காமன்வெல்த் பெருமைகள்!

18
காமன்வெல்த் பெருமைகள்!

ல சர்ச்சைகளை ஏற்படுத்தி பலரின் வசைகளை வாங்கி இருக்கும் காமன் வெல்த் போட்டிகள் வரும் 2010 October 3 ம் தேதி துவங்குகிறது.

தினம் தினம் புது குற்றச்சாட்டுகளைப் போட்டி அமைப்பு பெற்று வருகிறது.

ஊடகங்களும் போட்டி நடத்துபவர்களை காய்ச்சி எடுத்து வருகின்றன. கடுமையான (நியாயமான) ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.

இது குறித்து நானும் காமன்வெல்த் கொடுமைகள் என்ற பெயரில் கட்டுரை எழுதி இருந்தேன்.

அதில் கருத்திட்டு இருந்த தினேஷ் அவர்கள் பின்வரும் படங்களை அனுப்பி குறைகளைக் கூறும் நாம் நிறைகளையும் என் கூறக் கூடாது என்று கேட்டு இருந்தார்.

நியாயமான கேள்வி தானே!

காமன்வெல்த் நிறைகள்

இந்தியாவிற்கு நல்ல பெயர் கிடைக்கிறது போட்டியின் மூலம் இந்தியாவின் பெருமை உயர்கிறது என்றால் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை தானே!

அப்படி இருக்கும் போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

நம் நாட்டுக்கு ஒரு பெருமை கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சியடையும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்.  

நாமே கண்மூடித்தனமாக எதிர்த்தால் எப்படி?

போட்டி அமைப்பினர் செய்த ஊழல்கள் குளறுபடிகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் அவர்கள் செய்த நிறைகளையும் கூறுவதே சரி.

இந்தப்படங்களை பார்த்தவுடன் அப்படியே பிரச்சனைகள் முடிந்து விட்டது என்று கூறவில்லை. 🙂 .

பிரச்சனைகள் உண்டு தான் மறுக்கவில்லை அதே சமயம் சில நிறைகளும் நடந்து கொண்டு தான் உள்ளன என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுகை.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

  1. நிறைகளை பார்ப்பது சிறந்தவிடயம், ஆனாலும் குறைகளை சுட்டிக்காடியது கூட காமன் வெல்த் போட்டிகளுக்கு நல்ல விளம்பரம்தான்,காமன் வெல்த் என்றாலே என்னவென்று தெரியாத பலரும் இப்போது காமன் வெல்த் பார்க்க தயாராகி இருப்பார்கள் 🙂

    புகைப்படங்கள் அருமை.

  2. நல்ல பகிர்வு நண்பரே!……. நாமும் பெருமை படுவோம்…..

  3. ஒரு துறையில் வளர்ந்து வரும் நாட்டில் ஆரம்பத்தில் இது போல சர்ச்சைகள் வருவது சகஜம்தான்.

    நம் மக்களும் இதை உணர வேண்டும், அதே நேரத்தில் விளையாட்டு துறை என்பது உலகமே கவனிக்கும் ஒரு விசையம் என்பதை உணர்ந்து அது சம்பந்த பட்ட துறைகளும் தவறுகளை தவிர்க்க அதிக கவனம் மற்றும் ஊழல் இல்லாத வேலையை செய்யவேண்டும்.

    விரைவில் உலக ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக கோப்பை கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடக்க நம் நாடு தயாராக வேண்டும், இதுவே இப்போதைய நம் பொருளாதாரத்துக்கு உலக நாடுகள் மத்தியில் தேவை!.

  4. நல்ல post கிரி.

    இந்த event நல்ல படியா நடந்து… ஏற்கனவே public மத்தியுல, உலக மத்தியுல இந்தியா எழந்த மானத்தை சரி கட்டும்னு நம்புறேன். கடவுளையும் அதையே வேண்டிக்குறேன்.

  5. படங்கள் எல்லாம் சிறப்பா இருக்கு கிரி. இது தங்களது பதிவிற்கு பிறகு எடுக்கப்பட்ட படங்கள்போலும். பழைய பதிவில் கழிவறையின் கேவலமான படங்களை பார்த்துவிட்ட இவைகளை பார்க்கும் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாய் உள்ளது. ஒளிரட்டும் இந்தியா உலக அரங்கில்..!!

  6. எல்லாவற்றிலும் பாஸிடிவ் சைடு இருக்குன்னு சொல்றீங்க! அப்படித் தானே?

  7. கிரி. இது எப்படி இருக்குன்னா, பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் செஞ்சவங்களைக் கேள்வி கேட்கும் அதே நேரத்துல, அவர்கள் செய்த சில நல்ல விஷயங்களையும் பாராட்டவேண்டும் என்பது மாதிரி. இதை ஒத்துக்கவே முடியாது. இம்மாதிரி விஷயங்களில் zero tolerance என்று வைத்துக்கொள்ள வேண்டும். 70000 கோடியா? தங்க நாற்கரத் திட்டத்திற்கு போட்ட செலவுத் திட்டமே 40000 கோடிதான் என்று கேள்விப்பட்டேன்.

    நீங்கள் காட்டியுள்ள புகைப்படங்கள் அளவுக்குக்கூட அவர்கள் செய்யவில்லையெனில் இந்தியா ஒரு பெரிய இளிச்சவாயர்களின் கூடாரம் என்று உலக அரங்கில் நாமெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி நிற்கவேண்டியதுதான்.

    ஊழல்களைப் பொறுத்துப் பொறுத்துத்தான் நம்மை இந்தளவுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். குறையிருக்கும் இடத்தில் நிறைகளைக் காண்பது முரண் – மற்ற விஷயங்களில் சரி. இவ்விஷயத்தில் குறை குறைதான் – குறைந்து போனவற்றை நிறைவாகக் காண முயற்சிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதைப் போலாகும்.

    //ஒரு துறையில் வளர்ந்து வரும் நாட்டில் ஆரம்பத்தில் இது போல சர்ச்சைகள் வருவது சகஜம்தான்//

    இந்த “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்ற மனப்பான்மையே தவறு. உங்கள் பதிவும் இம்மாதிரி பின்னூட்டங்கள் ஊழல்களை அணுகுவதில் நாம் காட்டும் மெத்தனத்தையும் சகிப்புத்தன்மையையும்தான் காட்டுகின்றன. எப்போது கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையை மக்கள் எடுக்கிறார்களோ – அப்போதுதான் ஊழல் பெருச்சாளிகள் தோன்றாமலிருப்பார்கள்.

    இவ்வளவு நடந்ததே – யார் மேலாவது நடவடிக்கை எடுப்பார்களா? மாட்டார்கள்!

    என்னமோ போங்கள்.

  8. அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    @சிங்கக்குட்டி சர்ச்சைகள் சரி! ஆனால் இவர்கள் செய்து இருக்கும் ஊழல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ஏற்பாடுகள் சரி இல்லை என்றால் வளரும் நாடு என்று ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஊழல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்களும் ஊழலை குறிப்பிடாமல் ஏற்பாட்டை மனதில் வைத்தே கூறி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    @உடன்பிறப்பு கண்டிப்பாக சந்தேகமில்லாமல்! ஆனால் அளவில் தான் வேறுபாடு 🙂

    @சுந்தர் வாங்க! நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க.. வந்ததும் டெர்ரரா வந்து இருக்கீங்க 🙂

    சுந்தர் நீங்க சொல்வது போல நான் கண்டிப்பாக அவர்களது ஊழல்களை என்றும் ஆதரிக்கவே மாட்டேன்.

    நான் என்னுடைய பதிவிலேயே கூறி இருக்கிறேன் இதனால் அனைவரும் பாராட்டி விட்டதாக நினைக்க வேண்டாம் என்று. எடுத்துக்காட்டாக கலைஞர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு ஆனால் அவர் அறிமுகப்படுத்திய 103 சேவையை சரி இல்லை என்று கூற முடியுமா! இதனால் பலர் பயன்பெறுகிறார்கள்.

    இந்த பணியில் கல்மாடி மற்றும் பல அதிகாரிகளில் ஊழல் மட்டுமே நிறைந்து இல்லை.. அதில் பல உண்மையான பணியாளர்களின் உழைப்பும் அடங்கி உள்ளது அது தான் மேலே உள்ள படங்கள்.

    கல்மாடி போன்றவர்களை தனியாக திட்டினால் நான் அதற்காக என்று ஆதரித்து பேச மாட்டேன் ஆனால் இதில் அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்படவில்லையே. பல ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உழைப்பும் அடங்கியுள்ளது. இதில் உள்ளவர்கள் அனைவருமே ஊழல் புரிந்தவர்கள் என்றால் மட்டுமே அனைவரையும் குற்றம் சாட்ட முடியும்.

    யாரோ செய்த தவறுக்கு சரியாக செய்தவர்களை ஏன் நாம் திட்ட வேண்டும்? எடுத்துக்காட்டாக நீங்களே இந்தப்பணியில் சம்பந்தப்பட்டு இருக்கறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் நேர்மையாக இருக்கும் பொழுது நீங்கள் செய்த பணியையும் குற்றம் கூறினால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?

    ஒரு சாதாரண மனிதனின் எண்ணம் எப்படி இருக்கும்? என்னய்யா! இது எவனோ கொள்ளை அடித்தான் சாப்பிட்டான் நான் என் வேலையை சரியாகத்தானே செய்தேன் என்னையும் சேர்ந்து திட்டுகிறார்களே! என்று தானே நினைப்பார்கள்.

    சுந்தர் கண்டிப்பாக நான் ஊழலை ஆதரிக்கவில்லை எந்தக்காலத்திலும் செய்ய மாட்டேன். நான் இங்கு குறிப்பிட்டு இருந்தது ஏற்பாடுகளை மட்டுமே. இங்கு பின்னூட்டம் இட்டவர்களும் அதைத்தான் மனதில் வைத்து எழுதி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    அப்புறம் இந்தியாவும் ஊழலும் பிரிக்க முடியாத ஒன்று. இவை மாற பல காலங்கள் எடுக்கலாம் அல்லது மாறாமலே போகலாம். கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

    நாம் வேண்டும் என்றால் நாட்டை திருத்துவோம் என்று பொங்கலாம்.. நடை முறை வாழ்க்கையில் இது சாத்தியமில்லாத ஒன்று. ஒவ்வொருவரும் இப்படி நினைத்தால் என்ன செய்வது என்றால்? காரணம் எளிது மக்களின் மன நிலை என்று மாறுகிறதோ அன்று தான் மாற்றமும் வரும்.. மக்களின் மனநிலை எப்போது மாறும்? அது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி. என்னிடம் பதில் இல்லை.

    நீங்கள் கூறியபடி இதில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி சுதந்திரமாக உலவிக்கொண்டு தான் இருப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    நான் நடைமுறையை புரிந்து கொண்டவன்.

  9. mr. giri,

    I had read many of your posts and i am your fan. This one is the first post of you which i dont like. But, opinion differs. I want those involved in cw games and 2g spectrum issue to be punished severely.

    I am expecting your review for enthiran movies as you are the first one who is going to watch it first among us.

    rajesh.v

  10. mr. giri,

    I wont sleep till 01.00 am . I will sleep only after reading your review. If you dont have time or tired to post the review. Please reply to my message in just one word (average or good or excellent)

    thanks

    rajesh.v

  11. @ராஜேஷ் நீங்க சொன்னது போல அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. நான் எழுதியதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை..Anyway Opinion differs னு நீங்களே சொல்லிட்டீங்க! 🙂

    இப்ப தான் எந்திரன் பார்த்து வந்தேன் இன்னும் ஒரு மணிநேரத்தில் எழுதி முடிக்கிறேன்.

  12. ”’இப்ப தான் எந்திரன் பார்த்து வந்தேன் இன்னும் ஒரு மணிநேரத்தில் எழுதி முடிக்கிறேன்””
    அதுக்குள்ளவா? படம் நாளைக்குத்தானே ரிலீஸ்?

  13. கிரி..

    நீங்கள் ஊழலை ஆதரிப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் இந்தப் பக்கம் வந்திருக்கவே மாட்டேன் :-))

    //ஒரு சாதாரண மனிதனின் எண்ணம் எப்படி இருக்கும்? என்னய்யா! இது எவனோ கொள்ளை அடித்தான் சாப்பிட்டான் நான் என் வேலையை சரியாகத்தானே செய்தேன் என்னையும் சேர்ந்து திட்டுகிறார்களே! என்று தானே நினைப்பார்கள்//

    பிரச்சினை நேர்மையாக எப்போதும் வாழ்க்கையை நடத்தி, நேர்மையாக எப்போதும் உழைத்து, எந்த அதிகாரமும் இல்லாது அன்றாட வாழ்க்கையை நகர்த்தி உழைத்துக் காயும் பொதுஜனமான குப்பனோ சுப்பனோ இல்லை. யாரும் இதில் பங்குபெற்ற உழைப்பாளிகளைக் குற்றம் சொல்லவில்லை. அந்த உழைப்பாளிகள் யாரென்றே யாருக்கும் தெரியாது. ஆகவே நீங்கள் குறிப்பிட்டமாதிரி யாரும் நினைக்க வாய்ப்பேயில்லை.

    வீராணம் குழாய்கள் வெட்டியாகக் கிடப்பதும் அத்திட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிகளின் ஊழல்தான் பிரச்சினை. அக்குழாய்களை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டுவந்து வெறும் கைகளால் காயப்பட்டுக்கொண்டு இறக்கி சாலையோரம் வைத்த உண்மையான உழைப்பாளிகள் பிரச்சினையல்ல. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கூடாது. தாஜ்மஹாலின் பெருமை ஷாஜஹானுக்குத்தானேயொழிய அதைக் கட்டிய கொத்தனாருக்குக் கிடையாது. அதே போல CWG யின் அவலம் அதன் ஏற்பாட்டாளர்களுக்கும், அதில் கொள்ளையடித்தவர்களுக்கும்தானேயொழிய உழைத்த தொழிலாளர்களுக்குக் கிடையாது. குப்பை படமோ, ஆஸ்கார் படமோ ஒரு லைட்பாய் ஒரே மாதிரிதான் உழைக்கிறார் இல்லையா? ஊழல் மலிந்திருக்கும் எந்த செயலிலும் எங்காவது உண்மையான உழைப்பு கொஞ்சம் இருக்கும். அது முக்கியமல்ல. உழைப்பு எங்கிருந்தாலும் பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால் ஊழலில் ஒளிந்திருக்கும் உழைப்பைப் பாராட்டுவது ஊழலின் மீதான பார்வையை மழுங்கடிக்கச் செய்துவிடும். நான் உழைப்பாளிகளின் வியர்வையை மதிக்கிறேன். ஆனால் இம்மாதிரி விஷயங்களில் உழைப்பை பாராட்டுகிறோம் என்று தொடங்குவது சரியான அணுகுமுறை இல்லை. உழைத்தவன் அதற்குரிய கூலியைப் பெற்றிருப்பான். நாமெல்லாம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்வதைப் போல – இதில் பாராட்டவோ பெருமை கொள்ளவோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சத்யம் ராஜூவின் ஆயிரக்கணக்கான கோடி ஊழலைப் பற்றிப் பேசும்போது, சத்யம் (கடைநிலை) ஊழியர்களின் மகத்தான உழைப்பைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது எப்படி பொருத்தமற்றதோ அதைப் போலத்தான் இதுவும். பொருத்தமற்ற சமயத்தில் பொருத்தமற்றுச் சொல்லப்படும் கருத்தாகத்தான் உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

    நமது வரிப்பணம் கொள்ளையடிக்கப்படும் சமயத்தில் நமது கவனம் கொள்ளைக்காரர்களின் மீதும் அவர்களை தண்டிக்கச் செய்வதன் மீதும்தான் இருக்கவேண்டுமேயொழிய அவர்கள் யாருக்குக் காசு கொடுத்து வேலைவாங்கினார்கள் என்பதன் மீதல்ல.

    இதற்கு மேல் நான் சொல்லவருவதை இன்னும் தெளிவாக எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.

    நன்றி.

  14. நான் கேள்விப்பட்ட விஷயம்…
    பல்லாயிரக்கணக்கான பனியன்களில் காமன்வெல்த் முத்திரை குத்த உரிமை பெற்றவருக்கு உண்மையாக ஆகும் செலவு வெறும் 65 பைசா. வியாபார நோக்கில் அவர் வசூலித்த தொகை 5 ரூபாய். இது ஒரு வகையில் அளவான லாபம் தான். ஆனால், அந்த உரிமையாளருடன் கொடுத்ததாகக் கணக்குக்காட்டப்பட்டது ஒரு பனியனுக்கு 150 ரூபாய்.

    ஊழலின் சதவீதம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    வாழ்க எம் பாரதம்! வழர்க அதன் தவப் புதல்வர்கள்…

  15. @சுந்தர்

    “வீராணம் குழாய்கள் வெட்டியாகக் கிடப்பதும் அத்திட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிகளின் ஊழல்தான் பிரச்சினை. அக்குழாய்களை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டுவந்து வெறும் கைகளால் காயப்பட்டுக்கொண்டு இறக்கி சாலையோரம் வைத்த உண்மையான உழைப்பாளிகள் பிரச்சினையல்ல. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கூடாது. தாஜ்மஹாலின் பெருமை ஷாஜஹானுக்குத்தானேயொழிய அதைக் கட்டிய கொத்தனாருக்குக் கிடையாது. அதே போல CWG யின் அவலம் அதன் ஏற்பாட்டாளர்களுக்கும், அதில் கொள்ளையடித்தவர்களுக்கும்தானேயொழிய உழைத்த தொழிலாளர்களுக்குக் கிடையாது. குப்பை படமோ, ஆஸ்கார் படமோ ஒரு லைட்பாய் ஒரே மாதிரிதான் உழைக்கிறார் இல்லையா? ஊழல் மலிந்திருக்கும் எந்த செயலிலும் எங்காவது உண்மையான உழைப்பு கொஞ்சம் இருக்கும். அது முக்கியமல்ல.”

    சுந்தர் ரொம்ப நல்லா கூறி இருக்கீங்க 🙂 பாராட்டுகள். நீங்கள் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. எவராலும் மறுக்க முடியாது.

    என்னுடைய பார்வையில் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் குறை கூறுவதில் எனக்கு இன்னமும் உடன்பாடு ஏற்பட மாட்டேன் என்கிறது.

    ஒரு விசயத்தில் ஒவ்வொருவரின் எண்ணம் பார்வைகள் வேறு வேறு என்றாலும் ஊழலை எவரும் ஆதரிக்கப்போவதில்லை என்பதில் அனைவரும் ஒன்று தான் என்பது நம்மை இதில் இணைக்கிறது.

    ராஜேஷ் சொன்னது போல Opinion differs .. நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு ஒரு விவாதம் அமைத்து கொடுத்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    @ரோஸ்விக் நீங்க பனியன் மேட்டரை பேசிட்டு இருக்கீங்க.. கழிவறை காகிதத்தையே எத்தனையோ ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார்களாமே! 😉 இதுக்கு பேரு தான் ஜெகஜால கில்லாடியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!