ரஜினி – கமல்
அபூர்வ ராகங்கள் மூலம் இவர்கள் இணை துவங்கியது, ரஜினிக்கு முதல் படம் காட்சிகள் குறைவு, கமல் ஏற்கனவே ஓரளவு பிரபல கதாநாயகனாக இருந்த சமயம் அது.
இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்து இருந்தாலும் எனக்குப் பிடித்த படங்கள் “மூன்று முடிச்சு” மற்றும் “நினைத்தாலே இனிக்கும்”. Image Credit
மூன்று முடிச்சில் கமல் கௌரவ வேடத்தில் தான் இருப்பார், இருந்தாலும் இருந்த கொஞ்ச நேரமும் மனதில் நிற்கும் கதாபாத்திரம்.
நினைத்தாலே இனிக்கும் படம் சிங்கப்பூர் ல் எடுக்கப்பட்டது.
அப்போது வெளிநாடுகளில் படம் எடுப்பது என்பது எல்லாம் மிகவும் அரிய விஷயம் மற்றும் சிங்கப்பூர் என்றாலே பொதுவாக நம் மக்களிடையே ஒரு ஈர்ப்பு உண்டு.
அதுமட்டுமல்லாமல் இதில் திரைக்கதை, இசை சிறப்பாக இருக்கும், படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு சென்று இருப்பார்கள். அதுவும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
பல படங்களில் ஒன்றாக நடித்து வெற்றி பெற்று இருந்தாலும் தங்களை விட மற்றவர்களே அதிகம் பயன் அடைவதாகக் கருதியதால், கமல் அவர்கள் ரஜினியிடம் கலந்தாலோசித்து இருவரும் தனித்தனியாகப் படம் செய்யலாம்…
அப்போது தான் இருவருமே ஒரு நல்ல நிலையை அடைய முடியும் என்று கூறி இனிமேல் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று கூறிய யோசனையை ரஜினியும் ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு இன்று வரை இணையவில்லை. இனி இணைந்தாலும் அது தேவையற்ற சச்சரவுகளைத் தான் ஏற்படுத்தும்.
இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் படி படம் எடுக்க இனி எவராலும் முடியாது. எப்படி எடுத்தாலும் அதில் கண்டிப்பாகப் பிரச்சனை கிளம்பும்.
இவர்கள் இருவரும் இணைந்து வெற்றி படங்களைக் கொடுத்ததை விடப் பிரிந்த பிறகே உச்சத்திற்குச் சென்றார்கள்.
இவர்களின் ரசிகர் வட்டமும் பெருகியது, இவர்களது பிரிவால் ரசிகர்களுக்கு எந்தப் பெரிய இழப்பும் இல்லை.
உண்மையில் இவர்கள் பிரிவால் தங்கள் ரசனைகேற்ற கதாநாயகர்கள் கிடைத்ததாகவே கருதினார்கள்.
ரஜினியும் கமலும் இந்திய திரை அடையாளங்களுள் முக்கிய நபர்களாக உள்ளனர். இவர்கள் தொழில் முறையில் பிரிந்தாலும் இன்னும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர்.
உள்ளுக்குள் கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபம் இருக்கலாம் ஆனால், அதை வெளிப்படையாகக் காட்டுவதோ, அநாகரீகமாக விமர்சிப்பதோ, பேட்டி கொடுப்பதோ கிடையாது.
ஆனால், இவர்கள் ரசிகர்கள் அவர்களைப் போலப் பெருந்தன்மையுடன் இல்லை, ஒருவர் படம் வரும் போதும் மாற்றி மாற்றிக் கிண்டல் அடிப்பதும், கடுமையான விவாதங்களில் ஈடுபடுவதும் தொடர்கிறது.
இவர்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது எந்த நடிகரின் ரசிகரும் அவருக்குப் போட்டியாக உள்ள நடிகரை இதே போலக் கிண்டல் அடிப்பது, மட்டும் தட்டுவது என்று, அது இன்றும் தொடர்கிறது இனிமேலும் தொடரும், இது தவிர்க்க முடியாத கசப்பான உண்மை.
கவுண்டமணி – செந்தில்
இவர்களைப் பற்றிப் பற்றி நான் எடுத்துக் கூறுவது, இவர்கள் காமெடியை விடப் பெரிய காமெடி ஆகிவிடும் அந்த அளவிற்கு அனைவரிடமும் பிரபலம்.
இடையில் சிலகாலம் சேர்ந்து நடிக்காமல் இருந்தார்கள் பின் மறுபடியும் இணைந்தாலும் முன்பு போல இல்லை.
இதில் கவுண்டமணி சோலோ காமெடியில் “வால்டர் வெற்றிவேல்” “சூரியன்” போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்த அளவிற்குச் செந்திலால் முடியவில்லை.
முன்பு திரைப்படங்கள் வருகிறதென்றால் அனைவரும் பெயர் போடும் போது தேடுவது “கவுண்டமணி-செந்தில்” இருக்கிறார்களா என்று தான்.
கதாநாயர்களுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள், அந்த அளவிற்குக் காமெடியில் வெளுத்து வாங்கினார்கள்.
இது மிகை படுத்தப்படாத உண்மை.
இவர்கள் இணையில் “கரகாட்டகாரன்” “வைதேகி காத்திருந்தாள்” “கோவில் காளை” படங்கள் பலரின் வயிற்றைப் பதம் பார்த்தது.
இந்தப் படம் தான் காமெடியில் சிறந்தது என்று கூற முடியாத அளவிற்கு அத்தனை படங்கள் உள்ளது.
இவை கூட நான் ஏதாவது படங்கள் கூற வேண்டுமே என்று நினைத்து கூறிய படங்கள் தான்.
தற்போது இருவருக்குமே வயதாகி விட்டதாலும், கவுண்டமணி தற்போது காமெடி என்கிற பெயரில் கத்தி கொண்டு இருப்பதாலும் மக்களிடையே தற்போது இவர்களுக்கு வரவேற்பில்லை.
எதுவுமே பேசாமல் மக்களைச் சிரிக்க வைத்த அதுவும் கன்னாபின்னாவென்று சிரிக்க வைத்த பெருமைக்குரியவர் கவுண்டமணி.
இதற்கு சின்ன எடுத்துக்காட்டாக “பெட்ரோமாக்ஸ் லைட்” காமெடியை குறிப்பிடலாம்.
செந்திலும் அவ்வாறே! பல கேள்விகள் கேட்டு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார். மக்களின் கவலை மறக்க செய்தவர்களில் இவர்களின் இணை முக்கியப் பங்கு வைக்கிறது.
இன்னும் பல குறிப்பிடத்தக்க ஜோடிகள் இருக்கிறார்கள் என்றாலும் என் மனதை கவர்ந்த ஜோடிகள் என்றால் அது இவர்கள் தான். இந்தத் தொடரில் இருந்து நான் தெரிந்து கொண்டது.
முன்பு போல ஒருவரை ஒருவர் புரிந்து, ஈகோ பார்க்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டு வருகிறது என்று.
மிகக் குறுகிய காலமே தற்போது பலரால் இணைந்து இருக்க முடிகிறது.
முன்பும் ஈகோவால் பிரிந்தவர்களே அதிகம் என்றாலும் தொழில் ஒன்றாக இல்லை என்றாலும் தற்போதும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.
மற்றவர்களைத் தாழ்த்தி பேட்டியெல்லாம் கொடுப்பதில்லை, பொது இடங்களில் பார்த்தால் சகஜமாகப் பேசிகொள்கிறார்கள்.
பழைய நட்பிற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் விஜய் டிவி யில் “காஃபி வித் அனு” வில் வந்த பாரதிராஜா – கங்கை அமரன் பேட்டியைக் குறிப்பிடலாம்.
பாரதிராஜா ஒரு கோபக்காரர் என்றே நினைத்து இருந்தேன்.
இந்தப் பேட்டியைப் பார்த்த பிறகு தான் அவரினுள் இருந்த நகைச்சுவை உணர்வையும், நக்கல் பேச்சையும் கண்டேன்.
அதுவும் அவர் ராதிகாவை அறிமுகப்படுத்திய விதத்தைக் கூறியது செம காமெடி.
அதே போல இளையராஜா, கங்கை அமரன், வைரமுத்து,SPB இவர்களுடன் கடந்து வந்த பாதையை விளக்கியது அருமை.
தொழிலில் பிரிந்தாலும் இன்னும் தங்கள் நட்பைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
அதே போல ரஜினியும் கமலும். இவர்களைப் போலத் தற்போதைய பிரபலங்களும் நடந்து கொள்வார்களா!
இதோடு என் தொடரை முடித்துக் கொள்கிறேன். இது வரை தொடர்ந்து படித்தவர்களுக்கும் கருத்திட்டு உற்சாகப்படுத்தியவர்களுக்கும் நன்றிகள்.
பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 1)
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
முதல் ஜோடி பிரிந்த பின்னரும் பெரும் வெற்றி பெற்றார்கள். அடுத்த ஜோடி இணைந்திருந்த போதுதான் அதிகம் பேசப் பட்டார்கள்.
இழப்பில் ஆரம்பித்து நட்பில் முடித்துள்ளீர்கள்..
தொடரட்டும் உங்கல் வித்தியாசமான தொடர்கள்
கமல் – ரஜினி யின் பிரச்சனை – பணம் என்று கமல் ஒரு நிகழ்ச்சியில் சொன்னதாக ஞாபகம்.ஆதாவது ஒரு படத்துக்கு கதாநாயகனுக்கு ஒதுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே இவர்கள் இருவருக்கும் பாதியாக பிரித்துக்கொடுத்துள்ளார்கள்.கமல் தான் நாம் இருவரும் தனியாக நடித்தால் தனித்தனி சம்பளம் கிடைக்குமல்லாவா? என்று சொல்லி இருவர் சம்மத்துடன் உடைத்துக்கொண்டனர்.
//வடுவூர் குமார் said…
ஒரு படத்துக்கு கதாநாயகனுக்கு ஒதுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே இவர்கள் இருவருக்கும் பாதியாக பிரித்துக்கொடுத்துள்ளார்கள்.கமல் தான் நாம் இருவரும் தனியாக நடித்தால் தனித்தனி சம்பளம் கிடைக்குமல்லாவா? என்று சொல்லி இருவர் சம்மத்துடன் உடைத்துக்கொண்டனர்.//
நீங்கள் கூறுவது சரி தான், நானும் படித்துள்ளேன். அதை தான் குறிப்பிட நினைத்து இருந்தேன், ஆனால் நான் ரஜினி ரசிகன் என்பதால் அவ்வாறு கூறுவதாக பலர் நினைப்பார்கள் என்று கருதியே வாக்கியங்களை மாற்றி அமைத்தேன்.
===================================================================
//ராமலக்ஷ்மி said…
முதல் ஜோடி பிரிந்த பின்னரும் பெரும் வெற்றி பெற்றார்கள். அடுத்த ஜோடி இணைந்திருந்த போதுதான் அதிகம் பேசப் பட்டார்கள்.//
வழிமொழிகிறேன், கவுண்டமணி எனக்கு தெரிந்து “உள்ளத்தை அள்ளித்தா” படம் வரை சிறப்பாக செய்தார், அதன் பின் அவரை ஹீரோ ரேஞ்சுக்கு அனைவரும் பேசியதால் தன் இயல்பான காமெடியை இழந்து விட்டார்.
===================================================================
//’டொன்’ லீ said…
இழப்பில் ஆரம்பித்து நட்பில் முடித்துள்ளீர்கள்..
தொடரட்டும் உங்கல் வித்தியாசமான தொடர்கள்//
நன்றி டொன் லீ
===================================================================
//Bleachingpowder said…
I dont agree with this comment:((. இப்பவும் கவுண்டர் தன்னோட ஈகோவை கொஞ்சம் விட்டு கொடுத்து நடிக்க வந்தால் எல்லாரையும் ஓட விட்டிடுவாரு//
இது உங்கள் கவுண்டமணி மீதான அன்பை காட்டுகிறது, ஆனால் இனி திரும்ப பழைய படி ஜொலிக்க முடியாது என்பதே உண்மை.
//அவர் வர எல்லா சீன்களிலும் அவர் மட்டும் தான் தெரியுவாரு அப்படி ஒரு Stage dominance பவர். மன்னன்ல தலைவரையே தூக்கி சாப்பிட்டிருப்பாரு.//
தலைவர் பார்ட் டைம் காமெடி செய்பவரு கவுண்டர் ஃபுல் டைம் காமெடி பண்ணுறவரு. இருவரும் தத்தம் துறையில் ராஜா.
//அவரளவுக்கு நக்கல் அடிக்க இன்னும் வேற ஆளு வரல. சந்தானம் கூட கவுண்டர் ஃபார்முலாவை தான் பயன் படுத்துகிறார்.//
கவுண்டர் நக்கல் சொல்லி தெரியனுமா! :-)) சந்தானம் அதிகம் ஆபாச கமெண்ட் அடிக்கிறார்.
//அதே மாதிரி கவுண்டருக்கு செந்தில் தேவையே இல்லை. நடிகன்,மன்னன்,பிரம்மா,மாமன் மகள்,சிங்கார வேலன்னு சொல்லீட்டே போகலாம்.//
நீங்கள் கூறிய படங்களில் எல்லாம் துணைக்கு சத்யராஜ் முக்கிய பங்கு வகித்தாரு, அவர் உடன் இருந்ததாலும் காமெடி இன்னும் சிறப்பாக வந்தது. ஆனால் சூரியன் வால்டர் வெற்றிவேல் அப்படி இல்லை சிங்கிளா கலக்கி இருப்பாரு.
//இப்படிக்கு
கவுண்டர் வெறியன் :)//
ஹா ஹா ஹா அருண் நான் உங்களை விட கவுண்டமணிக்கு மிகப்பெரிய விசிறி, இன்றும் என்னோட விருப்பம் கவுண்டர் தான்.இந்த பதிவிலேயே அவரை பற்றி அதிகம் கூற நினைத்தேன் ஆனால் தொடர் அவர் பற்றியது இல்லை என்பதால் அதிகம் கூறவில்லை. அவர் பற்றி விரைவில் ஒரு தனிப்பதிவாக எழுதுகிறேன்.
===================================================================
//நட்புடன் ஜமால் said…
நல்ல தொடர் …
மேலும் நீங்கள் தொடர்(ருங்கள்)
கவுண்டமனியின் இந்த படம் மிக அபூர்வம் …//
நன்றி ஜமால்
===================================================================
//Mahesh said…
சூப்பர் கிரி… நான் ரஜினி-கமல் ஜோடியை எதிர்பார்க்கலை. //
:-)) நன்றி மகேஷ்
//கவுண்டமணி-செந்தில் ஜோடியை ஊகிச்சேன். இவங்க பிரிவுதான் மத்த காமெடியன்களோட வளர்ச்சிக்கு வழி அமைத்தது. விவேக், வடிவேல் மற்றும் பலருக்கு.//
நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி. போட்டி அதிகம் ஆகி விட்டது உண்மை. கவுண்டமணி தன்னை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ரொம்ப பிகு பண்ணியதாலும், தலைக்கனம் அதிகம் ஆகியதாலும் தன் இடத்தை இழந்து விட்டார்.
உங்களுடைய மூன்று பாகங்களையும் படித்தேன்.அருமையாக வரைந்திருந்தீர்கள்.வாழ்த்துக்கள்!!
சில நடிக நடிகைகள் ஏன் தற்போது, முன்னர் போல சேர்ந்து நடிப்பதில்லை என்று நானும் நிறைய நாட்களாக எண்ணியதுண்டு.அந்த பிரிவுகளுக்கு/விலகல்களுக்கு பின்னால் இவ்வளவு பெரிய கதைகள் இருப்பதை அறிந்திருக்கவில்லை.நன்றி!
//கவுண்டமணி தற்போது காமெடி என்கிற பெயரில் கத்தி கொண்டு இருப்பதாலும் மக்களிடையே தற்போது இவர்களுக்கு வரவேற்பில்லை. //
I dont agree with this comment:((. இப்பவும் கவுண்டர் தன்னோட ஈகோவை கொஞ்சம் விட்டு கொடுத்து நடிக்க வந்தால் எல்லாரையும் ஓட விட்டிடுவாரு. அவர் வர எல்லா சீன்களிலும் அவர் மட்டும் தான் தெரியுவாரு அப்படி ஒரு Stage dominance பவர். மன்னன்ல தலைவரையே தூக்கி சாப்பிட்டிருப்பாரு.
அவரளவுக்கு நக்கல் அடிக்க இன்னும் வேற ஆளு வரல. சந்தானம் கூட கவுண்டர் ஃபார்முலாவை தான் பயன் படுத்துகிறார்.
அதே மாதிரி கவுண்டருக்கு செந்தில் தேவையே இல்லை. நடிகன்,மன்னன்,பிரம்மா,மாமன் மகள்,சிங்கார வேலன்னு சொல்லீட்டே போகலாம்.
இப்படிக்கு
கவுண்டர் வெறியன் 🙂
தொடர் அருமை. முதலிலே சொன்னது போல் நான் எழுத நினைத்தது. ஆனால், நீங்கள் நிறைய ஜோடிகளை பற்றி எழுதியுள்ளீர்கள்.
நல்ல தொடர் …
மேலும் நீங்கள் தொடர்(ருங்கள்)
கவுண்டமனியின் இந்த படம் மிக அபூர்வம் …
சூப்பர் கிரி… நான் ரஜினி-கமல் ஜோடியை எதிர்பார்க்கலை.
கவுண்டமணி-செந்தில் ஜோடியை ஊகிச்சேன். இவங்க பிரிவுதான் மத்த காமெடியன்களோட வளர்ச்சிக்கு வழி அமைத்தது. விவேக், வடிவேல் மற்றும் பலருக்கு.
One More : இந்த ஜோடி
இளையராஜா – பாலசந்தர்
புது புது அர்த்தங்கள் வெற்றி தன்னுடைய இயக்கத்தினால் / தன்னுடைய இசையினால் என்று இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு அதன் பிறகு இணையவில்லை 🙁
பின் பாலசந்தர் மரகதமணியை தன்னுடைய படங்களுக்கு வைத்து கொண்டார்….
//தியாகி said…
உங்களுடைய மூன்று பாகங்களையும் படித்தேன்.அருமையாக வரைந்திருந்தீர்கள்.வாழ்த்துக்கள்!!//
நன்றி தியாகி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.
===================================================================
//சரவணகுமரன் said…
தொடர் அருமை. முதலிலே சொன்னது போல் நான் எழுத நினைத்தது. ஆனால், நீங்கள் நிறைய ஜோடிகளை பற்றி எழுதியுள்ளீர்கள்.//
நன்றி சரவணகுமரன்
===================================================================
//Logan said…
One More : இந்த ஜோடி
இளையராஜா – பாலசந்தர்//
இந்த ஜோடியும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர், இருந்தாலும் மற்றவர்கள் அளவிற்கு தாக்கம் ஏற்படவில்லை. பாலச்சந்தர் அவர்கள் படத்தில் இசையை விட நடிப்பிற்க்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். அவரது படத்தில் சிறப்பாக நடித்தவர்களை வேண்டும் என்றால் குறிப்பிடலாம்.
//முரளிகண்ணன் said…
அருமை கிரி அசத்திட்டீங்க.//
நன்றி முரளிகண்ணன். எனக்கு தெரிந்தவற்றை எக்ஸ்ட்ரா சேர்க்காமல் சரியாக கொடுத்துள்ளதாக கருதுகிறேன்.
//லோஷன்,//
ஏங்க! அவர் லோகன், லோஷன் அல்ல :-)) அவர் வேறு இவர் வேறு.
அருமை கிரி அசத்திட்டீங்க.
\\புது புது அர்த்தங்கள் வெற்றி தன்னுடைய இயக்கத்தினால் / தன்னுடைய இசையினால் என்று இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு அதன் பிறகு இணையவில்லை 🙁
\\
லோஷன்,
இப்படத்தில் சில காட்சிகளுக்கான பிண்ணனி இசையை இளையராஜாவின் கவனத்திற்க்கு செல்லாமல் அவருடைய முந்தைய இசை கோர்ப்பை பயன் படுத்தியதால்தான் பிரச்சினை வந்தது.
ரசினி-கமல் பிரிவால் எந்த நட்டமும் இல்லை.
கவுண்டமணி-செந்தில் பிரிவு என்னை போல் நகைச்சுவை பிரியர்களுக்கு பேரடி தான்!
ரஜினி கமல் கூட்டணியை நான் எதிர்பார்க்கவில்லை.
எனக்கு இந்த தகவல்கள் புதிது்.
தொடர் interest ஆக தான் இருக்கு.
அடுத்த தொடர் என்ன?
Dear Giri,
Nice article.
Keep it up your good work!
Endrum Anbudan,
Shivaji Rao Admirer.
DearGiri,
""நெருங்கி வந்தால் விலகி விடுவீர்கள், விலகி இருக்கும் வரையே நெருங்கி இருப்பீர்கள்". அளவான நெருக்கம் அல்லது சரியாக புரிந்து கொண்ட நட்பு மட்டுமே ஈகோ பார்க்காமல் நிலைக்கும். அளவிற்கு அதிகமான நெருக்கம் பல சமயங்களில் அதே அளவு பிரச்சனைகளையும் கொடுக்கும். இது அனைவருக்கும் பொருந்தும்."
That's the secret between the chemistry between Rajini & kamal's friendship.
You know kamal played a huge role in two defining moments in rajini's life:
1) When rajini is hospitalised in 1980's kamal helped him.
So rajini would have played a small role in kamal's film.(This after they have parted ways on special request from rajini to kamal.)
2) When rajini decided to quit acting & pursue sanyasam, kamal convinced rajini by his views.
Actually he along with others helped rajini to overcome that tough period.
3) Rajini even consulted kamal about joining politics, for which the latter replied in the negative describing about the pros & cons in politics & abt rajini's nature.
Why I'm saying this is Rajini truly believes Rajini & vice versa also that he feels he can talk open-heartedly to his film friend & fierce competitor kamal.
4) Also remember they consult each other before taking any cine decisions.
They have mutual respect & trust for each other while rajini is known for his humility.
That's also one of the reasons they maintain good relations.
Their relationship is a good lesson to younger actors.
what do you say?
Endrum anbudan!
//வாசுகி said…
தொடர் interest ஆக தான் இருக்கு.//
தொடர் interest ஆக "தான்" இருக்கா :-))) ஹா ஹா நன்றி
//அடுத்த தொடர் என்ன?//
தெரியலை என்ன தோணுதோ அது:-) எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை
===================================================================
//வால்பையன் said…
ரசினி-கமல் பிரிவால் எந்த நட்டமும் இல்லை.//
உண்மை தான் அருண். இதை நான் என் பதிவிலும் கூறி இருப்பேன், இவர்கள் பிரிவால் லாபமே.
//கவுண்டமணி-செந்தில் பிரிவு என்னை போல் நகைச்சுவை பிரியர்களுக்கு பேரடி தான்!//
என்னையும் லிஸ்ட் ல சேர்த்துக்குங்க 🙂
===================================================================
//Shivaji Rao Admirer said…
Dear Giri,
Nice article.
Keep it up your good work!//
நன்றி
//They have mutual respect & trust for each other while rajini is known for his humility.
That's also one of the reasons they maintain good relations//
சந்தேகமே இல்லை. நீங்கள் கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன். எண்ணங்கள் கருத்துக்கள் வேறாக இருந்தாலும் இதை தங்கள் நட்புடன் போட்டு குழப்பி கொள்வதில்லை, எனவே தான் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.
//Their relationship is a good lesson to younger actors.
what do you say?//
நீங்கள் நினைப்பது சரி தான், ஆனால் அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தற்போதைய இளைய தலைமுறையினரிடம் பக்குவம் இல்லை. தான் தான் பெரியவன் என்கிற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி