தர்ம அடி வாங்கிய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 3)

21
தர்ம அடி வாங்கிய ஹாஸ்டல்

ட்லி “குஷ்பூ” இட்லி மாதிரி இருந்துதுங்க! Image Credit

அப்புறம் என்ன உன் பிரச்சனைனு! கேட்கறிங்களா?

சைஸ் ல தாங்க குஷ்பூ மாதிரி இருந்தது ஆனால், சும்மா கல்லு கணக்கா இட்லி இருக்குது. இரண்டு இட்லி சாப்பிடறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு!

பக்கத்துல இருந்த பையன் அசால்ட்டா சாப்பிட்டு என்னைப் பயமுறுத்தினான். எனக்கு அவன் சாப்பிடுவதைப் பார்த்ததிலேயே வயிறு நிரம்பி விட்டது.

எங்க பள்ளில  ஹாஸ்டல் பசங்க ஏகப்பட்ட பேரு.

அதனால் எந்த விளையாட்டுனாலும் ஹாஸ்டல் பசங்க தான் முதல்ல வருவாங்க, அதே மாதிரி படிப்பிலையும் அதுக்குத் தகுந்த பசங்க இருக்காங்க பட்டய கிளப்புவாங்க.

பள்ளியில் சரியாகப் படிக்காத ஹாஸ்டல் பசங்களுக்கு ஆசிரியரிடம் செம அடி விழும்.

“நல்லா மூணு வேளையும் மூக்க பிடிக்கச் சாப்பிடறீங்கள்ள அப்புறம் என்னடா படிக்குறதுக்குன்னு”

எல்லாம் சரி தலைப்பை மட்டும் வச்சுட்டு இன்னும் நீ அடி வாங்குனதச் சொல்லவே இல்லையேன்னு கேட்கறீங்களா?

அந்த நேரமும் வந்தது!

அன்று இரவு படிப்பு நேரத்தில் வகுப்பில்  உட்காந்து இருந்தேன்.

எனக்கு ஒரு பிரச்சனைங்க .. பாட புத்தகம் எடுத்தாலே தூக்கம் வந்துடும், அதை அப்படியே பின்பற்றி வகுப்பிலும் தூங்கிட்டேன்.

வார்டன் ரௌண்ட்ஸ் வரும் போது பார்த்துட்டாரு, பசங்க சிக்னல் கொடுத்தாங்க நான் கவனிக்காம ரொம்ப நல்லா தூங்கிட்டேன்.

ஜன்னல்ல இருந்து ஒரு சத்தம்..

டேய்! யாருடா தூங்கிட்டு இருக்கிறவன்…

நான் அலறி அடிச்சுட்டு எழுந்தேன்..ஐயையோ! வசமா மாட்டிடோம் போல இருக்கேன்னு பயந்துட்டு எழுந்து நின்றேன்.

வெளிய வாடா! பயந்துட்டே வெளியே போனேன். பசங்க எல்லாம் என்னைப் பாவமா பார்த்தாங்க..

வெளியே போனா என்னை மாதிரி பசங்க இரண்டு பேரு பலியாடு மாதிரி நின்னுட்டு இருந்தாங்க.

கைய கட்டிட்டா எப்படி அடிப்பாரு!

டேய்! எல்லோரும் வரிசையா நில்லுங்கடா..

எல்லோரும் வரிசையில் நின்றோம். வார்டன் எங்களுக்குப் பின்னாடி போனாரு இவரு எதுக்குடா அடிக்கிறதுக்குப் பின்னாடி போறாருன்னு எனக்குக் குழம்பிடிச்சு.

கைய கட்டுங்கடான்னு சொன்னதும் எனக்கு இன்னும் குழம்பி விட்டது, கைய கட்டிட்டா எப்படி அடிப்பாருன்னு நான் யோசிச்சுட்டு இருந்தேன்.

நான் யோசிச்சுட்டு இருக்கும் போதே முதல்பையனுக்கு பின்னாடி டிக்கில ஒரு அடி விழுந்தது பாருங்க.. யப்பா! எனக்குப் பேதி ஆகாத குறை.

அந்த பையன் சும்மா குதிகுதின்னு குதிக்கறான் ஐயோ! ஒரு அடிக்கே இப்படிக் குதிக்கறானே..! அப்படின்னா.. அடி எப்படி இருக்குமோன்னு பயம் அதிகம் ஆகி விட்டது.

இரண்டாவது அடி விழுந்ததும் இன்னும் எனக்குப் பயம் அதிகம் ஆகி விட்டது.

அடுத்தப் பையன் கிட்டே வந்து அவனை அடிக்கும் முன்பே கத்த ஆரம்பிச்சுட்டான்.

என்னடா நடிக்கிறேன்னு வார்டன் சொல்லிட்டு ஒரு இழுப்பு அதிகமா கொடுத்தாரு..

என்னோட முறை வந்தது பயத்தில் நடுங்கிட்டு இருந்தேன்.

ஒரு அடி விட்டாரு பாருங்க.. மவனே! வாழ்க்கையிலே அப்படி ஒரு அடி வாங்குனதே இல்ல.

தீ கங்கு இருக்குல்ல.. அதை எடுத்து உங்க ஜட்டி பின்னாடி போட்டா எப்படி இருக்கும்! அப்படி இருந்தது எனக்கு.

சும்மா தீ பிடித்த மாதிரி இருந்துச்சு. சும்மா கண்ணுல எல்லாம் கதகதன்னு தண்ணீர் வந்து விட்டது.

இரண்டாவது அடி விழுந்ததும் எப்படா இந்த ஹாஸ்டலை விட்டுக் கிளம்புவோம்னு தோன்ற ஆரம்பித்து விட்டது.

அப்ப வேற ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருப்பேன், அதனால சும்மா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன்.

வார்டன் போனதும் பசங்க வந்து சமாதான படுத்தினாங்க..இருந்தாலும் அழுகை நிற்க வில்லை.

அழுகை தான் நிற்க வில்லையே தவிர நான் உட்கார முடியலை… விட்ட அடில பின்னாடி பழுத்து விட்டது.

உட்கார முடியலைங்க!

சிரிச்சுட்டு இருக்காங்க

அடி வாங்குன மத்த பசங்க இரண்டு பெரும் ஜாலியா சிரிச்சுட்டு இருக்காங்க! என்னடா சிரிச்சுட்டு இருக்கிங்கன்னு அழுதுட்டே கேட்டேன்.

டேய்! நீயும் கொஞ்ச நாள் அடி வாங்குனா எங்களை மாதிரி ஆகிடலாம்னு சீனியர்!!! சொன்னாங்க.

அடேய்! என்னாங்கடா இங்க நடக்குதுன்னு நொந்துட்டு.. போய் என்னோட இடத்துல நின்னுட்டேன்.

நான் தான் அப்பவே சொன்னேனேங்க என்னால உட்கார முடியலைனு!

இதற்குப் பிறகு என்னோட சீனியர்! சொன்னதை உண்மையாக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதன் தொடர்ச்சியை அடுத்தப் பாகத்துல சொல்றேன்

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 1)

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (இறுதி பாகம்)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

21 COMMENTS

  1. ////எனக்கு ஒரு பிரச்சனைங்க ..எனக்கு புத்தகம் எடுத்தாலே தூக்கம் வந்துடும்,///

    எனக்கு ஏக்கம் வ்ந்திடும் ‘பள்ளிக்கூடத்துல எப்படா பாவிப் பசங்க பொன்னியின் செல்வன் மாதிரிப் புததகங்களைப் பாட புத்தகமா வைப்பானுங்கன்னு!

  2. தூங்கினத்துக்கு அடிக்கிறாங்களா
    என்ன ச்சார் கொடுமை

  3. இப்படி ஒரு அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை.
    எல்லாமே Day scholar தான்

    ஆனால் Day Scholar ல வாத்தியாரிடம் அடி வாங்கி காதே கேட்காமல் மூன்று நாட்களுக்கு ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் னு சப்தம் மாத்திரம் வந்ததை மறக்க முடியாது.

  4. நல்லா இருக்கு (என்ன அடியா? என்று கேட்பது கேட்கிறது)
    விடுதி காலை உணவைப் பற்றி விரிவாகவே ஒரு பதிவிடலாம்.
    உங்கள் விடுதிக் காப்பாளரும் மிகவும் கண்டிப்பானவரா?

  5. //SP.VR. SUBBIAH said…
    எனக்கு ஏக்கம் வ்ந்திடும் ‘பள்ளிக்கூடத்துல எப்படா பாவிப் பசங்க பொன்னியின் செல்வன் மாதிரிப் புததகங்களைப் பாட புத்தகமா வைப்பானுங்கன்னு//

    வருகைக்கு நன்றி சுப்பையா ஐயா

    ===================================================================
    //கபீஷ் said…
    ஐயோ பாவம் நீங்க//

    :-)))

    நான் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லைங்க கபீஷ் 🙂

    ===================================================================

    //கவின் said…
    தூங்கினத்துக்கு அடிக்கிறாங்களா
    என்ன ச்சார் கொடுமை//

    ஹாஸ்டல்ல எல்லாம் எதுக்கெல்லாம் அட விழும்னே சொல்ல முடியாது 🙂

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி கவின்.

    ===================================================================

    //ஜோதிபாரதி said…
    நல்லா இருக்கு (என்ன அடியா? என்று கேட்பது கேட்கிறது//

    :-))))

    //விடுதி காலை உணவைப் பற்றி விரிவாகவே ஒரு பதிவிடலாம்.//

    உண்மையிலே எழுத விஷயம் இருக்கு ஆனால் படிக்க ஆள் இருக்குமான்னு தான் தெரியல! :-)))

    //உங்கள் விடுதிக் காப்பாளரும் மிகவும் கண்டிப்பானவரா?//

    ஏங்க! ஜோதி பாரதி ..எனக்கு விழுந்த அடிய பார்த்துமா உங்களுக்கு சந்தேகம்..:-) கண்டிப்புன்னா கண்டிப்பு அப்படி ஒரு கண்டிப்பு.. அதுவும் தலைமை விடுதி காப்பாளரை பார்த்தாலே சிலர் பயத்துல ஒண்ணுக்கு போய்டுவானுக ஹா ஹா ஹா

    ==================================================================

    //ஸ்ரீதர்கண்ணன் said…
    செம காமெடி சார் உங்களோட :))))//

    :-)))

    நன்றி ஸ்ரீதர்கண்ணன் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

    ===================================================================

    //தமிழ்நெஞ்சம் said…
    இப்படி ஒரு அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை.//

    ஹா ஹா ஹா வருத்தபடுறீங்களா! சந்தோசப்படுறீங்களா! :-))))

    //ஆனால் Day Scholar ல வாத்தியாரிடம் அடி வாங்கி காதே கேட்காமல் மூன்று நாட்களுக்கு ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் னு சப்தம் மாத்திரம் வந்ததை மறக்க முடியாது//

    ஹா ஹா ஹா ஹா

  6. அடேய்! என்னாங்கடா இங்க நடக்குதுன்னு நொந்துட்டு.. போய் என்னோட இடத்துல நின்னுட்டேன்.. நான் தான் அப்பவே சொன்னேனேங்க என்னால உட்கார முடியலைனு!

    செம காமெடி சார் உங்களோட :))))

  7. //பாட புத்தகம் எடுத்தாலே தூக்கம் வந்துடும், அதை அப்படியே பின்பற்றி கிளாஸ் ரூம் ல் தூங்கிட்டேன்.. //

    same blood 🙂

    //அழுகை தான் நிற்க வில்லையே தவிர நான் உட்கார முடியலை ..//

    இந்த கலவரத்துலயும் உங்களுக்கு நகைச்சுவை வருது பாருங்க அங்க தான் நீங்க “நிற்கறீங்க” 🙂

  8. கிரி அந்த இட்லி ரெண்டு எடுத்து வச்சு இருந்ததா கலவரம் நடக்கும் போது ரெம்ப உபயோகமா இருக்கும்

  9. //பாசகி said…
    //பாட புத்தகம் எடுத்தாலே தூக்கம் வந்துடும், அதை அப்படியே பின்பற்றி கிளாஸ் ரூம் ல் தூங்கிட்டேன்.. //

    same blood :-)//

    இதுல வேணா எனக்கு கூட்டணி நிறைய பேர் இருப்பாங்க ஹி ஹி ஹி

    //இந்த கலவரத்துலயும் உங்களுக்கு நகைச்சுவை வருது பாருங்க அங்க தான் நீங்க “நிற்கறீங்க” :-)//

    :-))

    ===================================================================

    //புதுகை.அப்துல்லா said…
    ஆஜர் கிரி அண்ணே 🙂

    ஊரச் சுத்திக்கிட்டு இருந்ததால உங்க கடைப் பக்கம் வரமுடியல…வெரி சாரி. இனி வழக்கம் போல வந்துருவேன்.//

    வாங்க வாங்க அப்துல்லா! பயண எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன் 🙂

    ===================================================================

    //நசரேயன் said…
    கிரி அந்த இட்லி ரெண்டு எடுத்து வச்சு இருந்ததா கலவரம் நடக்கும் போது ரெம்ப உபயோகமா இருக்கும்//

    :-)) எவனாவது மண்டைய காலி பண்ணிடலாம்

  10. ஹோஸ்டல் அவ்வளவு கொடுமையாகவா இருந்தது…?
    🙁

  11. //அதிரை ஜமால் said…
    ஹாஸ்டல் வாழ்க்கைன்னாலே ஒரு குஜால் தான்.//

    சரியா சொன்னீங்கோ 🙂 (ஆனா ஒரு சின்ன திருத்தம் அடி விழாம இருந்தா)

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஜமால்

    ===================================================================

    //அன்புடன் அருணா said…
    அதென்னவோ தெரிலை…பசங்க எல்லோருக்கும் புத்தகத்தைத் தொட்டவுடனேயே தூக்கம் வந்துடுது….//

    உங்களை டென்ஷன் செய்ய இந்தாங்க இன்னொரு மேட்டர்..நான் பொதுவா படுத்தவுடனே தூங்கி விடுவேன்..அப்படியும் தூக்கம் வரலன்னு வைங்க படிப்பு சம்பந்தமா ஏதாவது படித்தேன்னு வைங்க..ஹி ஹி ஹி ஆட்டோமேட்டிக்கா தூக்கம் வந்துடும் :-))

  12. // ‘டொன்’ லீ said…
    ஹோஸ்டல் அவ்வளவு கொடுமையாகவா இருந்தது…?
    :(//

    நான் எல்லாம் ரொம்ப குறைவா!! தான் அடி வாங்கினேன்..எனக்கு அண்ணன் எல்லாம் ஒரு சிலர் இருக்காங்க.. அவங்க கதை எல்லாம் கேட்டீங்கன்னா புழல் சிறை அடி எல்லாம் தோற்று போய் விடும் 🙂

  13. ஹாஸ்டல் வாழ்க்கைன்னாலே ஒரு குஜால் தான்.

    நமக்கு அந்த வாய்ப்பு 5ஆவது படிக்கும் போது மட்டுமே வந்தது …

    ஹாஸ்டல் வாய்ப்பை சொன்னேங்க …

  14. \\எனக்கு ஒரு பிரச்சனைங்க ..பாட புத்தகம் எடுத்தாலே தூக்கம் வந்துடும், அதை அப்படியே பின்பற்றி கிளாஸ் ரூம் ல் தூங்கிட்டேன்.. \\

    இது நல்ல காமெடி தாங்க …

  15. //வாசுகி said…
    அன்று வாங்கிய அடி இன்று பல பேரை சிரிக்க வைக்கிறது என்றால் அந்த அடிக்காக‌
    நீங்கள் பெருமைப்படலாம் தான்//

    நல்லவேளை இன்னும் நாலு அடி வாங்குங்கன்னு சொல்லாம விட்டீங்களே :-))))

    //வாங்கினது அடி,
    இதில “குஷ்பூ” இட்லி என்று வர்ணனை வேறா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை?//

    எங்க ஊர்ல அப்ப “குஷ்பூ” இட்லி ரொம்ப பேமஸ்

    //வேறு அடி வாங்கிய அனுபவம் ஏதும் இருந்தால் எழுதவும். வாசிக்க‌ ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்//

    அது சரி!

  16. அன்று வாங்கிய அடி இன்று பல பேரை சிரிக்க வைக்கிறது என்றால் அந்த அடிக்காக‌
    நீங்கள் பெருமைப்படலாம் தான்.

    வாங்கினது அடி,
    இதில “குஷ்பூ” இட்லி என்று வர்ணனை வேறா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை?

    வேறு அடி வாங்கிய அனுபவம் ஏதும் இருந்தால் எழுதவும். வாசிக்க‌ ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.
    (ஹி ஹி)

  17. // அடி வாங்குன மத்த பசங்க இரண்டு பெரும் ஜாலியா சிரிச்சுட்டு இருக்காங்க! என்னடா சிரிச்சுட்டு இருக்கிங்கன்னு அழுதுட்டே கேட்டேன்.. டேய்! நீயும் கொஞ்ச நாள் அடி வாங்குனா எங்களை மாதிரி ஆகிடலாம்னு சீனியர்!!! //

    என்னது சீனியர் பதிவரா? 😉

  18. //வெயிலான் on 6:54 AM, December 28, 2008 said…
    என்னது சீனியர் பதிவரா? ;)//

    நீங்க சொன்னத பார்த்து நான் தவறா போட்டு விட்டேனோ என்று ஒரு நிமிடம் குழம்பி விட்டேன் :-))))

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here