Android 12 ல் என்னென்ன வசதிகள் உள்ளன?

3
Android 12

கூகுள் Pixel தனது புதிய மாடல் மொபைலின் அறிமுகத்தோடு தனது அடுத்தப் பதிப்பான Android 12 வெளியீட்டையும் நடத்தியுள்ளது. Image Credit

இதில் உள்ள சில வசதிகள் ஏற்கனவே Oneplus Oxygen இயங்குதளத்தில் உள்ளன. இருப்பினும் எப்படியுள்ளது என்று பார்க்க Android ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Android 12 ல் என்னென்ன வசதிகள் உள்ளன?

 • A boundary-pushing redesign | Redesigned to be more spacious and comfortable, it’s our most expressive, dynamic and personal OS ever என்று Android கூறுகிறது.
 • Color reimagined | வால்பேப்பரை மாற்றினால், வால் பேப்பர் என்ன வண்ணத்தில் உள்ளதோ, அதே வண்ணத்தில் ஒட்டுமொத்த வடிவமைப்பின் வண்ணமும் advanced color extraction algorithms காரணமாக மாற்ற முடியும்.
 • A smoother, more responsive UI | பயன்படுத்த மிக எளிதாக, கூடுதல் வேகத்துடன், smooth அனுபவத்தைக் கொடுக்கும்.
 • Your favorite people have a new home | விருப்பமானவர்களுக்கு Home Screen ல் தனி Widget வைத்துக்கொள்ளலாம். அவர்களுடன் எளிதாக உரையாடலாம்.
 • Built for accessibility | Magnification, Extra DIM, Gray scale போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
 • எழுத்துக்கள் மெல்லிதாக இருந்தால் Bold Letter ஆக மாற்றிக்கொள்ளலாம்.
 • Extend screenshots beyond your screen | Screenshot எடுக்கும் போது திரையில் உள்ளவை அல்லாமல், மேலும் தொடர்ச்சியாக எடுக்க முடியும்.
 • Kick-start your gameplay | Game Download செய்யும் போதே விளையாட முடியும்.

பாதுகாப்பு

 • Private by design so you’re in control | முழு மொபைலும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பாதுகாப்பு, Privacy குறித்த அச்சம் தேவையில்லை.
 • உங்கள் டேட்டாவை யார், எப்போது பார்க்கலாம் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
 • Stronger Mic and Camera access controls | கேமரா, மைக் பயன்பாட்டில் உள்ளதா என்று Status Bar ல் தெரியப்படுத்தும். தேவையில்லை என்றால், எளிதாகத் தடுக்க முடியும்.
 • Keep your precise location private | சில செயலிகள் நாம் இருக்கும் சரியான (Precise) இடத்தைக் கேட்கும் சிலதுக்குத் தோராயமாக (Approximate) இருந்தால் போதுமானது. எனவே, இதையும் கட்டுப்படுத்த முடியும்.
 • எடுத்துக்காட்டுக்கு Google Maps க்கு சரியான இடம் தேவை ஆனால், சில செயலிகளுக்கு உங்கள் ஊரே (சென்னை) போதுமானது.
 • Your privacy permissions at a glance | செயலிகளுக்கு என்னென்ன அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை Privacy Dashboard ல் காண முடியும், அதோடு அவற்றை மாற்றியமைக்க முடியும்.
 • Unused apps Reset | சில செயலிகளைப் பல நாட்கள் பயன்படுத்தவில்லை என்றால், அதற்குக் கொடுக்கப்பட்ட அனுமதி (Camera, Mic) நீக்கப்படுவதோடு, அதில் உள்ள தகவல்களும் நீக்கப்படும்.
 • Share Wi-Fi passwords | அருகில் உள்ளவர்களுடன் WiFi Password பகிர்வது எளிது.
 • Switching made easy | பழைய மொபைலில் உள்ள தகவல்களைப் புதிய மொபைலுக்கு மாற்றுவது எளிது, அது iPhone ஆக இருந்தாலும்.

தொடர்புடைய கட்டுரைகள்

Android OS பதிப்புகளின் பெயர் ஏன் மாறுகிறது?

Android மொபைல் பயன்படுத்துகிறீர்களா?

Apple & Android செயலிகள் வருமானம் தெரியுமா?!

சந்தையைக் கலக்கும் கூகுள் திறன்பேசி “Pixel”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. கிரி அண்ணா லினக்ஸ் பற்றி உங்கள் பார்வையில் ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன். லினக்சை பரவலாக்க என்ன செய்யலாம் என்று உங்கள் யோசனைகளை சொல்லுங்கள். நாம் இங்கு திருட்டு சாப்ட்வேர்களை உபயோகிப்பதால் விலை பற்றிய தாக்கம் நமக்குத் தெரி தெரியவில்லை. எதிர்காலத்தில் அது தொடராது.

 2. Android 12 ல் என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதை குறித்து விவரமாக சொல்லி இருக்கீங்க.. கண்டிப்பாக இந்த தகவல் Android ரசிகர்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.. நடுத்தரமான பட்ஜெட்டில் ஒரு நல்ல மொபைல் வாங்க வேண்டும்..உங்களின் ஆலோசனையை கூறவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @விஜயகுமார்

  லினக்ஸ் பற்றிக் கூறியதும் இதற்கும் முன் சாய்தாசன் இது போலக் கூறியது நினைவுக்கு வருகிறது 🙂 .

  லினக்ஸ் பற்றி எழுதலாம் ஆனால், பலருக்கு புரியாது. இருப்பினும் எளிமையாக எழுத முயற்சிக்கிறேன் பின்னாளில்.

  பரிந்துரைக்கு நன்றி.

  @யாசின்

  மோட்டோரோலா ஓரளவு பிரச்சினை இல்லாமல் உள்ளது. பேட்டரி நன்கு வருகிறது.

  அதோட இதில் Stock Android உள்ளது.

  பட்ஜெட் மொபைலை பொறுத்தவரை அதிர்ஷ்டம் வேண்டும். காரணம், சில மொபைல்கள் வாங்கியவுடன் பிரச்சனையைக் கொடுக்கும், சில மொபைல்கள் வருடங்களானாலும் எதுவும் ஆகாது.

  என் அக்காக்கு மோட்டோரோலா வாங்கி கொடுத்து 6 வருடங்கள் ஆகிறது. ஒரு பிரச்சனையில்லை.

  இதன் பிறகு இன்னொரு அக்கா, மனைவிக்கு Hornor வாங்கிக்கொடுத்தேன். அதுவும் ஓகே ஆனால், இதற்குத் தற்போது Android சப்போர்ட் தருவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here