வயதானாலும் தன் இளமையான குரலால் அசத்துபவர் பாடகர் SP பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் குரலுக்கு வயதே ஆகாதா!! என்று வியப்பே மேலிடும்.
தர்பார் ‘சும்மா கிழி’ பாடலில் கூட மிரட்டியிருப்பார். Image Credit
என்ன விட்டு எங்கடி நீ போன
இக்கட்டுரை எழுதக்காரணம், ‘தேவ்’ படத்தில் இவர் பாடிய ‘என்ன விட்டு எங்கடி நீ போன‘ பாடல் தான். தினமும் RadioTamil HD செயலியில் பாடல் கேட்பேன்.
ஹாரிஸ் சேனல் கேட்கும் போதெல்லாம், இப்பாடல் வரும். இசையும், பாடலும், பாடியதும் ரொம்பப் பிடித்தது, இருப்பினும் இது வேறு யாரோ பாடல் ஹாரிஸ் இசை பகுதியில் வந்து விட்டது என்றே நினைத்தேன்.
ஒரு நாள் திரும்ப இப்பாடல் வந்த போது YouTube ல் தேடி பார்த்துக் கார்த்தி நடித்த தேவ் படத்தில் SPB பாடிய பாடல் என்று அறிந்த போது வியப்பாக இருந்தது.
73 வயதில் உள்ளவர் பாடிய பாடல் என்றால், சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள்.
ஹாரிஸும் ரொம்ப நாளைக்குப் பிறகு ரசிக்கும்படியா பாடலைக் கொடுத்துள்ளார்.
தேவ் தோல்விப்படமானதால், இப்பாடல் முன்பே எனக்குப் பரிட்சியமாகவில்லை போல. இதன் பிறகு இப்பாடலை தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன்.
பல வருடங்களுக்குப் பிறகு Hello Tune வைக்கலாம் என்று தோன்றி வைக்கப்போனேன். அப்புறம் என்னை அழைப்பவர்கள் ‘என்ன கிரி! கிடைத்தாளா இல்லையா‘ ன்னு கலாயிப்பார்கள் என்பதால், வைக்கவில்லை 🙂 .
“சுனந்தா பறந்து வா வா” ன்னு ஒரு பாடல். இப்பாடலும் ரொம்பப் பிடிக்கும் ஆனால், எந்தப் படம் என்று தெரியாமல் இருந்தேன். இதுவும் தேவ் படம் தான்.
சென்னை 28
இதே போல 2007 ல் ‘சென்னை 28’ வெளிவந்த போது, ‘யாரோ’ பாடலில் யாரோ பாடுகிறார்கள் என்று நினைத்து, பின்னர் கவனித்து SPB குரல் போலத் தெரிந்ததால், பின்னர் உறுதிப்படுத்தினால் SPB தான்.
தற்போது 13 (*2020) வருடங்களுக்குப் பிறகும் இதே வியப்பை அளித்துள்ளார்.
‘சும்மா கிழி’ பாடலில் SPB பாடுகிறார் என்று முன்பே தெரிந்து விட்டதால், அதில் ஒரு த்ரில் இல்லை ஆனால், யார் பாடியது எனத் தெரியாமல் பாடல் பிடித்து, பாடியது SPB என்று அறியும் போது அப்பாடல் மிகப்பிடித்ததாக மாறி விடுகிறது.
தற்போது (2020) SPB வயது 74 ஆனால், இன்னும் மனுசன் செமையாகப் பாடுகிறார், அதுவும் காதல் பாடலில். கடவுள் அருள் பெற்றவர் என்றே கருதுகிறேன்.
தொடர்புடைய கட்டுரை
வாழ்க்கையில் சில பேரை என் பிடிக்குது, சில பேரை என் பிடிக்கவில்லை என்ற காரணம் தெரியாது.. அந்த வகையில் SPB யை பிடிக்கும், (ஜேசுதாஸை பிடிக்காது.. காரணம் சத்தியமா தெரியவில்லை). இத்தனைக்கும் ஜேசுதாஸின் பல பாடல்கள் எனக்கு விருப்பமானவை தான்..
SPB ஒரு பாடகராக மட்டும் இல்லாமல்,, ஒரு மனிதனாக அவர் மீது மரியாதையை எனக்கு உண்டு.. இளையராஜாவின் ஆரம்ப கால வளர்ச்சியில் SPB யின் பங்கு, மிக முக்கியமான ஒன்று.. அதை யாராலும் மறுக்க முடியாது.. ஒரு பொறியியல் பட்டதாரி எப்படி சம்பந்தமே இல்லாத துறையில் சாதித்தார் என்பது ஆச்சரியமே!!!
நான் புதிய பாடல்கள் எதையும் கேட்பதில்லை..வெகு அரிதாக சில பாடல்களை கேட்பேன்.. நான் கடைசியாக விரும்பி கேட்ட பாடல் (கூட மேல கூட வச்சி).. என்னோட உலகம் எல்லாம் 80 / 95 இல் வெளியான பாடல்கள் மட்டும் தான்.. இதில் SPB பாடிய பல பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்கள் உண்டு..
பாடல்கள் இல்லாத உலகத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. வீட்டில் இருக்கும் போது ஏதோ மூலையில் பாடல் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. தேவ் பட பாடலில் உங்களுக்கு உள்ள குழப்பம் போல், நந்தா படத்தில் ‘முன்பனியா” அந்த பாடலை பாடியது SPB யா / SPB சரணா என்ற சந்தேகம் எப்போதும் உண்டு.. பாடல் அவ்வளவு இளமையாக இருக்கும்.. நீண்ட ஆரோக்கியத்துடன் அவர் வாழ பிராத்திக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாரோ பாடல் SPB Charan பாடியது
@யாசின் என் வீட்டிலும் எப்போதும் பாடல் கேட்டுக்கொண்டே இருப்பேன். அனைத்து கால பாடல்களும் கலந்து கேட்பேன்.
படம் பார்ப்பதை கூட நிறுத்தி வைக்க முடியும் ஆனால், பாடல் கேட்காமல் இருப்பது சிரமம் 🙂
@அனு நான் குறிப்பிட்டுள்ள பாடல் SPB அவர்கள் பாடியது தான். SPB சரண் பாடியது இதே மாதிரி பாடல் Friendship க்காக வரும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம் –> https://en.wikipedia.org/wiki/Chennai_600028