எந்திரன் பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீடு பற்றி அறிவித்தவுடன் எந்திரன் பற்றிய பரபரப்பு ஊடங்களிடமும் ரசிகர்களிடமும் தொற்றிக்கொண்டது.
படத்தைப் பற்றிய அரசல்புரசலான செய்திகள் வேறு பலரின் ஆர்வத்தை அதிகரித்து வைத்து இருக்கிறது. Image Credit
எல்லோருக்கும் வயதாக வயதாக முதுமை முகத்தில் கூடும் தலைவருக்கு மட்டும் இளமை கூடிக்கொண்டே செல்கிறது 🙂 .
ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் நடிப்பு முயற்சித்து பின் மீசைக்கார தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் பார்வையில் பட்டு “ஜென்டில்மேன்” என்ற 1000 வாலா சரவெடியாகப் புறப்பட்டுத் தற்போது 150 கோடி எந்திரன் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
முதல் படத்தில் இருந்து தற்போது வரை அதே வேகத்தில் பரபரப்பில் கவர்ச்சியில் இருக்கிறார் என்றால் சாதாரணமான விசயமில்லை. தன் கதையையே மாற்றி மாற்றி வேறு படப்பெயர்களில் எடுத்தாலும் 🙂 .
இன்றும் ஷங்கர் படம் என்றால் அனைவரையும் எதிர்பார்ப்பில் இருக்க வைப்பது அவரோட திறமையே!
இவருடன் வந்த பல இயக்குனர்கள் சரக்கு தீர்ந்து கம்முனு இருக்கிறார்கள். இவர் இருக்கிற சரக்கையே மாற்றி மாற்றி வித விதமாக கொடுத்து டாப்பில் இருக்கிறார்.
படத்தை ஃபேன்ஸியாகக் கொடுப்பதில் இன்று வரை இவரே கிங் ஆக இருக்கிறார்.
இவர் தான் படத்தின் பெயருக்குக் கீழே போடும் வரியை (Caption) தனது “ஜென்டில்மேன்” படத்தில் Some thing special என்று ஆரம்பித்து வைத்தவர்.
கிராஃபிக்ஸ் மற்றும் பல தொழில்நுட்ப உத்திகளைக் காட்டி அசரவைத்தவர் உச்சமாக ரஜினியை சிவாஜியில் வெள்ளையாகக் காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர்.
இவருக்கு உதித்த ஆசை தான் ரோபோ படம்.
இதை எப்படியாவது சிறப்பாக எடுக்க வேண்டும் என்பது இவரது கனவு. எனவே அவரே அறிவித்து இருக்கிறார் எந்திரன் என்னுடைய கனவுப்படம் என்று.
ஆனால், பிரச்சனை எப்போதும் காஸ்ட்லி கனவாகவே காண்பவர். இதை அதிகப்படி காஸ்ட்லியாகக் கனவு கண்டு விட்டார் 🙂 .
கமல்
தயாரிப்பாளர் கிடைப்பது பிரச்சனை (இந்தப்படம் திட்டமிட்ட போது தயாரிப்பு மதிப்பு 50 கோடி, தற்போது 150 கோடி) படத்தின் பட்ஜெட் மற்றும் கதைக்கு ஏற்ற வொர்த்தான நடிகரைப் பிடிப்பது பிரச்சனையாக இருந்தது.
முதலில் இது குறித்து கமலிடம் பேசப்பட்டது பின் கதை விவாதம் நடந்து பின் ஏனோ அது தொடரவில்லை.
கமலின் 50 ம் ஆண்டு திரையுலக விழாவில் கூட ரஜினி ஷங்கரிடம் “இந்தப்படத்துக்கு கமலுக்காக அமைத்து இருந்த காட்சிகளை மாற்றி விடுங்கள் என்று கூறி விட்டேன் கமல் அளவிற்கு என்னால் நடிக்க முடியாது” என்று தன்னடக்கமாகக் குறிப்பிட்டார்.
ஷாருக்
இதன் பின் ஷங்கர் சென்றது ஷாருக்கிடம், காரணம் ஹிந்தி என்றால் பெரிய ரீச் கிடைக்கும் (ஹிந்தி படங்களுக்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்புள்ளது), தயாரிப்பும் ஷாருக்கின் Red Chilly Company செய்வதாகக் கூறியதால் டபுள் ஓகே என்று ஷங்கர் குஷியாக இருந்தார்.
ஆனால், ஷாருக் கதையில் அதை மாற்று இதை மாற்று என்று கூறி ஷங்கரின் கனவைக் கலைக்க முயற்சித்ததாலும் அவர் நினைத்தபடி காட்சிகள் அமையாததாலும் அவருடன் பிரிய வேண்டியதாகி விட்டது.
ஆனால், ஷாருக்கிடம் மொத்த திரைக்கதையையும் கூறி விட்டார். தற்போது எப்படி எடுத்து இருக்கிறார் என்று தெரியவில்லை.
சண்டையால் / பிரிவால் வேண்டும் என்றே Robo என்ற தலைப்பையும் அதுபோல இருக்கும் (The Robo, Robot) போன்ற தலைப்புகளையும் ஷாருக் முன்பதிவு செய்து ஷங்கர் ஹிந்தியில் பயன்படுத்த முடியாத மாதிரி செய்து கடுப்பை கிளப்பினார்.
தற்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை.
ஐஸ்
எந்திரனுக்கு கண்டிப்பாகச் சந்தேகம் இல்லாமல் கூடுதல் பலம் ஐஸ். ரஜினியின் எந்தப் படத்தையும் விட இந்தப்படத்திற்கு மிகப்பொருத்தமாக இருப்பார்.
காரணம், படத்தின் பட்ஜெட் மற்றும் கதை அப்படி. அதனால் தான் என்னவோ ரஜினியுடன் ஐஸ் சேர்ந்து நடிப்பது தள்ளிப்போய்க் கொண்டே இருந்து இருக்கிறது.
வெளிநாடுகளில் ஏற்கனவே ரஜினியின் பாக்ஸ் ஃஆபிஸ் பலம் அறிந்தது தான்.
தோல்விப்படமான குசேலனின் வசூலையே இன்னும் இங்கே வெற்றி பெறும் பலரின் படங்கள் முறியடிக்கவில்லை கமலின் தசாவதாரம் தவிர.
அப்படி இருக்கும் போது உடன் ஐஸ் இருப்பது படத்திற்கு கூடுதல் ரிச்னெஸ் கொடுக்கும்.
ரஜினி
இதன் பிறகு யாரும் எதிர்பாராமல் வந்தவர் தான் ரஜினி.
ரஜினி முன்பு ஒரு விழாவில் “ஷங்கர் ரோபோ என்ற படம் பற்றி என்னிடம் பேசி இருக்கிறார் 50 கோடி பட்ஜெட் ஆண்டவன் அருள் இருந்தால் இணைந்து செய்வோம்” என்று கூறி இருந்தார்.
இந்த ரோபோ படம் ரஜினியின் சிவாஜிக்கு முன்னாலே பேசப்பட்ட படம் கிட்டத்தட்ட கமல் இந்தியன் படம் வெளி வந்த போதில் இருந்து பேசப்பபடுகிறது.
ஷங்கர் சிவாஜியில் ரஜினியுடன் பணிபுரிந்த பிறகு அவரது திறமை கமிட்மென்ட் முழுவதையும் அறிந்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
ரஜினியும் மற்றவர்கள் ஒத்துக்கொள்ளாத கதையில் நான் என்ன நடிப்பது! என்று கவுரவம் பார்க்காமல் ஷங்கர் மீது நம்பிக்கை வைத்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு இயக்குனர் முடிவு செய்த கதையில் நடிக்கிறார்.
நீண்ட வருடங்களாக ரஜினி தேர்வு செய்வதே இறுதியான கதை.
ஷங்கரின் இயக்கத்தில் எந்தவித தலையீடும் செய்யாமல் இயக்குநரின் பிள்ளையாக நடித்துள்ளார் என்று நான் கூறவில்லை ஷங்கர் கூறியுள்ளார்.
ரஜினி ஷங்கருக்கு தன் அனுபவத்தால் காட்சிகளில் சில டிப்ஸ் கொடுத்து இருக்கலாம் கண்டிப்பாக ஷங்கர் சுதந்திரத்தில் தலையிட்டு இருக்க மாட்டார்.
ரஜினியின் தொழில் பக்தி பலரும் அறிந்தது தான், அதனால் தான் காலங்கள் கடந்தும் இன்னும் அதே உச்ச நிலையில் இருக்கிறார்.
முழுமையான நடிப்பு
ரஜினியை இயக்குனர் பாலச்சந்தர், மகேந்திரன் போலத் தற்போது சரியாக யாரும் பயன்படுத்திக்கொள்ளவில்லை அதற்கு ரஜினி தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களும் கதையும் ஒரு காரணம்.
படம் விறுவிறுப்பாகப் பொழுது போக்கு அம்சமாக இருக்கிறது அனைத்து தரப்பு மக்களையும் கவர்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றாலும் அவரது முழுமையான நடிப்பை வெளிக்கொணரும் படி ஒரு படம் அமைந்து நீண்ட வருடங்களாகி விட்டது என்பது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
இதை எந்திரன் நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் குறிப்பாக வில்லன் ரஜினி. ரஜினியை வைத்து எப்படிப்பட்ட சண்டை காட்சிகளை அமைக்க முடியும்!
ஆனால் வாய்ப்பு கிடைத்தும் அதை ஷங்கர் சிவாஜியில் வீணடித்து இருந்தார். இதை எந்திரனில் சரி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
ரஜினி நடிக்கவில்லை என்பதை விட அவரை யாரும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை!
ரஜினி உண்மையில் மிகச்சிறந்த நடிகர் ஆனால் ரசிகர் வட்டம் என்ற வலையில் இருந்து வெளியே வரமுடியாமல் இருப்பவர்.
தன்னால் தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்று நினைத்துப் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் மினிமம் கியாரண்டி மசாலா படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினிக்கு நடிக்கத் தெரியாது! என்று கூறுபவர்கள் கூடப் பலர் கமலின் நடிப்போடு ஒப்பிட்டுக் குறை கூறலாமே தவிர அவரின் நடிப்பை யாரும் குறை கூற முடியாது.
எத்தனை பெரிய நடிகராக இருக்கட்டும் எவ்வளவு சிறப்பான நடிப்பு திறமை உள்ளவராக இருக்கட்டும் ரஜினியின் பாட்ஷா கதாப்பாத்திரத்தில் ரஜினியை தவிர எவராலும் நடிக்க முடியாது, இதை எவராலும் மறுக்க முடியாது.
“நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்று ரஜினி கூறியதை வேறு யாராவது கூறி நடித்தால், குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கையில் வைத்து இருக்கும் எஃபெக்ட் மட்டுமே கிடைக்கும் 😉 .
ஒரே கட்டுரையில் முடிக்க நினைத்தேன் தலைவரைப் பற்றி எழுதினால் தொடர்ந்து அருவி மாதிரி வந்துட்டே இருக்குது 🙂 .
எந்திரன் பற்றிய முழுமையான தகவல்களை அடுத்த பகுதியில் நிறைவு செய்கிறேன்.
அடுத்த பகுதியில் சன் டிவி பற்றி, ரசூல் பூக்குட்டி ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோர் கூறியது, ஊடகங்களுக்கு எந்திரன் பற்றிய செய்திகள் கொடுக்காமல் கடுப்படிக்கும் சன் டிவி, ரஜினியை பென்டெடுக்கும் ஷங்கர்.
சன் டிவி, ஷங்கர் ஊடல் மற்றும் பல சுவாராசியமான விசயங்களைப் பற்றியும் பார்ப்போம்.
எந்திரன் ஆட்டம் தொடரும்! 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஆஹா….
நாங்க எல்லாம் எந்திரன் பாடல்கள், எந்திரன் நேர்காணல் என்றெல்லாம் எழுதிய போது, நீங்கள் அமைதி காத்தது இதற்கு தானா??
கலக்கல் கிரி…. (இங்கு இருக்கும் அனைத்து விஷயங்களை நான் அறிந்திருந்தாலும்….)…
//(இந்தப்படம் திட்டமிட்ட போது கூறப்பட்ட தயாரிப்பு மதிப்பு 50 கோடி, தற்போது 150 கோடி) //
இல்லை கிரி…. படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 160 – 175 கோடிகள் வரை என்று சொல்லப்படுகிறது…
//ரஜினி முன்பு ஒரு விழாவில் “ஷங்கர் ரோபோ என்ற படம் பற்றி என்னிடம் பேசி இருக்கிறார் 50 கோடி பட்ஜெட் ஆண்டவன் அருள் இருந்தால் இணைந்து செய்வோம்” என்று கூறி இருந்தார். //
இது ஷங்கர் அவர்களின் “பாய்ஸ்” படத்தின் ஆடியோ ரிலீஸின் போது… அப்போது, ரஜினி அவர்கள் “பாபா” பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார்…. இருந்தும், ஷங்கர் மேல் ரஜினி வைத்திருந்த அன்பின் காரணமாக ”பாபா” படப்பிடிப்பின் இடையே வந்து ”பாய்ஸ்” படத்தின் ஆடியோவை வெளியிட்டார்…
//ரஜினியின் தொழில் பக்தி பலரும் அறிந்தது தான், அதனால் தான் காலங்கள் கடந்தும் இன்னும் அதே உச்ச நிலையில் இருக்கிறார்.//
இதில் கமலையும் சேர்த்துக்கொள்ளுங்கள் கிரி…..
//அவரது முழுமையான நடிப்பை வெளிக்கொணரும் படி ஒரு படம் அமைந்து நீண்ட வருடங்களாகி விட்டது என்பது என்னைப்போன்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.//
ஹா…ஹா…ஹா… தலைவா… என்ன சொல்றீங்க… முன்னாளில் ரஜினி என்ற நடிகராக இருந்தவர், பின்னாளில் ரஜினி என்ற “ஸ்டார்”, அதை தொடர்ந்து “சூப்பர் ஸ்டார்:” என்றான பொழுதிலேயே நீங்கள் சொன்னது போயே போச்சு… போயிந்தி… இதில் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சிறிது ஏமாற்றம்தான்…
பாட்சா படம் பற்றி புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை…. அதன் முதல் நாளன்று நான் ஆல்பர்ட் தியேட்டரில் இருந்தேன்… அந்த கொண்டாட்டங்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது… இனி வேறு யாருக்கும் அந்த அளவு கொண்டாட்டங்கள் இருக்குமா என்பது சந்தேகமே…
//எந்திரன் ஆட்டம் தொடரும்//
தொடரட்டும் தல….
நல்லா அலசியிருக்கீங்க கிரி சுவாரஸ்யமாவும் எழுதியிருக்கீங்க தொடருங்கள்
////ரஜினியை இயக்குனர் பாலச்சந்தர் மகேந்திரன் போல தற்போது சரியாக யாரும் பயன்படுத்திக்கொள்ளவில்லை அதற்கு ரஜினி தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களும் கதையும் ஒரு காரணம்.////
உண்மை கிரி ,,எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு
////ரஜினிக்கு நடிக்க தெரியாது! என்று கூறுபவர்கள் கூட பலர் கமலின் நடிப்போடு ஒப்பிட்டு குறை கூறலாமே தவிர மற்றபடி அவரின் நடிப்பை யாரும் குறை கூற முடியாது.////
இதை என்னால் ஒத்துகொள்ள முடியாது …அவருடைய முள்ளும் மலரும் படத்தில் வரும் ஒரு காட்சி ,சார் கெட்ட பய சார் இந்த காளி என்று சொல்வாரே !!அந்த நடிப்பு சான்சே இல்லை ….,இயக்குனர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ,”எனக்கு தெரிந்து தமிழில் உள்ள நல்ல நடிகர்கள் இருவர் ,ரஜினிகாந்த் மற்றும் பிரபு தேவா என்று சொல்லியிருந்தார் ,,,”’
ALPACINO படத்தை பார்த்ததுண்டா ? கமல் உட்பட அனைவரும் ஒவ்வொரு சாயலில் நடிப்பார்கள்..
மைக்ரோ முன்னோட்டம்ன்னு ஒரு மெகா முன்னோட்டமே கொடுத்திருக்கீங்க !!! அதிரடி அலசல் ! ஒரு மசாலா பதிவுக்கு பிறகு (அதாங்க பராகுவே கவர்ச்சி புயலப்பத்தின பதிவு…அப்ப மாளவிகா), இப்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளிர்கள் !
“குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்” matter
/// ரொம்ப அருமை
இதுலயும் அதிரடி பாட்டு மாறி எதாவது இருக்கா ? (நம்ம ஷ்ரேயா மாதிரி ஐஸும் ஆடுவாங்களா ?)
ரஜினி படத்தின்(சிவாஜி) தரத்தை உயர்த்தியவர் ஷங்கர் என்றால் அது மிகையாகாது ! தொடரட்டும் உங்கள் பயணம் !
தல ,
கலக்கிட போ !! அடுத்து எப்போ ?
(கலக்கிட போ !!)
அது கலக்கிட போங்க !!!!! மன்னிக்கவும்
superb
அருமையான முன்னோட்டம் , தொடருங்கள் , இப்போது நாம் கவனமாக இருக்க வேண்டியது தலைவருக்கு எதிரான துரோகிகள் மீதுதான், ஏதாவதொரு ரூபத்தில் பிரச்சினையை கொண்டு வந்து விடுவார்களோ என்றுதான் பயமாக இருக்கிறது, மற்றப்படி தலைவர் படம் வெல்லுவதற்கு எந்தத்தடையும் இல்லை.
////ரஜினிக்கு நடிக்க தெரியாது! என்று கூறுபவர்கள் கூட பலர் கமலின் நடிப்போடு ஒப்பிட்டு குறை கூறலாமே தவிர மற்றபடி அவரின் நடிப்பை யாரும் குறை கூற முடியாது.////
எது சிறந்த நடிப்பு என்பது அவரவருடைய கண்ணோட்டம் கிரி. வேறுபட்ட தோற்றங்களில் வருவது மட்டும் சிறந்த நடிப்பு கிடையாது. ரஜினியின் சிறந்த நடிப்புக்கு பல படங்கள் சொல்ல முடியும். கமலுடைய செயற்கையான நடிப்புக்கும் பல படங்கள் சொல்ல முடியும். ரஜினி மிக சிறந்த நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்களை கவனித்து பார்த்தால் அவரை கமல் உள்பட வேறு எந்த நடிகரும் அவரை overtake செய்ய முடியாததை காணலாம்.
கமல் ஒரு நல்ல நடிகர் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அதே நேரத்தில் கமல் அளவுக்கு ரஜினி நல்ல நடிகர் இல்லை என்பவர்களுக்காக இதை பதிவிடுகிறேன்.
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டது இந்த பகுதி.
கிரி,
சுஜாதா பத்தி எதுவுமே சொல்லல……..
சுஜாதா இல்லாம மணிரத்னத்தோட வண்டியே குடை சாஞ்சி போச்சே………
ஷங்கர் மேலே எனக்கு கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லை, தலைவரையும் சுஜாதாவையும் தான் மலை போல நம்பிக்கொண்டிருக்கிறேன்.
//காத்தவராயன்
கிரி,
சுஜாதா பத்தி எதுவுமே சொல்லல……..
சுஜாதா இல்லாம மணிரத்னத்தோட வண்டியே குடை சாஞ்சி போச்சே………
ஷங்கர் மேலே எனக்கு கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லை, தலைவரையும் சுஜாதாவையும் தான் மலை போல நம்பிக்கொண்டிருக்கிறேன்//
தல காத்தவராயன்….
அதான் ஷங்கர் சுஜாதா அவர்களின் வசன பங்களிப்பு பற்றி சாம்பிளாக ஒரு வசனம் சொன்னாரே…
நெடுநாட்களுக்கு பிறகு ரஜினி தாடியுடன் வீடு திரும்பும் போது, அவரது தாயார் அவரை பார்த்து “என்னப்பா…லீவுல வந்த ரிஷி மாதிரி இருக்க”ன்னு சொல்ற அந்த டயலாக் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் இல்லையா!!…
அப்புறம், ஷங்கர் மேல நம்பிக்கை வைங்க சார்… ரஜினியிடமும், சுஜாதாவிடமும், மற்ற பிறரிடமும் திறமையாக வேலை வாங்கி எந்திரனை ஒரு அட்டகாசமான படமாக உருவாக்கி இருப்பது அவர் தானே…
எந்திரன் பத்தி சொல்லணும்னா… லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வரும்…
தோல்விப்படமான குசேலனின் வசூலையே இன்னும் இங்கே வெற்றி பெறும் பலரின் படங்கள் முறியடிக்கவில்லை கமலின் தசாவதாரம் தவிர.
===========================================================================================
the above line exaggeration. I saw 525th day show of chandramukhi in shanthi theater, chennai. The crowd i saw in shanthi theater is equal to the third week crowd for kuselan movie (i saw in kasi theater. I saw kuselan three times in various theaters. The crows was too low in all the three times even during the weekend). Except the above line, the article is simply superb.
I am fan of your blog. Once you written about a english movie called “HOSTEL” in your blog. I saw that post and downloaded the movie from a website. It was a superb time pass movie. Thanks for that.
Rajesh. V
@கோபி
கோபி வழக்கம் போல நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி
//நாங்க எல்லாம் எந்திரன் பாடல்கள், எந்திரன் நேர்காணல் என்றெல்லாம் எழுதிய போது, நீங்கள் அமைதி காத்தது இதற்கு தானா??//
இல்லைங்க. ரொம்ப முன்னாடியே இது பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். குசேலன் ல ரொம்ப எழுதி படம் சங்கானதும் ரொம்ப கஷ்டமா போச்சு! அதனால அடக்கி வாசிக்கலாம்னு இருந்தேன். இப்ப கூட எழுதற நினைப்பில் இல்லை.. அருண் மற்றும் சங்கர் இருவரும் ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தாங்க.. சரி இனியும் தாமதம் செய்தால் பந்தா பண்ணுற மாதிரி இருக்கும்னு எழுதினேன்.
//இங்கு இருக்கும் அனைத்து விஷயங்களை நான் அறிந்திருந்தாலும்//
உண்மையில் நான் எழுதியதும் எழுதப்போவதும் ரஜினி ரசிகர்கள் அனைவரும் அறிந்தது தான்.. அதை என்னோட பாணில எழுதறேன் அவ்வளோ தான்.
//படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 160 – 175 கோடிகள் வரை என்று சொல்லப்படுகிறது//
எனக்கு நம்பிக்கை இல்லை.. இந்த சன் டிவி படத்தை கூடுவாஞ்சேரியே தாண்ட விட மாட்டேங்குறாங்க. வெளிநாட்டு காட்சிகள் ரொம்ப குறைவு. செட்டிங் எல்லாம் செலவு என்றால் கூட அவ்வளவு வருமா என்று தெரியவில்லை.
//இதில் கமலையும் சேர்த்துக்கொள்ளுங்கள் கிரி…..//
கமல் ஒரு லெஜென்ட் என்பது எல்லோருக்கும் தெரியுமே கோபி! இது தலைவர் பதிவு என்பதால் அவரை பற்றி மட்டும் கூறினேன்.
=================================================================================
@சரவணன் நன்றி
=================================================================================
@சங்கர்
//இதை என்னால் ஒத்துகொள்ள முடியாது …அவருடைய முள்ளும் மலரும் படத்தில் வரும் ஒரு காட்சி ,சார் கெட்ட பய சார் இந்த காளி என்று சொல்வாரே //
சங்கர் இது நான் கூறியது அல்ல.. மற்றவர்கள் கூறுவார்கள். ரஜினியின் நடிப்பை பற்றி அடுத்த பாட்ஷா பாராவில் கூறி விட்டேனே என்னோட பார்வையை.
அப்புறம் மகேந்திரன் என்ன கணக்குல பிரபு தேவாவை கூறினார் என்று எனக்கு சுத்தமா புரியல!
//அது கலக்கிட போங்க !!!!! மன்னிக்கவும்//
இதுக்கெல்லாமா மன்னிப்பு! அப்புறம் நீங்க சொன்னதுல தவறு எதுவும் இல்லையே!
=================================================================================
@பிரசாத்
//அதாங்க பராகுவே கவர்ச்சி புயலப்பத்தின பதிவு…அப்ப மாளவிகா//
ஹி ஹி ஹி 😉
//இதுலயும் அதிரடி பாட்டு மாறி எதாவது இருக்கா?//
இல்லாம இருக்குமா!
=================================================================================
@கார்த்திக் நன்றி
=================================================================================
@ஜீவதர்ஷன்
//ரூபத்தில் பிரச்சினையை கொண்டு வந்து விடுவார்களோ என்றுதான் பயமாக இருக்கிறது//
எனக்கு அந்த கவலை எல்லாம் இல்லவே இல்லை காரணம் சன் டிவி. எதா இருந்தாலும் அவங்க பார்த்துப்பாங்க. படம் ஓகே என்றால் போதும் 🙂
=================================================================================
@சேகர்
//எது சிறந்த நடிப்பு என்பது அவரவருடைய கண்ணோட்டம் கிரி//
இதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை
“கமல் ஒரு நல்ல நடிகர் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அதே நேரத்தில் கமல் அளவுக்கு ரஜினி நல்ல நடிகர் இல்லை என்பவர்களுக்காக இதை பதிவிடுகிறேன்”
ஒவ்வொருவரும் தங்களது பாணியில் சிறந்தவர்கள் தான். நான் சங்கருக்கு கூறிய பதிலே தான் உங்களுக்கும் நான் கூறுவது என்னோட பார்வை அல்ல, மற்றவர்கள் அவ்வாறு கூறுவார்கள், அதை குறிப்பிட்டேன் அவ்வளவே.
//அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டது இந்த பகுதி.//
நன்றி சேகர். அடுத்த பகுதி உங்களை ஏமாற்றம் அடைய செய்யாதபடி இருக்கும் கண்டிப்பாக 🙂
=================================================================================
@காத்தவராயன்
//சுஜாதா பத்தி எதுவுமே சொல்லல……..//
இது உங்களுக்கு அநியாயமா இல்லை.. நான் இன்னும் முடிக்கவே இல்லையே! 🙂 சுஜாதவை சங்கர் கூட மறக்கலாம் நான் மறக்க மாட்டேன். அடுத்த பகுதில பாருங்க.
//சுஜாதா இல்லாம மணிரத்னத்தோட வண்டியே குடை சாஞ்சி போச்சே………//
🙂
//ஷங்கர் மேலே எனக்கு கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லை, தலைவரையும் சுஜாதாவையும் தான் மலை போல நம்பிக்கொண்டிருக்கிறேன்//
ஹலோ! என்ன இப்படி சப்பையா சொல்லிட்டீங்க! ஷங்கர் நிச்சயம் கலக்கி இருப்பார். எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இது அவருடைய கனவுப்படம். அடுத்த பதிவுல இதைப்பற்றி விரிவா கூறி இருக்கேன்.
=================================================================================
@கோபி
//அப்புறம், ஷங்கர் மேல நம்பிக்கை வைங்க சார்… ரஜினியிடமும், சுஜாதாவிடமும், மற்ற பிறரிடமும் திறமையாக வேலை வாங்கி எந்திரனை ஒரு அட்டகாசமான படமாக உருவாக்கி இருப்பது அவர் தானே…//
இதை ரிப்பீட்டிக்குறேன்.
======================================================================================
என்னுடைய அடுத்த பதிவு உங்கள் பலரின் சந்தேகங்களை தீர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
=======================================================================================
@ராஜேஷ்
சந்திரமுகி சாதனையை இனி ஒரு ரஜினி படம் முறியடிக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்! அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்தது. நான் குசேலன் வசூல் பற்றி கூறியது இங்கல்ல வெளிநாட்டில். கூட்டம் பற்றி நீங்க கூறியது சரி தான், குசேலன் வசூல் பற்றி நான் கூறியதும் உண்மை தான்.
ஹாஸ்டல் படம் அதனோட திரைக்கதைக்காகவே நான் பலமுறை பார்த்தேன். ஆனால் பலர் படம் பார்த்து வாந்தி எடுத்ததாக கேள்வி 😀 எனக்கு ரொம்ப பிடித்த படத்தில் தாறுமாறான ரேட்டிங்கில் ஹாஸ்டல் உள்ளது. உங்கள் அன்பிற்கு நன்றி ராஜேஷ்.
ஏற்கனவே தெரிந்த தகவல் என்றாலும் தகவலுக்கு நன்றி,
கலக்கல் பதிவு கிரி உங்க ஸ்டைல் ல தலைவர் ஸ்டைல் ல பத்தி படிக்க ரொம்ப நல்லா இருக்கு. அடுத்த பதிவுக்கு ஆர்வமா waiting ..
எல்லா கோணங்களில் இருந்தும் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். நம்மில் பலர் இவ்வாறு யோசிக்கவே முடியாது/தெரியாது. நன்றி.
அருமையான முன்னோட்டம் , தொடருங்கள் , இப்போது நாம் கவனமாக இருக்க வேண்டியது தலைவருக்கு எதிரான துரோகிகள் மீதுதான், ஏதாவதொரு ரூபத்தில் பிரச்சினையை கொண்டு வந்து விடுவார்களோ என்றுதான் பயமாக இருக்கிறது, மற்றப்படி தலைவர் படம் வெல்லுவதற்கு எந்தத்தடையும் இல்லை.
repeat
லோகன் அருண் சாய்தாசன் மற்றும் சரவணன் வருகைக்கு நன்றி
பாடல்கல் சரிஇல்லை சொள்ளகுடியலவுக்கு படம் 30 நாட்களுக்குமேல் ஓட வாய்ப்பில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது /
மிக்க சரியாக சொன்னீர்கள்.
என் தலைவன்……………….. ஐ லவ் ரஜினி