு இருப்பதால், நம் வயிற்றில் பயப்பந்து உருளுகிறது.

மகாநதியில் கமல் ஒவ்வொரு அறையாகப் பார்ப்பாரே அதைப் போல இதில் ஒவ்வொரு இடமாகத் தன் பெண்ணைத் தேடும் போது நமக்குக் கண்கலங்கி விடும்.

வில்லன் தெரியாமல் கொடுக்கும் க்ளூவை வைத்தே துரத்துவார். வில்லன்களைப் போட்டுத் தள்ளும் போது அடின்னா அடி மரண அடி!

எல்லோரையும் துவம்சம் செய்துடுவார், அதுவும் சினிமா தனமாக இல்லாமல் நம்பும் படி. இவரது அகராதியில் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது.

Niem Neeson கூறும் I Will Find You And I Will Kill You வசனம் மிகப்பிரபலம்.

பெண்ணைப் பெற்ற தந்தையின் நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணாக நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நிலையிலும் ஒவ்வொருவரும் ஒப்பிட்டுப் பார்த்து இருப்பார்கள்.

இதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.

அனைவரும் பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன் 🙂 .

Directed by Pierre Morel
Produced by Luc Besson
Written by Luc Besson, Robert Mark Kamen,
Starring Liam Neeson, Maggie Grace, Leland Orser
Music by Nathaniel Méchaly
Cinematography Michel Abramowicz
Edited by Frédéric Thoraval
Release date 27 February 2008 (France), 30 January 2009 (United States)
Running time 90 minutes
Country France
Language English

தொடர்புடைய விமர்சனங்கள்

No Escape [2015] திக் திக் நிமிடங்கள்

Polar (2019) எங்கிட்ட மோதாதே!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

42 COMMENTS

  1. படத்தை போலவே உங்கள் விமர்சனமும் வேகமாக இருக்கு.

  2. ஆங்கில படங்களை பொறுத்தவரை வித்தியாசமான அணுகுமுறை தான் சிலிர்க்கவைக்குது!

  3. படத்தோட பேருக்கு பொருத்தமா, நம்ம ஆளுங்க தான் இந்த படத்தை ஆல்ரெடி சுட்டுடாங்களே??

  4. நல்லா துரத்தி புடிச்சிருக்கியள், படத்தையும் அதன் சுட்டியையும்.

    அவசியம் இந்த வார இறுதியில் பார்த்திடுவோம் …

    [[வில்லன்களை அடிக்கும் போது தாங்களே அவர்களை தண்டித்து விட்டதாக படம் பார்ப்பவர் ஒவ்வொருவரும் நினைக்கும் விதத்தில் காட்சி அமைப்பு உள்ளது.]]

    வித்தியாசமா இருக்கு …

    இதுக்காகவேனும் பார்க்கனும்.

  5. உங்க விமர்சனம்னாலே ஹாஸ்டல் பட விமர்சனம்தான் ஞாபகம் வருது 🙂

  6. "மின்னுது மின்னல்" உங்கள் இணைப்புக்கு நன்றி.

  7. கிரி-ஜி நான் இன்னும் ஹாஸடல் படமே பாக்கல அதுக்குள்ள இன்னொரு அருமையான விமர்சனமா??? கலக்கல் 🙂

  8. Giri,

    pattaya kelappura padamache ithu! Namma kaivasam intha padathoda blu Ray disc irukku. Neram kidaikumpothu adikkadi parpathu vazhakkam. Liam magal kadaththapattu aval "veeeeel" ena kathumpothu manusan close up shot la oru reaction arputhama koduthirupparu. Athuvum antha "good luck" payalai Kandu pidukkumpothu visiladikka thondriyathu. Suvaarasyamaana vimarsanam. Nandri.(tamingilathil eluthiyatharku mannikavum)

  9. கிரி.. .சினிமாவை விட உங்க விமர்சனம் பரபரப்பா இருக்கு… கட்டாயம் பாக்கணும்…

  10. பட அறிமுகம் சூப்பர். லிங்க்-க்கு நன்றி. பார்த்துடுவோம்.

  11. அண்ணே.. விமர்சனம் கலக்கல்.. ஹ்ம்ம் ஆனா எனக்கெல்லாம் இத தமில்ல டப் பண்ணினதுக்கு அப்புறம் தான் புரியும் 🙂

  12. //நட்புடன் ஜமால் said…
    நல்லா துரத்தி புடிச்சிருக்கியள், படத்தையும் அதன் சுட்டியையும்.
    அவசியம் இந்த வார இறுதியில் பார்த்திடுவோம் ..//

    அவசியம் பாருங்க ஜமால்

    ========================================================

    // piratheepan said…
    படத்தை போலவே உங்கள் விமர்சனமும் வேகமாக இருக்கு.//

    நன்றி பிரதீபன்

    ========================================================

    // மின்னுது மின்னல் said…
    விறுவிறுப்பான விமர்சனம்!//

    நன்றி மின்னுது மின்னல் அப்படியே படத்தை பற்றியும் சொல்லி இருந்தீங்கன்னா நான் சொன்னது உண்மையின்னு கொஞ்சம் நம்பி இருப்பாங்க 🙂

    ========================================================

    // எம்.எம்.அப்துல்லா said…
    உங்க விமர்சனம்னாலே ஹாஸ்டல் பட விமர்சனம்தான் ஞாபகம் வருது :)//

    :-)) அதை போலவே அதிரடி திரைக்கதை

    ========================================================

    // வால்பையன் said…
    ஆங்கில படங்களை பொறுத்தவரை வித்தியாசமான அணுகுமுறை தான் சிலிர்க்கவைக்குது!//

    உண்மை தான் அருண்

    =========================================================

    // எவனோ ஒருவன் said…
    தங்களது விமர்சனம் அருமை.//

    பெஸ்கி நன்றி

    =========================================================

    // மஞ்சள் ஜட்டி said…
    படத்தோட பேருக்கு பொருத்தமா, நம்ம ஆளுங்க தான் இந்த படத்தை ஆல்ரெடி சுட்டுடாங்களே??//

    நம்ம ஆளுங்க தான் எதையும் விட மாட்டாங்களே! இந்த படத்தோட காட்சிய எதோ ஒரு சஞ்சய் தத், ஜான் அபிரகாம் படத்துல சுட்டு போட்டு இருப்பாங்க சரியா! 🙂

    =========================================================

    // Lakshmi said…
    Really this is an amazing movie….i watched 3 times//

    நான் இது வரை ஐந்து முறை பார்த்து விட்டேன்.. ஒரு வாரத்திலே

    ==========================================================

    // பிரேம்ஜி said…
    Giri,

    pattaya kelappura padamache ithu! Namma kaivasam intha padathoda blu Ray disc irukku.//

    ஆமாம் பிரேம்ஜி கலக்கல் படம்.. Blue Ray டிஸ்கா ..படம் பார்க்க பட்டாசா இருக்குமே! எனக்கும் ஒரு சில படங்களை இதில் பார்க்க ஆசை..ஹி ஹி ஹி ஆனா அதுக்கு இன்னும் Player வாங்கல 😉

    ===========================================================

    // பாசகி said…
    கிரி-ஜி நான் இன்னும் ஹாஸடல் படமே பாக்கல அதுக்குள்ள இன்னொரு அருமையான விமர்சனமா???//

    சக்தி முதல்ல ஹாஸ்டல் படம் பாருங்க..:-)

    ============================================================

    // Mahesh said…
    கிரி.. .சினிமாவை விட உங்க விமர்சனம் பரபரப்பா இருக்கு… கட்டாயம் பாக்கணும்…//

    படம் பார்த்த பிறகு என் விமர்சனம் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுவீங்க 🙂

    =============================================================

    // மங்களூர் சிவா said…
    பட அறிமுகம் சூப்பர். லிங்க்-க்கு நன்றி. பார்த்துடுவோம்.//

    சிவா கண்டிப்பா பாருங்க.. படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது

    =============================================================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…
    அண்ணே.. விமர்சனம் கலக்கல்.. ஹ்ம்ம் ஆனா எனக்கெல்லாம் இத தமில்ல டப் பண்ணினதுக்கு அப்புறம் தான் புரியும் :)//

    ராஜ் நீங்க வேற ..எனக்கும் ஒரு இழவும் புரியாது…ஆனா இந்த படம் எல்லாம் ஆங்கிலம் தெரியாமையே எளிதா புரியும். என்ன நான் கொஞ்ச விவரங்கள் refer செய்தேன் இதுக்காக.

    =============================================================

    // சென்ஷி said…
    பகிர்விற்கு நன்றி கிரி :)//

    சென்ஷி படம் பாருங்க..சும்மா நன்றிய சொல்லிட்டு டீல் ல விட்டுடாதீங்க 😉

  13. //// சென்ஷி said…
    பகிர்விற்கு நன்றி கிரி :)//

    சென்ஷி படம் பாருங்க..சும்மா நன்றிய சொல்லிட்டு டீல் ல விட்டுடாதீங்க ;-)//

    இல்ல தலைவா.. நேத்து நீங்க கொடுத்திருக்குற லிங்க்ல போய் படம் பார்த்தேன். 10 நிமிசத்துக்கு பிறகு படம் ஸ்டில்லா நின்னுடுச்சு. ஸ்கிரோல் பாரை இழுத்து விட்டா சவுண்ட் இல்லாம மியுட் ஆ இருக்குது.

    இந்த கொடுமைய இப்படியே விடக்கூடாதுன்னு டோரண்ட்ல டவுன்லொடு செஞ்சுட்டேன். இன்னிக்கு இரவு நிச்சயம் பார்த்துடுவேன் 🙂

    எப்பூடி!

  14. //சென்ஷி said…
    இல்ல தலைவா.. நேத்து நீங்க கொடுத்திருக்குற லிங்க்ல போய் படம் பார்த்தேன். 10 நிமிசத்துக்கு பிறகு படம் ஸ்டில்லா நின்னுடுச்சு. ஸ்கிரோல் பாரை இழுத்து விட்டா சவுண்ட் இல்லாம மியுட் ஆ இருக்குது//

    அப்படியா! நம்ம ஊர் நெட் ஸ்பீட் ல வரலையா இருக்கும்..இங்கே சர்ர்ருன்னு வரும் 🙂 அதுக்குன்னு எடுத்த உடனே கடைசி காட்சி வந்துடும்னு நினைத்து விடாதீங்க :-)))

    அதுல நிறைய சைட் க்கு லிங்க் இருக்கும்..ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல

    //இந்த கொடுமைய இப்படியே விடக்கூடாதுன்னு டோரண்ட்ல டவுன்லொடு செஞ்சுட்டேன். இன்னிக்கு இரவு நிச்சயம் பார்த்துடுவேன் 🙂

    எப்பூடி!//

    சூப்பரு! நீங்க வெறும் சென்ஷி இல்ல கில்லாடி சென்ஷி 🙂

    முக்கு முக்குனு முக்குற டோரண்ட்ல டவுன்லோட் ஆகுது இதுல சரியா வரலையா! என்ன கொடுமை சார் இது..

    ஆனா ஒண்ணு படம் பார்த்த பிறகு கஷ்டப்பட்டது வீண் போகலன்னு நீங்க திருப்தி ஆகிடுவீங்க அதற்க்கு நான் கியாரண்டி.. 🙂

  15. கிரி

    படத்தின் விமர்சனம் அருமை…. பாத்துட வேண்டியதுதான்……

  16. //முக்கு முக்குனு முக்குற டோரண்ட்ல டவுன்லோட் ஆகுது இதுல சரியா வரலையா! என்ன கொடுமை சார் இது..//

    ஹி..ஹி.. டவுன்லோடு ஆப்சனை கொடுத்துட்டு தூங்கப் போயிடுவேன். மறுக்கா காலையில வந்து பார்த்தா டவுன்லோடு முடிஞ்சுருக்கும். அதான் :))

  17. கிரி, படம் சும்மா சூப்பர் பாஸ்ட் ஜெட் மாதிரி போகுது,எப்பா சான்ஸ்சே இல்ல.. simply super bossu.

  18. அதிரடிப் படம் பார்க்கும் ஆர்வம் வழக்கம் இல்லை ஆனாலும் உங்கள் ரசனையான விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது:)!

  19. // R.Gopi said…
    கிரி
    படத்தின் விமர்சனம் அருமை…. பாத்துட வேண்டியதுதான்……//

    கண்டிப்பா பாருங்க…. மிஸ் பண்ண கூடாத படம் கோபி

    ==========================================================

    // சென்ஷி said…
    ஹி..ஹி.. டவுன்லோடு ஆப்சனை கொடுத்துட்டு தூங்கப் போயிடுவேன். மறுக்கா காலையில வந்து பார்த்தா டவுன்லோடு முடிஞ்சுருக்கும். அதான் :))//

    ஹி ஹி ஹி உஷாரு தான்.. எனக்கு இந்த டோரன்ட்டுல பொறுமையே இல்லை… இன்று பார்த்து விடுங்க மறக்காம 🙂

    ==========================================================

    //
    baby said…
    கிரி, படம் சும்மா சூப்பர் பாஸ்ட் ஜெட் மாதிரி போகுது,
    எப்பா சான்ஸ்சே இல்ல.. simply super bossu.//

    :-)) நான் படம் பார்த்து மிரண்டு போயிட்டேன்..ங்கொய்யாலே அநியாயத்திற்கு இப்படி வேகமான திரைக்கதைல எடுத்து இருக்காங்கன்னு ..இரண்டு பாட்ஷா மூன்று கில்லி ஸ்பீட் படம் 🙂

    ==========================================================

    // ராமலக்ஷ்மி said…
    அதிரடிப் படம் பார்க்கும் ஆர்வம் வழக்கம் இல்லை ஆனாலும் உங்கள் ரசனையான விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது:)!//

    ராமலக்ஷ்மி உங்க கொள்கையை கொஞ்சம் தளர்த்திட்டு இதை பாருங்க..அப்புறம் சொல்லுங்க.. 😉

  20. //…இரண்டு பாட்ஷா//

    கடுமையான கண்டனங்கள் :)))

  21. // பாசகி said…
    //…இரண்டு பாட்ஷா//

    கடுமையான கண்டனங்கள் :)))//

    ஹி ஹி ஹி…. சக்தி படம் பார்த்தீங்களா இல்லையா!

  22. இன்னும் இல்ல-ஜி, next sunday பாக்க try பண்ணறேன்…

    கண்டனம் தெரிவிச்சா சண்டை போடணும் நீங்க என்ன சிரிக்கறீங்க, too bad, you're unfit to be a blogger 🙂

  23. // பாசகி said…
    இன்னும் இல்ல-ஜி, next sunday பாக்க try பண்ணறேன்…//

    உங்களுக்கு ரொம்ப தான் பொறுமை… 🙂

    //கண்டனம் தெரிவிச்சா சண்டை போடணும் நீங்க என்ன சிரிக்கறீங்க, too bad, you're unfit to be a blogger :)//

    :-)))

    நாங்க நல்ல அடி வாங்கி தெளிஞ்சுட்டோம் ..அதனால நாங்க உஷாரு! உஷாரு!! 😉

  24. நம்ம கணக்குப்படி ஹாஸ்டலுக்கு அப்புறம்தான இந்தபடம் 🙂

    //நாங்க நல்ல அடி வாங்கி தெளிஞ்சுட்டோம் ..அதனால நாங்க உஷாரு! உஷாரு!! ;-)//

    வடை போச்சே 🙁

    விடமாட்டேன். எங்க என்னோட சண்டை போட்டா நான் பிரபலமா(???)யிடுவேனுதான பயப்படறீங்க…

  25. // பாசகி said…
    நம்ம கணக்குப்படி ஹாஸ்டலுக்கு அப்புறம்தான இந்தபடம் :)//

    ஹாஸ்டலும் தாறுமாறான படம்.. ஆனா அந்த படம் இப்பவே சொல்லிட்டேன்..ஏடாகூடமா இருக்கும்..என்னை திட்டப்படாது..:-)

    //விடமாட்டேன். எங்க என்னோட சண்டை போட்டா நான் பிரபலமா(???)யிடுவேனுதான பயப்படறீங்க…//

    ஹி ஹி ஹி அதற்க்கு நீங்க என் கூட சண்டை போடக்கூடாது ..போட வேண்டியவங்க கிட்ட சண்டை போடணும்.. 😉

  26. //ஹி ஹி ஹி அதற்க்கு நீங்க என் கூட சண்டை போடக்கூடாது ..போட வேண்டியவங்க கிட்ட சண்டை போடணும்.. ;-)//

    நான் சண்டைக்கு கூப்படறது டைம் பாஸுக்குதான, அதுக்கு நாம ரெண்டு பேரும் போதாது :))) நான் ஊட்டுக்கு கிளம்பறேன், போய்தான் சமைக்கணும். நாளைக்கு ஃபீரியா இருந்தா சொல்லி அனுப்புங்க சண்டே சண்டை போடலாம் :))))

  27. // பாசகி said…
    நான் சண்டைக்கு கூப்படறது டைம் பாஸுக்குதான, அதுக்கு நாம ரெண்டு பேரும் போதாது :))) நான் ஊட்டுக்கு கிளம்பறேன், போய்தான் சமைக்கணும். நாளைக்கு ஃபீரியா இருந்தா சொல்லி அனுப்புங்க சண்டே சண்டை போடலாம் :))))//

    நல்லா திருப்தியா சாப்பிடுங்க..நான் இப்ப தான் சாப்பிட்டேன் 🙂 Enjoy ur weekend

  28. //நாங்க நல்ல அடி வாங்கி தெளிஞ்சுட்டோம் ..அதனால நாங்க உஷாரு! உஷாரு!! ;-)//

    ச்ச… வட போச்சே…

  29. புடிச்சிருக்கோ இல்லையோ.. படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க

  30. அப்பிடியே முழு படத்த ஒட்டிடீங்க.. அருமை..

  31. //எவனோ ஒருவன் said…
    ச்ச… வட போச்சே…//

    ஆஹா! பல பேர் இதுக்காகவே காத்திருக்கிற மாதிரி தெரியுதே அவ்வ்வ்வ்

    ===============================================

    //குறை ஒன்றும் இல்லை !!! said…
    புடிச்சிருக்கோ இல்லையோ..

    படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க ஸ்சாமியோயோ…//

    ராஜ் நீங்க கூறி இருக்கிறது ரொம்ப அருமையா இருக்கு..நிஜமாகவே…..ரொம்ப ரசித்தேன் 🙂

    ======================================================

    / கார்த்திக்.ச said…
    அப்பிடியே முழு படத்த ஒட்டிடீங்க.. அருமை..

    Blogger-கள் ஆசியுடன் என் முயற்சியை துவங்குறேன்//

    நல பதிவுகளை தர என் வாழ்த்துக்கள் கார்த்திக்

  32. ராஜ் உங்க தளத்துல என்னால பின்னூட்டம் போட முடியல விரைவில் இடுகிறேன், பொறுத்தருள்க

  33. படத்தைப் பார்த்திருக்கேங்க. அருமையான படம், நல்ல வேகம். இயல்பான திரைக்கதை. மூளைக்கு வேலை.

  34. உங்களுக்கு ஒரு விருது. நம்ம திண்ணைக்கு வந்து வாங்கிக்கறீங்களா?

  35. //ராஜ் உங்க தளத்துல என்னால பின்னூட்டம் போட முடியல விரைவில் இடுகிறேன், பொறுத்தருள்க//

    பரவாயில்லைண்ணே..

  36. we watched this movie last year when we were in Germany. This movie created a little panic especially while staying in an European country for the first time. Ironically we watched in the first week of arrival :(. Fantastic movie. Had the same effect as your review says. 🙂

  37. கிரி,

    நம்ம கேப்டன் படம் விருத’கிரி’ யத்தான் காப்பி அடிச்சுட்டாங்க… 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!