தர்ம அடி வாங்கிய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 2)

21
தர்ம அடி வாங்கிய ஹாஸ்டல்

ன்னுடைய எண் வர வர எனக்குப் பயத்தில் நாக்கெல்லாம் உலர்ந்து விட்டது, பயத்தில் பேச்சே வரவில்லை. Image Credit

103 னு கிணற்றுக்குள் இருந்து வருகிற மாதிரி சொன்னேன்… சார்! சத்தமா சொல்ல மாட்டிங்களோன்னு! ஒரு சத்தம் போட்டாரு வார்டன்.

நான் என்ன சொல்றதுன்னு தெரியாம பெக்க பெக்கன்னு முழிச்சுட்டு இருந்தேன், அதுக்குள்ள அடுத்த எண் சொல்ல ஆரம்பித்ததால் அப்பாடான்னு உட்கார்ந்துட்டேன்.

வருகை பதிவு எல்லாம் முடிந்து பசங்க எல்லாம் திரும்ப அறைக்கு! வந்தோம்.

அது ஒரு பெரிய ஹால். அதுல ஒரு 80 பசங்க இருந்தாங்க, என்னடா இது! இப்படி ஆகிடுச்சேன்னு நொந்துட்டு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.

படிக்கிற நேரம்

பசங்க எல்லாம் சரி வாடா இப்ப படிக்கிற நேரம் வகுப்புல போய் உட்காரலாம்னு சொன்னாங்க.

இன்னும் பல்லு கூடத் தேய்க்க வில்லையேடான்னு சொன்னேன். டேய்! அதெல்லாம் இன்னும் நேரம் ஆகும்னு கூட்டிட்டு போயிட்டானுக.

அங்கே பள்ளி ஹாஸ்டல் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதால் பள்ளி வகுப்பு அறையில் தான் படிக்க வேண்டும்.

எல்லோருக்கும் ஒரு நிரந்தர இடம், அங்கே தான் உட்கார வேண்டும் மாறி எல்லாம் உட்கார கூடாது. இதுல எளிதாக வார்டனிடம் மாட்டாத இடம் ரொம்பப்பிரபலம்.

கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி.

மலை பிரதேசம் என்பதால் செம குளிரு வேற ..7 மணிக்குப் பெல் அடித்தாங்க படிப்பு நேரம் முடிந்து விட்டதாம்! குளிக்கப் போகணுமாம்!!

கதவே இல்ல!

ஏற்கனவே என் ஹாஸ்டல் கற்பனை எல்லாம் இடிந்து போனதில் நொந்து போய் இருந்த நான்…அங்கே இருந்த கழிப்பறையைக் கண்டதும் எனக்குத் தூக்கி வாரி போட்டது.

ஆமாங்க! அங்கே கதவே இல்ல!

நீங்க எதோ இருந்த கதவு உடைந்து விட்டதுன்னு நினைதுக்காதீங்க..கதவே இல்லாம வரிசையா கட்டி வைத்து இருக்காங்க.

நான் வேறு கூச்ச சுபாவம் என்பதால் வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதுல எப்படிடா போறதுன்னு யோசித்து வேற வழி இல்லாம எப்படியோ போய்ட்டு வந்துட்டேன். 

இதை விலாவரியா சொன்னா என் மானம் போகும் என்பதால் இதைச் சென்சார் செய்து விடுகிறேன்.

அறைக்கு வந்தவுடன் பசங்க எல்லோரும் சேர்ந்து குளிக்கப் போனோம்.

குளிக்கிறது எப்படின்னா..!

குளிக்கப் போய் அங்கே இருந்த நிலைமையைப் பார்த்தவுடன் எனக்கு மயக்கம் வராத குறை தான்.

எல்லோரும் ஜட்டி உடன் கையில பிரஷை வைத்துட்டு வரிசையா நின்னுட்டு இருக்காங்க…ஒரு 150 பேர் இருப்பாங்க ..சும்மா சின்னதா ஒரு கற்பனை பண்ணி பாருங்க.

இதுக்கு மேலயும் பசங்க கிட்ட புலம்பினா கோபம் ஆகிடுவாங்கன்னு விதியை நொந்துட்டு நானும் போய் வரிசையில நின்னுட்டேன்.

அங்கே குளிக்கிறது எப்படின்னா ஒரு பெரிய நீளமா தொட்டி இருக்கும் எல்லாரும் வரிசையா நின்னுக்கணும், சீனியர் மாணவர் அல்லது வார்டன் 1,2,3 ..ன்னு 10 வரை சொல்லுவாரு நாம தண்ணி எடுத்து ஊத்திக்கணும்.

குளிரு வேற ஊசி மாதிரி உடம்பு ல குத்தியது.

எனக்கு என் வீட்டில் ஜாலியா குளித்தது வேறு நினைவுக்கு வந்து தொலைத்து டென்ஷன் பண்ணியது.

தர்ம அடி

குளித்து விட்டு உடை மாத்திட்டு இருந்த பொழுது ஒருத்தனுக்கு ஜட்டி உடன் வார்டனிடம் தர்ம அடி விழுந்து கொண்டு இருந்தது.

கேட்டால்,  குளிக்கும் போது எண் படி இல்லாமல் அதிக முறை தண்ணிய எடுத்து ஊத்திகிட்டானாம்.

ஐயையோ! இதுக்கே இவ்வளவு அடின்னா!! நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.

எப்படா சாப்பிட போகணும்னு கேட்டேன். அதுமணி அடிப்பாங்க நாம இரண்டாவது செட், நாம அப்பப் போகணும் சொன்னான்.

எனக்குப் பசி வேறு அதிகம் ஆகியது. மோட்டுவாயை சொரிஞ்சுட்டு உட்காந்துட்டு இருந்தேன்.

இரண்டாவது பெல் அடித்தது.

அப்பாடான்னு சரி வாங்கடா போகலாம்னு வேக வேகமா அவங்களைக் கூட்டிட்டு போனேன்.. இன்னைக்கு என்னடான்னு கேட்டேன். இட்லி டான்னு சொன்னாங்க.

நான் குஷியா போனேன்.

கூட இருந்த பசங்க எல்லாம் நமட்டுச் சிரிப்பு சிரித்தாங்க.. எனக்கு எதுக்குன்னு புரியல பசியில் வேறு இருந்ததால் ஏன்னு கேட்கவும் தோணல.

சாப்பிடுற ஹால்ல ஒரு 100 பேரு இருப்பாங்க நானும் என் இடத்தில் போய் உட்காந்துகிட்டேன். இட்லி வரிசையா வைத்துட்டு இருந்தாங்க.

என் இடத்துக்கு அருகில் வந்ததும் ஆர்வமா இட்லியப்  பார்த்தால் நான் நொந்து “நூடுல்ஸ்” ஆகிட்டேன்.

இதன் தொடர்ச்சியை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 1)

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 3)

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (இறுதி பாகம்)

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

21 COMMENTS

  1. இட்லி எப்படி நூடில்ஸ் ஆனது என்ற கதையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்..

  2. //’டொன்’ லீ said…
    இட்லி எப்படி நூடில்ஸ் ஆனது என்ற கதையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்//

    இட்லி நூடில்ஸ் ஆகலை அதை பார்த்து நான் ஆகிட்டேன் :-)))

    படிங்க செம காமெடியா இருக்கும்.

    ===================================================================

    //வடுவூர் குமார் said…
    ஹாஸ்டல் இவ்வளவு கொடுமையா??//

    :-)) அனைத்து ஹாஸ்டலும் இப்படி இல்லை.. இதை போல ஹாஸ்டல்கள் நிறைய உண்டு. நான் இன்னும் அடி வாங்குனதை கூறவில்லையே அதை படிங்க 😉

    நீண்ட நாட்களுக்கு (மாதங்களுக்கு) பிறகு உங்கள் வருகைக்கு நன்றி 🙂

  3. ஹாஸ்டல் இவ்வளவு கொடுமையா??
    முதல் பகுதி படிச்சிட்டு அப்பால வரேன்.

  4. ஹாஸ்டல்-ல ஜாயின் பண்றதுக்கு முன்னாடி விசாரிப்பெல்லாம் கிடையாதா ?

  5. கிரி-ஜி எப்படி இருக்கீங்க? பதிவெல்லாம் தூள்…SS b’day post excellent…

  6. //இட்லி நூடில்ஸ் ஆகலை அதை பார்த்து நான் ஆகிட்டேன் :-)))//

    அதான் இப்பவும் நூடில்ஸ் சைஸில இருக்கீங்களா…? (கோவிச்சுக்க வேண்டாம்.சும்மா பகிடிதான்..)

  7. //SUREஷ் said…
    ஹா…….. ஹா……………//

    வருகைக்கு நன்றி சுரேஷ் 🙂

    ===================================================================

    //ஜுர்கேன் க்ருகேர் said…
    ஹாஸ்டல்-ல ஜாயின் பண்றதுக்கு முன்னாடி விசாரிப்பெல்லாம் கிடையாதா ?//

    விசாரிச்சுட்டு தான் போனேன், இருந்தாலும் இந்த அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை :-((

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஜுர்கேன் க்ருகேர்

    ===================================================================

    //பாசகி said…
    கிரி-ஜி எப்படி இருக்கீங்க? பதிவெல்லாம் தூள்…SS b’day post excellent…//

    சக்தி வாங்க வாங்க! நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளை காணோம்!! பிசியா?

    ===================================================================

    //Bendz said…
    Hi,

    Wish u merry Xmas and Happy New Year 2009 😉 Advanced wishes ;)//

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் Bendz

    ===================================================================

    //Thooya said…
    கிகிகிகி//

    :-))))))) முதல் வருகைக்கு நன்றி தூயா 🙂

    ===================================================================

    //RAMASUBRAMANIA SHARMA said…
    VERY INTRESTING..PL CONTINUE WRITING…//

    நன்றி ராமசுப்ரமணிய ஷர்மா உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

    ===================================================================

    //’டொன்’ லீ said…
    அதான் இப்பவும் நூடில்ஸ் சைஸில இருக்கீங்களா…?//

    ஹா ஹா ஹா அந்த அளவிற்கு எல்லாம் மோசம் இல்லைங்க :-))

    //கோவிச்சுக்க வேண்டாம்.சும்மா பகிடிதான்//

    அட! என்னங்க நீங்க! என்ன சொல்லிட்டீங்க கோவிச்சுக்கிறதுக்கு… அதுக்காக அசிங்கமா எதுவும் திட்டிடாதீங்க :-))))

    ===================================================================

    //வாசுகி said…
    Wish u a very happy happy christmas…//

    உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    ===================================================================

    //ச.இலங்கேஸ்வரன் said…
    ஆகா அங்கேயும் இந்த கொடும இருக்கா?//

    அப்படின்னா! இந்த கொடுமை மாதிரி நீங்க ஒரு கொடுமைல மாட்டி இருந்து இருப்பீங்க போல இருக்கே :-))))

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி இலங்கேஸ்வரன்

  8. நானும் கரடுமடம் ஸ்கூல் தான். எந்த வருடம் நீங்க முடிச்சிட்டு வெளிய வந்தீங்க?

  9. //நசரேயன் said…
    சிறைச் சாலை தேவலாம் போல தெரியுது//

    நசரேயன் மீதி பதிவையும் படித்துட்டு அப்புறமா சொல்லுங்க 😉

    ===================================================================

    //பாபு said…
    நானும் கரடுமடம் ஸ்கூல் தான். எந்த வருடம் நீங்க முடிச்சிட்டு வெளிய வந்தீங்க?//

    அப்பாடா! நான் சொல்வது உண்மையின்னு சொல்வதற்கு ஒருத்தராவது இருக்காரே! :-))) வாங்க வாங்க பாபு! நான் 1990 and 91 படித்தேன், அப்புறம் முடிச்சுட்டு வெளியே வரல .. அடி தாங்க முடியாம ஓடி வந்துட்டேன் :-)))))))

    நீங்க ஹாஸ்டல்ல தங்கி படித்தீங்களா அல்லது டேஸ் காலரா? டேஸ் காலர் என்றாலும் ஹாஸ்டல் அடியை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் 🙂 நான் வார்டன் “ஐயா”, செல்வராஜ் மற்றும் செந்தில் இருந்த போது இருந்தேன்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

  10. ஹாஸ்டல் பற்றி நேற்று நடந்ததைப் போலக் கூறுகிறீர்கள்.

    உங்கள் நினைவுத்திறனும், நீங்களும் வாழ்க

  11. //கிரி said…
    …நீங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளை காணோம்!! பிசியா?//

    நலம்-ஜி. ஊருக்கு போயிருந்தேன் அதான்.

  12. //கேட்டா குளிக்கும் போது எண் படி இல்லாமல் அதிக முறை தண்ணிய எடுத்து ஊத்திகிட்டானாம். ஐயையோ! //

    இஃகி…கி….கீ.இதுக்கும் கீழே தொடர முடியலீங்க.எனக்கெல்லாம் இந்த தண்ணிப் பஞ்சமே வந்ததில்லீங்க.போனா அமராவதி ஆறு,இல்லாட்டி ஹாஸ்டல் கிணற்றுல தண்ணீரை சேந்தினா இரண்டு வாளியில குளியல் முடிஞ்சிரும்:)

  13. ஹஹாஹாஹ…..ரொம்ப நல்லாயிருந்தது கிரி.நொந்து நூட்ல்ஸ் ஆன கதைக்கு waiting…அன்புடன் அருணா

  14. //தமிழ்நெஞ்சம் said…
    ஹாஸ்டல் பற்றி நேற்று நடந்ததைப் போலக் கூறுகிறீர்கள்.//

    நன்றி தமிழ் நெஞ்சம்.. உண்மை தான் கொளுத்தி போட்டேன்னு நினைத்துக்காதீங்க :-))))

    ===================================================================

    //பாசகி said…
    //கிரி said…
    …நீங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளை காணோம்!! பிசியா?//

    நலம்-ஜி. ஊருக்கு போயிருந்தேன் அதான்.//

    அப்படியா! வாங்க! வாங்க! வந்து பட்டய கிளப்புங்க 🙂

    ===================================================================

    //ராஜ நடராஜன் said…
    //கேட்டா குளிக்கும் போது எண் படி இல்லாமல் அதிக முறை தண்ணிய எடுத்து ஊத்திகிட்டானாம். ஐயையோ! //

    இஃகி…கி….கீ.இதுக்கும் கீழே தொடர முடியலீங்க.எனக்கெல்லாம் இந்த தண்ணிப் பஞ்சமே வந்ததில்லீங்க.போனா அமராவதி ஆறு,இல்லாட்டி ஹாஸ்டல் கிணற்றுல தண்ணீரை சேந்தினா இரண்டு வாளியில குளியல் முடிஞ்சிரும்:)//

    தப்பிச்சுட்டீங்க! எங்களுக்கு தான் சங்கூதிட்டாங்க :-))

    ===================================================================

    //அன்புடன் அருணா said…
    ஹஹாஹாஹ…..ரொம்ப நல்லாயிருந்தது கிரி.நொந்து நூட்ல்ஸ் ஆன கதைக்கு waiting…
    அன்புடன் அருணா//

    வாங்க! வாங்க! அருணா! இது ஒரு மீள் பதிவு.. இதில் எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் முதல் முறை பதிவு செய்த போதும் நீங்கள் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தி இருந்தீர்கள், நீண்ட மாதங்களுக்கு பிறகு அதே பதிவிற்கு பின்னூட்டம் இட்டுள்ளது உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோசம். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி முக்கியமா உங்க பின்னூட்டத்திற்கு 🙂

  15. Oh my god 🙂 உங்களால நான் நல்லா மாட்டிகிட்டேன் . ஆபீஸ் ல இந்த பேஜ் படிக்ரபோ தெரியாம சத்தமா சிரிச்சிட்டேன். எல்லாரும் ஒரு மாத்ரி பார்த்தாங்க. anyhw சமாளிச்சிட்டேன் 🙂 you are d great 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!