சிலிண்டர் பெற OTP கட்டாயம் | 2020 நவம்பர் 1 முதல்

5
சிலிண்டர் பெற OTP கட்டாயம் LPG Cylinder OTP

2020 நவம்பர் 1 முதல் சிலிண்டர் பெற OTP கட்டாயம் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.

விவரங்களைக் கொடுக்காதோர் சிலிண்டரை பெற முடியாது. Image Credit

எரிவாயு உருளையைக் கொடுப்பதில் துவக்கத்தில் இருந்தே காங் அரசு ஆரம்பித்த வழிமுறைகளைப் பாஜக அரசு மேம்படுத்தி / மாற்றி வருகிறது.

மாற்றங்கள்

  • மானியத்தை நேரடியாகப் பயனாளர் வங்கிக் கணக்கில் செலுத்துவது.
  • பயனாளர் விரைவில் எரிவாயு உருளையைப் பெறுவது.
  • ஆதார் இணைக்கப்பட்டுப் போலி பயனாளர்கள் இலட்சக்கணக்கில் நீக்கப்பட்டனர்.
  • தற்போது OTP என்று தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சிலிண்டர் பெற OTP கட்டாயம்

தற்போது, OTP விவரங்களை (Delivery Authentication Code) கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

மொபைல் எண்ணைப் புதுப்பிக்காதவர்கள், எரிவாயு உருளையைக் கொண்டு வரும் ஊழியரிடம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது எந்த அளவுக்குச் சரியாக வரும் என்று தெரியவில்லை. எனவே, நேரடியாக எரிவாயு நிறுவனத்துக்குச் சென்றே இதைச் சரி செய்துகொள்வது நல்லது.

இக்கட்டுப்பாடுகள் வணிகரீதியான (Commercial) எரிவாயு உருளைகளுக்குக் கிடையாது. அவர்கள் வழக்கம் போலப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வழிமுறை ஏற்கனவே, பரிசோதனை முறையில் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் அனைவருக்கும் கட்டாயம்.

கறுப்பு சந்தை

கறுப்பு சந்தை மூலமாகச் சிலிண்டர் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க இம்முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

வணிகரீதியான பயன்பாட்டுக்கு இவ்வகை சிலிண்டர்கள் அதிகளவில் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. பல கோடிகள் இதனால் இழப்பு ஏற்படுகிறது என்பதால், OTP முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இம்முறை முறைகேட்டை முற்றிலும் தடுக்காது ஆனால், குறைக்கும்.

துவக்கத்தில் பெருநகரங்களுக்கு மட்டுமே இந்த வழிமுறை செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

கொசுறு

பல்வேறு நிறுவனங்கள் சிலிண்டருக்குக் கட்டணம் செலுத்தும் வசதியைக் கொடுக்கின்றன. அவற்றில் அமேசான் மூலமாகக் கட்டணம் செலுத்துகிறேன்.

கட்டணம் செலுத்துவது மிக எளிமையாகவுள்ளது.

எந்த நிறுவனம் Cashback தருகிறது என்று பரிசோதித்துக் கட்டணம் செலுத்தலாம்.

அமேசானில் தற்போது Cashback எதுவும் பெறவில்லை என்றாலும், பயன்படுத்த எளிமையாகவுள்ளதால் இதைப்பயன்படுத்துகிறேன்.

தொடர்புடைய கட்டுரை

அமேசான் சலுகைகள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. எங்கள் ஊர் கொள்ளிடம் சிதம்பரம் அருகில் உள்ள கிராமம் . மூன்று நாட்களுக்கு முன்பு வந்த சிலிண்டர் o t p முறையில் தான் வாங்கினேன் . இப்போதே பல இடங்களில் ஆரம்பித்து விட்டார்கள்

  2. கிரி, நிறைய புதிய புதிய மாற்றங்களை மத்திய அரசும் / மாநில அரசும் கொண்டு வருகிறது. காலத்திற்கு ஏற்ப நிச்சயம் மாற்றம் தேவை என்பதை மறுக்க முடியாது.. எல்லோரும் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.. ஆனால் எந்த விதமான நிகழ்வுகளும் கடைநிலையில் உள்ள மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். எல்லா அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்க வேண்டும்..

    நேற்று கூட செய்தித்தாளில் சுதந்திர போராட்ட தியாகிக்கு உதவி பணம் 30/40 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிடைக்க வில்லை என்று..இது போன்ற செய்திகளை பார்க்கும் போது பாதிக்கப்பட்டவரின் வலி எப்படி இருக்கும் என 10% உணர முடியாத அலுவலர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது . “எத்தனை பேரின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு” இவர்கள் மட்டும் சுகமாக கேவலமான வாழ்க்கையை வாழுகிறார்கள் என்று.. பகிர்வுக்கு நன்றி கிரி..

    • yes, we should get atleast one cylinder within six months. otherwise our account get blocked automatically as it was in a computerised programme. we have to give a letter in writing requesting to release our account explaining the reason behind for not booking the cylinder over the six month peroid. then they will activate our account to continue for booking. this is my experience faced once 3 years before.

  3. @விபுலாநந்தன் ஓகே. சென்னையில் ஒரு சில இடங்களில் இது போல பெற்று தான் கொடுக்கிறார்கள்.

    @யாசின் “எல்லா அலுவலகங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்க வேண்டும்”

    இது நடைமுறையில் தற்போதைக்கு சாத்தியமில்லை.. எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது.

    “நேற்று கூட செய்தித்தாளில் சுதந்திர போராட்ட தியாகிக்கு உதவி பணம் 30/40 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிடைக்க வில்லை என்று”

    ஆமாம், நானும் பார்த்தேன்.. இவர்களை எல்லாம் இழுத்தடிக்க எப்படித்தான் மனம் வருகிறதோ!

    @விபுலாநந்தன் தகவலுக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here