பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 2)

33

இளையராஜா – SPB

இவர்கள் இணையில் வந்த சூப்பர் ஹிட் பாடல்கள் கணக்கில் அடங்காதது.

எந்த ஒரு பாடலையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்குக் கணக்கு வழக்கு இல்லாமல் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்கள்.

இது தான் சிறந்த பாடல் என்று எதையுமே அறுதியிட்டு கூற முடியாது. இளையராஜா இசையில் அதிகப் பாடல்கள் பாடியவர் SPB அவர்களாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதனாலேயே 30,000 பாடல்கள் (தற்போது 36,000 க்கு மேல் கடந்து விட்டது)என்ற சாதனையை எட்ட முடிந்தது SPB யால்.

வயதானாலும் SPB அவர்கள் குரலில் உள்ள வசீகரம் மற்ற பாடகர்களுக்கில்லாத அபூர்வ சக்தி.

இளையராஜா SPB அவர்களின் திறமையை முழுவதும் பயன்படுத்திக் கொண்டார் என்றால் அது மிகையில்லை, பல வித்யாசமான குரல்களை அவரிடமிருந்து பெற்று இருக்கிறார்.

அஞ்சலியில் அவர் பாடிய “ராத்திரி நேரத்தில் ராட்சச” பாடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தப் பாடல் பாடிய பிறகு அது பற்றிய அனுபவத்தை SPB அவர்கள் விளக்கியது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.

பாடும் திறமை இருந்தாலும் அதைச் சரியான முறையில் வெளிப்படுத்த வைக்க முக்கியக் காரணம் இசையமைப்பாளர்கள் தான்.

அதில் இளையராஜா தன் பங்கைத் திறம்படச் செய்திருந்தார்.

SPB அவர்களிடம் உள்ள முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வந்தார். தற்போது இவர்கள் கூட்டணியில் பாடல்கள் வருவதில்லை, காரணம் தெரியவில்லை.

மீண்டும் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இசையில் SPB பாடி கொண்டு இருக்கிறார்.

அதிலும் சென்னை 600028 ல் அவர் பாடிய “யாரோ” பாடல் தற்போதைய இளம் பாடகர்களுக்குச் சவால் விடும் வகையில் இருந்தது.

இளையராஜா – மணிரத்னம்

இவர்கள் கூட்டணி முக்கியக் கூட்டணி, இவர்கள் கூட்டணியில் பெரும்பாலும் அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை படத்தின் பின்னணி இசை.

நல்ல வேலை வாங்க தெரிந்த இயக்குனர் என்று இவரைத் தாராளமாகக் குறிப்பிடலாம்.

ஒருவருடைய திறமையை முழுவதும் வெளிக்கொண்டு வரக்கூடிய இயக்குனர்களில் முக்கியமான நபர் மணிரத்னம் என்றால் அது மிகையல்ல.

அவர் நினைக்கும் இசையை எதிர்பார்க்கும் இசையை அதை விடச் சிறப்பாக இளையராஜா கொடுத்தார்.

இவர்கள் கூட்டணியில் வந்த நாயகன்(இளையராஜாவின் இசையில் 400 வது படம்), அக்னி நட்சத்திரம், அஞ்சலி(இளையராஜாவின் இசையில் 500 வது படம்), தளபதி போன்ற படங்களின் பாடல்களின் வெற்றியை யாரும் கூறி தெரிய வேண்டியதில்லை.

பின்னணி இசை

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அசத்தலாக இருப்பது தான்.

அதிலும் “நாயகன்” சிறந்த 100 உலகத் திரைப்படங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது அதில் இருவரின் பங்கும் கண்டிப்பாக உண்டு.

அதே போல “தளபதி” யில் வரும் “ராக்கம்மா கையத்தட்டு” பாடல் அதிக மக்களால் விரும்பிய பாடலாக BBC யால் தேர்வு செய்யப்பட்டது.

இந்த வெற்றியில் இருவருக்குமே சம பங்கு உண்டு.

பாடலின் காட்சியமைப்பைச் சிறப்பாக அமைப்பதில் மணிரத்னத்திற்கு இணை அவர் தான். இவர்களும் பல காரணங்களால் பிரிந்து விட்டார்கள்.

பாலச்சந்தர் இளையராஜா பிரச்சனையால் ரோஜா படத்துக்கு இசையமைக்க முடியாமல் போனது. இந்நிலையில் வந்தவர் தான் ரகுமான்.

ரகுமான்

மணிரத்னம், இளையராஜாவிற்குப் பிறகு “ரோஜா”வில் A.R.ரகுமானை அறிமுகம் செய்தார்.

அந்தப் படத்தின் பாடல்கள் தாறுமாறாக வெற்றிப் பெற்றது உடன் பின்னணி இசையும். இதன் பிறகே உச்சாணி கொம்பில் இருந்த இளையராஜாவிற்கு இறங்கு முகம் ஆகி விட்டது.

இதன் பிறகு பல சாதனைகள் செய்து இருந்தாலும் அந்தப் பழைய இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

அதன் பிறகு இளையராஜாவை சரி வரப் பயன்படுத்திக் கொண்டவர் கமல், பாசில் (ஒரு படி மேல் இளையராஜா இசை மட்டும் தான்), பாலா, பாலு மகேந்திரா போன்றோர் மட்டுமே.

ஹே ராம், விருமாண்டி,சேது, நான்கடவுள் போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இளையராஜாவை பின்னணி இசை உட்பட அனைத்திலும் கமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மணிரத்னம் பிரிவிற்குப் பின், A.R.ரகுமான் வருகைக்குப் பின் பல வெற்றிகளை, சிம்பொனி, திருவாசகம் என்று அவ்வப்போது கொடுத்து இருந்தாலும் திரை இசை என்றால் இளையராஜா தான் என்று இருந்த அந்தப் புகழ் நிலையை அவரால் மறுபடியும் பெற முடியவில்லை.

தற்போதுள்ள புதிய வரவுகள் மற்றும் கால மாற்றத்தால் அதைத் திரும்பவும் அடைய முடியும் என்பதும் மிகவும் சிரமமான ஒன்றாகும்.

என்ன இருந்தாலும் இசையில் இளையராஜா ஒரு சகாப்தம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இளையராஜாவின் இறங்கு முகத்திற்கு மணிரத்னம் (ரகுமான் அறிமுகத்தால்) முக்கியக் காரணியாக இருப்பதால், மணிரத்னம் மற்றும் இளையராஜா அவர்கள் மீண்டும் இணைவது என்பது நடக்காத காரியம்.

நடந்தால் மகிழ்ச்சி ஆனால், இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மணிரத்னம் “மெட்ராஸ் டாக்கீஸ்” தயாரிப்பில் வெளிவந்த “டும் டும் டும்” படத்திற்கு இசை அமைத்து இருந்தார்.

மேலும் ஜோடிகளை அடுத்தப் பதிவில் கூறுகிறேன்.

பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 3)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

33 COMMENTS

 1. மீண்டும் இளையராஜா!! ஆனாலும் அண்மைய ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த பாடகர் எஸ்.பி.பி என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா!!

 2. //இளையராஜாவின் இறங்கு முகத்திற்கு மணிரத்னம் (ரகுமான் அறிமுகத்தால்) முக்கிய காரணியாக இருப்பதால்,//

  ரகுமான் அறிமுகம் இளையராஜா மூலமே நடந்தது. பு.ம.வில் என்று கூறுகிறார்கள்.

 3. //இனியவள் புனிதா said…
  மீண்டும் இளையராஜா!! //

  இளையராஜாவும் தமிழ் சினிமாவும் பிரிக்க முடியாதவர்கள்.

  //அண்மைய ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த பாடகர் எஸ்.பி.பி என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா!!//

  இப்போதும் நண்பர்களாக இருக்கிறார்கள், தொழிலில் ஒன்றாக இருக்க மாட்டேன் என்கிறார்கள்.

  ===================================================================

  //SUREஷ் said…
  //இளையராஜாவின் இறங்கு முகத்திற்கு மணிரத்னம் (ரகுமான் அறிமுகத்தால்) முக்கிய காரணியாக இருப்பதால்,//

  ரகுமான் அறிமுகம் இளையராஜா மூலமே நடந்தது. பு.ம.வில் என்று கூறுகிறார்கள்.//

  “பு.ம” னா என்னங்க? இளையராஜா அறிமுகம் செய்து வைத்து இருந்தால் நல்ல விஷயம், ஆனால் அதன் பிறகு ஏன் மணிரத்னம்-இளையராஜா இணையவில்லை? காரணம் எதுவும் தெரிந்தால் கூறுங்கள்.

 4. //நட்புடன் ஜமால் said…
  இளையராஜா – எஸ்.பி.பி பிரிவு :(//

  தொழிலில் மட்டுமே, நிஜத்தில் நண்பர்களாகவே உள்ளனர்.

  //நட்புடன் ஜமால் said…
  பு.ம – புன்னகை மன்னன்.//

  எதில் வந்தாலும் ஒரு முழு படத்திற்கு இசையமைப்பாளராக (விளம்பர படங்கள் இல்லாமல்) அறிமுகமானது “ரோஜா”வில் தானே.

 5. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

 6. பிரபலங்களின் பிரிவுக்கு பின்னணி என்னவாயிருந்தாலும் இது போன்ற கூட்டணிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதனை படைப்பதும் பிரிந்து பின்னர் இணையாமலே போவதும் காலத்தின் கட்டாயங்களாகி விட்டது போலவே தோன்றுகிறது.

 7. //’டொன்’ லீ said…
  இருவரும் (ராஜா, ரகுமான்) இமயங்கள் தான்//

  இளையராஜா சாதித்தவர், ரகுமான் சாதித்துக்கொண்டு இருப்பவர்

  ===================================================================

  //திகழ்மிளிர் said…
  இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்//

  உங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்

  ===================================================================

  //வாசுகி said…
  சினிமாவை கரைத்து குடித்திருக்கிறீர்கள் போல.//

  ஏங்க! என்னை வைத்து காமெடி பண்ணலையே 🙂 மேலோட்டமா எனக்கு தெரிந்ததை கூறி இருக்கிறேன். நீங்கள் நினைக்கும் அளவிற்கு எனக்கு விஷயம் தெரியாது.

  //இளையராஜா இசை எப்பவும் மனதில் நிற்கும்.//

  இதை எவராலும் மறுக்க முடியாது. தற்போதைய பாடல்களை வெளியான கொஞ்ச நாட்கள் மட்டுமே விருப்பமாக கேட்கலாம் பின்னர் போர் அடித்து விடும். ஆனால் இளையராஜாவின் பாடல்கள் பல என்றும் இனியவை தான், எப்போது கேட்டாலும்.

  //பிரிவு என்றாலே அதில் இளையராஜாவுக்கு பங்கு இருக்கும் போல//

  அதற்கு காரணம் அத்தனை படங்கள் பலருடன் இணைந்து பணி புரிந்து இருக்கிறார். பணி செய்த காலம் அதிகம் எனவே உடன் பணி புரிந்தவர்களும் அதிகம்.

  ===================================================================

  //ராமலக்ஷ்மி said…
  பிரபலங்களின் பிரிவுக்கு பின்னணி என்னவாயிருந்தாலும் இது போன்ற கூட்டணிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதனை படைப்பதும் பிரிந்து பின்னர் இணையாமலே போவதும் காலத்தின் கட்டாயங்களாகி விட்டது போலவே தோன்றுகிறது.//

  மனம் விட்டு பேசினால் எதற்கும் தீர்வு கிடைக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது பிரச்சனையோ!

  ===================================================================

  //Mahesh said…
  பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணாம இயல்பா ஒரு சாதாரண ரசிகனா சொன்ன விதம் நல்லாயிருக்கு. //

  சரியா சொன்னீங்க மகேஷ். ஆராய்ச்சி செய்து கூறுகிற அளவிற்கு எனக்கு விஷயம் தெரியாது, சாதாரண ரசிகனாக நடைமுறையில் காண்பவற்றை, நினைப்பவற்றை கூறி இருக்கிறேன்.

  //விஸ்வநாதன் ராமமூர்த்தி உங்க லிஸ்ட்ல இருக்காங்களா?//

  இல்லைங்க. எனக்கு அதிகம் அவர்கள் பற்றி தெரியாது, தெரியாத விஷயத்தை அரைகுறையாக எழுதுவதில் விருப்பம் இல்லை.

 8. //பாஸ்கர் said…
  //இளையராஜா – SPB//
  எனக்கு “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” பாட்டு மிகவும் பிடிக்கும்//

  எனக்கு கணக்கு வழக்கே இல்லை,அத்தனை பாட்டு இருக்கு 🙂

  ===================================================================

  //நசரேயன் said…
  இளையராஜா – SPB மீண்டும் வரணும்//

  அனைவரின் விருப்பமும் இது தான்.

  ===================================================================

  //malar said…
  மனிதன் எந்த உயறத்தை ய்வும் அடையலாம் தலை க்கனம் ஆகாது.//

  வழிமொழிகிறேன்

  //இழப்பு ரசிகர்களுக்கு என்ன என்று புரியவில்லை//

  புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

  //இழப்பு ரசிகர்களுக்கு இல்லை//

  இது உங்கள் கருத்து.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி மலர்.

 9. சினிமாவை கரைத்து குடித்திருக்கிறீர்கள் போல.
  நமக்கெல்லாம் இந்தளவு knowledge இல்லை.

  பழைய பாடல்கள் (msv,இளையராஜா பாடல்கள்) மனதில் நிற்பது போல் தற்கால பாடல்கள்
  (விதிவிலக்கு , வாரணம் ஆயிரம் பாடல் ) மனதில் பெரிதாக நிற்பதில்லை.
  என் கருத்து மட்டுமே.

  இளையராஜா இசை எப்பவும் மனதில் நிற்கும்.
  எத்தனை தடவையும் கேட்கலாம்.
  அந்த கால படங்களில், ஒரு படத்தில் உள்ள எல்லா பாடல்களும் நினைவில் இருக்கும்.
  ஆனால் இப்ப ………………………
  இளையராஜா இசையில் ஒரு தனித்துவம் இருப்பதாக உணர்கிறேன்.

  இவர்களது பிரிவு நிச்சயமாக ரசிகர்களுக்கு இழப்பு தான்.
  அதுவும் இளையராஜா‍-வைரமுத்து.

  பிரிவு என்றாலே அதில் இளையராஜாவுக்கு பங்கு இருக்கும் போல.தொடர் நல்லா போகுது.

 10. பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணாம இயல்பா ஒரு சாதாரண ரசிகனா சொன்ன விதம் நல்லாயிருக்கு.

  விஸ்வநாதன் ராமமூர்த்தி உங்க லிஸ்ட்ல இருக்காங்களா?

 11. மனிதன் எந்த உயறத்தை ய்வும் அடையலாம் தலை க்கனம் ஆகாதுஇழப்பு ரசிகர்களுக்கு என்ன என்று புரியவில்லை. இழப்பு ரசிகர்களுக்கு இல்லை.பாதிப்பு பிரபலங்களுக்கு தான்.

 12. Giri,
  Very nice article. Even now when I start hearing theme musics of – Aboorva Sagotharargal, Varusham 16 literally I will start crying. I feel that’s the specialty of our Maestro

 13. இளையராசா கிட்டதட்ட ரிட்டையர்ட் ஆகிவிட்டார்,
  இப்போதுள்ள இளம் தலைமுறையினர் தமது வயசுக்கு ஏற்றவாரே பாடகர்களை அமைத்து கொள்கிறார்கள்,

  மணிரத்னம் ரகுமானோடு ஒன்றிவிட்டார்.

 14. //arun said…
  Giri,
  Very nice article.//

  நன்றி அருண்

  //Even now when I start hearing theme musics of – Aboorva Sagotharargal, Varusham 16 literally I will start crying//

  எனக்கு தளபதியில் வரும் சின்னத் தாயவள் பாடல் மற்றும் அதில் வரும் வயலின் இசையை ஒரு சில நேரங்களில் கேட்டால் கண் கலங்கி விடும். இது வரை இந்த பாடலை போல எதற்கும் எனக்கும் இப்படி ஆனது இல்லை. அருமையான இசை மற்றும் S.ஜானகி அவர்களின் குரல்.

  //I feel that’s the specialty of our Maestro//

  வழிமொழிகிறேன்

  ===================================================================

  //ஷாஜி said…
  இவர்களது பிரிவு நிச்சயமாக ரசிகர்களுக்கு இழப்பு தான்.//

  என்னுடைய கருத்தும் அதே தான். உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஷாஜி.

  ===================================================================
  //வால்பையன் said…
  இளையராசா கிட்டதட்ட ரிட்டையர்ட் ஆகிவிட்டார்,
  இப்போதுள்ள இளம் தலைமுறையினர் தமது வயசுக்கு ஏற்றவாரே பாடகர்களை அமைத்து கொள்கிறார்கள்,//

  வழிமொழிகிறேன்

  //மணிரத்னம் ரகுமானோடு ஒன்றிவிட்டார்.//

  அதற்க்கு அவர் ஹிந்தியில் அதிகம் படங்கள் செய்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் அவர் படத்திற்குண்டான ரிச்சான இசையை இவரிடம் இருந்து எளிதாக மணிரத்னம் பெற முடியும்.

  ===================================================================

  //RAMASUBRAMANIA SHARMA said…
  VALID INFORMATIONS…AUTHOR HAS TREMENDOUS DATA BASE ABOUT THE INDIAN CINEMA INDUSTRY’S STALWARTS…SUPER//

  உங்கள் பாராட்டிற்கு நன்றி, ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு உண்மையிலேயே சினிமாவை பற்றி தெரியாது. எனக்கு தெரிந்த கொஞ்சம் விசயங்களை தெளிவாக கூறி இருக்கிறேன் அவ்வளவே.

  ===================================================================

  //வடுவூர் குமார் said…
  மணி – இளையராஜா பிரிவுக்கு காரணமே “ராக்கம்மா” பாட்டு தான் எங்கோ படித்த ஞாபகம்.தேவையில்லாமல் மும்பாயில் ரெக்கார்டிங் என்று ஏதோ படித்த ஞாபகம்.//

  இருக்கலாம், எனென்றால் இவர்கள் கூட்டணியில் இதுவே கடைசி படம்.

  //SPB பாடல்கள் பல பிடித்தவைகள் என்றாலும்
  மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் – சலங்கை ஒலி,
  இது ஒரு பொன்மாலை பொழுது என்று நிழல்கள் பாடல்கள் இன்றும் என்னை முனுமுனுக்க வைக்கிறது//

  எனக்கும் இந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும் கூடவே இன்னும் பல பாடல்கள்.

 15. மணி – இளையராஜா பிரிவுக்கு காரணமே “ராக்கம்மா” பாட்டு தான் எங்கோ படித்த ஞாபகம்.தேவையில்லாமல் மும்பாயில் ரெக்கார்டிங் என்று ஏதோ படித்த ஞாபகம்.
  SPB பாடல்கள் பல பிடித்தவைகள் என்றாலும்
  மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் – சலங்கை ஒலி,
  இது ஒரு பொன்மாலை பொழுது என்று நிழல்கள் பாடல்கள் இன்றும் என்னை முனுமுனுக்க வைக்கிறது.

 16. கிரி கலக்கறீங்க. எகானமி பற்றி தொடர் பதிவு, சினிமா பற்றி தொடர் பதிவு, சிங்கப்பூர் பற்றி ஒரு தொடர் பதிவு. ஆனா நான்(ங்க) தொடர் பதிவுக்கு கூப்பிட்டா மட்டும் எஸ் ஆகிடறீங்க.

 17. //மோகன் said…
  கிரி கலக்கறீங்க. எகானமி பற்றி தொடர் பதிவு, சினிமா பற்றி தொடர் பதிவு, சிங்கப்பூர் பற்றி ஒரு தொடர் பதிவு. ஆனா நான்(ங்க) தொடர் பதிவுக்கு கூப்பிட்டா மட்டும் எஸ் ஆகிடறீங்க//

  ஹா ஹா ஹா. மோகன் எனக்கு தெரிந்த விஷயம் என்றால் எழுதுவேன்..தெரியாத விஷயத்தை எழுதவேண்டும் என்பதற்காக எழுத விருப்பமில்லை. அப்புறம் கட்டாயத்தில் எழுதும் பதிவு சரியாக எனக்கு வருவதில்லை. நான் விருப்பமாக எழுத நினைப்பதையே எழுதுகிறேன் அவ்வளவே வேறு ஒன்றுமில்லை.

  சரி! உங்களை எங்கே ரொம்ப நாளா ஆளை காணோம்.. பிசியா!

 18. தளபதி படத்தில் பணிபுரியும் பொழுது இளையராஜவிற்கு மணிரத்தினத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தளபதி படத்திற்கு பிறகு மணிரத்தினம் பாலசந்தருக்காக ஒரு படம் பண்ணி தருவதாக கூறியிருந்தார். பாலசந்தருக்கும் இளையராவிற்கு அப்பொழுது (இப்பொழுதும்) மனஸ்தாபம். சரி வேறு இசையமைப்பாளரோடு சேர்ந்து பணிபுரிந்தால் இளையாராஜா தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று என்ணி ஒரு புது முக இசையமைபாளரை அறிமுக படுத்தினார். அவர் தான் ரகுமான். படம் : ரோஜா.

  இதற்கு பின்னர் வந்த ஈகோ பிரச்சனையால் தான் இன்று வரை இருவரும் சேர்ந்து பணிபுரிய மறுக்கிறார்கள்.

  இருந்தும் இருவர் படத்திற்கு இசையமைக்க மணிரத்தினம் இளையராஜாவை கேட்டதாகவும் அதற்கும் அவர் மறுத்தாகவும் கேள்வி.

 19. ரஜினியும் இளையராஜவும் இனைந்தே பதினைந்து வருடங்களுக்கு மேலே இருக்கும். கடைசியாக இருவரும் சேர்ந்து பணிபுரிந்த படம் வீரா.

  மலைக்கோவில் வாசலில் பாடல் கம்போஸ் செய்து தர ராஜா தாமதம் செய்ததாகவும் அதனால் படம் வெளியாக சிறிது தாமதம் ஆனாதாகவும் அப்பொழுது சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

  அதற்கு பிறகு இன்று வரை தலைவரும் ராஜாவிம் சினிமாவில் இணையவே இல்லை.But personally they dont have any issues.

 20. //Bleachingpowder said…
  ரஜினியும் இளையராஜவும் இனைந்தே பதினைந்து வருடங்களுக்கு மேலே இருக்கும். கடைசியாக இருவரும் சேர்ந்து பணிபுரிந்த படம் வீரா.//

  உண்மை தான்.

  //அதற்கு பிறகு இன்று வரை தலைவரும் ராஜாவிம் சினிமாவில் இணையவே இல்லை.But personally they dont have any issues.//

  இவர்கள் இணையவில்லை என்பது எனக்கு ரொம்ப வருத்தம். தற்போதும் இவர்கள் நண்பர்களாகவே உள்ளனர். ரஜினி இளையராஜாவை “சாமி” என்று தான் அழைப்பதாக பத்திரிக்கைகளில் படித்துள்ளேன்.

  ===================================================================

  //Alex – Raaja’s Music my Breath said…
  இளையராசா கிட்டதட்ட ரிட்டையர்ட் ஆகிவிட்டார், /////

  Good Joke of Year ..

  he is only composer ! Composing Music for 42films ( @present in India )//

  முதல் வருகைக்கு நன்றி Alex – Raaja’s Music my Breath

 21. இளையராஜாவும் பாலாவும் நன்னவனு (2009) என்ற கன்னடப் படத்தில் (3 பாடல்கள்) இணைந்துள்ளார்கள்!

 22. அருமையான பதிவு. ராஜா-மணி பிரிவுக்கு காரணம் என்றால் நிச்சயமாக மணிரத்னம் தான் காரணம். ரோஜா படம் வந்து வெற்றிக்கரமாக போய் கொண்டு இருந்தது, அப்புறம் பம்பாய் படமும் மிக பெரிய ஹிட். அப்பொழுது குமுதம் பேட்டியில் மணிரத்னம் கூறியது, மீண்டும் இளையராஜாவுடன் இணைவீர்களா? என்று கேட்டதற்கு ”இப்போதைய கூட்டணியே நல்லாத்தானே போய்கிறது” என்று கூறினார். இதனை அறிந்த ராஜா மிகவும் வருத்தப்பட்டார். பின் மணிரத்னம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், அலைபாயுதே படங்களுக்கு அவரிடம் பணிபுரிய விருப்பம் அடைய ஒருவரின் மூலமாக முயற்சித்தார். அப்பொழுது ராஜா ”ஏன் அந்த கூட்டணி நல்லாத்தானே போய் கொண்டு இருக்கிறது, பின்ன ஏன் என்னிடம் வருகிறார், அவரும் நல்ல பண்ணுவார்” என்று மறுத்ததாக கேள்வி. மீண்டும் இணைவது மணிரத்னம் கையில் தான் இருக்கிறது, அதனை ஏற்று கொள்வது ராஜா சார் மனதில் தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here