எப்போதும் பிரபலங்கள் என்றாலே பிரச்சனை தான், அதுவும் பிரபலங்கள் கூட்டணி என்றால் நிச்சயம் அங்கே ஈகோ பிரச்சனை வந்து விடும். இதிலிருந்து தப்பித்தவர்கள் வெகு சிலரே. Image Credit
பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு
இரண்டு பேர் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்து பின் நெருங்கி இருந்தாலும் கடைசியில் ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விடுவார்கள், அல்லது ஒதுங்கி விடுவார்கள்.
அப்படிப்பட்ட திரை உலகப் பிரபலங்கள் ஒரு சில ஜோடியைப் பற்றிப் பார்ப்போம்.
இளையராஜா – வைரமுத்து
“நிழல்கள்” படத்தின் மூலம் இவர்கள் கூட்டணி ஆரம்பமாகியது.
“மடை திறந்து” பாடல், ஒரு புதிய இசையமைப்பாளன் வாய்ப்பு கிடைத்து பாடும் ஒரு பாடலாக வரும். இதில் பாடல் சிறந்ததா! இசை சிறந்ததா! என்று ஒரு போட்டியே வைக்கலாம்.
அந்த அளவிற்கு அற்புதமாக உணர்வுகளை வெளிக்காட்டி இருக்கும். இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்.
கண்ணதாசன் அவர்களுக்குப் பிறகு அனைவராலும் தற்காலத்தில் அதிகளவில் விரும்பப்பட்ட, படும் கவிஞர்களுள் வைரமுத்து அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
இளையராஜா அவர்களைப் பற்றி யாரும் கூறி தெரியவேண்டியதில்லை. இவரது இசையில் வந்த பல பாடல்களே தற்போது பல பண்பலை வானொலிகளை வாழவைத்து கொண்டு இருக்கின்றன.
பொதுவாக இளையராஜா என்றாலே தலைக்கனம் அதிகம் என்ற குற்றச்சாட்டு உண்டு, திறமையுள்ளவர்களுக்கு இயல்பாகவே வருவது தான் அது.
வைரமுத்து மனதில் உள்ளதை அப்படியே கூறி விடுபவர் சில சமயங்களில், நாம் கூறுவது எதிர் நபருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துமே என்ற எண்ணமின்றி.
பல காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இன்றும் என்னதான் இளையராஜா கிராமத்துப் படங்களுக்கு இசையமைத்தாலும் வைரமுத்து வரிகள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது, இதே நிலைமை தான் வைரமுத்துவுக்கும்.
இருவரும் மீண்டும் இணைவதாகச் செய்திகள் வந்தன ஆனால், செய்திகளாகவே தான் உள்ளன, உறுதி ஆகாமல் உள்ளது.
இவர்கள் எப்போது இணைவார்கள் எப்போது நல்ல பாடல்களைத் திரும்பக் கேட்போம் என்று ஏங்காத ரசிகர்களே இல்லை.
இளையராஜா – பாரதிராஜா
கிராமத்துப் படம் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது இவர்கள் இருவரும் தான் என்றால் மிகையல்ல.
உணர்வுப்பூர்வமான கிராமத்து இசையை இளையராஜாவை தவிரத் தற்போதைய இசையமைப்பாளர்கள் எவராலும் கொடுக்க முடியவில்லை.
இவர்கள் கூட்டணியில் வந்த 16 வயதினிலே, முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களை எவராலும் மறக்க முடியுமா!
இசை நன்றாக இருந்ததா! இல்லை அதற்கு வடிவமைக்கப்பட்ட காட்சி அமைப்பு சிறப்பாக இருந்ததா என்று கூறமுடியாத அளவுக்கு இரண்டும் அப்போதைய டிரன்ட்டிற்குப் போட்டி போட்டு இருந்தன.
பல பாடல்கள் என்ன தான் சிறப்பாக இருந்தாலும் காட்சி அமைப்பு சரி இல்லை என்றால் பாடலும் சேர்ந்து சொதப்பி விடும் அல்லது பிரபலமாகாமலே போய் விடும்.
ஆனால் இவர்கள் கூட்டணியில் ஒவ்வொரு பாடலும் அதற்குப் பின்னணி இசையும், அதன் காட்சி அமைப்பும் அருமையாக இருந்தது.
திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் திறமையில்லாத இயக்குனரிடம் ஜோடி சேர்ந்தால் ஜொலிக்காமல் போய்விட வாய்ப்புண்டு, இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
ஆனால், இவர்கள் இருவருமே தங்கள் துறையில் மிகத் திறமையானவர்களாக இருந்ததால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது.
ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இருவராலும் தொடர முடியவில்லை, ஈகோ மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து விட்டார்கள்.
பாரதிராஜாவும் அதன் பிறகு A.R.ரகுமானை வைத்துப் பல படங்களை இயக்கி இருந்தாலும், சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து இருந்தாலும் உயிரோட்டமுள்ள கிராமத்து இசை என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது.
இளையராஜாவுக்கும் கிராமத்து இசையில் தன் முழுத் திறனைக் காட்ட சரியான வாய்ப்பு கிடைக்காமலே உள்ளது.
இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் ஆனால், தொழிலில் ஒன்றாக இணையமாட்டேன் என்கிறார்கள்.
யாராவது ஒருவர் மனம் விட்டுப் பேசி அல்லது விட்டுக் கொடுத்தால் கூட அவர்களது ரசிகர்கள் மனம் மகிழ்வார்கள்.
இவர்கள் ஒன்றாக விரைவில் இணைவார்களா மீண்டும் நல்ல இசையைத் தருவார்களா! என்பதைக் காலம் தான் கூற வேண்டும்.
மேலும் பல ஜோடிகளைப் பற்றி அடுத்த கட்டுரைகளில் கூறுகிறேன்.
பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 2)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி சார்,
எல்லாம் தொடர் மயமாகவே இருக்கிறது. விரைவில் செய்தியிதழாளர் ஆகும் திட்டம் எதும் இருக்கிறதா ?
🙂
நல்ல பதிவு. வைரமுத்து – இளையராஜா மோதல் பற்றிய சரியான காரணாம் இன்றுவரை தெரியவில்லை…..
ராசாவின் பெருமையை அழகா விவரிச்சு இருக்கீங்க…
//பிறகு அனைவராலும் தற்காலத்தில் அதிகளவில் விரும்பப்பட்ட, படும் கவிஞர்களுள் வைரமுத்து அவர்களுக்கு முக்கிய இடமுண்டு. இளையராஜா அவர்களை பற்றி யாரும் கூறி தெரியவேண்டியதில்லை//
இதுதான் காரணமாங்க ஐயா…
அவசியமில்லை.. அவரவர் பாதையில் திறமையானவர்களை ஊக்குவித்தால் மிகச் சிறப்பாக அமையும்..
//கோவி.கண்ணன் said…
கிரி சார்,//
அவ்வ்வ்வ்வ்வ்வ்
//எல்லாம் தொடர் மயமாகவே இருக்கிறது. விரைவில் செய்தியிதழாளர் ஆகும் திட்டம் எதும் இருக்கிறதா //
செய்தியாளர் ஆக வேண்டும் என்றால் தொடர் எழுத வேண்டுமா? இது எனக்கு தெரியாதே (உண்மையாகவே)..ஆனா நான் அதற்க்கு எழுதவில்லை, நான் கூற நினைக்கும் விசயங்களை ஒரு பதிவில் சுருக்க முடியவில்லை, சுருக்கினால் அரைகுறையாக தெரிகிறது, அதுவே காரணம்….போதுமா! போதுமா! :-))
===================================================================
//பாண்டித்துரை said…
கிரி
//நல்ல பதிவு//
நன்றி பாண்டித்துரை
//தெரிஞ்சுகிட்டேன்
ஜோடியை பிரிச்சா உங்களுக்கு பிடிக்காது//
ஹி ஹி ஹி
===================================================================
//அருண்மொழிவர்மன் said…
நல்ல பதிவு. வைரமுத்து – இளையராஜா மோதல் பற்றிய சரியான காரணாம் இன்றுவரை தெரியவில்லை//
எனக்கும் இது வரை தெரியவில்லை..மனத்தாங்கல் என்றால் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இருக்கிறதா! யாராவது ஒருவர் விட்டு கொடுத்தால் போதுமே!
உங்கள் முதல் வருகைக்கு நன்றி அருண்மொழிவர்மன்.
===================================================================
//இனியவள் புனிதா said…
ராசாவின் பெருமையை அழகா விவரிச்சு இருக்கீங்க.//
உண்மையை தான் கூறி இருக்கேங்க 🙂
===================================================================
//SUREஷ் said…
அவசியமில்லை.. அவரவர் பாதையில் திறமையானவர்களை ஊக்குவித்தால் மிகச் சிறப்பாக அமையும்//
அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை, அதற்காக பிரிந்தாக வேண்டிய கட்டாயம் இல்லையே.
கிரி, நானும் இதை எழுதலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்…
நல்லா எழுதி இருக்கீங்க…
எனது இன்றைய ஃபோட்டோ பதிவில் ‘மன்னிப்பு’ பற்றி எழுதிய வரிகளே நினைவுக்கு வந்தன. சில தப்பான புரிதல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். மறுபடி இணைந்திட இருபக்கமும் மனங்கள் [நம்மை விட] ஏங்கியிருக்கவும் வாய்ப்புண்டு. மனம் விட்டுப் பேசிட தடையாக இருப்பது கெளரவம்தானோ? தெரியவில்லை. எது எப்படியானாலும் நீங்கள் சொன்ன மாதிரி இழப்பு ரசிகர்களுக்கே. அருமையான பதிவு கிரி!
கிரி
நல்ல பதிவு
இந்த பதிவில் இருந்து
1
தெரிஞ்சுகிட்டேன்
ஜோடியை பிரிச்சா உங்களுக்கு பிடிக்காது
பிரிவு எனும் பாரம் ரொம்ப கனமானது!
நான் வேற ஜோடிகளை எதிர்பார்த்து வந்தன் 🙁
//ஜோதிபாரதி said…
பிரிவு எனும் பாரம் ரொம்ப கனமானது!//
தெரிந்தும் அதை சுமந்து கொண்டு இருக்கிறார்கள் 🙁
===================================================================
//சரவணகுமரன் said…
கிரி, நானும் இதை எழுதலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்//
அப்படியா!! நீங்களும் எழுதுங்க சரவணகுமரன்.
//நல்லா எழுதி இருக்கீங்க//
நன்றி
===================================================================
//ராமலக்ஷ்மி said…
மனம் விட்டுப் பேசிட தடையாக இருப்பது கெளரவம்தானோ? தெரியவில்லை//
பெரும்பாலும் கௌரவமாக தான் இருக்கும், மற்றும் சில நமக்கு தெரியாத பல்வேறு பிரச்சனைகளாக கூட இருக்கலாம். அதன் ஆழம் நமக்கு தெரியாது.
// அருமையான பதிவு கிரி!//
நன்றி ராமலக்ஷ்மி
===================================================================
//கீ – வென் said…
கிரி..
இளைய ராசா ஒரு அற்புதமான கலைஞர்…//
ஆஹா! வாங்க! வாங்க! வெங்கி ..எப்படி இருக்கீங்க? என்ன ஒரு மின்னஞ்சலை காணோம்! சாட் ல் காணோம்.. ரொம்ப பிசி ஆகிட்டீங்க போல
நீங்க கூறியதை வழிமொழிகிறேன்.
//இப்போது அவரிடம் எந்த பழைய கலைஞரும் கிடையாது… சிலர் மட்டும் பணி புரிகின்றனர்…அனைத்து பழைய கலைஞர்களும்..ஏ. ஆர். ரஹ்மானிடம்..ஒரு உந்துதலோடு, சந்தோஷமாக பணி புரிகின்றனர்.. எனவே, ஏ.ஆர் ரஹ்மானின் இசை..குளோபல் விருது வரை அவரி தூக்கி உயர்த்தி இருக்கிறது…இதுவே போதும்….//
எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது எனவே கருத்து கூற விரும்பவில்லை. உங்களுக்கு இந்த விசயத்தில் அனுபவம் அதிகம், பலருடன் பணி செய்து இருக்கிறீர்கள் எனவே உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்புண்டு.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி
===================================================================
//’டொன்’ லீ said…
நான் வேற ஜோடிகளை எதிர்பார்த்து வந்தன் :(//
நீங்கள் தான் அவரா!! :-))))
உண்மை தான் கிராமத்து மண்வாசனையை தனது இசையில் காட்டும் திறமையுடயவர் இளையராசா
பாரதிராசா சில நாட்களாக கிராமத்தை மறந்து திரிவது தான் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம்!
ரகுமானாக இருந்தாலும் கிழக்குசீமையிலே டாப் க்ளாஸ்
நல்ல பதிவு கிரி-ஜி!!!
அடுத்தது யாரு??? ஹாரிஸ்-கெளதம், கவுண்டமணி-செந்தில், வடிவேல்-கோவை சரளா, செல்வராகவன்-யுவன், ரஜினி-கமல் (தலைவர் இல்லாத லிஸ்டா), வடிவேல்-விஜயகாந்த்(???), சிம்பு-நயன்(லிஸட்ல ஒரு ஃகிளாமர் வேணாம் ஹி ஹி) அப்படினு பட்டய கிளப்புங்க 😉
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!
கிரி..
இளைய ராசா ஒரு அற்புதமான கலைஞர்…ஆனாலும், தலைக்கனம் என்று சொல்வதை விட, பிடிவாதம் அவருக்கு அதிகம்.. மேலும் கஞ்சத்தனத்தில் நம்பர் 1.. அவரிடம் பணியாற்றிய பல இசை கலைஞர்கள் இதை கூற நான் கேட்டிருக்கிறேன்..மேலும், சுதந்திரம் என்பது அவரிடம் பணியாற்றிய இசைக் கலைஞர்களுக்கு அறவே கொடுத்ததில்லை..அவர் என்ன இசைக்குறியீடு தருகிறாரோ, அதை மட்டும் தான் வாசிக்கவேண்டும்.. கலைஞர் கற்பனைக்கு இடமில்லை.. மேலும், அவர் கஷ்டபட்ட காலத்தில், அவருக்கு உதவியவர்களை அறவே மறந்து விட்டதாக ஒரு பேர்த்த குற்றசாட்டு.. இது வைரமுத்து, பாரதிராசாவுக்கும் பொருந்தும்…இப்போது அவரிடம் எந்த பழைய கலைஞரும் கிடையாது… சிலர் மட்டும் பணி புரிகின்றனர்…அனைத்து பழைய கலைஞர்களும்..ஏ. ஆர். ரஹ்மானிடம்..ஒரு உந்துதலோடு, சந்தோஷமாக பணி புரிகின்றனர்.. எனவே, ஏ.ஆர் ரஹ்மானின் இசை..குளோபல் விருது வரை அவரி தூக்கி உயர்த்தி இருக்கிறது…இதுவே போதும்….
// வால்பையன் said…
பாரதிராசா சில நாட்களாக கிராமத்தை மறந்து திரிவது தான் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம்//
அதற்க்கு முன்னரே பிரிந்து விட்டனர்
//ரகுமானாக இருந்தாலும் கிழக்குசீமையிலே டாப் க்ளாஸ்//
இதில் அனைத்து பாடலும் சூப்பர் ஹிட் தான் சந்தேகமே இல்லை.. ஆனால் உணர்வுபூர்வமான கிராமத்து இசை இல்லை.
===================================================================
//Mahesh said…
இந்தப் பின்னூட்டத்தை தந்தி போல் பாவித்து பொங்கல் பரிசாக “பட்டாம்பூச்சி” விருதைப்பெற்றுக்கொள்ள நம்மூட்டுத் திண்ணைக்கு வரவும். //
உங்கள் அன்பிற்கு நன்றி மகேஷ்.
===================================================================
//பாசகி said…
நல்ல பதிவு கிரி-ஜி!!! //
வாங்க சக்தி வாங்க! 🙂
//அடுத்தது யாரு??? ஹாரிஸ்-கெளதம், கவுண்டமணி-செந்தில், வடிவேல்-கோவை சரளா, செல்வராகவன்-யுவன், ரஜினி-கமல் (தலைவர் இல்லாத லிஸ்டா), வடிவேல்-விஜயகாந்த்(???), சிம்பு-நயன்(லிஸட்ல ஒரு ஃகிளாமர் வேணாம் ஹி ஹி) அப்படினு பட்டய கிளப்புங்க ;)//
நீங்கள் கூறிய கூட்டணியில் பலரை கூற நினைத்து இருக்கிறேன் 🙂
ஆமா சைக்கிள் கேப்ல வடிவேல் – விஜயகாந்த் னு சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா விஜயகாந்த்தை காமெடி லிஸ்ட் ல சேர்த்துட்டீங்களா :-)))) இல்ல வடிவேலை கட்சி தலைவர்!!! லிஸ்ட் ல சேர்த்துட்டீங்களா!
சிம்பு-நயன் ஹா ஹா அது சரி.. உங்க லிஸ்ட் ரணகளமா இருக்கே :-))))
//இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!//
உங்களுக்கும் 🙂 எனக்கும் சேர்த்து பொங்கல் கொண்டாடுங்க
===================================================================
//பாஸ்கர் said…
பாரதிராஜா வேதம் புதிது, கொடி பறக்குது ஆகிய படங்களுக்கு வேறு இசை அமைப்பாளர்கள் இசை அமைத்தார்கள் . அவை வெற்றி பெற்றன //
உண்மை தான்.
//பின் மீண்டும் இளையராஜா வுடன் இணைந்து என் வஉயிர் தோழன் என்று ஒரு படம் பண்ணினார் . படத்தின் தீமும் பாட்டுகளும் அருமையாக வந்த போதும் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது ! .//
அனைத்து படங்களும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லையே! அப்படி பார்த்தால் நிழல்கள் படம் கூட தோல்வி படம் தான், ஆனால் அதில் பாடல்கள் அனைத்தும் கலக்கலாக இருக்கும். படத்தின் வெற்றிக்கு பாடலும் இசையும் ஒரு காரணமே தவிர, அதுவே வெற்றிக்கு முழு காரணம் ஆகாது. திரைக்கதை சரி இல்லை என்றால் பாடல் ஹிட் என்றாலும் படம் தோல்வி தான். பாடல் வெற்றி படத்தின் வெற்றியை இன்னும் அதிகரிக்கும் அவ்வளவே.
இந்தப் பின்னூட்டத்தை தந்தி போல் பாவித்து பொங்கல் பரிசாக “பட்டாம்பூச்சி” விருதைப்பெற்றுக்கொள்ள நம்மூட்டுத் திண்ணைக்கு வரவும். நன்றி.
பாரதிராஜா வேதம் புதிது, கொடி பறக்குது ஆகிய படங்களுக்கு வேறு இசை அமைப்பாளர்கள் இசை அமைத்தார்கள் . அவை வெற்றி பெற்றன !
பின் மீண்டும் இளையராஜா வுடன் இணைந்து என் வஉயிர் தோழன் என்று ஒரு படம் பண்ணினார் . படத்தின் தீமும் பாட்டுகளும் அருமையாக வந்த போதும் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது ! .
நல்ல தொடக்கம் கிரி
Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்.
//கிரி said…
விஜயகாந்த்தை காமெடி லிஸ்ட் ல சேர்த்துட்டீங்களா :-))))//
போங்க நீங்க… இன்னுமா உங்களுக்கு சந்தேகம் 🙂
//சிம்பு-நயன் ஹா ஹா அது சரி.. உங்க லிஸ்ட் ரணகளமா இருக்கே :-))))//
நாமதான் ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்கற ஆளாச்சே 🙂
//எனக்கும் சேர்த்து பொங்கல் கொண்டாடுங்க//
எங்கங்க சென்னைலதான் இருக்கேன், ஊருக்கு போகல 🙁
//நிலா பிரியன் said…
Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்.//
நன்றி ..ஆனா அது எங்கன்னு தெரியல 🙂
===================================================================
//வாசுகி said…
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.//
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
//பதிவு நன்றாக இருக்கு//
நன்றி வாசுகி.
===================================================================
//வடுவூர் குமார் said…
அதென்ன படிப்பு சம்பந்தப்பட்ட பகுதியில் ஏதோ AIX என்று போட்டிருக்கீங்க?//
என்னோட website ல சொல்றீங்களா! :-))) நான் UNIX ல (விண்டோஸ் மாதிரி இது ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம்) இருக்கேன், அதனால் அது சம்பந்தப்பட்ட தகவல்களை வைத்து இருக்கிறேன். இவை இல்லாமல் மற்ற படிப்பு தகவல்களை இன்னும் அதிகம் சேர்க்க வேண்டும், அது பற்றி டாக்குமெண்ட்ஸ் தேடிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் ஆகும். இது பற்றி நீங்க தான் முதல் முறை கேட்டு இருக்கீங்க. நன்றி.
===================================================================
//பாசகி said…
போங்க நீங்க… இன்னுமா உங்களுக்கு சந்தேகம் :)//
நோ கமெண்ட்ஸ் 🙂
//நாமதான் ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்கற ஆளாச்சே :)//
ஹா ஹா ஹா
//எங்கங்க சென்னைலதான் இருக்கேன், ஊருக்கு போகல :(//
அடடா! சரி சரவண பவன் ல போய் ஒரு பொங்கலாவது சாப்பிடுங்க :-)))
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிவு நன்றாக இருக்கு.
அதென்ன படிப்பு சம்பந்தப்பட்ட பகுதியில் ஏதோ AIX என்று போட்டிருக்கீங்க?
\\மேலும் பல ஜோடிகளை பற்றி எனது அடுத்த பதிவுகளில் கூறுகிறேன்.\\
எதிர்ப்பார்ப்புகளுடன் …
Who cares about these petty matters? I do not think that ilayaraja or Vairamuthu combination is going to unite the Tamils or solve the Eelam problems.I have had multiple chances to meet these two creatures. The are arrogantand think of themselves all the times.Please stop talking about these two nogoods.Kannapiran