Guns & Thighs: The Story of My Life | Ram Gopal Varma

3
Guns & Thighs The Story of My Life Ram Gopal Varma

ர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா அவருடைய வாழ்க்கை அனுபவங்களை Guns & Thighs : The Story of My Life என்ற புத்தகத்தின் வழியாகக் கூறியுள்ளார்.

மிகப்பிடித்த இயக்குநர்களில் ராம் கோபால் வர்மா ஒருவர். காரணம், அவருடைய ராவான திரைக்கதை அமைப்பு மற்றும் படமாக்கல். இவருடைய சத்யா, ரங்கீலா, சர்க்கார், சர்க்கார் ராஜ், கம்பெனி படங்கள் மிக ரசித்துப் பார்த்த படங்கள்.

Guns & Thighs ராம் கோபால் வர்மா

வாழ்க்கை வரலாற்றை எழுதும் அளவுக்கு இவருக்கு வயதாகவில்லை. ஏன் தற்போதே எழுதினார் என்றும் புரியவில்லை. சில இடங்களில் மற்றவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சம்பந்தப்பட்டவருக்குச் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம்.

ரகுமான்

ரோஜா க்கு ரகுமான் இசையமைத்ததை வர்மாக்கு இயக்குநர் மணிரத்னம் போட்டுக் காட்ட, அதைக் கேட்டு வியப்பாகி ரங்கீலா படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

வட இந்தியாவிலும் ரோஜா மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், ரகுமானுக்குக் கிடைத்தது குருட்டு வெற்றி (Fluke) என்று, எந்தத் தயாரிப்பாளரும் ரகுமானை இசையமைக்க ஒப்பந்தம் செய்யவில்லை.

ராம் கோபால் வர்மா மட்டுமே நம்பிக்கை வைத்து, வெற்றியைப் பெற்றார்.

ரங்கீலா எப்படிப்பட்ட இசை வெற்றி என்பது 90 களில் திரையரங்கில் படம் பார்த்தவர்களுக்குப் புரியும். சென்னை தேவி திரையரங்கில் திருவிழா போலக் கூட்டம், பாட்டுக்காக மட்டுமே!

வெற்றி மட்டுமே பேசும்

வெற்றி பெற்றால், அப்பவே சொன்னேன் என்பதும், தோல்வி அடைந்தாலும் அப்பவே சொன்னேன் என்று வரும் விமர்சனங்களை வர்மா கூறியுள்ளார்.

இதற்கு இவர் கூறும் ஒரு எடுத்துக்காட்டு அட்டகாசம்.

சுனில் கவாஸ்கர் ஒரு போட்டியில் சரியாக விளையாடாமல் வந்த போது அவருக்கு Pad கட்டி விடும் நபர், அப்படி அடித்து இருக்கணும், அப்படி விளையாடி இருக்கணும் என்று என்று அறிவுரை கூறினாராம்.

ஆனால், அவருக்குப் பேட் எப்படிப் பிடிப்பது என்று கூடத் தெரியாது 🙂 . ஒருவர் தோல்வி அடைந்தால், ஆளாளுக்கு அறிவுரை கூற கிளம்பி விடுகிறார்கள் என்பதை உணர்த்த இதைக் கூறி இருந்தார்.

கல்லூரி அனுபவங்கள்

கல்லூரியில் படிக்கும் போது, அருகே இருந்த திரையரங்கில் இதே வேலையா படம் பார்த்துட்டே இருக்க, உரிமையாளரே கடுப்பாகி, படிக்காமல் இப்படிப் படம் பார்த்துக் கெட்டு போறியேன்னு திட்டி இருக்கிறார்.

ஆனால், முதல் படமான ‘சிவா‘ அதே திரையரங்கில் வெளியாக, சென்டிமென்ட்டாக வர்மா அங்கே சென்று வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது அவரைப் பார்த்து அதிர்ச்சியான திரையரங்கு உரிமையாளர் கதை அட்டகாசம் 🙂 .

‘சிவா’ தமிழில் உதயம் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு 200+ நாட்கள் ஓடிச் சாதனை புரிந்தது. அப்போது சைக்கிள் சைனுடன் கல்லூரி மாணவர்கள் திரிந்தனர்.

ரவுடிகள் பழக்கம், கைதாகி காவல் நிலையத்தில் இருந்த போது அங்கு நடந்த சம்பவங்களே காட்சிகளை இயல்பாக அமைக்க வர்மாக்கு உதவியுள்ளது.

ஸ்ரீதேவி

வர்மா ஒரு வெறித்தனமான ஸ்ரீதேவி ரசிகர். அவர் ஸ்ரீதேவியை வைத்துப் படமெடுத்த கதை சுவாரசியம் குறிப்பாக ஸ்ரீதேவி நடிப்பு / நடனத்தைப் பற்றிப் பேசிய போது.

ஸ்ரீதேவி வீட்டையே வெளியே நின்று பார்த்துக்கொண்டு இருந்தவருக்கு அவரையே வைத்துப் படமெடுக்க வாய்ப்பு கிடைத்தால், என்ன நடக்கும்? 🙂

சத்யா & சர்க்கார்

சத்யா வெற்றி பெறாது என்று அனைவரும் கூற ஆனால், படம் வெற்றி. சர்க்கார் கதையில் முதலில் சஞ்சய் தத் நடிக்க வேண்டியது ஆனால், அவர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானதால் படம் கைவிடப்பட்டது.

பின்னர் அதை மெருகூட்டி அமிதாப்பை வைத்துச் சர்க்காராக எடுத்துள்ளார்.

பின்னணி இசை

சர்க்கார் காட்சிகளில் பின்னணி இசை மிகப்பெரிய பலம்.  பாதிக்கப்பட்ட நபர் நடந்து வருவதை துவக்க காட்சியாக இரு நிமிடங்களுக்கு மேல் காட்டுவார்கள்.

பின்னணி இசை இல்லாமல் பார்த்தால் ஒன்றுமே தெரியாது ஆனால், பின்னணி இசையுடன் செமையா இருக்கும்.

பின்னணி இசையே இல்லாமல் எப்படி இயக்குநர்கள் யோசித்துக் காட்சிப்படுத்துகிறார்கள் என்று பல நாட்கள் சந்தேகம். பாட்ஷா / தளபதி / மகாநதி படங்கள் பின்னணி இசை இல்லாமல் பார்த்தால் எப்படியிருக்கும்?!

சிவா படத்தை ராவாகப் பார்த்துப் பலரும் படம் ஓடாது என்று கூறி இருக்கிறார்கள். இளையராஜா பின்னணி இசையைச் சேர்த்த பிறகே படம் பட்டாசாக இருந்துள்ளது.

புத்தகம் எப்படியுள்ளது?

வர்மா திரைப்படங்களை ரசித்தவர்களுக்கு, அதனோடு பயணித்தவர்களுக்கு இப்புத்தகம் ரொம்பப் பிடிக்கும்.

வர்மா தற்போது சர்ச்சையான விஷயங்களைப் பேசுவதையும் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் அதனால் அவர் மீதான மதிப்புக் குறைந்து விட்டது.

ஆனால், அவருடைய பழைய அனுபவங்களைக் கூறும் போது தற்போதைய அவருடைய நிலை எந்த வெறுப்பையும் தரவில்லை.

புத்தகத்தை இடைவெளி விட்டுப் பல காலமாக எழுதி வந்துள்ளார் என்று படித்தால் உணர முடிகிறது. காரணம் எழுதியவற்றையே திரும்பக் கூறியுள்ளார்.

இன்னும் சில சர்ச்சையான சுவாரசியமான தகவல்கள் உள்ளன. அவற்றைப் புத்தகத்தில் படித்துக்கொள்ளுங்கள்.

திரைப்படங்களை ரசிப்பவர்கள், திரைத்துறையில் உள்ளவர்களுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

அமேசானில் இப்புத்தகம் வாங்க –> Guns & Thighs: The Story of My Life Link

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. Amazon affiliation இல் ரெபரன்ஸ் போடுவது தப்பில்லை. ஆனால் அதை சொல்லிவிட்டு செய்தால் சிறப்பாக இருக்கும்.
    ரஜினி சாரின் அரசியலில் நுழையும் முன்னரே வெளியேறும் முயற்சிபற்றி எழுதி ரசிகர்களுக்கு தெளிவினை கொடுக்கவும்.

  2. கிரி, ராம் கோபால் வர்மாவின் அதிக படங்களை நான் பார்த்ததில்லை.. நான் பார்த்த முதல் படம் ரங்கீலா.. அந்த படத்தை பார்த்த பின் அமீர் கானின் ரசிகனாகி விட்டேன்.. இவர் ஸ்ரீதேவியின் மீது கொண்ட ஈர்ப்பை மிகவும் ரசித்து எழுதி இருப்பார்.. சில வருடங்களுக்கு முன் நான் இணையத்தில் படித்தது.. நீங்களும் படித்து பாருங்கள்.. ரசிக்கும் படி இருக்கும்..
    https://www.sramakrishnan.com/?p=7131

  3. @பொறி நல்லது

    @யாசின் நீங்க கொடுத்துள்ள ராம்கோபால் வர்ணிப்பின் ஆங்கிலப்பதிப்பு இப்புத்தகத்தில் உள்ளது 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here