இடைத்தேர்தலும் விஜயகாந்த்தும்

44

ற்போது தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்குத் தலைவலியாக விஜயகாந்தின் தே.மு.தி.க உள்ளது. Image Credit

குறிப்பாகத் தி.மு.க வாக்கைப் பிரிக்கும் கட்சியாக உள்ளது. வளர்ந்து வரும் கட்சி என்றாலும் குறுகிய காலத்தில் மூன்றாவது பெரிய! கட்சியாக உருவெடுத்துள்ளது.

குறிப்பிடத் தக்க ஓட்டுகளையும் பெற்ற இந்தக் கட்சிக்குத் திருமங்கலம் தேர்தல் பெருத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தேர்தல் முடிவு அவரது கட்சிகாரர்களை மனதளவில் சோர்வடையச் செய்திருக்கலாம் என்றே கருதுகிறேன்.

இந்த இடைதேர்தலை வைத்து எதையும் தீர்மானம் செய்ய முடியாது என்றாலும், உற்சாகத்தைக் குறைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

முக்கியத் தேர்தல்

இந்த இடைத்தேர்தல் திமுக அதிமுக மற்றும் தேமுதிக க்கு முக்கியத் தேர்தல்.

காரணம் இந்த வெற்றியை வைத்தே அவர்களது பொதுத் தேர்தல் முடிவுகள் சில தீர்மானிக்கப்படும்.

இந்த முடிவுகள் அப்படியே பிரதிபலிக்க வாய்ப்பில்லை என்றாலும் கொஞ்சம் மனதளவில் பலம் கிடைப்பது உண்மை.

அதுவும் தி.மு.க விற்கு முக்கியத் தேர்தல்.

ஏற்கனவே மின்சாரப் பிரச்சனை, ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்பப் பிரச்சனை உட்படப் பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் தி.மு.க இதில் தோல்வி அடைந்தால், ஏற்கனவே மைனாரிட்டி தி.மு.க அரசு என்று வரிக்கு வரிக்கு கூறி வரும் அ.தி.மு.க இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பொதுத் தேர்தலில் முக்கியக் கோஷமாக வைக்கும்.

இதை எல்லாம் அறியாதவர்கள் அல்ல தி.மு.க வினர்.

எனவே, தான் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து இருந்தார்கள். தி.மு.க மட்டுமல்ல அனைத்து கட்சியும்.

இடைத்தேர்தலா பணத்தேர்தலா

இடைத்தேர்தலா இல்லை பணத்தேர்தலா என்று சந்தேகம் வருமளவிற்குத் தாறுமாறாகப் பணத்தை இறைத்து இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாக்காளரும் ரூ 7000 குறைந்தது அனைத்து கட்சிகளிடமும் மொத்தமாகப் பெற்று இருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

இதில் அதிகளவில் பணம் பட்டுவாடா செய்தது (செய்ய முடிந்தது) தி.மு.க அடுத்தது அ.தி.மு.க என்று அனைவரும் அறிந்த ஒன்று.

இவை மட்டுமல்லாது செல்போன், மோதிரம், பிரியாணி, பரிசுகள் என்று அவை தனி.

ஒருவருக்குக் குறைந்தது ரூ 5000 என்று வைத்துக்கொண்டாலும் மொத்தம் உள்ள 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 வாக்குகளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 369 வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதில் நாம் 1,30,000 மட்டும் கணக்கு வைத்துக்கொண்டு கணக்கு போட்டாலே 130000*5000=65,00,00,000 ரூ வருகிறது. இதில் உள்ள எண்ணைக் கூட்டவே நமக்குத் தலை கிறுகிறுக்கிறது.

இத்தனை செலவு (நம்ம கிட்ட இருந்து கொள்ளை அடித்த பணம் தான்) இவ்வாறு செய்ததற்கு இதில் கால் வாசி பணத்தில் தொகுதிக்கு நல்ல காரியங்களைச் செய்து இருந்தாலே போதுமானது எளிதாக வெற்றி பெற்று இருப்பார்கள்.

வேலைக்கு ஆகவில்லை

விஜயகாந்த் இவர்கள் அளவிற்குப் போட்டி போட முடியாது. எனவே, அவர் வழக்கமான புலம்பல் பிரச்சாரத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிரேமலதா காரை நொறுக்கி விட்டார்கள் என்றெல்லாம் ஸ்டண்ட் அடித்துப் பார்த்தார்.

என்னால் தான் உங்களுக்கு இத்தனை பணம் கிடைக்கிறது. எனவே, பணத்தை மற்ற கட்சிகளிடம் வாங்கி விட்டு எனக்கு ஒட்டுப் போடுங்கள் என்று கூறிவந்தார், இருந்தும் வேலைக்கு ஆகவில்லை.

தோற்றால் கூடப் பரவாயில்லை டெபாசிட்டே போய் விட்டது அது தான் அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்.

இதை விஜயகாந்த்தே எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன், தோல்வி அடைய வாய்ப்புண்டு ஆனால் டெபாசிட் போகும் என்று நினைத்து இருக்க மாட்டார்.

விஜயகாந்த்தின் பலமே கூட்டணி இல்லாமல் இருப்பது தான், அதற்காகவே அவரது கட்சிக்கு ஓட்டுகள் விழுகின்றன, மற்றும் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஓட்டும் இவருக்கு விழுகிறது.

ஆனால், கூட்டணி இல்லாமல் தற்போது ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகமாகத் தான் உள்ளது, இருக்கின்ற நிலையைப் பார்த்தால்.

பொதுத் தேர்தல்

இந்த இடைதேர்தலை வைத்து நாம் எதையும் தீர்மானிக்க முடியாது காரணம் ஒரு தொகுதி என்பதால் அனைவரும் பணத்தைக் கொட்டி விட்டனர்.

மக்களும் வாங்கிய பணத்திற்குத் துரோகம்! செய்ய மனம் இல்லாமல் ஒட்டு போட்டுவிட்டனர்.

பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிக்கும் பணத்தை இப்படி இறைக்க முடியாது, மற்றும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். மக்களின் மறதி அரசியல் வியாதிகளுக்கு, கட்சிகளுக்கு ஒரு வரபிரசாதம்.

எனவே, செய்த தவறுகளைத் தேர்தலுக்கு முன்பு சாமர்த்தியமாக மறக்க வைத்து விடுவார்கள்.

எனவே விஜயகாந்த் தனித்து நின்று அதிகளவில் வெற்றியைப் பெற முடியுமா! என்பது சந்தேகமாகவே உள்ளது.

கூட்டணி வைத்தால் இத்தனை நாள் இதைக் கூறி தான் கட்சியையே நடத்தி வந்துள்ளார், இனி கூட்டணி என்றால் விழுந்த ஓட்டுகள் கண்டிப்பாக மாறும்.

கூட்டணி வைக்கவில்லை என்றால் ஆட்சியைப் பிடிக்க முடியாது, வளரும் கட்சி என்பதால், தற்போது விஜயகாந்த் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு இருப்பதாகவே கருதுகிறேன்.

இது எல்லாம் தெரிந்து தான் கலைஞர் கூட்டணி வைத்து நடத்துகிறார் போல, இவர் அறியாத அரசியலா!

விஜயகாந்த் கட்சி எல்லாம் ஒரு கட்சியா அவரை எல்லாம் ஒரு பொருட்டாக வைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று விஜயகாந்தை பிடிக்காதவர்கள் வேண்டும் என்றால் வாதம் செய்யலாம் ஆனால், நடைமுறையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வருகின்ற பொதுத் தேர்தல் விஜயகாந்த்க்குப் பல உண்மைகளைப் புரிய வைக்கும் அவருக்கு மட்டுமல்ல பலருக்கும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

44 COMMENTS

 1. //பாண்டித்துரை said…
  பாமாக + விடுதலை சிறுத்தைகள் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் பயணிக்குமா என்ற கேள்வி எழுகிறது.//

  விடுதலை சிறுத்தை இப்போது தான் காங்கிரசுடன் சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள். பா மா க எந்த கட்சிக்கு வேண்டும் என்றாலும் போகலாம்.

  //கடைசி நேர பாய்ச்சலாக பாஜாக பக்கம் திமுக செல்லவும் வாய்ப்புண்டு.//

  தெரியவில்லை

  ===================================================================

  //Namakkal Shibi said…
  படத்துல நடிக்கறதை விட்டுட்டு கட்சி நடத்துறதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சிக்குவார்!//

  தெரியல தேர்தலுக்கு பிறகு தான் தெரியும்

  //மீண்டும் முழுமூச்சா படத்துல கவனம் செலுத்தினாருன்னா நம்ம கதி என்னாவது!//

  ஹா ஹா ஹா அட! ஏங்க நீங்க வேற :-))))

  //அதுக்காகவது மக்கள் ஓட்டு போட்டு ஒரு ரெண்டு மூணு தொகுதில ஜெயிக்க வெச்சிடுவாங்க!

  அப்பத்தான் அதிகமா படம் எடுக்க மாட்டார்!//

  நோ கமெண்ட்ஸ் 🙂

  ===================================================================

  //ஜோதிபாரதி said…
  விஜயகாந்த் அம்மாவிற்கும், அய்யனுக்குமே அரசியல் கற்றுக் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.//

  :-))))))

  //அவருடைய எதிர்கால நிலைப்பாடு வெட்ட வெளிச்ச்சமாகிக் கொண்டிருக்கிறது//

  இடை தேர்தல் பற்றி சொல்றீங்களா?

  //தமிழகத்தின் மூன்றாவது சக்தியையும் நம்ப முடியாத சூழல் இப்போது.//

  மூன்றாவது கட்சி மூன்றாவது அணி என்றாலே வேலைக்கு ஆகாது போல 🙂

  //நான் அதிமுகவின் வாக்கை என்று நினைத்தேன்.//

  நான் கேள்விப்பட்ட வரை அனைவரும் தி மு க என்று தான் கூறினார்கள். அரசியல் பதிவுகள் அதிகம் நீங்கள் எழுதுகிறீர்கள், எனவே நான் கூற ஒன்றும் இல்லை, உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும்.

 2. //”இடைத்தேர்தலும் விஜயகாந்த்தும்”//

  வழக்கமாக ரஜினி ரசிகர்கள் விஜயகோந்து என்று தானே சொல்லுவார்கள்
  🙂

 3. //தற்போது தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு தலைவலியாக விஜயகாந்தின் தே.மு.தி.க உள்ளது//

  நான் இன்னும் பதிவுக்குள் செல்லவில்லை.திருமங்கலம் பார்த்தால் நடிகர் கட்சிகள் அனைத்தும் ஊத்திக்கும் போல தெரிகிறது.

 4. //பரிசல்காரன் said…
  எப்படித்தான் இப்படி அலசி ஆராய்ச்சு எழுதறீங்களோ.. பிரமிப்பா இருக்குப்பா!//

  கே கே எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்? அதற்காக இப்படி வந்து வாரிட்டு போறீங்க! இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியல 🙂

  ===================================================================

  //We The People said…
  அது தான் உண்மை! விசயகாந்த் நிச்சயமாக அ.தி.மு.க ஓட்டுக்களைத் தான் பிரித்திருக்கிறார்! தி.மு.க ஓட்டு கொஞ்சம் கூட பிரிந்ததாக தெரியவில்லை!//

  ஜோதிபாரதி அவர்களுக்கு கூறியதே உங்களுக்கும் 🙂

  //தே.மு.தி.கவே ஒரு கலைஞரின் ராஜதந்திரத்தின் ஒரு பங்கோ என்று கூட எனக்கு தோன்றியது உண்டு :)//

  ஐயையோ! அப்படி எல்லாம் இருக்காதுங்க… எனக்கு தெரிந்து தி மு க வினர் விஜயகாந்த் மீது கொலை வெறியோடு இருப்பார்கள் என்று நினைக்கிறேன் 🙂

  உங்கள் முதல் வருகைக்கும் நன்றி

  ===================================================================

  //கோவி.கண்ணன் said…
  வழக்கமாக ரஜினி ரசிகர்கள் விஜயகோந்து என்று தானே சொல்லுவார்கள்
  :)//

  வாங்கய்யா! நாரதரே! உங்களுக்கு ரஜினிய வம்புக்கு இழுக்கலைனா தூக்கம் வராதே!

  “நீங்க தான் வழக்கமா ரஜினி ரசிகர்கள்” என்று கூறி விட்டீர்களே! நான் அந்த வழக்கமான நபர்களில் ஒரு நபர் அல்ல :-))

  நான் கிருபானந்த வாரியாரை பற்றி எழுதினால் கூட அதில் ரஜினிய இழுத்துடுவீங்க போல ஹா ஹா ஹா

  ===================================================================

  //நட்புடன் ஜமால் said…
  \விஜயகாந்த் கட்சி எல்லாம் ஒரு கட்சியா அவரை எல்லாம் ஒரு பொருட்டாக வைத்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று விஜயகாந்தை பிடிக்காதவர்கள் வேண்டும் என்றால் வாதம் செய்யலாம் ஆனால் நடைமுறையை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். வருகின்ற பொது தேர்தல் விஜயகாந்த்திற்கு பல உண்மைகளை புரிய வைக்கும் அவருக்கு மட்டுமல்ல பலருக்கும்.\

  பல அரசியல் விடயங்கள் புரியாவிட்டாலும், புடிக்காவிட்டாலும்

  இது உண்மை//

  எப்படியும் பதிவை படித்தவுடன் இதை தான் ஒரு சிலர் நினைப்பாங்க அதனால உஷாரா முன்னாடியே கூறி விட்டேன் :-))

 5. நூறு பேர் ஓட்டுக்கு ஒரு கட்சியாளர் பொறுப்பு என்று தொண்டர் படையை திமுக தேர்ச்சியான முறையில் திட்டமுமிட்டு வேலை வாங்கியதும் வெற்றிக்கு ஒரு காரணமே.

  //மக்களும் வாங்கிய பணத்திற்கு துரோகம்!!! செய்ய மனமில்லாமல் ஒட்டு போட்டுவிட்டனர்.//

  அந்த நேரத்தில் வந்த பணத்தில் மயங்கி ஓட்டுப் போடுவது அடுத்து வரும் ஐந்து வருடமும் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாது போக அல்லாடுவது, இதுவே நம் நாட்டு மக்களின் தலையெழுத்து என்றாகி விட்டது.

 6. இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

  பாமாக + விடுதலை சிறுத்தைகள் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் பயணிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

  கடைசி நேர பாய்ச்சலாக பாஜாக பக்கம் திமுக செல்லவும் வாய்ப்புண்டு.

  இதுல கொக்கு யாருனுதான் புரியல

 7. //விஜயகாந்த் கட்சி எல்லாம் ஒரு கட்சியா அவரை எல்லாம் ஒரு பொருட்டாக வைத்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று விஜயகாந்தை பிடிக்காதவர்கள் வேண்டும் என்றால் வாதம் செய்யலாம் ஆனால் நடைமுறையை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். வருகின்ற பொது தேர்தல் விஜயகாந்த்திற்கு பல உண்மைகளை புரிய வைக்கும் அவருக்கு மட்டுமல்ல பலருக்கும்.//

  ஆமாம்!

 8. படத்துல நடிக்கறதை விட்டுட்டு கட்சி நடத்துறதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சிக்குவார்!

  ஆனா அதுலயும் நமக்கு ஆபத்துதான்!

  மீண்டும் முழுமூச்சா படத்துல கவனம் செலுத்தினாருன்னா நம்ம கதி என்னாவது!

  அதுக்காகவது மக்கள் ஓட்டு போட்டு ஒரு ரெண்டு மூணு தொகுதில ஜெயிக்க வெச்சிடுவாங்க!

  அப்பத்தான் அதிகமா படம் எடுக்க மாட்டார்!

 9. விஜயகாந்த் அம்மாவிற்கும், அய்யனுக்குமே அரசியல் கற்றுக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். நல்லா ஜொலிக்கிறார். அவருடைய எதிர்கால நிலைப்பாடு வெட்ட வெளிச்ச்சமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மூன்றாவது சக்தியையும் நம்ப முடியாத சூழல் இப்போது.

  //குறிப்பாக தி.மு.க வாக்கை பிரிக்கும் கட்சியாக உள்ளது//

  நான் அதிமுகவின் வாக்கை என்று நினைத்தேன்.

 10. ///குறிப்பாக தி.மு.க வாக்கை பிரிக்கும் கட்சியாக உள்ளது//

  நான் அதிமுகவின் வாக்கை என்று நினைத்தேன்.//

  அது தான் உண்மை! விசயகாந்த் நிச்சயமாக அ.தி.மு.க ஓட்டுக்களைத் தான் பிரித்திருக்கிறார்! தி.மு.க ஓட்டு கொஞ்சம் கூட பிரிந்ததாக தெரியவில்லை! அதற்கு காரணம் அ.தி.மு.க மற்று தே.மு.தி.க இரண்டுமே தி.மு.க குறிப்பாக முதல்வர் கருணாநிதியை எதிர்த்து வரும் ஓட்டுக்களை பங்கு போடுகிறார்கள் முன்பு அது அ.தி.மு.கவுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது! இது தான் உண்மையும் கூட! தி.மு.கவிற்கு ஓட்டு வங்கி உள்ளது! ஆனால் அ.தி.மு.கவுக்கு ஓட்டு வங்கி என்பதே கருணாநிதி எதிர்ப்பு ஓட்டுக்கள் தான், இப்பொழுது பங்கிற்கு தே.மு.தி.கவும் களம் இறங்கியிருக்கிறது (அ) இறக்கப்பட்டிருக்கிறது! தே.மு.தி.கவே ஒரு கலைஞரின் ராஜதந்திரத்தின் ஒரு பங்கோ என்று கூட எனக்கு தோன்றியது உண்டு 🙂

 11. \\விஜயகாந்த் கட்சி எல்லாம் ஒரு கட்சியா அவரை எல்லாம் ஒரு பொருட்டாக வைத்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று விஜயகாந்தை பிடிக்காதவர்கள் வேண்டும் என்றால் வாதம் செய்யலாம் ஆனால் நடைமுறையை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். வருகின்ற பொது தேர்தல் விஜயகாந்த்திற்கு பல உண்மைகளை புரிய வைக்கும் அவருக்கு மட்டுமல்ல பலருக்கும்.\\

  பல அரசியல் விடயங்கள் புரியாவிட்டாலும், புடிக்காவிட்டாலும்

  இது உண்மை.

 12. கிரி அரசியல்ல கூட அசத்துறிங்க!

  விசயகாந்துக்கு வாய்ப்பு உள்ளதுபோல் தான் தெரிகிறது.

  ஆனால் அனுகுமுறையில் சில மாற்றங்கள் தேவை. குறை சொல்லுதல் மட்டுமே ஓட்டு வாங்கி தராது!

 13. //ராஜ நடராஜன் said…
  நான் இன்னும் பதிவுக்குள் செல்லவில்லை.திருமங்கலம் பார்த்தால் நடிகர் கட்சிகள் அனைத்தும் ஊத்திக்கும் போல தெரிகிறது.//

  எதுவும் உடனே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இப்படி தான் ஆகுமோ! விஜயகாந்த் இன்னும் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

  ===================================================================

  //ராமலக்ஷ்மி said…
  நூறு பேர் ஓட்டுக்கு ஒரு கட்சியாளர் பொறுப்பு என்று தொண்டர் படையை திமுக தேர்ச்சியான முறையில் திட்டமுமிட்டு வேலை வாங்கியதும் வெற்றிக்கு ஒரு காரணமே.//

  இருக்கலாம் இவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

  //அந்த நேரத்தில் வந்த பணத்தில் மயங்கி ஓட்டுப் போடுவது அடுத்து வரும் ஐந்து வருடமும் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாது போக அல்லாடுவது, இதுவே நம் நாட்டு மக்களின் தலையெழுத்து என்றாகி விட்டது.//

  மக்களின் ஏழ்மையை அரசியல்வாதிகள் நன்கு பயன்படுத்திகொள்கின்றனர்.

  ===================================================================

  //Mahesh said…
  தே மு தி க ரொம்ப குறுகிய காலத்துலயே உச்சி, பள்ளம் ரெண்டையும் பாத்துடுச்சு. கேப்டனோட தெளிவில்லாத சில கொள்கைகள், தேவையற்ற பேச்சுகள், கூடணி பற்றி தெளிவின்மை… இதெல்லாம் காரணம். //

  முக்கியமாக தேவைற்ற பேச்சுகளே எதிர்வினையாகி விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. கூட்டணி வைப்பதில்லை என்கிறார், மேடையில் வைக்கலாமா என்று மக்களை பார்த்து கேட்கிறார். இதை தெளிவுபடுத்தி கொள்வது அவருக்கு நல்லது.

  // அவங்களுக்கு மாற்றா வரணும்னா நிறைய ஹோம் ஒர்க் பண்ணணும்… பொறுமை வேணும்//

  சரியா சொன்னீங்க!

  //மக்கள் ஒரு மாற்றுக்காக காத்திருப்பது உண்மைதான். ஆனா ஒரு அதோட ஒரு தீர்க்கமான தலைவரையும் எதிர்பார்க்கறாங்க.
  கேப்டன் இந்த பாயிண்டை சரியா எக்ஸ்ப்ளாயிட் பண்ணலை.//

  வழிமொழிகிறேன். மகேஷ் நல்லா கூறி இருக்கீங்க. இதை என் பதிவில் கூறவில்லை என்றாலும் இதுவே என் கருத்தும்.

  ===================================================================

  //நசரேயன் said…
  அரசியல்ல எதுவும் நடக்கலாம்//

  அரசியல்ல இதெல்லாம் “ஜகஜம்” னு சொல்றீங்களா :-)))

  ===================================================================

  //arun said…
  Good analysis Giri//

  நன்றி அருண் உங்களின் தொடர்ச்சியான வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

  ===================================================================

  //வால்பையன் said…
  கிரி அரசியல்ல கூட அசத்துறிங்க!//

  நன்றி அருண். நான் அனைத்து வகை பதிவுகளையும் எழுதுவேன், இதை போல தான் எழுதுவேன் என்று எந்த ஒரு வட்டத்திலும் மாட்ட விரும்பவில்லை, அது மட்டுமல்லாமல் பொதுவாக அனைத்து பிரிவுகளிலும் எனக்கு ஓரளவு விஷயம் தெரியும், அளந்து விடாமல் 🙂 அளவோடு கூறுகிறேன் :-))

  //விசயகாந்துக்கு வாய்ப்பு உள்ளதுபோல் தான் தெரிகிறது.//

  தற்போது இல்லை என்றாலும் தன் நடவடிக்கைகளை மாற்றி கொண்டால் வாய்ப்புண்டு. ஆனால் இதை பலர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

  //அனுகுமுறையில் சில மாற்றங்கள் தேவை. குறை சொல்லுதல் மட்டுமே ஓட்டு வாங்கி தராது!//

  மிகச்சரி. இவர் குறை சொல்வதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது விசயங்களில் கவனம் செலுத்தலாம். எதற்கெடுத்தாலும் கலைஞரை கை காட்டுவதை நிறுத்த வேண்டும். நீங்கள் கூறியது போல அணுகுமுறையில் பல மாற்றங்கள் தேவை.

 14. ரொம்ப சரி கிரி… தே மு தி க ரொம்ப குறுகிய காலத்துலயே உச்சி, பள்ளம் ரெண்டையும் பாத்துடுச்சு. கேப்டனோட தெளிவில்லாத சில கொள்கைகள், தேவையற்ற பேச்சுகள், கூடணி பற்றி தெளிவின்மை… இதெல்லாம் காரணம்.

  ரெண்டு கழகங்களுக்கும் 50 வருட பின்னணி இருக்கு. அவங்களுக்கு மாற்றா வரணும்னா நிறைய ஹோம் ஒர்க் பண்ணணும்… பொறுமை வேணும். மக்கள் ஒரு மாற்றுக்காக காத்திருப்பது உண்மைதான். ஆனா ஒரு அதோட ஒரு தீர்க்கமான தலைவரையும் எதிர்பார்க்கறாங்க.
  கேப்டன் இந்த பாயிண்டை சரியா எக்ஸ்ப்ளாயிட் பண்ணலை.

 15. இதெல்லாம் நமக்கு புரியாத‌ subject.

  உங்களுடைய நாட்டு அரசியல் அளவில் எல்லாம் நமக்கு
  அறிவில்லை.

  இருந்தாலும் வாசித்தேன்.

 16. //என்.இனியவன் said…
  இதெல்லாம் நமக்கு புரியாத‌ subject.
  உங்களுடைய நாட்டு அரசியல் அளவில் எல்லாம் நமக்கு
  அறிவில்லை.//

  இனியவன் எனக்கும் ரொம்ப எதுவும் தெரியாதுங்க..சும்மா தெரிந்த கொஞ்சத்தை விளக்கமாக கூறி இருக்கிறேன் அவ்வளவே.

  //இருந்தாலும் வாசித்தேன்//

  இருந்தாலும் இந்த கொடுமையை அனுபவித்தேன் என்று கூறுகிறீர்களா! :-))))

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி

 17. //கிஷோர் said…
  நல்ல பதிவு கிரி.//

  நன்றி கிஷோர்

  //பேசாமல் அடுத்த தேர்தல் சமயத்தில் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு சொந்த ஊர் போய் ஓட்டு போட்டு கொஞ்சம் காசு பார்த்து வரலாம் என்று எண்ணியுள்ளேன்//

  ஹா ஹா ஹா

  ===================================================================

  //வாசுகி said…
  இந்திய அரசியல் அளவுக்கு எல்லாம் நமக்கு ஒட்டில்லை சார்.//

  உங்க பிரச்சனையே உங்களுக்கு பெரிதாக உள்ளது..இதில் இதை எல்லாம் எங்க கவனிக்க நேரமுண்டு. கவனிக்க கூடிய அளவிற்கு எதுவும் சிறப்பாகவும் இல்லை.

  //உங்கட specialலே அடுத்தவர்களை காயப்படுத்தாமல் எழுதும் விதமும் வீண்விதண்டாவாதம் செய்யாமல்
  யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தான்.//

  நன்றி வாசுகி

  ===================================================================

  //உடன்பிறப்பு said…
  துக்ளக் வாசிக்கும் பழக்கம் உண்டோ உங்களுக்கு,//

  :-)))) வாய்ப்பு கிடைத்தால்….. நீங்கள் கேட்பதை பார்த்தால் நீங்க தொடர்ந்து படிக்கறீங்க போல 😉

  //விஜயகாந்த் எல்லா தேர்தல்களிலும் அ.தி.மு.க. ஓட்டுகளை தான் பிரித்து வந்துள்ளார்//

  அடடா! அதுக்கு ஏங்க இப்படி கொந்தளிக்கறீங்க? 🙂 அதற்க்கு தான் ஜோதிபாரதி அவர்களுக்கு கூறிய பதிலிலேயே கூறி விட்டேனே. நாங்கெல்லாம் தப்புன்னா ஒத்துக்குவோம்.

  //இருந்தாலும் உங்கள் காமெடி சூப்பர்//

  :-))) நன்றி. என்னோட காமெடிய விட சிலரின் காமெடி (திரையில் அல்ல) சிறப்பாக உள்ளது.

  சரி காமெடி சூப்பர்!! னு சொல்வதற்காவது ஒரு பின்னூட்டத்தை போட்டீங்களே 🙂 உங்கள் முதல் வருகைக்கு நன்றி..

  ===================================================================

  //எம்.எம்.அப்துல்லா said…
  கிரி அண்ணே தே.மு.தி.க பிரிப்பது ஜெயலலிதா கட்சி மற்றும் காங்கிரஸ் வாக்குகள்தான். தி.மு.க. ஓட்டுகள் எந்த சந்தர்பத்திலும் மாறுவதில்லை.//

  அடடா! இப்படி பாசக்கார புள்ளைகளாக இருக்கீங்களே :-)) ஒவ்வொருத்தரும் தனித்தனியா சொன்னா தான் திருப்தி அடைவீங்க போல ஹா ஹா ஹா

  அப்துல்லா! இது தான் உங்க புது ஐ டி யா? உங்களுக்கு நேற்றே தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்று இருந்தேன்..அப்படியே மறந்துட்டேன். இனிமேல் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க….எனக்கு கொஞ்சம் உள்ளுக்குள்ள உதறல் தான் 🙂

 18. நல்ல பதிவு கிரி.

  இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எனக்கும் சற்று ஏமாற்றத்தையே அளித்தது

  சென்ற பொதுத்தேர்தலில் டிவி.
  இடைத்தேர்தலில் காசு

  பேசாமல் அடுத்த தேர்தல் சமயத்தில் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு சொந்த ஊர் போய் ஓட்டு போட்டு கொஞ்சம் காசு பார்த்து வரலாம் என்று எண்ணியுள்ளேன்

 19. இந்திய அரசியல் அளவுக்கு எல்லாம் நமக்கு ஒட்டில்லை சார்.

  //அனைத்து பிரிவுகளிலும் எனக்கு ஓரளவு விஷயம் தெரியும்,//
  இது தற்பெருமை இல்லையே?????

  ம்ம்ம்ம்ம் கலக்குங்க.
  உங்கட specialலே அடுத்தவர்களை காயப்படுத்தாமல் எழுதும் விதமும் வீண்விதண்டாவாதம் செய்யாமல்
  யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தான். ஹிஹி

 20. //குறிப்பாக தி.மு.க வாக்கை பிரிக்கும் கட்சியாக உள்ளது//

  துக்ளக் வாசிக்கும் பழக்கம் உண்டோ உங்களுக்கு, விஜயகாந்த் எல்லா தேர்தல்களிலும் அ.தி.மு.க. ஓட்டுகளை தான் பிரித்து வந்துள்ளார். இருந்தாலும் உங்கள் காமெடி சூப்பர்

 21. //குறிப்பாக தி.மு.க வாக்கை பிரிக்கும் கட்சியாக உள்ள//

  கிரி அண்ணே தே.மு.தி.க பிரிப்பது ஜெயலலிதா கட்சி மற்றும் காங்கிரஸ் வாக்குகள்தான். தி.மு.க. ஓட்டுகள் எந்த சந்தர்பத்திலும் மாறுவதில்லை.

 22. //”நீங்க தான் வழக்கமா ரஜினி ரசிகர்கள்” என்று கூறி விட்டீர்களே! நான் அந்த வழக்கமான நபர்களில் ஒரு நபர் அல்ல :-))

  நான் கிருபானந்த வாரியாரை பற்றி எழுதினால் கூட அதில் ரஜினிய இழுத்துடுவீங்க போல ஹா ஹா ஹா//

  பதிவும் சரி.. பின்னூட்டங்களும் சரி…super.

 23. Dear Giri,
  You've been complemented by Vasuki who I respect for her views.

  "ம்ம்ம்ம்ம் கலக்குங்க.
  உங்கட specialலே அடுத்தவர்களை காயப்படுத்தாமல் எழுதும் விதமும் வீண்விதண்டாவாதம் செய்யாமல்
  யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தான். ஹிஹி"

  You deserve this complement Giri.
  Keep it up & continue your work.

  "இருந்தாலும் இந்த கொடுமையை அனுபவித்தேன் என்று கூறுகிறீர்களா! :-))))"

  ha ha ha…
  You've got a good sense of humour.
  Great!

  "வழக்கமாக ரஜினி ரசிகர்கள் விஜயகோந்து என்று தானே சொல்லுவார்கள்"

  ha ha ha .. nice one.
  Actually vijayakanth is helping rajini practically about the hurdles he has to face once he steps into politics which he has to surmount successfully.

  So on behalf of rajini fans we thank our vijayakonthu sorry vijayakanth.

  "நான் கிருபானந்த வாரியாரை பற்றி எழுதினால் கூட அதில் ரஜினிய இழுத்துடுவீங்க போல ஹா ஹா ஹா "

  ha ha ha ha

  Actually I've some valid points regarding vijayakanth's politics.

  1)Vijayakanth still has got 8% vote bank which is greater than the votebanks of congress & communist in TamilNadu.

  2) He has a great mentor in Panrutti ramachandran who has a vast experience in politics & who is chanakya for MGR

  3)People who have good experience in politics like Austin,Ku.Pa.Krishnan are still with him .

  4) He has a strong fan organisation base & caste support.

  5) If he decides to align with DMK or ADMK in due course of time he will become stronger. Even DMK or congress will ask for his support if he is willing.

  So as a rajini fan (Shivaji Rao admirer) this is disgusting for us as we wait for our Thalaivar's political entry but reality is different.
  But we have hope in Vijayakanth that he will contest alone in all the elections & finish third!
  Also he is not going to formulate his policies in national issues & social issue.

  These are all good signs for us!

  Long live captain vijayakanth!

  Endrum anbudan!

 24. //சங்கணேசன் said…
  பதிவும் சரி.. பின்னூட்டங்களும் சரி…super.//

  நன்றி சங்கணேசன் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

  =======================================

  //Shivaji Rao Admirer said…
  You deserve this complement Giri.
  Keep it up & continue your work.//
  //You've got a good sense of humour.
  Great!//

  நன்றி 🙂

  //behalf of rajini fans we thank our vijayakonthu sorry vijayakanth.//

  ஹா ஹா ஹா

  நீங்கள் விஜயகாந்த் பற்றி கூறிய பெரும்பான்மையான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.

  //Long live captain vijayakanth!//

  இதில் எதுவும் உள் குத்து இல்லையே :-)))

  உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு ஒரு பெரியயயயயயயய நன்றி 🙂

 25. //இருக்கலாம் இவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.//

  நானும் குமுதம் வார இதழ் மூலம் தெரிந்து கொண்டதுதான்:))!

 26. //தமிழன்-கறுப்பி… said…
  அப்ப நீங்க அரசியல் பதிவரோ…:)//

  நாங்க கலந்து கட்டி அடிக்கும் பதிவர் :-)))

  //ஆமா இப்பகூட மீராஜாஸ்மின்கூட ஒரு படம் நடிச்சுட்டிருக்காராம்…
  ஐயோ அந்த புள்ளைக்கு ஏனிந்த கெட்டகாலம்…:(//

  ஹா ஹா ஹா ஏன் இந்த கொலை வெறி?

  ===================================================================

  //ராமலக்ஷ்மி said…
  நானும் குமுதம் வார இதழ் மூலம் தெரிந்து கொண்டதுதான்:))!//

  அப்படியா!! 🙂 ஓகே ஓகே

 27. //உடன்பிறப்பு said…
  நான் துக்ளக் படிப்பது கிடையாது ஆனால் அதை இணையத்தில் மீள் பதிவு செய்யும் உங்களை போன்றவர்க்ளின் பதிவுகளை பார்ப்பதுண்டு//

  சும்மா ஏதாவது சொல்லவேண்டும் என்று என்பதற்காக கூறி கொண்டு இருக்காதீர்கள். என்னுடைய எந்த பதிவில் துக்ளக் அரசியல் பதிவை மீள் பதிவு செய்து கண்டீர்கள்?

  //உங்களிடம் துக்ளக் தாக்கம் தூக்கலாகவே இருப்பது கண்கூடு//

  நீங்களாக அப்படி நினைத்துக்கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

  //தேர்தல் முடிவுகளை நீங்களே ஆராய்ந்து பார்த்தால் விஜயகாந்த்த் யார் ஓட்டுகளை பிரித்தார் என்று உங்களுக்கே புரியும், ஆனால் அவர் தி.மு.க. ஓட்டுகளை பிரிக்கிறது என்று உதார் விடுவது//

  எத்தனை முறை கூறுவது இதற்க்கு போதுமான விளக்கம் கொடுத்து விட்டேன்.

  //சோ-ராமசாமி மற்றும் உங்களை போன்ற அவர்களின் கைத்தடிகளால் தான் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே//

  உங்கள் கருத்தை கூறும் போது நாகரீகமாக கூறுங்கள். கைத்தடி என்ற வார்த்தை எல்லாம் ரொம்ப ஓவர். தவறுகள் ஏற்படுவது சகஜம் அதை வீம்பிற்கு தொடர்ந்தால் தவறு அதை ஏற்று கொள்வது நாகரீகமான செயல்.

 28. Namakkal Shibi said…
  படத்துல நடிக்கறதை விட்டுட்டு கட்சி நடத்துறதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சிக்குவார்!

  ஆனா அதுலயும் நமக்கு ஆபத்துதான்!

  மீண்டும் முழுமூச்சா படத்துல கவனம் செலுத்தினாருன்னா நம்ம கதி என்னாவது!

  அதுக்காகவது மக்கள் ஓட்டு போட்டு ஒரு ரெண்டு மூணு தொகுதில ஜெயிக்க வெச்சிடுவாங்க!

  அப்பத்தான் அதிகமா படம் எடுக்க மாட்டார்!
  \\

  ஆமா இப்பகூட மீராஜாஸ்மின்கூட ஒரு படம் நடிச்சுட்டிருக்காராம்…
  ஐயோ அந்த புள்ளைக்கு ஏனிந்த கெட்டகாலம்…:(

 29. நான் துக்ளக் படிப்பது கிடையாது ஆனால் அதை இணையத்தில் மீள் பதிவு செய்யும் உங்களை போன்றவர்க்ளின் பதிவுகளை பார்ப்பதுண்டு. உங்களிடம் துக்ளக் தாக்கம் தூக்கலாகவே இருப்பது கண்கூடு. தேர்தல் முடிவுகளை நீங்களே ஆராய்ந்து பார்த்தால் விஜயகாந்த்த் யார் ஓட்டுகளை பிரித்தார் என்று உங்களுக்கே புரியும், ஆனால் அவர் தி.மு.க. ஓட்டுகளை பிரிக்கிறது என்று உதார் விடுவது சோ-ராமசாமி மற்றும் உங்களை போன்ற அவர்களின் கைத்தடிகளால் தான் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே

 30. //சும்மா ஏதாவது சொல்லவேண்டும் என்று என்பதற்காக கூறி கொண்டு இருக்காதீர்கள். என்னுடைய எந்த பதிவில் துக்ளக் அரசியல் பதிவை மீள் பதிவு செய்து கண்டீர்கள்?//

  உங்கள் கிரி வலைத்தளத்தில் துக்ளக் கார்ட்டூன் என்று கொட்டை எழுத்தில் போட்டு இருக்கிறீர்களே

 31. //உங்கள் கருத்தை கூறும் போது நாகரீகமாக கூறுங்கள். கைத்தடி என்ற வார்த்தை எல்லாம் ரொம்ப ஓவர்//

  நாகரீகமாக தான் கூறினேன், அநாகரீகமாக குறுவதென்றல் அடிவருடி என்று சொல்வது வலியுலக வழக்கம். உங்களை பற்றி நல்ல அபிப்பிராயம் இருப்பதால் தான் அவ்வாறு சொல்வதை கவனமாக தவிர்த்தேன். மேலும் துக்ளக் கார்ட்டூனை நான் பார்த்து இருக்காவிட்டால் இங்கே பின்னூட்டம் இடுவதையும் தவிர்த்து இருப்பேன்

 32. //உடன்பிறப்பு said…
  உங்கள் கிரி வலைத்தளத்தில் துக்ளக் கார்ட்டூன் என்று கொட்டை எழுத்தில் போட்டு இருக்கிறீர்களே//

  ஒ! என் வலைத்தளம் வந்தீர்களா! நன்றி. ஏங்க! கார்ட்டூன் போடுவதாலே அவருக்கு நான் அபிமானியாகி ஆகி விட்டதாக அர்த்தம் ஆகி விடுமா? அல்லது அவர் கூறுவது அனைத்தும் சரி என்று ஏற்று கொண்டதாக ஆகி விடுமா?

  // உங்களை பற்றி நல்ல அபிப்பிராயம் இருப்பதால் தான் அவ்வாறு சொல்வதை கவனமாக தவிர்த்தேன்//

  உங்கள் அன்பிற்கு நன்றி. உங்கள் அபிப்ராயத்திற்கு ஏமாற்றத்தை கொடுக்கும் அளவிற்கு ஏனோ தானோ என்று பதிவுகள் எழுதுபவன் அல்ல, அதில் நான் கூறியது கூட என் சொந்த வார்த்தை தான், துக்ளக்கில் அப்படி கூறி இருந்தார்கள் என்பதே நீங்கள் கூறி தான் எனக்கு தெரியும், இது வரை மொத்தமாகவே 10 துக்ளக் படித்து இருந்தாலே அதிகம்.

  என் பதிவுகளில் கலைஞர் என்று இல்லை அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்து தான் எழுதி இருக்கிறேன் எழுதுவேன், நான் யார் சார்பாகவும் எழுதவேண்டும் என்ற அவசியமுமில்லை கட்டாயமுமில்லை. இந்த பதிவில் கூட கலைஞரை மட்டமாக நான் எந்த இடத்திலும் விமர்சிக்கவில்லை, நடைமுறையை மட்டுமே கூறி உள்ளேன், அதற்க்கு இந்த பதிவில் வந்த பின்னூட்டங்களே சாட்சி.

  நீங்கள் என்னை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் மற்றும் பெரிய கட்சியின் சார்பாக பேசுகிறீர்கள், எனவே அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமல் பேசினால் ஒரு ஆரோக்யமான விவாதமாக இருக்கும்.

  நான் ரஜினியின் ரசிகன் மட்டுமே, வேறு யாருக்கும் அபிமானி கிடையாது, ரஜினியின் ரசிகனாக இருந்தாலும் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்று கொள்பவன் அல்ல இது அனைவருக்கும் தெரியும், அப்படி இருக்கும் போது மற்றவர்களை பற்றி நீங்கள் கேட்கவே வேண்டாம்.

  என் மனதிற்கு எது நியாயமாக படுகிறதோ அதை மட்டுமே எழுதி வருகிறேன், தவறு இருப்பின் யாராவது சுட்டி காட்டினால் ஏற்று கொள்வேன். எனவே என்னை பற்றி எதுவும் தவறான கருத்து இருந்தால் (அதாவது யாருக்காவது ஆதரவாக பேசுகிறேன் என்று) தயவு செய்து மாற்றி கொள்ளவும், இல்லை நான் வேண்டும் என்றே எழுதியதாக கருதினால் நான் கூற எதுவுமில்லை.

  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

 33. //உடன்பிறப்பு said…
  தம்பி, அரசியல் பற்றி எழுதும் போது கொஞ்சம் கவனமாக இருக்கோனும்.//

  சரிங்ணா. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி (பெருமாள் பற்றி சொன்னேன்னு கோவிச்சுக்காதீங்க ..சும்மா ஒரு ஃப்ளோக்கு கூறினேன்:D)

  //நம்ம ஊரு புள்ளையா வேற போயிட்ட. நல்லா இரு தம்பி//

  கோவை பக்கங்லாணா நீங்க! ரொம்ப சந்தோசமுங்க… அரசியல் பற்றி எழுதினா தான் வருவேன்னு இருக்காதீங்கன்ணா , நம்ம ஊர் பற்றியும் எழுதி இருக்கேன், அப்பப்ப வாங்க 🙂

 34. தம்பி, அரசியல் பற்றி எழுதும் போது கொஞ்சம் கவனமாக இருக்கோனும். இதுவே மற்ற கட்சிகள் பற்றி எழுதினால் இப்படி எல்லாம் பொறுமையாக பேசிக் கொண்டு இருக்கமாட்டார்கள். நம்ம ஊரு புள்ளையா வேற போயிட்ட. நல்லா இரு தம்பி

 35. //உடன்பிறப்பு said…
  தம்பி, அரசியல் பற்றி எழுதும் போது கொஞ்சம் கவனமாக இருக்கோனும்.//

  கிரி என்ன கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்று நினைக்கிறாய் கலைஞர் குடும்ப உடன் (சு ) பிறப்பே!

  //உடன்பிறப்பு said…
  நான் துக்ளக் படிப்பது கிடையாது ஆனால் அதை இணையத்தில் மீள் பதிவு செய்யும் உங்களை போன்றவர்க்ளின் பதிவுகளை பார்ப்பதுண்டு//

  “ஆனால் அவர் தி.மு.க. ஓட்டுகளை பிரிக்கிறது என்று உதார் விடுவது சோ-ராமசாமி மற்றும் உங்களை போன்ற அவர்களின் கைத்தடிகளால் தான் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே”

  சோ எந்த துக்ளக் கில் இப்படி எழுதினார் என்று உன்னால் நிரூபிக்க முடியுமா !
  நீ படித்தால் தானே !
  உனக்கு முரசொலி தவிர என்ன தெரியும் !
  நீயல்லாம் இன்டர்நெட் use பண்ணுவதே பெரிய ஆச்சர்யம் மற்றும் காமெடி !
  🙂

  அவர் விஜயகாந்த் தி.மு. க எதிர்ப்பு வோட்டுக்களை தான் விஜயகாந்த் பிரிக்கிறார் என்று சொல்லி எழுதி வருகிறார் !

  அது சரி உண்மையை திரித்து கூறுவது தானே கலைஞர் குடும்ப உடன் (சு ) களின் வேலையே !
  ஆமாம் ச்பெக்ட்ரும் ஊழலில் உனக்கு பங்கு உண்டா என் அன்புக்குஉரிய கலைஞர் குடும்ப உடன் (சு ) பிறப்பே !
  உனக்கெல்லாம் பதில் சொல்லுவதை விட ……………………………..:)
  இருந்தாலும் நீ நல்லா இருக்கோனும் !:)

  என்றும் அன்புடன் !

  Note: Giri atleast get some courage to atleast publish this comment.

 36. உடன்பிறப்பு என்பவருக்கு நாசூக்காக ஒரு கட்டுரையை விமர்சனம் செய்யத் தெரியாதா? ஒரு முறை விமர்சித்ததோட விடவில்லையே?

  அவருடைய மறுமொழிகள் எல்லாம் எந்த நியாயத்தையும் கற்பிப்பதாகத் தெரியவில்லை.

  அவர் மிகப்பெரிய கட்டுரையாளராக இருந்தால், தமிழக அரசியலை நடு நிலைமையோடு பிரிச்சு மேஞ்சு ஒரு கட்டுரை எழுத வேண்டியதுதானே?

  ஒருவரை வரையறுத்து வகைப் படுத்துவதில் (கிளாசிபை) அவருக்கு அதீத ஆர்வமாக இருக்குமோ?

 37. //Shivaji Rao Admirer said…
  Note: Giri atleast get some courage to atleast publish this comment.//

  :-))))

  இதில் courage என்ன இருக்கிறது! 🙂 முடிந்தவரை கோபப்படாமல் உங்கள் கருத்துகளை கூறுங்கள் என்று தான் நினைக்கிறேன்.

  நீங்கள் உங்கள் கருத்துக்களை அவர் மீது காட்டமாக வைத்ததால் என்னால் உங்கள் முதல் இரண்டு பின்னூட்டங்களை வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும்.

  //பொதுவாக நான் பொறுமை காப்பவனே !//

  உங்களை நான் அறிவேன், நீங்களே இப்படி கோபப்படலாமா! அவர் தான் அவசரப்பட்டு வார்த்தைகளை விடுகிறார் என்றால் அது போல நாமும் நடக்கலாமா! முடிந்த வரை கண்ணியம் காப்பது என் வழக்கம், முடியவில்லை என்றால் கேள்விகளுக்கு விளக்கம் கூறுவதை தவிர்த்து விடுவேன். “வாதத்திற்கு பதில் உண்டு விதண்டாவதத்திற்கு!”

  நீங்கள் இப்படி கோபப்படுவீர்கள் என்று எனக்கு இப்போது தான் தெரியும் :-)))

  நீங்கள் என் மீது வைத்து இருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் மிக்க நன்றி.

  ===================================================================

  //ஜோதிபாரதி said…
  அவருடைய மறுமொழிகள் எல்லாம் எந்த நியாயத்தையும் கற்பிப்பதாகத் தெரியவில்லை.//

  போதுமான விளக்கம் கொடுத்தும் முதலில் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை 🙂

  அவர் பொதுவாக கட்சியில் எல்லோரும் எப்படி பேசுவார்களோ அதே போல உடனே “கைத்தடி” என்றெல்லாம் பேசி விட்டார், இவருக்கு அது சாதாரண வார்த்தையாக இருந்தாலும் அனைவரும் அதை சாதாரண வார்த்தையாக எடுத்து கொள்வார்களா என்று உணர வேண்டும்.

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜோதிபாரதி.

 38. நன்றி ஜோதிபாரதி அவர்களே .
  கிரி இந்த வலைத்தளத்தை எவ்வளவு வேலைகளுக்கு இடையே கண்ணியமாக நடத்துகிறார் .
  விமர்சனங்களும் கண்ணியமாக வர வேண்டாமா !
  அது என்ன கைதடி என்ற மோசமான வார்த்தை பிரயோகம் .
  அதுவும் உடான்சுவின் தப்பான கருத்துக்களுக்கு !
  அதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுஇருக்கிறீர்கள் ?
  அதனால் தான் நான் அப்படி அவரை (மரியாதையாக ) விமர்சித்தேன் .
  பொதுவாக நான் பொறுமை காப்பவனே !
  என்னுடைய் கருத்துக்கள் யாருக்காவது மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் !

  என்றும் அன்புடன்

 39. கிரி நமக்கு வேறு வேலைகள் இருக்கின்றன .
  இதோடு இதை முடித்து கொள்வோமே நண்பரே !
  உங்களின் சேவை எங்களுக்கு தேவை !
  அதனால் தான் இதெல்லாம் ………………
  அனைவருக்கும் நன்றி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here