இயக்குனர் விக்ரமன் லாலா இசை | The Karate Kid

14
இயக்குனர் விக்ரமன் லாலா இசை

ரொம்ப நாகரீகமாக ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்கள் எடுப்பவர்கள் தற்போது மிகக்குறைவு. Image Credit

குடும்பப்பாங்கான படங்களை எடுப்பவர்கள் யார் என்றால், யோசனை கூடச் செய்யாமல் நினைவிற்கு வருவது இயக்குனர் விக்ரமன் அவர்கள் தான்.

இவரது படங்களில் பெரும்பாலும் எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள் படமும் எப்போதும் நேர்மறையாக இருக்கும்.

விக்ரமன் படமான சூர்ய வம்சம் இவரது படங்களில் பெரும் வெற்றி பெற்ற படம் அதே போல் வானத்தைப்போலப் படமும்.

என்னோட பிரச்சனை என்னவென்றால் இவரது படங்களில் வரும் வழக்கமான இசை தான் தற்போது என்னால் தாங்க முடியவில்லை.

இயக்குனர் விக்ரமன் லாலா இசை

தற்போதும் பார்க்கப் பிடித்தாலும் வழக்கமான இசையான லாலா லாலா மற்றும் டொட்டைங் டொட்டைங் இசை சகிக்க முடியாததாக இருக்கிறது.

இதைகேட்க பிடிக்காமலே அல்லது தாங்க முடியாமலே வேறு சேனலை திருப்பி விடுகிறேன். உண்மையாகவே ரொம்ப கொடுமையாக உள்ளது.

இவரது உதவியாளர் எடுத்த படம் (நீ வருவாய் என) கூட இதைப்போலவே இசை உள்ளது (படமும் அதே போல தான்).

இந்தப்படம் சமீபத்தில் டிவியில் பார்த்து இசையைக் கேட்டு நொந்து போய் வேறு சேனலுக்கு மாறி விட்டேன். இந்தப்படத்திற்கும் விக்ரமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார் தான்.

விக்ரமன் படம் வெளிவந்த போது இந்த இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தொலைக்காட்சியில் தற்போது அடிக்கடி பார்க்கும் (கேட்கும்) போது செம கடுப்பை வரவழைக்கிறது.

இயக்குனர் விக்ரமன் லாலா இசை யை இனிமேலாவது தவிர்த்து இயல்பான இசையைக் கொடுக்கும் படி ஒரு ரசிகனாக அவருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதே போல ப்ரியமான தோழி போல ஓவர்டோஸ் நல்லவராகக் காட்டாமல்,  சூர்ய வம்சம் படங்களைப் போல ரசிக்கும்படியான படங்களைத் தர வேண்டும்.

The Karate Kid

ஹாலிவுட் நடிகர் Will Smith மகன் Jaden Smith நம்ம ஜாக்கி சான் கூட நடித்து உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.

அம்மாவின் வேலை மாறுதல் காரணமாகச் சீனாவிற்கு ஜேடன் ஸ்மித் குடி வருகிறான். அங்கே அவனுக்கும் அங்குள்ள சிறுவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது.

எப்படி ஜாக்கி சான் துணைகொண்டு சமாளிக்கிறான் என்பதே கதை. 1984 ஆண்டு ஒரு The Karate Kid படம் வந்தது அதனோட ரீமேக் இந்தப்படம் என்று கூறப்படுகிறது.

ஜேடன் ஸ்மித்

சண்டை போடும் காட்சிகள் தவிர மற்ற இடங்களில் சிறப்பாக நடித்துள்ளான்.

சண்டைக் காட்சிகளில் சோபிக்க முடியாமல் போனதற்கு அவனை விட மற்ற சிறுவர்கள் சிறப்பாகச் சண்டை இட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஜேடன் ஸ்மித்துடன் தகராறு செய்யும் சிறுவன், அவனது நடிப்பு ரொம்ப அருமை. முரட்டுத்தனமாக அதே சமயம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறான்.

ஜேடன் ஸ்மித் ஜாக்கி சானுடன் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி உள்ளது.

ஜாக்கியின் பயிற்சியைக் கிண்டலடிக்கும் போதும் அவருடைய பயிற்சியின் கடுமை தாங்காமல் விழிப்பதும் நல்ல நடிப்பு.

படத்தில் காட்டப்படும் சீனாவின் பல இடங்கள் அருமையாக உள்ளது, இயற்கை தாண்டவமாடுகிறது. பழமையான இடங்கள் பல காண்பிக்கப்படுகிறது.

இதில் காண்பிக்கப்படும் கராத்தே பயிற்சி இடங்கள் ரொம்ப நன்றாக உள்ளது.

ஜேடன் ஸ்மித் தோழியாக வரும் சிறுமி நன்றாக நடித்துள்ளார் அவர்களுடனான நட்பு ரசிக்கும்படி உள்ளது.

ஆனாலும் பிரச்சனை செய்யும் சிறுவனாக வருபவன் நடிப்பு ரொம்ப கவர்ந்தது. கோபத்தை எப்படி முகத்தில் பிரதிபலிக்கிறான்!

ஜாக்கி சான்

ஜாக்கி சான் எந்தப் பந்தாவும் செய்யாமல் அடக்கமாக நடித்து உண்மையான கதையமைப்பை சிதைக்காமல் பேருதவி புரிந்து இருக்கிறார்.

மிகச்சாதாரணமாக வந்து போகிறார்…. எவ்வளவு பெரிய உலக சூப்பர் ஸ்டார்!

ஜேடன் ஸ்மித்திற்கு வயது 12 தான் ஆகிறதாம்.. என்னமா பேசுறான்! என்ன ஒரு அசத்தலான உடல்மொழி! கண்ணீர் விடும் காட்சியில் அசத்தி இருக்கிறான்.

படம் கொஞ்சம் கூடச் சலிப்பு இல்லாமல் போகிறது. திரைக்கதை சிறப்பாக உள்ளது.

அடுத்தது என்ன காட்சி என்று ஊகிக்க முடிகிறது என்றாலும் வரும் காட்சியை எதிர்பார்த்து நம்மை ஆர்வமாக வைத்து இருப்பது திரைக்கதையின் வெற்றியே!

இந்தப்படத்திற்கு தயாரிப்பாளர்களில் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவியும் அடங்குவர். குறைந்த முதலீடு அதிக லாபம் 🙂 .

இந்தப்படத்தோட தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு காமெடி SMS நினைவு வருகிறது.

அழகிய தமிழ் மகன் என்று படம் பெயர் வைத்தார்கள் கடைசி வரை அது யார் என்றே காட்டவில்லை என்று நக்கலடித்து வந்து இருந்தது.

அது மாதிரி The Karate Kid என்று படம் பெயர் வைத்தார்கள் கடைசி வரை குங்க்பூ மட்டுமே பிரதானமாக இருந்தது 😉 .

கொசுறு

சன் டிவி மார்க்கெட்டிங்ல கில்லாடிகன்னு எல்லோருக்கும் தெரியும். நித்தியானந்தர் விஷயம் பரபரப்பா இருந்த போது ரஞ்சிதா நடித்த ஜெய்ஹிந்த் படம் போட்டார்கள்.

தற்போது கால்பந்து போட்டிகள் பரபரப்பா இருக்கும் போது Goal என்ற ஆங்கிலப்படத்தை கடந்த வாரம் போட்டு இருந்தார்கள். ரொம்ப நல்லா இருந்தது.

நிஜபோட்டியை பார்ப்பது போல இருந்தது, போட்டியின் விறுவிறுப்பு காரணமாக நானே கைதட்டி விட்டேன் என்றால் பாருங்களேன்!

இந்தப்படம் பார்க்காதவர்கள் மறக்காம பாருங்க! 🙂 .

14 COMMENTS

  1. கிரி ,
    நன்று ..,தேர்ந்த பத்திரிக்கையளுருடைய நடை தெரிகிறது ..வழமையான சில சொற்களை தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் 🙂

    ////என்னுடைய அடுத்த வேலையில் இங்கே செல்ல வேண்டியது இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள் ////

    சீனா செல்கீர்களா !!!! சிவப்பு தமிழன் அண்ணன் கிரி வாழ்க :))

  2. நான் GOAL படத்தை முதலிலேயே பார்த்துவிட்டேன். ஆனாலும் தமிழில் பார்க்க வேண்டும் என்று பார்த்தேன். படம் அருமை. நான் 3 படங்களையும் (GOAL has 3 versions ) பார்த்துவிட்டேன்.

    மாளவிகா நற்பணி மன்றம்,அந்தியூர்.

    • மாளவிகா நற்பணி மன்றம், அந்தியூர்,

      தலைவர் யாருங்கோ… கிரி யா

  3. விக்ரமன் பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க.
    லா லா லா இரசித்த காலமும் உண்டு – இப்ப முடியல தான்.

    கராத்தே கிட் இன்னும் பார்க்கலை – ஜாக்கிசான் மிரபிப்பா இருக்கு

    இருந்தாலும் கிழவர் போல் இருக்கிறார் என்பது கஷ்ட்டமாத்தான் இருக்கு.

  4. //சரி தனது பாணியை விட்டு வேறு முறையில் எடுக்கலாம் என்று பரத்தை வைத்து எடுத்த சென்னைக்காதலும் ஊத்திக்கொண்டது. இதனால் இதன் பிறகு படம் எடுக்காமல் தாமதித்து வருகிறார்.//

    கிரி… இது நியாயமா… தர்மமா… சென்னை காதலுக்கு பிறகு கேப்டனை வைத்து ஒரு உலக மகா சொத்தை படம் “மரியாதை” எடுத்தாரே… அதை எப்படி மறந்தீங்க தல?

    இந்த லா லா லா லா லா லாலாலா…. வ வச்சே ஒரு பெரிய ட்ரெய்லர் அளவு படங்கள் ஓட்டிய அண்ணன் எஸ்.ஏ.ராஜ்குமார் வாழ்க… நம்மூர்ல இதுக்கு மேல வேகாதுன்னு தெரிஞ்டுட்டு, பருப்பு டப்பாவ எடுத்துட்டு கர்நாடகாவுல குடியிருக்கறதா கேள்வி…

  5. //இயக்குனர் விக்ரமன் அவர்கள் இனிமேலாவது இந்த (கொடுமையான) இசையை தவிர்த்து இயல்பான இசையை கொடுக்கும் படி ஒரு ரசிகனாக அவருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அதே போல ப்ரியமான தோழி போல ஓவர்டோஸ் நல்லவராக காட்டாமல் கொஞ்சமாவது நம்பும்படி படம் எடுக்க வேண்டும் என்று அவரது சூர்ய வம்சம் படங்களை போல ரசிக்கும்படியான படங்களை தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.//

    ஹ‌லோ கிரி இது உங்க‌ளுக்கே கொஞ்ச‌ம் ஓவ‌ராத்தெரிய‌ல‌, விக்ர‌ம‌னே பாவ‌ம் சிரிய‌ல் எடுக்க‌லாம் என்று ச‌ன் டி.வி.கிட்ட‌ ஸ்லாட் கேட்டு கிட்டு இருக்காறாம், இதுல‌ அவ‌ர‌ப்போயி நீங்க‌ ப‌ட‌ம் எடுக்க‌ச்சொல்லுறீங்க‌. இது தான் கோய‌ம்புத்தூர் குசும்பா?

    வேணும்னா அவ‌ர் க‌ன்ன‌ட‌ சினிமா எடுக்க‌லாம், விக்ர‌ம‌னோட‌ பிரிய‌மான‌ தோழி ப‌ட‌த்தை இப்போதான் ரீமேக் செய்து க‌ன்ன‌ட‌த்தில் ரிலீஸ் செய்துள்ளார்க‌ள்.அய்ய‌ய்யோயோயோ ஜோதிகா கேர‌க்ட‌ரில் அங்க‌ ந‌மீதா என்ன‌மா ந‌டிச்சிருக்காங்க‌ தெரியுமா? உங்க‌ளுக்கெல்லாம் அத‌ப்பாக்க‌ குடுத்து வைக்க‌ல‌……அம்புட்டுத்தேன்.

    விக்ர‌ம‌னோட‌ ந‌ண்ப‌ர் வி.சேக‌ர் கூட‌ இப்போ க‌ன்ன‌ட‌த்துல‌தான் ப‌ட‌ம் எடுத்துக்கிட்டு இருக்கார்.

  6. கிரி, எண்ணை நினைவிருக்க வாய்ப்பில்லை, நான் கணிப்பொறி வல்லுனராக இருக்கிறேன். உங்கள் தளத்தில் சில பின்னுட்டமிட்டுள்ளேன். நான் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்திருக்கிறேன். வந்து 2 நாட்கள் ஆகின்றன. உங்களின் அலைபேசி எண்ணை தந்தால், இருவரும் பேசலாம். உங்களுடன் அதிகம் பழக்கம் இல்லை என்றாலும் நான் பின்னுட்டமிட்ட ஒரு சில பிளக்கர்களில் நீங்களும் ஒருவர் என்ற முறையில் (உரிமையில்) பேசலாம் என நினைக்கிறேன். உங்கள் அலைபேசி எண்ணை எனக்கு இமெயில் வழியாக அனுப்புங்கள். 🙂

  7. விக்கிரமன் மட்டுமல்ல வேறு எந்த இயக்குனும் இன்னுமொரு சூரியவம்சத்தை கொடுக்கமுடியாது, இன்று நாகரிகமாக எண்ணி சூரியவம்சத்தை சில நண்பர்கள் கலாய்த்தாலும் ஒட்டு மொத்த தமிழர்களும் விரும்பி பார்த்த ஓரிரு படங்களில் சூரியவம்சம் முக்கியமானது, இன்றைக்கு பார்த்தாலும் ஒரு சிலிர்ப்பூட்டும் நினைவைதரும் படம் சூரியவம்சம். லாலா இசை……………………………………… சத்தியமா முடியல.

  8. தல ,

    ஊர்ல இருக்கீங்களா இல்லையா ? பதிவ போட்டு ஆளையே காணோம்..,,:)
    கிரி அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் 🙂

  9. @ஷங்கர் அனைத்து இடுகைகளும் அப்படி எழுதுவது இல்லை, சீரியஸ் ஆனா இடுகைகள் அதன் நோக்கம் சிதைந்து விடாமல் எழுதுவேன். உங்கள் பாராட்டிற்கு நன்றி.

    அப்புறம் சீனா போக வேண்டியது இருக்கலாம் என்று தான் கூறி இருக்கிறார்கள். உறுதி செயப்படவில்லை 🙂

    @ராமலக்ஷ்மி 🙂

    @ குமார் மூன்று பாகம் இருக்குதா! இங்க பார்ரா! பார்த்துட வேண்டியது தான். தகவலுக்கு நன்றி 🙂

    @ ஜமால் நீங்க சொன்ன மாதிரி முன்பு ரசிக்க முடிந்தது இப்ப கடுப்பை கிளப்புது.

    ஜாக்கி படத்துல தான் கிழவராக தெரிகிறார், சண்டையில் தூள் கிளப்புகிறார்.

    @கோபி கில்லாடியா இருக்கீங்க! வழக்கம் போல கண்டுபிடிச்சுட்டீங்க 🙂 கேப்டினை டரியலாக்காம விட மாட்டீங்க போல 😉

    ராஜ்குமார் கர்நாடகா போயிட்டாரா! 😮

    @காத்தவராயன் ஹி ஹி 😀

    ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நமீதாவாவாவாவாவாவா! 😮 கற்பனை செய்தாலே கண்ணை இருட்டிட்டு வருதே! எப்படி தான் இப்படி எல்லாம் யோசித்து ஆள் பிடிக்கறாங்களோ !

    வி சேகர் அங்கே போயிட்டாரா! இங்க நல்லாத்தான் எடுத்துட்டு இருந்தாரு! ம்ம்ம்

    @முத்து நன்றி! அலைபேசி என் அனுப்பி உள்ளேன்.

    @ஜீவா தர்ஷன் சூர்யவம்சம் செம படம்! இன்றும் சலிக்காமல் பார்க்க முடியும் (என்ன அந்த இசை தான் சகிக்க முடியலை) 🙁

    @ ஷங்கர் 🙂 அது வேற ஒண்ணுமில்ல வேறு வேலை மாறுகிறேன் அதனால் கொஞ்சம் பிசி! 🙂 தலைவர் எந்திரன் பதிவு ஒன்று எழுதி இருக்கிறேன், இந்த வாரம் போடலாம் என்று இருந்தேன் ஆனால் http://www.rajinifans.com க்கு கொடுக்கிறேன் என்று கூறி இருந்தேன், அவர்கள் தளம் புதுப்பிக்கும் பணியில் இருப்பதால் பதிவிட முடியவில்லை. அதற்கடுத்த வாரம் இந்தியா வருகிறேன் அதனால் மீண்டும் தாமதிக்க முடியாது. எப்படியும் எடுத்த வாரம் பதிவிடுகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

    Thalaivar post back with BANG! soon 😉

  10. எனக்கு விக்ரமன் படங்களில் புது வசந்தம் ,சூரிய வம்சம் ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்லும்
    லா லா கொஞ்சம் கஷ்டம் தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here