செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா
தற்போதைய இளசுகளை மயக்கிய கூட்டணி இது, இவர்கள் கூட்டணியில் ஒரு படம் கூடப் பாடல்கள் சரி இல்லை என்று கூற முடியாது. Image Credit
அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி வேலை செய்தது.
துள்ளுவதோ இளமை (இதில் செல்வராகவன் இயக்குநர் இல்லை ஆனால், இயக்குநர்) படத்திலிருந்து தொடர்ந்த இவர்கள் இணை “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் பாதி வேலையிலே முடிவு பெற்றது.
“7 G ரெயின்போ காலனி” படத்தின் பாடல்களை எவராலும் மறக்க முடியாது, அந்தப் படம் வெளிவந்த சமயத்தில் இந்தப் படத்தின் பாடல்களை முணுமுணுக்காத இளசுகள் மிகக் குறைவு.
இந்தப் படத்தில் வரும் “நினைத்து நினைத்து” என்ற மெலோடி பாடலை கேட்கும் எவரும் உருகி விடுவார்கள், அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.
யுவனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்குனர்கள் செல்வராகவன், அமீர், பாலா, இதில் செல்வராகவன் குறிப்பிடத்தக்கவர்.
அவருடைய “புதுப்பேட்டை” படம் ஒன்று சிறப்பான எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
அதில் உள்ள பின்னணி இசை இது வரை வந்த யுவனின் படங்களிலே சிறந்த பின்னணி இசையாகக் கூறலாம். படம் சரியாகப் போகாததால் இசையும் கவனிக்கப்படாமலே போய் விட்டது.
இதில் எனக்கு வருத்தம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் “புதுப்பேட்டை”யும் ஒன்று பின்னணி இசைக்காகவும் சேர்த்து.
தற்போது கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.
செல்வராகவன் G.V பிரகாஷுடன் இணைந்து விட்டார். காரசாரமாக இருவரும் மாற்றி மாற்றிப் பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் மீண்டும் இணைவார்களா! காலம் தான் பதில் கூற வேண்டும்.
கெளதம் – ஹாரிஸ் ஜெயராஜ்
இவர்கள் இருவருமே தங்கள் திரை வாழ்க்கையை “மின்னலே” என்ற படத்தின் மூலம் தொடங்கினார்கள்.
அந்தப் படத்திலிருந்து “வாரணம் ஆயிரம்” வரை ஒன்றாகப் பணி புரிந்தனர்.
இவர்கள் இணையில் “பச்சை கிளி முத்துச்சரம்” மட்டுமே பாடல் ஹிட் ஆகவில்லை, அதிலும் ஒரு சில பாடல்கள் பலரால் விரும்பப்பட்டது.
மற்றபடி அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் தான் தற்போதைய “வாரணம் ஆயிரம்” வரை.
“மின்னலே” படத்தில் வரும் “வசீகரா” பாடல் இன்றும் பலரால் விரும்பிக் கேட்கப்படும் மெலோடி பாடல்.
இவர்கள் கூட்டணியில் குறிப்பிடத் தக்க இன்னொருவர் பாடலாசிரியர் “தாமரை”, பாடலில் ஆபாசம் கலக்காமல் பாடல்களைக் கொடுத்த இவர் பாராட்டுக்குரியவர்.
கடைசியாக வந்த “வாரணம் ஆயிரம்” படம் இருவருக்கும் (தற்போது) கடைசிப் படம் ஆகி விட்டது.
கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பதாகக் கூறி உறவை முறித்துக் கொள்வதாக ஹாரிஸ் கூறிவிட்டார்.
இனிமேல் எப்போதுமே கெளதம் உடன் பணி புரியபோவதில்லை என்று இறுதியாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து விட்டார்.
அவசரப்பட்டு இப்படிக் கூறி விட்டாரோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தற்போது கெளதம், A.R.ரகுமானுடன் இணைந்து விட்டார், இவர்கள் சண்டையாலோ என்னவோ A.R.ரகுமானை புகழ்ந்து பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
ஊடகங்களுக்கு இந்த இரண்டு ஜோடியும் தங்கள் கருத்து வேறுபாடுகளைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்து இருப்பதால், திரும்பவும் இணைவது சிரமமே!
அப்படி இணைந்தாலும் காலம் அதிகம் எடுக்கும் என்றே கருதுகிறேன்.
இவ்வாறு பிரிந்த பிரபலங்கள் மட்டுமல்ல நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் என் பார்வையில் தோன்றுவது, “நெருங்கி வந்தால் விலகி விடுவீர்கள், விலகி இருக்கும் வரையே நெருங்கி இருப்பீர்கள்”.
அளவான நெருக்கம் அல்லது சரியாகப் புரிந்து கொண்ட நட்பு மட்டுமே ஈகோ பார்க்காமல் நிலைக்கும்.
அளவுக்கு அதிகமான நெருக்கம் பல சமயங்களில் அதே அளவு பிரச்சனைகளையும் கொடுக்கும். இது அனைவருக்கும் பொருந்தும்.
எனது அடுத்தப் பதிவில், பிரிந்தாலும் சிறப்பாக வெற்றி பெற்ற ஒரு ஜோடியையும் மற்றும் குறிப்பிடத்தக்க சிலரையும் கூறுகிறேன்.
பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (இறுதி பாகம்)
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
செல்வா-யுவன் பிரச்சனையில் செல்வா மேலையே தவறிருப்பதாக தெரிகிறது.
செல்வா பணம் தரவில்லையென யுவன் சொல்கிறார், நானா புரடியூசர் என்கிறார் செல்வா!
ஆனால் யுவன் தான் வேண்டும் என கேட்பதே செல்வா தான்! செல்வா தானே வாங்கி கொடுத்திருகனும்
தற்போதய கூட்டணி பிரிவினால் நாம் இழந்தது பெரிதாக ஒன்றுமில்லை, தற்போதய இள்ம் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் திறமைசாலிகளாகவே இருகிறார்கள். அவர்களால் மேலும் சிறப்பான சினிமா மற்றும் பாடல்களை தரமுடியும் என நம்புவோம்
எல்லாம் அவன் செயல்.எது எப்பிடி இருக்கு.நல்ல எழுதிறீங்க தொடர்ந்து எழுதுங்க
ம்ம்..அடுத்த தொடரை எதிர்பார்கிறேன்..
பழைய கால விஸ்வநாதன் ராமமூர்த்த்தி இருவரும் கூட இந்த லிஸ்டில் இடம் பெற வாய்ப்புண்டா…இருவரும் இசையமைப்பாளர்கள் என்பதால்..இதில் இல்லையா..?
காலம் ரொம்ப கெட்டுப் போச்சுங்க.கதாநாயகனுக்கும்,கதாநாயகிக்குமிடையே இருந்த ரசயான மாற்றம் இயக்குநர்,இசையைப்பாளர்ன்னு மாறிப்போச்சே:)அந்தக்காலத்துல விஸ்வநாதன்,கண்ணதாசன் கூட்டு இன்றைக்கு தொலைக்காட்சிகளில் பாடல்களைக் கேட்டாலும் சுதி சுத்தம்,வரி சுத்தம்.ராஜா தாரை தப்பட்டைகளைக் கொண்டு வந்து ஒரு கலக்கு கலக்கி வைரமுத்து கிழக்கேயும்,ராஜா மேற்கேயும் பார்க்க ஆரம்பித்ததுல துவங்குன பிரிவு தொடர்கிறது இளைய தலைமுறை வரை.இப்பவெல்லாம் ஒரு பாடலுக்கு கூட முழு வரிகள் நினைவில் இருப்பதில்லை.ஏ.ஆர்.ரகுமான் பாடலை உட்கார வைச்சிட்டு பட்டனை தட்டி விட்டுட்டு கை வண்டியின் ஸ்டியரிங்கையும் கண் ரோட்டையும் பார்த்துகிட்டு மனசு மட்டும் இசையைக் கேட்டுகிட்டு வண்டி ஓடுது.
சூப்பருங்க!!!
//எனது அடுத்த பதிவில், பிரிந்தாலும் சிறப்பாக வெற்றி பெற்ற ஒரு ஜோடியையும் மற்றும் குறிப்பிடத்தக்க சிலரையும் கூறுகிறேன்//
பிரபு-குஷ்பு ஜோடிங்களா 🙂 ஹி ஹி…
// வால்பையன் said…
யுவன் தான் வேண்டும் என கேட்பதே செல்வா தான்! செல்வா தானே வாங்கி கொடுத்திருகனும்//
இது பற்றி அதிகம் தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை
//வால்பையன் said…
தற்போதய கூட்டணி பிரிவினால் நாம் இழந்தது பெரிதாக ஒன்றுமில்லை//
எனக்கு பெரும் ஏமாற்றம்
// தற்போதய இள்ம் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் திறமைசாலிகளாகவே இருகிறார்கள். அவர்களால் மேலும் சிறப்பான சினிமா மற்றும் பாடல்களை தரமுடியும் என நம்புவோம்//
வழிமொழிகிறேன்
===================================================================
//kajan’s said…
எல்லாம் அவன் செயல்.எது எப்பிடி இருக்கு.நல்ல எழுதிறீங்க தொடர்ந்து எழுதுங்க//
நன்றி kajan’s உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
===================================================================
//டொன்’ லீ said…
ம்ம்..அடுத்த தொடரை எதிர்பார்கிறேன்.//
விரைவில்
//பழைய கால விஸ்வநாதன் ராமமூர்த்த்தி இருவரும் கூட இந்த லிஸ்டில் இடம் பெற வாய்ப்புண்டா…இருவரும் இசையமைப்பாளர்கள் என்பதால்..இதில் இல்லையா..?//
இருவரும் இசைமைப்பாளர்கள் என்பதால் அல்ல..எனக்கு இவர்கள் பற்றி அதிகம் தெரியாது. பல சாதனைகளை செய்து இருப்பவர்களை அரைகுறையாக தெரிந்ததை வைத்து விமர்சிப்பது எனக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் பற்றி கூறவில்லை.
===================================================================
// ராஜ நடராஜன் said…
காலம் ரொம்ப கெட்டுப் போச்சுங்க.கதாநாயகனுக்கும்,கதாநாயகிக்குமிடையே இருந்த ரசயான மாற்றம் இயக்குநர்,இசையைப்பாளர்ன்னு மாறிப்போச்சே:)//
நல்ல விசயம் தானே ராஜ நடராஜன் 🙂
//வைரமுத்து கிழக்கேயும்,ராஜா மேற்கேயும் பார்க்க ஆரம்பித்ததுல துவங்குன பிரிவு தொடர்கிறது//
அதன் முன்னரும் கலைஞர்களுக்கு பல பிரச்சனைகள் இருந்து இருக்கும் என்றே நினைக்கிறேன், நமக்கு தெரியாமல் இருக்கலாம்.
//ஏ.ஆர்.ரகுமான் பாடலை உட்கார வைச்சிட்டு பட்டனை தட்டி விட்டுட்டு கை வண்டியின் ஸ்டியரிங்கையும் கண் ரோட்டையும் பார்த்துகிட்டு மனசு மட்டும் இசையைக் கேட்டுகிட்டு வண்டி ஓடுது.//
ஹா ஹா ஹா நல்லா சொன்னீங்க
===================================================================
//Mahesh said…
கிரி… என் மனதில் பட்டது…
முதல் இரண்டு பகுதிகளில் சொன்ன ஜோடிகளின் நட்பில் இருந்த ஆழம் இந்தப் பதிவில் உள்ள ஜோடிகளிடையே இல்லை என்பது என் எண்ணம். அதனாலேயே இந்த நட்புகள் வெகு சீக்கிரத்திலேயே விலகிப் போனதோ//
சந்தேகமே இல்லை.. நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. அவர்கள் மிகவும் சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு வந்தவர்கள், ஒரு நல்ல நிலையை அடைய பல வருடங்கள் பல போராட்டங்கள் என்று காத்திருந்து வந்தவர்கள். அனைத்து கஷ்ட நஷ்டங்களில் உடன் இருந்தவர்கள். எனவே நட்பு என்றால் அவர்களின் நட்பை தான் கூற முடியும். தற்போது கூட விஜய் டிவி பேட்டி ஒன்று பார்த்தேன்..பாரதிராஜா கங்கை அமரன்..அருமை போங்க! உண்மையான நட்பை அங்கே கண்டேன் ஆயிரம் பிரச்சனைகள் அவர்களுக்குள் இருந்தாலும்.
//அதுவும் ஒருவரை ஒருவர் தாக்கி அநாகரீகமாக பேட்டிகள் கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்தது அவர்கள் நட்பு வெறும் வியாபார நட்பு மட்டுமே என்பதை உறுதி செய்கிறது.//
இவை உண்மையிலே என்னை வருத்தம் அடைய செய்தது. பிடிக்கவில்லை என்றால் விலகி இருக்கலாம் அதை விடுத்து மாற்றி மாற்றி அறிக்கை பேட்டி என்று செய்வது சரி இல்லை.
===================================================================
// பாசகி said…
பிரபு-குஷ்பு ஜோடிங்களா 🙂 ஹி ஹி.//
ஹி ஹி இது வேற ஜோடி :-))) உங்களுக்கு பிடித்த ஜோடி 😉
கிரி… என் மனதில் பட்டது…
முதல் இரண்டு பகுதிகளில் சொன்ன ஜோடிகளின் நட்பில் இருந்த ஆழம் இந்தப் பதிவில் உள்ள ஜோடிகளிடையே இல்லை என்பது என் எண்ணம். அதனாலேயே இந்த நட்புகள் வெகு சீக்கிரத்திலேயே விலகிப் போனதோ?
அதுவும் ஒருவரை ஒருவர் தாக்கி அநாகரீகமாக பேட்டிகள் கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்தது அவர்கள் நட்பு வெறும் வியாபார நட்பு மட்டுமே என்பதை உறுதி செய்கிறது.
௬ட்டனி ஆட்சி கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்
நல்ல பதிவு. 7G ரெயின்போ காலனி படத்தில் வரும் ‘கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ பாடலும், அது படமாக்கப்பட்ட விதமும் எப்போதும் மறக்க இயலாத ஒன்று. அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதால், நா.முத்துக்குமாரின் கைத்தொலைபேசி எண்ணைத் தேடிப்பிடித்து, அவரை சிங்கப்பூருக்குக் கூட்டி வந்து நிகழ்ச்சி நடத்தினோம். அந்தப்பாடலால் கிடைத்த புதிய நட்பைப் பற்றி மகிழும் நேரத்தில், அந்தப் பாடலின் பின்னால் இருக்கும் நண்பர்கள் கூட்டம் பிரிவது வேதனையாகத்தான் இருக்கிறது!
நன்றாக எழுதுகிறீர்கள்….வாழ்த்துக்கள்..
தொடர் நல்லா போகுது .
//நெருங்கி வந்தால் விலகி விடுவீர்கள், விலகி இருக்கும் வரையே நெருங்கி இருப்பீர்கள்//
இது தான் உங்கட பஞ்ச் dialogue போல.
//நசரேயன் said…
௬ட்டனி ஆட்சி கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்//
:-))) உண்மை தான்.
===================================================================
//வாசுகி said…
தொடர் நல்லா போகுது//
நன்றி வாசுகி
//இது தான் உங்கட பஞ்ச் dialogue போல.//
:-)))
===================================================================
//பாலு மணிமாறன் said…
நல்ல பதிவு. 7G ரெயின்போ காலனி படத்தில் வரும் ‘கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ பாடலும், அது படமாக்கப்பட்ட விதமும் எப்போதும் மறக்க இயலாத ஒன்று. அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதால், நா.முத்துக்குமாரின் கைத்தொலைபேசி எண்ணைத் தேடிப்பிடித்து, அவரை சிங்கப்பூருக்குக் கூட்டி வந்து நிகழ்ச்சி நடத்தினோம்.//
அப்படியா!!!!! ஆச்சர்யமாக உள்ளது. எனக்கும் அந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.. செல்வராகவன் திறமையே பாடலுக்கு சற்றும் குறைவில்லாத அளவில் காட்சி அமைப்பை வைப்பது தான்.
//அந்தப்பாடலால் கிடைத்த புதிய நட்பைப் பற்றி மகிழும் நேரத்தில், அந்தப் பாடலின் பின்னால் இருக்கும் நண்பர்கள் கூட்டம் பிரிவது வேதனையாகத்தான் இருக்கிறது!//
எனக்கு எல்லாம் ரொம்ப வருத்தம். திரும்பவும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தாலும் இந்த இணை போல வருமா என்று தெரியவில்லை.
===================================================================
//sarma said…
நன்றாக எழுதுகிறீர்கள்….
வாழ்த்துக்கள்..//
நன்றி சர்மா.
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..